Author: Editor TN Talks
மணிப்பூர் கலவர பலிகளுக்கெல்லாம் உடனடியாக விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ.க., கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “மணிப்பூர் கலவரம், குஜராத் மோர்பி பால விபத்து, உத்தர பிரதேசத்தில் கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனடியாக விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ.க., கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன? நிச்சயமாக அக்கறை இல்லை! முழுக்க முழுக்க 2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் அற்பச் செயல்! அடுத்தவர் முதுகில் சவாரி செய்தே பழக்கப்பட்ட பா.ஜ.க., பிறர் இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பா.ஜ.க., கரூர் நெரிசலைப் பயன்படுத்தி யாரைத் தன் ‘control’-இல் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள். எந்த முகமூடி அணிந்து வந்தாலும், எத்தனை அடிமைகளைச் சேர்த்து வந்தாலும், புதிதாக யாரைச் சேர்க்க நினைத்தாலும், நான் முன்பே சொன்னதுபோது தமிழ்நாடு உங்களுக்கு OUT OF CONTROL-தான்” என்று…
கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும், ஒருநபர் விசாரணை ஆணையத்துக்கு தடை வேண்டும் என தவெக தாக்கல் செய்த மனுக்களை உயர்நீீதிமன்ற மதுரை கிளாஇ தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 27ம் தேதி கரூரில் விஜய் நடத்திய தவெக பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41பேர் உயிரிழந்தனர். நாட்டையே அதிர வைத்த இந்த சம்பவத்தில் பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டும் எழுந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்,ல் கரூர் மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கரூர் சம்பவத்துக்கு திட்டமிட்ட சதியே காரணம் என தவெக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் திமுக அரசுக்கும், தவெக கட்சிக்கும் கருத்து மோதல்கள் வலுத்து வருகின்றன. கரூர் சம்பவம் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இதேநேரம், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. கரூரில் நடந்தது தொடர்பாக அருணா ஜெகதீசன் விசாரித்து வரும்…
தமிழகத்தில் சட்டப்பேரவை கூடுதலை முன்னிட்டு சென்னை காவல்துறையினருக்கு காவல் ஆணையர் அருண் பல்வேறு முக்கிய அறிவுரைகளை சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார். ஆறு மாதத்திற்கு ஒரு முறை சட்டப்பேரவை கூட்ட வேண்டும் என்ற அடிப்படையில் பட்ஜெட் கூட்டத்தினருக்கு பிறகு, இந்த ஆண்டு இரண்டாவது முறையாக அக்டோபர் 14ஆம் தேதி சட்டப்பேரவை கூடும் என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அறிவித்திருந்தார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பல்வேறு பரபரப்பான அரசியல் சூழ்நிலைகள் தற்போது நிலவி வருகின்றன. முக்கியமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூர் விபச்சாரக் கூட்டத்தின் போது 41 பேர் நெரிசலில் உயிரிழந்த விவகாரமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வரும் 14ஆம் தேதி சட்ட பேரவை கூடுகிற காரணத்தினால் சென்னை காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் வழக்கு விசாரணை கையாள்வது உள்ளிட்ட விவகாரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற அறிவுரைகளை சென்னை காவல்துறை ஆணையர் அருண் சுற்றறிக்கையாக…
சென்னை ரோகினி திரையரங்க வளாகத்தில் யூடியூபர்களிடம் தகராறு செய்த புகாரில், தவெக உறுப்பினரான ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த கோகுல் கைது செய்யப்பட்டுள்ளார். தனுஷ் இயக்கி நடித்த திரைப்படம் ‘இட்லி கடை’. இந்த திரைப்படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், சாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கடந்த புதன்கிழமை (அக்டோபர்-1) அன்று வெளியானது. இந்நிலையில், சென்னை ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த கோகுல் கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் இட்லி கடை திரைப்படத்தை காண சென்றிருந்தார். அப்போது படம் முடிந்து வெளியே வருபவர்களிடம் விமர்சனம் கேட்கப்பட்டது. அப்போது தனியார் யூடியூப் சேனலை சேர்ந்த நபர்கள் திரைப்படம் எப்படி உள்ளது என்று திரைப்படத்தை காண சென்ற ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, திரைப்படத்தை காணச் சென்ற விஜய் ரசிகரும், தவெக உறுப்பினருமான ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த கோகுல் என்பவரிடமும், பேட்டி எடுத்துள்ளனர். அப்போது…
நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அண்மை காலமாக சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. தலைமை செயலகம், ஜிஎஸ்டி அலுவலகம், அதிமுக அலுவலகம் என பல்வேறு இடங்களில் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் பெயரில் இமெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து போலீசார் விசாரித்து வரும் சூழலில் புதிதாக மீண்டும் ஒரு மிரட்டல் வந்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை த்ரிஷா வீட்டிற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இவர்கள் மட்டுமில்லாமல் முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், மிரட்டல் விடுத்தவர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை உட்பட 9 இடங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 30ம் தேதி உருவான காற்றழுத்தப்பகுதி ஒன்றாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது வடக்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்று இன்று தெற்கு ஒடிசா மற்றும் வட ஆந்திர கடலோர பகுதிகளில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் முன்னெச்சரிக்கையாக சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் என 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க…
ஆளுநர் ஆர்.என்.ரவி தலித் சமூகத்திடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவரின் பொறுப்பின்மை வரலாற்றின் பக்கங்களில் என்றும் குற்றமாகவே பதிவு செய்யப்படும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் அமைந்துள்ள காந்தி மண்டபத்தில் காந்தியடிகளின் 157ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் காந்தியின் உருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “சமூகத்தில் அனைவரும் சமம் என மகாத்மா காந்தி கூறினார். ஆனால், தமிழ்நாட்டில் தினசரி செய்தித்தாள்களை படிக்கும் போது, சில கிராமங்களில் தலித் மக்கள் குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல முடியாமலும், செருப்பு போட்டு தெருக்களில் நடக்க முடியாமலும் இருப்பதாக படிக்கிறேன். வகுப்பறைகளில் தலித் மாணவர்கள் ஒரு புறமும், தலித் அல்லாத மாணவர்கள் ஒருபுறமும் அமர வைக்கப்படுவதாக தெரிகிறது. நாம் எங்கு இருக்கிறோம்?. தலித் சமூகத்திற்கு எதிரான இந்த சமூக அடக்குமுறையில் தமிழ்நாடு மோசமான…
விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாததற்கு திமுக – தவெக இடையே மறைமுக டீலிங் உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியது: “தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு, காவல் துறை அஞ்சுகிறதா? தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறை, விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை எனக் கூற வேண்டும். இல்லையென்றால் புஸ்ஸி ஆனந்த் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும். அவர் மீது மட்டும் ஏன் வழக்குப் போட வேண்டும்? அவருடன் மாவட்டச் செயலாளர் மீது மட்டும் ஏன் வழக்குப் போட வேண்டும். அவர்களை மட்டும் பதுங்கி இருந்த இடத்தில் போய் ஏன் கைது செய்ய வேண்டும்? ஆனால், விஜய்க்கு பாதுகாப்பு…
வரலாற்றை அழிக்க முயல்பவர்களை எதிர்த்து, மக்களோடு சேர்ந்து, ஜனநாயக ரீதியிலான கடும் போராட்டத்தை நடத்துவோம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, இன்று புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். மேலும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் 100 ஆண்டு கால பயணத்தை நினைவுகூரும் வகையில், மத்திய அரசு ஒரு சிறப்பு தபால் தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிடுவதாக அவர் அறிவித்தார். இந்த 100 ரூபாய் நாணயத்தின் ஒரு பக்கத்தில் தேசிய சின்னமும், மறுப்பக்கத்தில் சிங்கத்துடன் நிற்கும் பாரத மாதாவிற்கு ஸ்வயம்சேவகர்கள் வணக்கம் செலுத்துவது போன்ற உருவமும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில், தபால் தலை மற்றும் நினைவு நாணயம் வெளியிட்டதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது…
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் முஹமது சிராஜ், பும்ரா வேகப்பந்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்களுக்கு சுருண்டது. இந்திய, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அஹமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்களான டெகநரைன் சந்தர்பால், சிராஜ் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதேபோல், ஜான் கேம்பெல் 8 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார். தொடர்ந்து, பிரண்டன் கிங் (13), அலிக் அதென்ஷே (12) இருவரையும் முஹமது சிராஜ் வெளியேற்றினார். குல்தீப் யாதவ் தனது அபார சுழலால் ஷாய் ஹோப்பை போல்டாக்கினார். அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் போல்டானார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்களுக்கு…