Author: Editor TN Talks
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியாவுடன் வங்கதேச அணி மோதுகிறது. 17வதுஆசிரிய கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் என மொத்தமாக 8 அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் வெற்றிப் பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் அடுத்த வெற்றியை பதிவு செய்ய பலப்பரீட்சை நடத்தப்பட உள்ளன. இந்த ஆட்டம் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இளைஞர் ஒருநாள் தொடரில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றான. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இன்றிய போட்டியில் ஆஸ்திரேலியா, இந்திய அணிகள்…
ஜிஎஸ்டி சீர்த்திருத்தம், சட்டமன்ற தேர்தல் குறித்து திமுக எம்பிக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் தலைமையில் திமுக எம்பிக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அமைச்சரும், திமுக பொதுச்செயலாளாருமான துரைமுருகன், லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவை சேர்ந்த திமுக எம்பிக்கள் பங்கேற்றனர். இதில், சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் தொகுதி வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளாதால் அதற்கான ஆயத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க கூடிய நிதி, ஜிஎஸ்டி வரி மாற்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான நடவடிக்கைகள், வாக்காளார் பெயர் பட்டியல் திருத்த பணிகள், திமுகவின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் அக்டோபர் மாதம் 14 மாதம் தேதி கூட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். அன்றைய தினம் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மறைமுக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர் மறுமை குறித்து இரங்கல் குறிப்பு தெரிவிக்கப்படும் அன்றைய தினம் 2025 26 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களும் தாக்கல் செய்யப்பட உள்ளது. அலுவலக கூட்டம் பேரவை கூடுவதற்கு முன்னர் ஒரு நாள் அலுவல் ஆய்வு கூடி கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது முடிவு செய்யப்படும். அரசியலில் வாக்கு வாங்கிதானே சபாநாயகராக மாறி உள்ளோம் – சபாநாயகர் அரசியல் செய்கிறார் என்ற அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அப்பாவு காட்டமாக பதில் அளித்துள்ளார்.
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளது. கடந்த ஆண்டு 60,000 ரூபாய்க்கும் கீழ் விற்பனையான தங்கம் தற்போது ராக்கெட் வேகத்தில் உயர்ந்து 80,000 ரூபாயை கடந்துள்ளது. கடந்த 9 மாதங்களாக விலை உயர்ந்து வரும் தங்கம் தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வாரத்தின் முதல் நாளான நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.10,430க்கு விற்பனையானது. சரவனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.83,440 ஆக உயர்ந்திருந்தது. இதனை தொடர்ந்து இன்றும் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டுள்ளது. இன்று காலை தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 10,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 84 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. இதேபோல் தங்கத்தின் விலை தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து வந்தால் விரைவில் ஒரு லட்சத்தை எட்டும் கூறப்படுகிறது.
தமிழக உணர்வால் வேர்விட்டிருக்கும் திமுக இன்னும் நூறு ஆண்டுகளை கடந்து நிலைத்து நிற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மெய்சிலிர்த்து நிற்கிறேன்… விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாட்டைச் சேர்ந்த ஓவியர் T.R.கோவிந்தராஜன் அவர்கள் எழுதிய கடிதமும் ஓவியப் புத்தகமும் நேற்று வந்தடைந்தது. அவருக்கு வயது 87-ஆம்! அவரது எழுத்தில் வெளிப்படும் கழகப் பற்றைக் காணுங்கள்… தமிழ் மண்ணில் தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும்!” என குறிப்பிட்டுள்ளார்
பரபரப்பான அரசியல் சூழலில் அடுத்த வாரம் பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழக அரசியல்களம் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக, திமுக, தவெக, நாதக கட்சிகள் பிரச்சாரத்தையும், மக்கள் சந்திப்பையும் தொடங்கியுள்ளனர். இதேநேரம், கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. இந்த தேர்தலில் மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணியாக தேர்தலை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் இடையே மோதல் ஏற்பட்டதால் இருவரும் மாறி மாறி டெல்லி சென்று மத்திய உள்துறை அமித்ஷாவை சந்தித்து பேசினர். இவர்களை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திடீரென நேற்று டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நாட்டாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இப்படி தேர்தலை ஒட்டி தமிழக அரசியல்களம் விறுவிறுப்பாகி வரும் சூழலில், பாஜக தலைவர் ஜேபி…
புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா நடைபெறுவது வழக்கம். உலக புகழ்பெற்ற இந்த திருவிழா மைசூருக்கு அடுத்ததாக கோலாகலமாக கொண்டாடப்படும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு காலை 11 மணிக்கு காளி பூஜை, மாலை 5 மணிக்கு சகஸ்ரநாமம் அர்ச்சனை, புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிகளும், இரவு 7 மணிக்கு வில்லிசை நிகழ்வும் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு கோவில் கொடிமரத்தில் தசரா விழாவுக்கான கொடியேற்றம் தொடங்கியது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து கையில் காப்பு அணிந்து கொள்ளும் பக்தர்கள் விரதம் இருந்து அம்மனை வழிப்பட தொடங்கியுள்ளனர். தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் தசரா விழாவில் தினமும் காலை, மாலை சிறப்பு…
பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்வது சட்டவிரோதமும் மனிதாபிமானமற்ற செயலாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்வது சட்டவிரோதமும் மனிதாபிமானமற்ற செயலாகும். இதற்கு தடை விதிக்கும் சட்டம் (2013) இருந்தபோதிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி திருவெறும்பூர் அருகே கார்மல் கார்டன் பகுதியில் பாதாள சாக்கடையில் இறங்கிய ரவி (30), பிரபு (32) என்ற இரண்டு இளைஞர்கள் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. இந்தக் கொடூரமான மரணத்திற்கு, பாதுகாப்பு ஏற்பாடுகளை பின்பற்றத் தவறியவர்கள் முழுப்பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இப்பணிகளை மேற்கொண்டவர்கள் உரிய இழப்பீடு உடனடியாக வழங்கப்பட வேண்டும். கடந்த 2023 ஆண்டு மேமாதம், கழிவுநீர்த் தொட்டிகள் மற்றும் பாதாளச் சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில்…
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியநாராயணன் மீது வழக்கு தொடர அரசின் அனுமதி கோரியுள்ளதாகவும், அனுமதி கிடைத்ததும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பி்ல் சொத்து சேர்த்துள்ளதாகவும், தொகுதி மேம்பாட்டு நிதியில் 35 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாகவும், சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ. சத்தியநாராயணன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இரு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இந்த இரு வழக்குகளின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால், வழக்குகளை விரைந்து விசாரித்து முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இரு வழக்குகளில் புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும், 4 மாதங்களில்…
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம் மேற்கொண்டது கவனத்தை ஈர்த்துள்ளது. அதிமுகவில் ஏற்பட்ட விரிசலால் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் அடுத்தடுத்து டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினர். பாஜக கூட்டணியில் அதிமுக தேர்தலை சந்திக்கும் என ஏற்கெனவே அறிவித்த நிலையில் சேலம் நெடுஞ்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து விட்டு திரும்பிய நிலையில் எடப்பாடி பழனிசாமியை நயினார் சந்தித்து அக்டோபர் ஒன்றில் தொடங்கவுள்ள பரப்புரை பயணத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த சூழலில் இன்று மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ளார். அங்கு பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவை சந்திக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள சுற்றுப் பயணம் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய…