Author: Editor TN Talks
சென்னையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள ராட்வீலர் உள்ளிட்ட ஆக்ரோஷமான நாய்களை முறைப்படுத்தக் கோரிய வழக்கில், உரிய விளக்கங்களுடன் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி, தலைமை கால்நடை அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில், உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் அழைத்துச் செல்லப்பட்ட ராட்வீலர் நாய்கள் கடித்து சிறுவர் – சிறுமியர், வயதானோர் பாதிக்கப்பட்டுள்ளதால், இதுபோன்ற ஆக்ரோஷமான நாய்களை தடை செய்வது அல்லது முறைப்படுத்துவதற்கு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பொதுமக்களை நாய்கள் தாக்கும் சம்பவங்களை கட்டுப்படுத்துவது குறித்த திட்டத்தை தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக…
திருப்பூரில், 2 கோடி ரூபாய் கட்டிடத்தை அபகரிக்க உடந்தையாக, அதிகார துஷ்பிரயோகம் செய்த துணை தாசில்தாரர், சார் – பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க, பனியன் கம்பெனி பங்குதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி கிராமத்தில் வெங்கடாச்சலம் என்பவருக்கு சொந்தமான நிலத்தை வாடகைக்கு பெற்று, ஜெகன்நாதன் என்பவர் பனியன் கம்பெனி துவங்கினார். இந்த நிலத்தில் 2 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவிட்டு, கட்டிடங்கள், இயந்திரங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. வாடகை ஒப்பந்தம் புதுக்க முயற்சித்த போது, உடன்பாடு எட்டப்படாததால், கட்டுமானங்களுக்கு செலவிட்ட 2 கோடியே 3 லட்சம் ரூபாயை திருப்பித் தராமல், நில உரிமையாளர் வெங்கடாச்சலம், அவரது மனைவி துணை தாசில்தாரர் கீர்த்தி பிரபா, காவல் ஆய்வாளர் கணேசன் மிரட்டல் விடுத்ததாகக் கூறி, ஜெகன்நாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தொழிற்சாலை அமைந்திருந்த நிலத்தை மோசடியாக,…
பிரதமர்மோடியால் சாதிக்க முடியாததை, அதிமுக அரசால் சாதிக்க முடியாததை, மற்ற மாநில முதலமைச்சர்கள் சாதிக்க முடியாததை, திராவிட மாடல் அரசு செய்து வருவதுதான் எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் விழா முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. நகர்ப்புற ஊரக பகுதிகளில் 20 ஆயிரத்து 21 பயனாளிகளிக்கு ஆயிரத்து 672 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 41 ஆயிரத்து 858 பயனாளிகளுக்கு 205 கோடுயே 56 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பின்பாக 17 லட்சத்து 74 ஆயிரத்து 561 வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், நேற்று தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கப்போகும் மாநில கல்வி கொள்கையை வெளியிட்டதாகவும், முதன்மை கல்வி நிறுவனங்களை சேர்ந்திருக்கும் அரசு…
மதுரையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு மயங்கி விழுந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பொன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. கூலி வேலை செய்து வரும் கருப்பையாவுக்கு பாண்டிச் செல்வி என்ற 24 வயது மகள் இருந்துள்ளார். பட்டதாரியான இவர், திருமங்கலம் அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். பாண்டிச்செல்வி நேற்று விருதுநகர் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து சிக்கன் ரைஸ் வாங்கி வந்து வீட்டில் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த பாண்டிச்செல்வி அங்கேயே மயங்கி விழுந்துளார். பாண்டிச்செல்வி மயங்கி கிடந்ததை கண்ட பெற்றோர், அவரை உடனடியாக ஈட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகர் அர்ஜூன் தாஸின் ’ரசவாதி’ என்ற திரைப்படம் மேலும் ஒரு சர்வதேச விருதை வென்றுள்ளது. சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான படம் ”ரசவாதி”. கடந்த ஆண்டு வெளியான இந்தப் படத்தில் தன்யா ரவிச்சந்திரன், சுஜித் சங்கர், ரம்யா சுப்ரமணியம், ஜி.எம். சுந்தர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதுடன், சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்து வருகிறது. இப்படத்திற்காக அர்ஜூன் தாஸூக்கு நியூ ஜெர்சி இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. மேலும் லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒலி வடிவமைப்பிற்கான விருதையும் இப்படம் வென்றது. இந்த நிலையில், பிரான்ஸில் நடைபெற்ற NICE சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை இப்படத்திற்காக சரவணன் இளவரசு மற்றும் சிவா ஆகியோர் வென்றுள்ளனர்.
சிவகங்கையில் அஜித்குமார் என்ற இளைஞர் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக அஜித்குமார் என்ற இளைஞர் பணியாற்றி வந்துள்ளார். கோயிலுக்கு வருகை தந்த நிதிகா என்பவர் தனது நகை திருடப்பட்டதாக போலீசாரிடம் புகார் அளிக்க, அதனடிப்படையில் தனிப்படை போலீசார் அஜித்குமாரை காவல்நிலையம் அழைத்து சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 5 தனிப்படை காவலர்கள் கைது செய்யப்பட்டனர். அதேப் போல், அஜித்குமார் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்டதோடு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக சிபிஐக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டிருந்தார். சிபிஐ தரப்பில் விசாரணை அதிகாரியாக டெல்லியை சேர்ந்த மோகித் குமார் என்பவர் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் தலைமையிலான போலீசார் இந்த வழக்கு விசாரணையை கடந்த 14-ம் தேதி தொடங்கினர். தனிப்படை காவலர்களிடம் விசாரணை முடிந்த…
கன்னியாகுமரியில் அரசு பொறியியல் கல்லூரியில் போலி பணி நியமன ஆணை வழங்கிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் போலி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில், தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், விழுப்புரத்தில் பதுங்கி இருந்த செல்வகுமார், முகமது இஸ்மாயில், பாபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலி அரசு பணி ஆணைகள் மற்றும் அதற்கு பயன்படுத்திய போலி அரசு முத்திரைகள், கம்ப்யூட்டர்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து மூவரையும் சிறையில் அடைத்தனர்.
உத்தரகாண்டில் ஏற்பட்ட மேகவெடிப்பால் அங்கு வெள்ளம் ஏற்பட்டு ஒரு கிராமமே நீருக்குள் மூழ்கியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து 3-வது நாளாக அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி பகுதியில் கடந்த 5-ம் தேதி திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், வீடுகள், கட்டடங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. அப்பகுதில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. சம்பவ இடத்தில் காவல்துறை, எஸ்.டி.ஆர்.எஃப், ராணுவம் மற்றும் தீயணைப்பு படைகளின் மீட்பு குழுக்கள் ஆகியோர் தேடுதல்
2024-ம் ஆண்டுக்கான தேசிய தூய்மை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆந்திராவின் விசாகப்பட்டினம் துறைமுகம் முதலிடம் பிடித்துள்ளது. நாட்டில் தூய்மை இந்தியா திட்டம் பரவலாக அமலில் உள்ளது. ஸ்வச் பாரத் என்ற பெயரில் நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஸ்வச்தா கி பாகிதரி எனப்படும் தூய்மை பணியில் பங்கெடுத்தல், சம்பூர்ண ஸ்வச்தா எனப்படும் முழு அளவிலான தூய்மை ஆகிய திட்ட தொடக்கத்தின் கீழ் துறைமுகங்களில் தூய்மை பணி நடந்து வருகிறது. இந்த சூழலில், மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் சார்பில் தூய்மை மற்றும் சுகாதாரம் வாய்ந்த துறைமுகங்களுக்கான போட்டி நடத்தப்பட்டது. இதில், கடந்த 2024-ம் ஆண்டுக்கான தேசிய தூய்மை விருதுகளுக்கான இந்த போட்டியில், ஆந்திர பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினம் துறைமுகம் முதல் இடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் சியாம பிரசாத் முகர்ஜி துறைமுகம் 2-வது இடமும், இந்திய கடல்சார் பல்கலைகழகம் 3-வது இடமும் பிடித்துள்ளது.…
மதுரையில் 21-ம் தேதி நடைபெறவுள்ள த.வெ.க. மாநாட்டில் விஜய் மட்டுமே பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக, நாதக போன்ற கட்சிகள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக விஜய்யின் தவெக முதன் முதலாக தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில், முழு வீச்சில் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், வரும் 21-ம் தேதி மதுரையில் தவெக மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக பாரபத்தியில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ”200 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. விஜய் நடந்து சென்று தொண்டர்களை பார்ப்பதற்காக 800 அடி தூரத்திற்கு நடைமேடையும் அமைக்கப்படுகிறது. மாலை 3.15 மணிக்கு தொடங்கும் மாநாடானது இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கு அனுமதி வழங்க போலீசார், 42 கேள்விகள் கேட்டு விளக்கம் அளிக்கக் கூறி இருந்த நிலையில்,…