Author: Editor TN Talks
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில், பள்ளி குழந்தைகளை வேனில் ஏற்றி சென்ற வாகனம் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்த போது, ரயில் மோதி வாகனம் இழுத்து செல்லப்பட்டது. இந்த கோர விபத்தில் 2 மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெர்ம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிவாஸ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும் – உறவினர்களுக்கும் – நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூவருக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, மாண்புமிகு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும்…
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றுளது. இதனால் 1-1 என இரு அணியும் சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 2வது டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்த வீரர்கள் 3வது போட்டிக்கான அணியிலும் இடம் பிடித்துள்ளனர். 3வது போட்டியிலாவது இங்கிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடுவாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இங்கிலாந்து அணிக்காக இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஆர்ச்சர் 42 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இருப்பினும் காயம் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அவர் விலகி இருந்தார். அவர் தற்போது…
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. இதற்காக தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழகத்திலுள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளன. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்த பட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாள விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஜூலை 9ம் தேதி) நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்தில் தமிழ்நாட்டில் இருந்து திமுகவின், தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி.,…
இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா உட்பட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ’பறந்து போ’. தந்தை, மகனுக்கு இடையே உள்ள பாசப்பிணைப்பு உணர்த்தும் விதமாக உருவாகியுள்ள இப்படம் கடந்த 4-ம் தேதி வெளியாகி, ரசிகர்களிடம் வரஏற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படம் குறித்து நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த பரபரப்பான உலகத்தை விட்டு விலகி உண்மையான வாழ்க்கை என்னவென்று உணர விரும்பினால், குழந்தைகளை கூட்டிக்கொண்டு மலை ஏறுங்கள்.. அல்லது ஏரியில் அவர்களுடன் நீந்தி விளையாடுங்கள்.. அல்லது அவர்களை ராம் சாரின் ”பறந்து போ” படத்திற்கு அழைத்துச் சென்று காணுங்கள். வாழ்க்கையில் நமக்கு என்ன தேவை , எதை இழக்கிறோம் என்பதை இந்த படம் அழகாக எடுத்துரைக்கிறது. நான் பார்த்த மிக இனிமையான படங்களில் இதுவும் ஒன்று. ராம் சார் நீங்கள் பெஸ்ட் இயக்குனர். சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி என ஒட்டுமொத்த…
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று வழக்கம் போல இன்று குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் இருந்த ரயில்வே கேட்டை கடக்க முயன்றது. அந்த நேரத்தில் அவ்வழியே சிதம்பரம் நோக்கி ரயில் ஒன்று சென்றது. அது பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பல மீட்டர் தூரத்திற்கு வேன் இழுத்து செல்லப்பட்டு, வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். உடனே ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 3 வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளிக் குழந்தைகள் பலர் காயமடைந்தனர். மேலும் 3 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இந்த விபத்தின்…
இந்திய திரைத்துறையில் தற்போது பாலிவுட், டோலிவுட், கோலிவுட், மோலிவுட் எல்லாவற்றையும் தாண்டி, பான் இந்தியா என்ற அளவு வளர்ந்து நிற்கிறது. அனைத்து மொழி படங்களையும், அந்ததந்த மொழிகளுக்கு ஏற்ப டப்பிங் செய்யப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் வெளியிடப்படுகிறது. அப்படி வெளியாகும் படங்கள் பல வசூலிலும், விமர்சனத்திலும் பெரும் வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில், கன்னட மொழியில் உருவான காந்தாரா என்ற திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியானது. 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. கே.ஜி.எப் படத்தை தொடர்ந்து ஒரு கன்னட படம் இந்தியா முழுவதையும் புரட்டிப் போட்டது என்றால் அது காந்தாரா தான். ரிஷப் ஷெட்டி இயக்கி, அவரே ஹீரோவாக நடித்தும் இருந்தார். ரூ.16 கோடியில் உருவான இப்படம் உலகம் முழுவதும் ரூ.200கோடி வசூல் செய்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. நிறைய கண் திருஷ்டி பட்டதாலோ என்னவோ,…
16 ஆண்டுகளுக்கு பிறக அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. கடற்கரையெங்கும் திரண்டிருந்த பக்தர்களின் அரோகரா முழக்கம் விண்ணை பிளக்க குடமுழுக்க நடந்தேறியது. முழுக்க முழுக்க தமிழில் நடந்த குடமுழுக்கு பக்தர்களை நெகிழச் செய்தது. செந்தூர் கடற்கரையில் வீற்றிருக்கும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு, 15 ஆண்டுகள் ஆகியும் நடைபெறாமல் இருந்து வந்தது. பிறகு ரூ.300 கோடியில் மெகா திட்ட வளாக பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். கடந்த ஒரு வருடமாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கோயில் கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 1-ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு,…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளம்பரத்திற்காக கோடி கோடியாக செலவிடுவதாகவும், அதில் 1 சதவீதம் கூட மாணவர்களின் நலனுக்காக செலவிடவில்லை எனவும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகள், முறையான பராமரிப்பின்றி, தரமான குடிநீர் வசதி இன்றி, சுத்தமான கழிப்பறை வசதிகள் இன்றி, பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கின்றன. மாணவர் விடுதிகளில், தரமான உணவு, சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதில்லை என, மாணவர்கள் பலமுறை புகார்கள் தெரிவித்துள்ளனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் 1,331 மாணவர் விடுதிகளில், 98,909 மாணவ, மாணவியர் தங்கிப் படித்து வருவதாகவும், இந்த மாணவர்களுக்கு உணவுச் செலவாக, ரூ.142 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் தி.மு.க., அரசு தெரிவித்திருந்தது. இதன்படி, சராசரியாக, ஒரு மாணவருக்கு, ஒரு நாளைக்கு ரூ.39 மட்டுமே உணவுக்காகச் செலவிடப்படுகிறது. ஆனால், ஒரு மாணவருக்கு தினம் ரூ.50 வீதம், மாதம் ரூ.1,500 உணவுப் படி…
பிரதமர் மோடி 8 நாட்கள் பயணமாக சுமார் 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, பிரேசில் நாட்டில் நடைபெற்ற 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் நேற்று அதிகாலை அந்நாட்டுக்கு சென்றார். இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை, பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார். இதேபோன்று, கியூபா நாட்டின் ஜனாதிபதி மிகுவேல் டையஸ்-கேனலையும் அவர் சந்தித்து பேசினார். 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய அவர், 21-ம் நூற்றாண்டின் சவால்கள் மற்றும் உலகளாவிய தெற்கு பகுதியானது விளிம்பு நிலையில் உள்ளது என்றார். அதனால், சர்வதேச அமைப்புகளில் விரிவான சீர்திருத்தங்களுக்கான அவசர தேவையையும் அவர் சுட்டி காட்டினார். இதேபோன்று இரட்டை நிலைப்பாடுகளால் உலகளாவிய தெற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிக்கான நலன்களுக்கு ஒருபோதும் முன்னுரிமை அளிக்கப்பட்டதில்லை எனவும் குறிப்பிட்டார். பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி…
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார். வனபத்திரகாளி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சுற்றுப்பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து 33 சட்டமன்றத் தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் விவசாயிகளை சந்தித்து பேசிய அவர், அதன்பின் பிளாக் தண்டர் செல்கிறார். பிறகு மாலை 4.35 மணியளவில் பிளாக் தண்டர் முதல் ஊட்டி சாலை, காந்தி சிலை வரையில் ரோடு ஷோ செல்கிறார். வனபத்திரகாளி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சுற்றுப்பயணத்தை தொடங்கினார். மாலை 5 மணிக்கு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் பிரச்சார வாகனத்தில் நின்றவாறு பொதுமக்களிடையே உரையாற்றுகிறார். மாலை 5.40…