Author: Editor TN Talks
தெலுங்கு திரையுலகின் பிரபலமான நகைச்சுவை நடிகர் பிஷ் வெங்கட். தனித்துவமான தெலுங்கானா உச்சரிப்பு மற்றும் நகைச்சுவையால் ரசிகர்களை ஈர்த்தவர். இவர் இப்போது சிறுநீரக கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், அதற்கு நிறைய பணம் செலவாகும் எனவும் கூறியுள்ளனர். இதனையறிந்த நடிகர் பிரபாஸின் குழுவினர், பிஷ் வெங்கட்டின் குடும்பத்தை தொடர்பு கொண்டு நிதி உதவி வழங்க முன்வந்துள்ளனர். இதனை பிஷ் வெங்கட்டின் மகள் ஸ்ரவந்தி தெரிவித்துள்ளார். நிதியுதவி கிடைத்த போதிலும், சிறுநீரக நன்கொடையாளரை கண்டறிவது பெரும் சவாலாக உள்ளதாகவும், குடும்பத்தில் யாருடைய சிறுநீரகமும் பொருத்தமாக இல்லை எனவும் கவலை தெரிவித்துள்ளார். மேலும் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, பவன் கல்யாண், அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நன்கொடையாளரை கண்டறிய உதவுமாறு ஸ்ரவந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இணையத்தில் இன்று இல்லாதது என எதுவுமே இல்லை. எதை தேடினாலும் அதற்கான பதிலும், செய்முறையும் வரும். அப்படியிருக்க, நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பதையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர் சில ரவுடிகள். அப்படி விழுப்புரத்தில் நாட்டு வெடிகுண்டை தயாரித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம், பர்கத் நகர் அருகேயுள்ள தோப்பில் ரவுடிகள் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், போலீசார் அங்கு சென்ற போது, 4 பேர் பதுங்கி இருப்பதை கண்டறிந்தனர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், அவர்களிடமிருந்து வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள், சணல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் இருந்ததையும் கண்டு பிடித்தனர். விசாரணையில் சின்ன கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த ஜவகர், அசேன், முகமது ஷெரீப், புதுச்சேரியை சேர்ந்த சரவணன் ஆகியோர் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெட்குண்டை வெடிக்கச் செய்து அதனை இன்ஸாவில் பதிவிட்டது தெரியவந்தது.…
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா என்ற இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 300 சவரன் நகை போட்டு, ரூ.70லட்சத்தில் கார் கொடுத்து, ரூ.5கோடி செலவில் பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணம் இரண்டரை மாதங்கள் தான் நீடித்தது. மீதமுள்ள 200 சவரன் நகைகளை கேட்டு கணவர், மாமியார், மாமனார் ஆகியோர் கொடுமை படுத்தியதாக தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோ அனுப்பி வைத்து விட்டு ரிதன்யா விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்டார். இதே போன்றதொரு சம்பவம் தற்போது குமரியிலும் நடந்துள்ளது. குமரி மாவட்டம் கருங்கல் அருகே திக்கணங்கோடு கிழக்கு தாறாவிளையை சேர்ந்தவர் ராபின்சன். இவருடைய 26 வயதான மகள் ஜெமலா, பி.எஸ்.சி நர்சிங் முடித்தவர். இவரும் இனயம் சின்னத்துரையை சேர்ந்த மரிய டேவிட் மகன் நிதின் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் ஜெமலாவின் பெற்றோர் எதிர்ப்பு…
திருப்புவனம் அருகே தனது ஒன்பதரை சவரன் நகையை திருடி விட்டதாக அஜித் குமார் என்ற நபர் மீது நிகிதா என்பவர் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் அஜித்தை கைது செய்து அடித்து துன்புறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டதில், வலிப்பு ஏற்பட்டு அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அஜித்குமாருக்கு நீதி வழங்கக் கோரி எதிர்க்கட்சி தலைவர் உட்பட பல அரசியல் தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கிடையில் அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா ஏற்கனவே பண மோசடி புகாரில் சிக்கியவர் என்பது தெரியவந்தது. நிகிதா தலைமறைவானதால் அவருடைய வீடு பூட்டிக்கிடக்கிறது. கோவையில் அவர் பதுங்கி இருப்பதாக சில வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், நிகிதா அழுது கொண்டே பேசும் ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், ”இதனை மிகவும் வேதனையுடன் நான் வெளியிடுகிறேன். பெண் ஒருவர் பல்வேறு பட்டப்படிப்புகள், டாக்டர் பட்டம் முடித்து கல்லூரியில் பேராசிரியராக…
இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் தொடரில், முதல் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து 3-வது ஒருநாள் போட்டி கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. அப்போது மழை குறிக்கிட்டதால், 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள், நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 269 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, இங்கிலாந்து பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 20 பந்துகளில்…
நாம் பூர்த்தி செய்ய வேண்டும்” என்று கூறினார். இந்நிலையில் வீட்டிற்கு ஒருவரை தவெகவில் சேர்க்க வேண்டும் என்றும், ஒவ்வொரு தெருவிலும் இரண்டு பேர் நிர்வாகியாக இருக்க வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு அறிவுறுதியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 120 மாவட்டங்கள், 12,500 கிராமப் புறங்களில் தவெகவின் கொள்கை விளக்கக் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விஜய்யின் தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு முன் மாநில மாநாட்டை நடத்த தவெக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள்…. * 2026 சட்டசபை தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய். தவெக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும். * தேர்தல் கூட்டணி குறித்த முடிவுகளை எடுப்பதற்கு தவெக தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம். * ஆகஸ்டில் தவெக மாநில மாநாடு; செப்டம்பர் முதல் டிசம்பர் வரை விஜய் சுற்றுப்பயணம். * சட்டசபை தேர்தலில் தமிழக முதல்-அமைச்சராக தலைவர் விஜயை வெற்றியடைய செய்யவேண்டும்.…
ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. பரந்த கடற்பரப்பின் மேல் வீற்றிருக்கும் முருகனை காண நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இங்கு குவிந்து வருகின்றனர். 2,000 ஆண்டு பழமையான கோயில் எனக் கூறப்படும் இக்கோயிலில் குடமுழுக்கு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 1-ம் தேதி யாகசாலை பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கிய நிலையில், வரும் 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெற இருப்பதால், இதனை காண்பதற்காக கோடிக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சொந்த வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் கோயில் இருக்கும் பகுதிக்கு மக்களால் வர முடியாமல் போகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக அன்று ஒரு நாள் மட்டும் உள்ளூரை சேர்ந்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து பைக் டாக்ஸிக்கு அரசு ஏற்பாடு…
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில், விசாரணையை 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் கைகாட்டி புதூரை சேர்ந்த அண்ணாதுரை என்ற தொழிலதிபரின் மகளான ரிதன்யா, கடந்த ஏப்ரல் மாதம் அதேப் பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த மாதம் 28-ம் தேதி காருக்குள் விஷமருந்தி ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ்-அப்-ல் அழுதபடி தனது மரணத்திற்கு காரணம் தனது கணவர், மாமனார், மாமியார் என கண்ணீர் மல்க ஆடியோவை அனுப்பியிருந்தார். அதனடிப்படையில் போலீசார் இதன்யாவின் கணவர், மாமனார் ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி இருவரும் தங்களை ஜாமீனில் விடுவிக்க அனுமதிக்கு மாறு திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், ரிதன்யாவின் தந்தை அண்ணாத்துரை மற்றும் அவருடைய…
தமிழ் சினிமா மட்டுமின்றி சினிமா உலகில் கிரைம் திரில்லர் ஜானர் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அப்படி தமிழில் கடந்த மே மாதம் வெளியான லெவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில், நவீன் சந்திரா கதாநாயகனாக நடித்திருந்தார். அவரோடு சேர்ந்து ரியா ஹரி, ஷசாங்க், ரவி வர்மா, கீர்த்தி தாம ராஜு, அபிராமி, ‘ஆடுகளம்’ நரேன், திலீபன், ரித்விகா, அர்ஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். டி.இமான் இசையில் உருவாகி இருந்த லெவன் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் ஓடிடியிலும் வெளியானது. ஓடிடியில் அதிகளவு ரசிகர்களை ஈர்த்தது இப்படம். இறுதியில் ஹீரோவே சைக்கோ கொலைகாரன் என்ற டுவீஸ்ட் ரசிக்கும் படியாக இருந்தது. இந்த நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பிரான்சிஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிறுவனின் படப்பிடிப்பு காட்சிகள்…
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி த.வெ.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தில், திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார், காவலர்கள் தாக்கியதில் மரணமடைந்தார். தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை சிவானந்தா சாலையில் ஜூலை 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி, த.வெ.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கோரி த.வெ.க தரப்பில், நீதிபதி வேல்முருகன் முன் முறையிடப்பட்டது. இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதி, இன்று பிற்பகல் விசாரிக்க என்ன அவசரம் உள்ளது என கேள்வி எழுப்பினார். அதற்கு, ”தமிழகத்தில் இந்த ஆட்சியில் இதுவரை 23 விசாரணை மரணங்கள் நடந்துள்ளதாகவும், அதை…