Close Menu
    What's Hot

    விம்பிள்டன் 2026!. ஜோகோவிச்சை வீழ்த்தி ஜானிக் சின்னர் அபாரம்!. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!.

    அடுத்தடுத்து வெளியாகும் திமுக ஊழல்!. நாடே கைக்கொட்டி சிரிக்கும்!. தவெக ஐடி விங் பதிலடி!

    மிக்கல் மெரினோவின் கடைசி நேர மேஜிக்!. பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது ஸ்பெயின்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»உயிரிழந்த அஜித்குமாருக்கு ஆதரவாக த.வெ.க.சார்பில் போராட்டம்… அனுமதி கோரிய வழக்கை விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு…
    தமிழ்நாடு

    உயிரிழந்த அஜித்குமாருக்கு ஆதரவாக த.வெ.க.சார்பில் போராட்டம்… அனுமதி கோரிய வழக்கை விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 4, 2025Updated:July 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிவகங்கை இளைஞர் அஜித்குமார் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி த.வெ.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

    சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தில், திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார், காவலர்கள் தாக்கியதில் மரணமடைந்தார். தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை சிவானந்தா சாலையில் ஜூலை 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி, த.வெ.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கோரி த.வெ.க தரப்பில், நீதிபதி வேல்முருகன் முன் முறையிடப்பட்டது. இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதி, இன்று பிற்பகல் விசாரிக்க என்ன அவசரம் உள்ளது என கேள்வி எழுப்பினார். அதற்கு, ”தமிழகத்தில் இந்த ஆட்சியில் இதுவரை 23 விசாரணை மரணங்கள் நடந்துள்ளதாகவும், அதை கண்டித்து ஆர்ப்பாட்டம்” நடத்த உள்ளதாகவும் த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து பேசிய நீதிபதி, ”நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு பதில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். குற்றம் செய்யாதீர்கள்; மனைவியை கொடுமைப்படுத்தாதீர்கள் என விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். இன்னும் ஆங்கிலேயர் காலத்து சட்டங்கள் தான் நடைமுறையில் உள்ளன. முதலில் அதை திருத்தக் கூறுங்கள்” என தெரிவித்தார்.

    பின்னர், மனு எண்ணிடப்பட்டு, விசாரணைக்கு பட்டியலிடப்பட்டால் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதி, ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்கும்படி அறிவுறுத்தினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம்… விஜய் தலைமையில் நடைபெறுகிறது…
    Next Article சைக்கோ திரில்லராக கலக்கிய ’லெவன்’… மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு…
    Editor TN Talks

    Related Posts

    விம்பிள்டன் 2026!. ஜோகோவிச்சை வீழ்த்தி ஜானிக் சின்னர் அபாரம்!. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!.

    July 11, 2026

    அடுத்தடுத்து வெளியாகும் திமுக ஊழல்!. நாடே கைக்கொட்டி சிரிக்கும்!. தவெக ஐடி விங் பதிலடி!

    July 11, 2026

    மிக்கல் மெரினோவின் கடைசி நேர மேஜிக்!. பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது ஸ்பெயின்!

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விம்பிள்டன் 2026!. ஜோகோவிச்சை வீழ்த்தி ஜானிக் சின்னர் அபாரம்!. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!.

    அடுத்தடுத்து வெளியாகும் திமுக ஊழல்!. நாடே கைக்கொட்டி சிரிக்கும்!. தவெக ஐடி விங் பதிலடி!

    மிக்கல் மெரினோவின் கடைசி நேர மேஜிக்!. பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது ஸ்பெயின்!

    ‘தி ஒடிஸி’ பிரீமியர் விழா! மும்பை வந்த கிறிஸ்டோபர் நோலன்!

    2 குழந்தைகளுடன் தந்தை தற்கொலை!. உடலில் மின்சாரத்தை செலுத்தி விபரீத முடிவு!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.