Author: Editor TN Talks
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். புதுச்சேரி சட்டப்பேரவையில் மொத்தம் 30 இடங்கள் உள்ளன. இதில் 23 இடங்கள் புதுச்சேரியிலும், 5 இடங்கள் காரைக்காலிலும், மாஹே மற்றும் ஏனாம் இடங்களில் தலா ஒரு இடங்களென பிரிந்துள்ளன. இதுமட்டுமல்லாது 3 நியமன எம்எல்ஏக்கள் உள்ளனர். என்.ஆர். காங்கிரசின் தலைவரான ரங்கசாமி முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். பாஜகவின் ஏம்பலம் செல்வம் சபாநாயகராக உள்ளார். பாஜகவைச் சேர்ந்த ராமலிங்கம், அசோக் பாபு, வெங்கடேசன் ஆகிய மூன்று பேர் நியமன எம்எல்ஏக்களாக இருந்து வந்தனர். இந்நிலையில், மூன்றுபேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி அதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினர். முன்னதாக பாஜக தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம், முதலமைச்சரையும், சபாநாயகரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்தே இந்த ராஜினாமா கடிதம் வழங்கப்பட்டது. இவர்களுக்கு பதிலாக மூன்று…
மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தானாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்த தொடங்கி உள்ளது. கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் உள்ள சட்டக்கல்லூரியில் புதன்கிழமை இரவு 7.30 மணி முதல் 8.50 மணிக்குள் கல்லூரி வளாகத்தில் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறையினரிடம் பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். மாணவியின் புகாரின் அடிப்படையில் இரண்டு பேரை கைது செய்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் அதே கல்லூரியின் முன்னாள் மாணவர் மறறும் அக்கல்லூரியின் ஊழியர் ஒருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. இந்த நிலையில் இவ்விவகாரத்தை கையில் எடுத்துள்ளது தேசிய மகளிர் ஆணையம். இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் கவலை அளிப்பதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணையை நடத்த கொல்கத்தா காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவருக்கு முழு மருத்துவ, உளவியல் மற்றும் சட்ட உதவியை வழங்க அறிவுறுத்தி உள்ளது.…
காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 41வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் காணொளி காட்சி மூலம் கூட்டம் நடைபெற்து. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு,கர்நாடக,கேரளா,புதுச்சேரி மாநில அதிகாரிகள் காணொளி மூலம் கலந்து கொண்டுள்ளனர். காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு நல்ல நிலையில் உள்ளதால் தமிழகத்துக்கு தர வேண்டிய நீரை குறைவில்லாமல் திறந்து விட வேண்டும் என தமிழகம் தெரிவித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில் தர வேண்டிய 31.24 டி.எம்.சி நீரை கர்நாடகா தங்குதடையின்றி திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியிலிருந்து தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில் தர வேண்டிய தண்ணீரை திறந்து விட கர்நாடகாவுக்கு கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு குழுவின் 117 வது கூட்டத்தில் நான் உத்தரவிட்டிருந்தது.
சென்னை ஐஐடி (IIT) வளாகத்தில் படிக்கும் 20 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரோஷன் குமார் (22) என்ற வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஐஐடி வளாகத்தில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்று இரவு 7:30 மணியளவில் மாணவி தனியாக நடந்து வந்துகொண்டிருந்தபோது, ரோஷன் குமார் கையில் கட்டையுடன் வந்துள்ளார். அவர் மாணவியின் முடியைப் பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மாணவி சத்தமிடவே, ரோஷன் குமார் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மாணவி ஐஐடி காவலாளிகளிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் ஐஐடி வளாகத்தில் உள்ள “மும்பை சாட்” (Mumbai Chaat) என்ற கடையில் பணிபுரிந்து வந்த ரோஷன் குமார் என்பது…
சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் சிலர் நடிகரும், தவெக தலைவருமான விஜய்-யின் உருவம் பொறித்த கைக் குட்டையை காண்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் இன்றும், நாளையும் கலைஞர் நூற்றாண்டு நினைவு கருத்தரங்கம் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்பு மலரை வெளியிட்டு உரையாற்றினார். கலாநிதி வீராசாமி எம்.பி.உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது மாணவர் வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்கள் சிலர் திடீரென கைக் குட்டை எடுத்து மேடையை நோக்கி காண்பித்தனர். அதில் நடிகரும், தவெக தலைவருமான விஜய்-யின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும் தவெக கொடியின் நிறமும் இடம்பெற்றிருந்தது. இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கைக்குட்டை காட்டிய மாணவர்கள் இருவரிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடி 2 மாணவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
சட்டத்திற்கு புறம்பாக போதைப் பொருட்களை யார் பயன்படுத்தினாலும் தவறுதான் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது போதைப் பொருள் புழக்கம் தான். நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட சம்பவம் கோலிவுட்டில் மிகப்பெரிய பேசுப் பொருளாக இருந்து வருகிறது. இதுகுறித்து மூத்த நடிகர்களும் திரைப்பிரபலங்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இன்னும் பல நட்சத்திரங்கள் இந்த சிக்கலில் மாட்டுவார்கள் என விவரம் அறிந்தவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், யார் போதைப் பொருட்கள் பயன்படுத்தினாலும் தவறு தான் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். சித்தார்த், சரத்குமார், தேவையானி உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 3பி.எச்.கே. இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் மாரி…
நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் தேர் திருவிழாவில் சாதிய அடையாளங்களை பறைசாற்றும் வண்ண ரிப்பன்கள், வாண வேடிக்கைகள் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மாதவன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது.. சாதி ரீதியான படுகொலை திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக பொது இடங்களில் சாதி ரீதியான அடையாளங்களை வெளிப்படுத்துவது தான் மூல காரணமாக இருந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் தேர் திருவிழா வருடம் தோறும் நடைபெற்று வருகிறது இந்த திருவிழா வருகின்ற ஜூலை 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்தும் கலந்து கொள்கின்றனர். இந்த திருவிழாவில் வருடா வருடம் சாதிரீதியான வண்ணங்களை கொண்ட பட்டாசுகள் வெடிக்க செய்வதும், பல்வேறு சமுதாய தலைவர்களை வாழ்க வாழ்க…
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், சில முக்கிய சுற்றுலா தலங்களுக்குச் செல்ல தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில், வனத்துறையின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வனத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பில்லர் ராக் (Pillar Rock), குணா குகை (Guna Cave), பைன் பாரஸ்ட் (Pine Forest), மோயர் பாயிண்ட் (Moir Point), பேரிஜம் ஏரி (Berijam Lake) ஆகிய இடங்களுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை விளக்கமளித்துள்ளது. யானைகளின் நடமாட்டம் சீராகும் வரை இந்தத் தடை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொந்த ஆட்டோ இருந்தால் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் என்று கோரிக்கை வைத்த பெண்ணுக்கு சொந்த ஆட்டோ வாங்கி தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி. கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பேச அழைக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த அமலா என்ற பெண் ஆட்டோ ஓட்டுநர் தான் வாடகை ஆட்டோ ஓட்டி பிழைப்பதாகவும், தன்னைப்போன்ற பலரும் அதேபோன்ற நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். இதை கவனித்த ஆளுநர் அந்த பெண்ணின் கோரிக்கையை பரிசீலித்து தனது நிதியிலிருந்து ஒரு ஆட்டோ வழங்க உத்தரவிட்டார். இன்று அந்த பெண்ணை ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்த ஆர்.என்.ரவி, ஆட்டோவை ஆளுநர் வழங்கினார். அதுமட்டுமல்லாது அந்த ஆட்டோவில் பள்ளி மாணவ மாணவிகளுடன் அவர் சிறிது தூரம் பயணித்தார். ஒரு பெண் வைத்த சாதாரண கோரிக்கை என்று கடந்து செல்லாமல், தமிழில் பேசியதைகூட கவனித்து தன்னை…
வேளாண்மைக்காகப் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் மத்திய அரசின் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தத் திட்டம் உழவர்களை மேலும் துயரங்களுக்கு ஆளாக்கும் என்று தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நீர்வளத்துறை, இந்தியா முழுவதும் வேளாண்மைக்காகப் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முறை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. உழவர்களின் துயரங்களையும், நெருக்கடிகளையும் புரிந்துகொள்ளாமல் இத்திட்டத்தை செயல்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். திட்டத்தின் விவரங்கள்: நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தின்படி, மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் நீர் பயன்பாட்டாளர்கள் அமைப்புகளின் மூலம் நிலத்தடி நீர் மையப்படுத்தப்பட்ட பகுதிகளில் சேமித்து வைக்கப்படும். அந்த நீர் அழுத்தத்தைப் பயன்படுத்தி உழவர்களின் வேளாண் பயன்பாட்டுக்காக அனுப்பப்படும்…