Author: Editor TN Talks

பேரறிஞர் அண்ணாவையும், தந்தை பெரியாரையும் பாஜகவினர் விமர்சிக்கிறார்கள் என்று இன்று கூவும் திமுகவினருக்கு 1999-ல் 2001-ல் அவர்களுடன் கூட்டணி வைத்தபோது தெரியாதா? என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பி உள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் தான் பங்கேற்றதாக திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றஞ்சாட்டினார். பேரூர் அடிகளாரின் நூற்றாண்டு விழாவில் தான் கலந்து கொண்டதாகவும் அந்த விழாவிற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். ஆனால் இதனை திரித்து திமுகவினர் பொய் பரப்பி வருவதாகவும் எஸ்.பி.வேலுமணி காட்டத்துடன் கூறினார். மேலும் மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை விமர்சித்து வீடியோ வெளியானது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்ட மாநாடு என்ற அடிப்படையில் தான் முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டதாக கூறினார்.…

Read More

சட்டவிரோதமாக கள் இறக்கி குடித்து அதை உணவு என பொய் பிரச்சாரம் செய்யும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது புதிய தமிழகம் கட்சியின் மாநில பொருளாளரும் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான SM செல்லத்துரை தலைமையில் இன்று தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டவிரோதமாக கள் இறக்கி குடித்து அதை உணவு என பொய் பிரச்சாரம் செய்யும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த பானங்களில் 10 முதல் 12 சதவீதம் வரை ஆல்கஹால் இருக்கிறது எனவே அது மதுவுக்கு இணையாக போதை உள்ள ஒரு போதை பொருள் என்றும், இதனை சிறு குழந்தைகளுக்கு பள்ளி செல்லும் மாணவ மாணவியருக்கும் கொடுக்க முடியுமா என்றும்…

Read More

முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடத்தை ஒழிப்போம் என்று அண்ணா பெரியார் படங்களுடன் வீடியோ வெளியானது குறித்து தான் இன்னும் பார்க்கவில்லை என்றும் அதனை பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கோவைவிமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு யாரும் வர மாட்டார்கள் என திமுக கூறிய நிலையில் முதல் நாள் மூன்று லட்சம் பேரும் மாநாட்டின் போது 5 லட்சம் பேரும் வந்திருந்தார்கள் என்றார். சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் மாநாடு நடந்து முடிந்து இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் காவல்துறையினர் ஒருவர் கூட அந்த வளாகத்தில் இல்லை எனவும் அனைவரும் கட்டுப்பாட்டுடன் இருந்து மாநாட்டில் பங்கேற்று திரும்பினர் எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தோல்வி பயத்தில் திமுகவினர் தற்பொழுது பேசிக் கொண்டு இருக்கின்றனர் எனவும் அவர் விமர்சித்தார். திருமாவளவன் திருநீற்றை அழித்தது குறித்து திருமாவளவன் அளித்த…

Read More

தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட வீடியோ என்பது துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சர்த்தில் எங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என்று அதிமுக சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் விவரம் வருமாறு.. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் திராவிடத்தின் உறைவிடமாகவே திகழும்! பெரியாரையே இழிவுபடுத்திய கருணாநிதியின் திமுக, அஇஅதிமுக-வுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை! அவலமே உருவான ஒரு ஆட்சியை நடத்தும் ஸ்டாலினின் திமுக, அதைப்பற்றி நாங்கள் நாள்தோறும் தெரிவிக்கும் மக்களின் குரலான விமர்சனங்ககளுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல், “Take Diversion” என்ற தனது வழக்கமான பாணியில், முருக பக்தர்கள் மாநாட்டை வைத்து, அஇஅதிமுக மீது அவதூறான கருத்துகளை அள்ளித் தெளித்து, மக்களின் கவனத்தை திசைதிருப்பிவிடலாம் என எண்ணுகிறது. திமுகவின் அமைச்சர் அடிபொடிகள் வரிசையாக செய்தியாளர் சந்திப்பு கொடுக்க, அறிவாலய Gatekeeper ஆர்.எஸ்.பாரதி பெயரில்…

Read More

புகார் கொடுக்கச் சென்ற பட்டியலினத்தைச் சேர்ந்தவரை அவமானப்படுத்திய நொளம்பூர் காவல் ஆய்வாளருக்கு எதிராக இரு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சென்னை நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு செய்ததாக புகார் அளித்த குடியிருப்பு உரிமையாளரான நாங்குநேரியைச் சேர்ந்த வானமாமலை என்ற பட்டியலினத்தைச் சேர்ந்தவரை, அவமானப்படுத்தும் வகையில், குடியிருப்பு உரிமையாளர் ஒருவர் whatsapp குரூப்பில் சாதி ரீதியிலான கருத்துக்களை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக அளித்த புகார் மீது நொளம்பூர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், புகார் அளிக்கச் சென்ற தன்னை, காவல் நிலைய அதிகாரி அவமானப்படுத்தியதாகக் கூறி, வானமாமலை, தேசிய பட்டியலின ஆணையத்துக்கு மனு அனுப்பினார். இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஆணையம், சென்னை காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன் அடிப்படையில் நொளம்பூர் காவல் ஆய்வாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வானமாமலை, சென்னை உயர்…

Read More

சினிமா துறையில் போதைப் பொருள் பழக்கமும், புழக்கமும் அதிகளவில் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. சினிமாவில் உள்ள சிலரே இது குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். அப்படியிருக்க, நடிகர் ஸ்ரீகாந்த் போதை வழக்கில் கைதாகி இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வரவேண்டும் என்ற முனைப்பில் இருந்தவர் ஸ்ரீகாந்த். 2000-களின் முற்பாதியில் ஹீரோவாக வலம் வந்தவர், பின்னாளில் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் இவரது நடிப்பில் வெளியான தினசரி என்ற படத்திற்காக நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டார். இப்படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகியுமான சிந்தியாவால் கேலி, கிண்டலுக்கு உள்ளானார் ஸ்ரீகாந்த். தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் வெப் சீரிஸ், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பாரில், அதிமுக வழக்கறிஞர் பிரசாந்த் என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவரை…

Read More

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விடுத்துள்ள அறிக்கை வருமாறு.. மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சனங்கள் அடங்கிய வீடியோவை பார்த்து ரசித்திருக்கிறார்கள் ’அண்ணா’ பெயர் தாங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர். அண்ணாவைக் கேவலப்படுத்துவதை ’அண்ணா’ என்ற பெயர் தாங்கிய கட்சி ரசிக்கிறது என்றால், உங்களின் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா? அண்ணாவின் பெயரைக் காப்பாற்றுவதை விடத் தங்களின் சொத்துக்களைக் காப்பாற்றுவதே முக்கியம் என நினைத்துவிட்டார்கள். உங்கள் தாயை, உங்கள் மனைவியை விமர்சனம் செய்தாலும் இப்படிதான் சோற்றால் அடித்த பிண்டங்களாக அமர்ந்திருப்பீர்களா? இன்றைக்கு எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அதிமுகவில் சரியான ஆளுமை இல்லாததால், அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இந்த அவமானத்தைத் தேடித் தந்திருக்கிறார்கள். ஒன்றிய அரசின் வருமானவரித் துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட அதிகாரமிக்க முட்டை, அம்மிக்…

Read More

தமிழகத்தில் பிவிசி பிளக்ஸ் போர்டுகள் தயாரிக்க, விற்பனை செய்ய தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இந்த மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். “பிவிசி பிளக்ஸ் போர்டுகள் மட்காத, மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருளாகும். பிவிசி பிளக்ஸ் போர்டுகளை எரித்தும், மண்ணில் புதைத்தும் அழிக்கலாம் என்கின்றனர். பிவிசி பிளக்ஸ் போர்டுகளை எரிக்கும் போது வெளியேறும் நச்சு வாயுவை சுவாசித்தால் புற்றுநோய் உட்பட பல்வேறு நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழக அரசு மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்தது. இதில் பிவிசி பிளக்ஸ் போர்டுகளை சேர்க்கவில்லை. இதற்கு தடை விதிக்காமல் மற்ற பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதால் எந்த பலனும் ஏற்படாது. எனவே, தமிழகத்தில் பிவிசி பிளக்ஸ் போர்டுகள் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க…

Read More

சுழற்சி அடிப்படையில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனடிப்படையில் நிதித்துறை செயலாளராக வெங்கடேஷ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். சங்கர் ஐஏஎஸ் உயர்கல்வித்துறை செயலாளராகவும், வள்ளலார் ஐஏஎஸ் சமூக சீர்திருத்தத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாகராஜன் ஐஏஎஸ் வணிகவரித்துறை ஆணையராகவும், சமயமூர்த்தி ஐஏஎஸ் மனிதவள மேலாண்மை துறை செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நிதித்துறை செயலாளராக வெங்கடேஷ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்கிய சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் சிங்கமுத்துவுக்கு ரூ.2,500அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதளங்கள் மற்றும் யூ டியூப் சேனல்களுக்கு நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்க சிங்கமுத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், தன்னை பற்றி அவதூறாக பேச தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் வடிவேலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, நடிகர் வடிவேலுவுக்கு எதிராக இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் என நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான எந்த தகவல்களையும், வாய்மொழியாகவோ, எழுத்துபூர்வமாகவோ,…

Read More