Author: Editor TN Talks

திருப்பரங்குன்றத்தில் சுவாமி தரிசனம் செய்த விசிக தலைவர் திருமாவளவன் நெற்றியில் இருந்த விபூதியை அழித்தது ஏன் என விளக்கமளித்துள்ளார். திருமாவளவன் கடந்த 19-ம் தேதி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்றிருந்தார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் போது, தம்பதியினர் செல்ஃபி எடுக்க முயன்றனர். அப்போது தனது நெற்றியில் இருந்த விபூதியை அழித்து விட்டு அவர் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பேசுபொருளானது. கடந்த 2019-ம் ஆண்டு சனாதன எதிர்ப்பு மாநாட்டை நடத்தியிருந்தார் திருமாவளவன். இதனால் அவர் இந்துக்களுக்கு எதிரானவர் என இந்து அமைப்புகள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் நான் இந்துக்களுக்கு எதிரானவன் இல்லை எனவும், இந்துத்துவத்திற்கே எதிர்ப்பு தெரிவிக்கின்றேன் எனவும் திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் நெற்றியில் வேர்வை இருந்ததால் அல்லது எப்பொழுதும் முடியை சரி செய்வது போல செய்தேன் இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது என விளக்கமளித்துள்ளார் திருமாவளவன். இது குறித்து…

Read More

ஈரான் – இஸ்ரேலுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (22.06.2025) திடீரென அமெரிக்கா ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதலை நடத்தியது. இதனால் அப்பகுதியில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. ஈரானில் உள்ள மாணவர்களை பத்திரமாக மீட்க இந்தியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ’ஆபரேஷன் சிந்து’ என்ற பெயரில் 290 இந்தியர்கள் நேற்று நள்ளிரவு டெல்லி வந்தடைந்தனர். இதுவரை சுமார் 1,117 இந்தியர்கள் இந்துஆ வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் போர் காரணமாக ஈரான், இஸ்ரேலில் தமிழக மீனவர்கள் சிக்கி இருப்பதாகவும், அவர்களை தாயகம் அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரான், இஸ்ரேலில் கன்னியாகுமரியைச் சேர்ந்த சுமார் 1,000 மீனவர்கள் சிக்கியுள்ளனர். ’ஆபரேஷன் சிந்து’ மூலம் குமரி மீனவர்களையும் மீட்கவும்,…

Read More

தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள ஈழ தமிழர் முகாமில் உள்ள பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப கடந்த 2019ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கே.வி விஸ்வநாதன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் பாஸ்கரன் தரப்பு வழக்கறிஞர் வைரவன், பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்பினால் அவர் கொல்லப் படலாம் என்ற அச்சம் உள்ளது எனவே அவரை திருப்பி அனுப்பும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அப்போது நீதிபதிகள் இது கடந்த 2019 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவாகும், தற்போது ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில் எந்த மாதிரியான அச்சுறுத்தல் உங்களுக்கு உள்ளது என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பாஸ்கரன் தரப்பு, இலங்கையில் போரின் போது அங்கு வசித்து வந்த தன்னுடைய தந்தை, அண்ணி உள்ளிட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்ற தான் தற்போது இலங்கைக்கு…

Read More

அன்மையில் சோசியல் மீடியாவில் மிகவும் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் என்றால் அது ஸ்ரீகாந்த் தான். இந்தாண்டு தொடக்கத்தில், பிப்ரவரி மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தில் இவரது ‘தினசரி’ என்ற படம் வெளியானது. இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகியுமான சிந்தியா லூர்து சமூக வலைதளத்தில் மிகவும் ட்ரோல் செய்யப்பட்டார். இப்படத்தில் இருந்து வெளியான பாடல்களில் இவரது நடிப்பு மூலம் நெட்டிசன்களுக்கு இரையானார். இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்திருந்ததால், அவரும் ட்ரோலுக்கு உள்ளானார். பணம் கிடைக்கிறது என்பதற்காக இப்படியெல்லாம் நடிக்க வேண்டுமா என பல கிண்டல் கேலிக்கு உள்ளானார். இப்படத்தை தொடர்ந்து ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ படம் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியானது. ஆயினும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் ஸ்ரீகாந்த. இந்த நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பார் ஒன்றில் ஏற்பட்ட தகராறில் அதிமுக வழக்கறிஞர்…

Read More

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் 25 ஆம் தேதி காலை சென்னையில் இருந்து இரயில் மூலமாக காட்பாடி செல்கிறார். அங்கிருந்து, வேலூர் செல்லும் அவர், அங்கு கட்டப்பட்டுள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையினை தொடங்கி வைக்கிறார். இதை தொடர்ந்து வேலூர் அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கிறார். அதன் பின் மாலை அங்கிருந்து புறப்பட்டு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை மட்டும் கலைஞர் அறிவாலயத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். பின்னர் சாலை வழியாக திருப்பத்தூர் செல்லும் அவருக்கு ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு நடைபெறும் ரோட் ஷோ நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்.அன்று இரவு திருப்பத்தூர் அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கிறார். 26 ஆம் தேதி காலை ஜோலார்பேட்டையில் நடைபெறும் அரசு நலத்திட்டா உதவிகள் வழங்கும் நிகழ்சியில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற பணிகளை தொடங்கி…

Read More

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 2 மாதங்களில் முடிந்துவிடும் என நடிகர் அதர்வா தெரிவித்துள்ளார். சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வருகிறது பராசக்தி திரைப்படம். இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இடையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றதால், படப்பிடிப்பில் சிக்கல் ஏற்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிரான விசாரனைக்கு இடைக்கால தடை விதித்ததால் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி இருக்கிறது. இலங்கையில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த 20-ம் தேதி அதர்வா நடிப்பில் டி.என்.ஏ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதர்வா, இன்னும் 2 மாதங்களில் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்றார். விஜயகாந்தைப்…

Read More

சென்னை மயிலாப்பூர் சி.ஐ.டி காலனியில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் 3.01 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 113 தெருக்களில் வாழும் 50,000 பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 6.25 எம்.எல்.டி செயல்திறனுடன் H2S வாயு கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய சாலையோர கழிவு நீர் உந்து நிலையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்…. தொடர்ந்து சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என்.நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாவட்ட செயலாளர் சிற்றரசு ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து சென்னை, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். …

Read More

பிரமாண்ட ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படத்தின் முதல் பாடல் அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் படம் கூலி. ஆகஸ்ட் 14-ந் தேதி திரைக்கு வர உள்ள இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடங்கி உள்ளது. இதன் ஒருபகுதியாக கூலி படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகும் என்று சன் பிக்ர்சஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினியின் சமீபத்திய ஆஸ்தான இசையமைப்பாளரான அனிரத் தான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். யாரும் எதிர்பாராத வகையில் ஆச்சர்யமூட்டும் வகையில் பிரபல நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் இந்த பாடலை பாடியுள்ளார். முற்போக்கு பாடல்களால் கவனம் ஈர்த்து வரும் அறிவு இப்பாடலை எழுதியுள்ளார். சாண்டி மாஸ்டர் நடன இயக்குநராக இருந்து சூப்பர் ஸ்டார்…

Read More

கோவையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்… வேல் கொடுத்து வரவேற்ற தமிழக பாஜகவினர்.. கோவை, பேரூர் ஆதீனத்தின் 24-ம் குரு மகா சந்நிதானம் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நடை பெறுகிறது பாரம்பரிய சிவவேள்வி பூஜையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு உள்ளார். மேலைச் சிதம்பரம் எனும் புகழ் கொண்டதும் பேரூர் பேரூராதீனத்தைத் கி.பி 11-ம் நூற்றாண்டில் அருட்குரு சாந்தலிங்கப் பெருமான் தோற்றுவித்தார். அதன் பிறகு அவரின் அருள்வழியில் 24-ம் குருமகாசந்நிதானமாக தெய்வத் திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் திகழ்ந்தார். அவர் சைவத்தையும் தமிழையும் இரு கண்களாகப் போற்றினார். அவரின் வழியில் கல்வி, சமுதாயம், மருத்துவம், பாரம்பரியம், பண்பாடு ஆகிய பணிகளை ஆதீனம் தற்போது சிறப்பான முறையில் செய்து வருகிறது. கோவையில் நடைபெற்று வரும் RSS நூற்றாண்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்…

Read More

நீலகிரி தொகுதி எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2015-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் ஆ.ராசா மற்றும் அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய் சடரங்கனி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் டெக் பார் லிமிடெட் ஆகியோருக்கு எதிராக கடந்த 2023-ம் ஆண்டு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிக்கையில், குற்றம்சாட்டப்பட்ட காலத்தில் ஆராசா வருமானத்திற்கு அதிகமாக 579 சதவீதம் அதாவது ரூ.5.53கோடி சொத்து குவித்துள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியது. இந்த வழக்கு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. ஆ.ராசா தரப்பில், வருமான வரி கணக்கு விவரங்களை சரிபார்க்க வேண்டியுள்ளதால் இந்த வழக்கின் சில ஆவணங்களை வழங்க வேண்டும் எனக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு சிபிஐ தரப்பில்,…

Read More