Author: Editor TN Talks

மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடிப்பதால் ஈரானில் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு இஸ்ரேலிடம் இருந்து எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என அமெரிக்கா அனுமதி அளித்தாலும், குறிப்பிட்ட தினத்திற்கு மட்டுமே அனுமதி இருப்பதால் அதன் பிறகு எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தற்போது இந்தியாவில் கேஸ் சிலிண்டர் விலையானது உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.60ம், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.115ம் அதிகரித்து இருப்பதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இது குறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ” நாடு முழுவதும், கடந்த 10 ஆண்டுகளில், சமையல் எரிவாயு பயன்பாடு, 45% அதிகரித்துள்ளது. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வந்த உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களால், கடந்த 10 ஆண்டுகளில், சமையல் எரிவாயு இணைப்பு,…

Read More

கடந்த 1999ஆம் ஆண்டு தனக்கும் நடிகர் விஜய்க்கும் நடந்த திருமணத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நடிகை ஒருவருடன்,விஜய் தொடர்பில் உள்ளதாகவும், கண்ணியமாக பிரிவதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததால், விவாகரத்து வழங்க வேண்டும் என கூறியிருந்தார். மேலும், நியாயமான நிரந்தர ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும், நீலாங்கரை இல்லத்தில் வசிக்க உரிமை வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.  இந்த நிலையில், இந்த வழக்கு முடியும் வரை நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பிரிட்டனை சேர்ந்த தனக்கு வசிப்பதற்கு வீடு இல்லாத காரணத்தால், நீலாங்கரை இல்லத்தில் வசிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். விவாகரத்து தொடர்பாக நீதிமன்றத்தை அணுகினால், நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க முடியாது என விஜய் தனது…

Read More

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதிகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உலகளாவிய விநியோகம் மற்றும் கப்பல் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என கூறப்படுகிறது.  30 நாட்களுக்கு மட்டும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கிக் கொள்ள இந்தியாவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், போதுமான இருப்பு இருப்பதாக மத்திய அரசு கூறி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவு, உலகச்சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 9% அதிகரித்து, ஒரு பேரல் தற்போது 93 அமெரிக்க டாலராக இந்திய விலையில் ரூ.8,550ஆக விற்பனை செய்யப்படுகிறது.  2020-ம் ஆண்டுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை தற்போது அதிகபட்ச உச்சத்தை எட்டியிருப்பதால், இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இது இந்தியாவிலும் ஏற்படலாம்…

Read More

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்ட நிலையில், 2021-ம் ஆண்டு நடக்க இருந்த கணக்கெடுப்பு கொரோனா பரவலால் தள்ளி வைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு கடந்தாண்டு ஜூன் மாதம் அறிவித்தது. அதன்படி, கடந்தாண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி தலைமையில் கூடிய கூட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ல் நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இப்பணிகள் ரூ.11,718.24கோடியில் இருகட்டங்களாக நடத்தப்படும் என்றும்,  முதற்கட்ட கணக்கெடுப்பு இந்தாண்டு ஏப்ரலில் தொடங்கி செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இப்பணியில் 30 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மத்திய அரசு உத்தரவுப்படி, தமிழகத்தில் நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஜூலை 17 முதல் ஜூலை 31-ம் தேதி…

Read More

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதலை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருப்பதால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இந்தியா குறுகிய காலத்திற்கு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. இந்தியாவிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் நள்ளிரவு முதல் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.115 உயர்ந்துள்ளது. அதனால் ரு.1,929க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ சிலிண்டர் தற்போது விலை உயர்வால் ரூ.2,043க்கு விற்பனையாகிறது. கடந்த மார்ச் 1-ம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.30 அதிகரித்திருந்த நிலையில் 6 நாட்களில் மீண்டும் விலை உயர்ந்திருப்பதால்,…

Read More

திரைப்படத் தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷின் இல்லத் திருமண விழாவில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் நடிகை திரிஷா ஒரே காரில் வந்து கலந்து கொண்டது, அண்மையில் வெளியான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போன்று அமைந்துள்ளது. விஜய்​யிட​ம் இருந்து விவாகரத்து கோரி அவருடைய மனைவி சங்​கீதா செங்கல்​பட்டு நீதி​மன்​றத்​தில் மனுத்தாக்​கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கை குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றி உத்​தர​விட்​டது. தனக்​கும், தனது கணவர் விஜய்க்கும் கடந்த 1998 ஜூலை 10ல் இங்​கிலாந்தில் பதிவுத் திருமணம் நடந்​ததாக மனுவில் சங்கீதா தெரிவித்திருந்தார். அதன்​பிறகு தங்​களது திரு​மணம் இந்து முறைப்​படி 1999 ஆக. 25ல் சென்னை ராஜா முத்​தையா மன்​றத்​தில் நடந்ததாக குறிப்பிட்டிருந்தார். தங்​களுக்கு ஜேசன் சஞ்​சய்​ (25) என்ற மகன், திவ்யா சாஷா (20) என்ற மகள் உள்ளதாக மனுவில் அவர் கூறி இருந்தார். தனது கணவர் விஜய்க்கும், நடிகை…

Read More

ஐக்கிய அரபு அமீரகத்தின் பங்குச் சந்தைகள் மூடல்..! விருந்தாளிகளே முக்கியம் என நெகிழ வைத்த அரசு..! ஈரான் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக ஐக்கிய அரசு அமீரகத்தின் இரு பங்குச்சந்தைகள் இரு தினங்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா, ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள்  மீது தாக்குதல் நடத்தி வருகிறது. போர் எதிரொலியாக ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது. துபாயில் உள்ள உலகளாவிய பன்முக கலாசார பொழுதுபோக்கு மையத்தை தற்காலிகமாக மூடுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. அதேப் போல, அனைத்து சுற்றுலாத் தலங்கள், உணவகங்கள், ரிசார்ட்கள் மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு துபாய் மற்றும் அபுதாபியில் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகளின் தங்குமிடம் மற்றும் உணவுச் செலவுகளை அரசே ஏற்கும் எனவும், விமான ரத்து காரணமாக தாயகம்…

Read More

தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறையின் பாடத்திட்டங்களை பின்பற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் 7,545 பள்ளிகளில் இருந்து சுமார் 7லட்சத்து 99 ஆயிரத்து 692 மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதவுள்ளனர். இது தவிர தனித் தேர்வர்களாக 27,783 பேர் தேர்வெழுதுகின்றனர். இந்த நிலையில், பொதுத்தேர்வை எழுதும் மாணவர்கள் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்து செய்தியில், பதற்றமின்றித் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள்  என தெரிவித்துள்ளார். உங்களின் உழைப்பை சரியாக அறுவடை செய்ய வேண்டிய நேரம் இது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாளைய வளமான சமுதாயத்தை உருவாக்க உள்ள நீங்கள் அனைவரும் இந்தத் தேர்வினைப் பதற்றமின்றி, அச்சமின்றி, துணிவுடன் எதிர்கொள்ளுங்கள் என தவெக தலைவர் விஜய்யும், எந்தவித பயமும் இல்லாமல், தைரியமாக பொதுத் தேர்வை எழுதுங்கள் என வி.கே.சசிகலாவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நம்பிக்கையுடன் தேர்வுகளை எழுதி,…

Read More

சென்னை மயிலப்பூரில் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற கோயில் பூசாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ”திராவிட மாடல் ஆட்சி என்பது எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான். எல்லருக்கும் எல்லாம் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த விழா. உண்மையான ஆன்மிகவாதிகள், இறை பற்றாளர்கள் விரும்பக்கூடிய அரசு இந்த திராவிட மாடல் அரசு. எல்லாருக்கும் எல்லாம் என்று சொல்வதெல்லாம் வெறும் வாய்வார்த்தையல்ல. இந்த மாநாட்டை பார்க்கும்போது சிலருக்கு எரிச்சல் கூட வரலாம். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என மாற்றியது தான் சமூக மாற்றம். கடந்த ஆட்சி காலத்தில் அறநிலையத்துறை அமைச்சர் யார் என்பது கூடா யாருக்கும் தெரியாது” என்றார்.

Read More

பொலிவியாவில் மத்திய வங்கியிலிருந்து புதிய பணத் தாள்களை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த அந்த விமானம், பொலிவியா தலைநகர் லா பாசுக்கு அருகே உள்ள ‘எல் அல்டோ’ நகரில், பரபரப்பான சாலை ஒன்றில் விபத்துக்குள்ளானது. விமான விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விமானம் விழுந்து நொறுங்கியதில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன. உயிரிழந்தவர்கள் விமானத்தில் பயணித்தவர்களா அல்லது அப்பகுதியில் இருந்தவர்களா என அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். சம்பவ இடத்திற்கு கூட்டம் கூட்டமாக சென்ற அப்பகுதி மக்கள் கீழே சிதறிய பண நோட்டுகளை எடுத்துச் செல்வதில் முண்டியடித்துக் கொண்டனர். கண்ணீர் புகை குண்டுகளையும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போலீசார் அவர்களை கட்டுப்படுத்தினர். விபத்து காரணமாக எல் அல்டோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அந்நாட்டு தேசிய விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read More