Author: Editor TN Talks
இடுக்கி மாவட்டம் அணைக்கரை அருகே, தண்ணீர் இல்லாத 15 ஆழ மொட்டை கிணற்றில் நாயோடு சேர்ந்து தவறி விழுந்த புலியை தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனத்துறையினர் துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தி பிடித்து மீட்டனர். தமிழக -கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டம் வண்டன்மேடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட அணைக்கரை செல்லார் கோயில் அருகே உள்ளது மைலாடும்பாறை மலைப்பகுதி. இங்கு சன்னி என்பவருக்கு சொந்தமான ஏலக்காய தோட்டம் உள்ளது.இந்த தோட்டத்தில் புலி உறுமல் புதிதாக உள்ளது கண்டு சன்னி குடும்பத்தினர் அச்சம் கொண்டனர். தேடியதில், தண்ணீர் இல்லாத 15 அடி ஆழமுள்ள மொட்டை கிணற்றில், புலியும்,நாய் ஒன்றும் விழுந்து கிடப்பதை கண்டுள்ளனர். தகவல் கிடைத்ததும் நிகழ்விடம் வந்த வனத்துறையினர் புலிக்கும், நாய்க்கும் துப்பாக்கி மூலம் லாவகமாக மயக்க மருந்து செலுத்திப் பிடித்து மீட்டனர். பிடிபட்ட புலி மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் புலி எனவும், மருத்துவ பரிசோதனைக்குப் பின் புலி,…
மேற்குமாவட்டங்களில் தோட்ட வீடுகளை குறிவைத்து கொலை, கொள்ளை திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என இபிஎஸ் கேள்வி.. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் , தோட்டத்து வீடுகளில் உள்ள விவசாயிகளை குறி வைத்து நடத்தப்படும் இந்த கொலை- கொள்ளை சம்பவங்களை தடுக்க இந்த திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தி வருமாறு.. நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில் மர்மக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மறைந்த சாமியாத்தாள் அவர்களின் குடும்பத்தாருக்கு அதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் சாமியாத்தாள் வெட்டப்பட்டு, கோவை KMCH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு இரத்தம் தேவைப் படுவதாகவும் நேற்று காலை தகவல் வந்ததும், நம் அதிமுக…
கோவை – திருப்பூர் மாவட்டம் எல்லையில் கருமத்தம்பட்டி காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக பையுடன் ஒரு வாலிபர் வந்தார். அவரை மடக்கி பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவரிடம் 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கட்டு, கட்டாக இருந்தன. ஆனால் கள்ள ரூபாய் நோட்டுக்கள் ஒரு பக்கம் மட்டும் அச்சிடப்பட்டு இருந்தது. கள்ள ரூபாய் நோட்டுகளின் இடையில் வெற்று தாள்கள் சொர்கப்பட்டு இருந்தது. இதை அடுத்து அந்த ஆசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் தர்மபுரியை சேர்ந்த இளவரசன் என்பதும், அவர் கருமத்தம்பட்டி சாரதா மில் சாலை அருகே ஒரு வீட்டில் தங்கி இருப்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவருடைய வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். அப்பொழுது அங்கும் கட்டு, கட்டாக 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள்…
எனது தலைப்பை சூட்டுவதற்கு பட நிறுவனங்கள் என்னிடம் அனுமதி கேட்பது நாகரிகம் ஆகாதா? – வைரமுத்து எனது பல்லவியில் இருந்து எத்தனையோ தலைப்புகள் உருவாகி இருக்கின்றன எனது வார்த்தைகள் படத்தின் பெயர் ஆனதற்கு நான் இதுவரை என்றுமே கேள்வி கேட்டதில்லை எனது தலைப்பை பயன்படுத்துவதற்கு கூட இதுவரை யாரும் என்னிடம் ஒரு மரியாதைக்கு கூட கேட்டதில்லை செல்வம் பொதுவுடமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடமை ஆகிறதே என்பதில் அகமகிழ்வேன் ஏன் என்னை கேட்காமல் பயன்படுத்தினீர்கள் என கேட்பது எனக்கு நாகரீகம் இல்லை டூரிஸ்ட் பேமிலி படத்தில் மலையூர் மம்பட்டியான் பாடல் வைப்பதற்கு உங்களிடம் அனுமதி கேட்கப்பட்டதா என தியாகராஜனிடம் சமீபத்தில் கேள்வி எழுந்தது முந்தைய பாடலுக்கு அனுமதி கேட்கப்படுகிறதா என அவ்வப்போது கேள்வி எழுந்த நிலையில் வைரமுத்து பதிவு
இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் அருகே தடை செய்யப்பட்ட தூவல் நீர்வீழ்ச்சியில், செல்ஃபி எடுக்கும் போது கால் வழுக்கி பாறையில் தொங்கிய மதுரை வாலிபர். கயிறு மூலம் உயிரோடு மீட்ட அப்பகுதி மக்கள் . வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் அருகே, தடை செய்யப்பட்ட தூவல் நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்கும் போது கால் வழுக்கி பாறையில் தொங்கிய மதுரையை சேர்ந்த வாலிபரை அப்பகுதி மக்கள் கயிறு மூலம் உயிரோடு மீட்டனர். தமிழத்தின் மதுரையில் இருந்து சனிக்கிழமையான நேற்று (07.06.25) மாலை நான்கு பேர் கொண்ட நண்பர்கள் குழுவினர் கேரளாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர். தமிழக கேரள எல்லையை இணைக்கும் ராமக்கல்மேடு வந்த அவர்கள், அருகில் உள்ள தடை செய்யப்பட்ட தூவல் அருவிப் பகுதிக்கு சென்று விழிம்பில் நின்று செல்ஃபி எடுத்துள்ளனர். அதில் ஒருவர் கால் வழுக்கி அருவி நீர் வழிந்து செல்லும் பாறையை பிடித்தவாறு தொங்கிய…
மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத பாஜக ஆளும் மாநிலங்களின் எம்.பி களின் எண்ணிக்கையை அதிகரித்து தமிழ்நாடு உள்ளிட்ட மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க சதி செய்கிறது ஒன்றிய பாஜக அரசு ஒன்றிய பாஜக அரசு மக்களாட்சி என்ற மகத்தான அரணை புல்டோசர்களைக் கொண்டு இடித்து தள்ளி நாசம் செய்யும் காரியங்களைத் தொடர்ந்து செய்து வருகிறது. எந்தவித விவாதங்களுமின்றி மக்களைப் பாதிக்கும் சட்டங்களைக் கொண்டு வருவது, சர்வாதிகார போக்கோடு மாநிலங்களை வஞ்சிப்பது தொடர்கதையாகி வருகிறது. அதன் உச்சமாக அவர்கள் நிறைவேற்றத் துடிப்பது தான் 2027 மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொள்ள இருக்கும் மக்களவைத் தொகுதி மறுவரையறை. 84 வது அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தின் படி 2026 க்கு பின் எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும். இதை நிறைவேற்றி மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத பாஜக ஆளும் மாநிலங்களின் MP களின் எண்ணிக்கையை…
தமிழர்களைத் திருடர்கள் என்பது போல ஒடிசா சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசி, கொச்சைப்படுத்திவிட்டு மதுரையில் கீதா உபதேசம் நடத்திக் கொண்டிருக்கிறார் அமித்ஷா! தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை மணிப்பூராக மாற்றிவிடுவார்கள்! அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை. ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற பாஜகவின் அஜண்டாவை போல ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் ’ஒரே ஆள் ஒரே பேச்சு’ என ரீதியில் பேசி வருகிறார். ’’தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என வருத்தமாக இருக்கிறது’’ எனச் சொல்லியிருக்கிறார். கடந்த பிப்ரவரியில் கோவைக்கு வந்த போது இதே டயலாக்கைதான் பேசினார். தமிழ் மொழி மீதும் தமிழர்கள் மீதும் அமித்ஷா காட்டும் அக்கறை என்பது பசுந்தோல் போர்த்திய புலி. ’’ஒடிசா, ஹரியானா, மஹாராஷ்டிரா, டெல்லி போல தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சி மலரும்’’ எனச் சொல்லியிருக்கிறார் அமித்ஷா. கடந்த ஆண்டு நடந்த ஒடிசா சட்டமன்றத் தேர்தலைத் தமிழர்கள் எப்படி மறப்பார்கள்?…
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த சீத்தம்பூண்டி கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி நேற்றிரவு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தோட்டத்து வீடுகளில் தனியாக வாழும் மக்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையில், அவற்றைத் தடுக்கத் தெரியாமல் திமுக அரசு தடுமாறி வருவது கண்டிக்கத்தக்கது. அண்மைக்காலங்களில் தோட்டத்து வீடுகளில் தனியாக வாழ்ந்து வரும் பெரியவர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுகின்றனர். 6 மாதங்களுக்கு முன் நவம்பர் 28-ஆம் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 78 வயது தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமாத்தாள், செந்தில்குமார் ஆகிய மூவரும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அதன்பின், கடந்த மே மாதத் தொடக்கத்தில் ஈரோடு மாவட்டத்தின் விளாங்காட்டு வலசு கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த முதிய இணையரான ராமசாமி,…
கோயம்புத்தூர் பாப்பநாயக்கன் பாளையம் சாலையில் உள்ள மகாலட்சுமி புத்தகக் கடையில் பணியாற்றும் இளைஞரிடம், பத்திரிகையாளர் என தன்னை அறிமுகப்படுத்தி, மதுபோதையில் இருந்து பிரபு என்ற நபர் ரூ.5,000 தொகை பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். கோவை, பி.என் பாளையத்தை சேர்ந்த ப்ரீவின் (25), இவர் மகாலட்சுமி புத்தகக் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மதுபோதையில் வந்த பிரபு (48), என்பவர், நான் பத்திரிகையாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, 5000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணத்தைக் கொடுக்க மறுத்ததால், அவதூறான வார்த்தைகளில் பேசியும் , கடையில் விற்கப்படும் பொருட்கள் தடை செய்யப்பட்டவை என்று கூறி, பத்திரிகையில் எழுதுவதாகவும் மிரட்டி உள்ளார். இந்த சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில், Race Course காவல் துறையினர் பிரபுவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவையில் நடைபெறும் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி : பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்பு !!!” மக்களால் மட்டுமல்ல, மோடி ஐயா, கலைஞர் ஐயா, ஸ்டாலின் ஐயா அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அன்பு கொடுக்கக் கூடிய மனிதர் இளையராஜா – அண்ணாமலை புகழாரம்… கோவைக்கு இசை நிகழ்ச்சிக்காக வந்து உள்ள இசைஞானி இளையராஜாவினை பா.ஜ.க வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர் தங்கி இருந்த நட்சத்திர விடுதிக்கு சென்று சந்தித்து உரையாடினார். பின்னர் கோவையில் உள்ள கோவைப்புதூர் பகுதியில் அவர் நடத்திய இசை நிகழ்ச்சிக்கு சென்ற அவர், இளையராஜாவை பற்றி புகழாரம் சூட்டினார். அப்போது பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது :- இசைஞானி மேஸ்ட்ரோ என்னை பொறுத்த வரை இசை கடவுள் ஐயா இளையராஜா, அவர்களோடு இருந்து கொண்டு இருக்கிறோம், அவரைப் பார்ப்பதற்கு நாம் எல்லோரும், எல்லாத்தையும் மறந்து மனிதர்களாக, இசை பிரியர்களாக இருந்து…