Close Menu
    What's Hot

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»யார் இந்த வேடன்… ’ராப் பாடகர்’ முதல் போலீஸ் கைது வரை…
    சினிமா

    யார் இந்த வேடன்… ’ராப் பாடகர்’ முதல் போலீஸ் கைது வரை…

    Editor TN TalksBy Editor TN TalksMay 24, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கலைக்கு மட்டுமே சாதி, மதம், இனம், மொழி தெரியாது. அனைத்து தரப்பு மக்களாலும் புரிந்துக் கொள்ளப்படும், உணர்வுப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும் ஒன்று உள்ளது என்றால் அது கலை மட்டும் தான். அப்படி அந்த கலையை பயன்படுத்தி தங்களுக்கு நிகழ்ந்த வேதனையான விஷயங்களையும், நிகழ்ந்த அவலங்களையும் வெளிப்படையாக பேசும் ஒரு தளமாக இந்த கலை மேடை உள்ளது. இதனை பயன்படுத்தி உலகம் முழுவதும் தங்களது வலியை எடுத்துச் சென்றதுடன், ஓவர் நைட்டில் ஃபேமஸ் ஆனவர்கள் நிறைய பேர். அப்படி ஒருவர் ‘கிரண் தாஸ் முரளி’.

    1 3

    இவரை இப்படி குறிப்பிடுவதை விட ‘வேடன்’ என்று கூறினால் பலருக்கும் தெரியும். இந்தப் பெயர் அவருக்கு ஆசையாய் வைத்த பட்டப்பெயர் அல்ல. அவரது சாதியாலும், இனத்தாலும் ஆதிக்க சாதியினராலும் இழிவாக வைக்கப்பட்ட பெயர் வேடன். அதனையே தனது அடையாளமாய் மாற்றி அனைவரது முகத்திலும் கரியை பூசியவர் ‘கிரண் தாஸ் முரளி என்கிற வேடன்’.

    7 4

    கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த மலையாள ராப் பாடகர் கிரன் தாஸ் முரளி. யாழ் மண்ணை பூர்வீகமாக கொண்ட இவர், கேரளாவில் தஞ்சமடைந்த பிறகு பள்ளியில் படிப்பை தொடர்ந்தார். அங்கு அவர் அடைந்த துன்பங்கள் அதிகம். அவரது நிறத்தை வைத்து கிண்டல் செய்யும் வகையில் வேடன் என நண்பர்கள் அழைத்துள்ளனர். பிற்காலத்தில் 2020-ம் ஆண்டு முதல் மலையாள ராப் பாடல்கள் மூலம் பிரபலமடைந்த கிரண் தாஸ் முரளி, ’ராப்பர் வேடன்’ என தனது பெயரை மாற்றிக் கொண்டார்.

    5 3

    குறிப்பாக ’மஞ்சுமல் பாய்ஸ்’ படத்தில் வந்த ’குதந்த்ரம்’ எனும் பாடல் மூலம் மலையாளத்தை கடந்து தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார் வேடன். அதற்கு முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு அவர் பாடிய ”குரலற்றவர்களின் குரல்” என்ற பாடலில் மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட உச்சத்தில் இருப்பவர்களை மறைமுகமாக சாடி விமர்சித்திருந்தார். இது தொடர்பாக பாலக்காடு நகராட்சி திமுக கவுன்சிலர் என்.ஐ.ஏவிடம் புகார் ஒன்றை தற்போது அளித்துள்ளார்.

    3 4

    உலகம் முழுவதும் ராப் பாடல் மூலம் பிரபலமடைந்தவர், கடந்த ஏப்ரல் மாதம் போதைப் பொருள் வைத்திருந்ததற்காகவும், பயன்படுத்தியதற்காகவும் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட காலம் அது. அந்த வகையில், கொச்சியில் இருந்த பாப் பாடகர் வேடனின் வீட்டில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி திடீரென அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    4 4

    அந்த சோதனையில் 6 கிராம் அளவிலான கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து கஞ்சா பயன்படுத்தை வேடன் ஒப்புக்கொண்ட பிறகு கைது செய்யப்பட்டு, அன்று இரவே ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து தனது கழுத்தில் அணிந்திருந்த நெக்லஸினால் மீண்டும் வனத்துறையால் கைது செய்யப்பட்டார். வேடன் தனது பாடல் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்கு புலி அல்லது சிறுத்தை போன்ற வனவிலங்கின் பல்-ஐ டாலரை நெக்லெஸாக அணிந்து வந்துள்ளார்.

    இது குறித்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் வேடனுடன் பழகிய இலங்கையை சேர்ந்த ரெஞ்சித் கும்பிடி என்பவர் தனக்கு அந்த நெக்லஸை பரிசளித்ததாகவும், அது வனவிலங்கின் உண்மையான பல் என்பது தனக்குத் தெரியாது எனவும் வேடன் கூறியிருக்கிறார். தொடர்ந்து ஏப்ரல் 29-ம் தேதி காலை வேடனையும், ரெஞ்சித்தையும் கேரள மாநில வனத்துறையினர் பெரும்பாவூரிலுள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து 2 நாட்கள் அவரைக் காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதியளித்தது. பின்னர் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    2 3

    இந்த நிலையில் பாடகர் வேடனுக்கு ஆதரவாக பலரும் தங்களது சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ”எது அவனை ஒதுக்கியதோ அதனை அடக்க அவன் கையில் எடுத்ததோ கலை. சிறு வயதிலிருந்தே எழுதுவதும் பாடுவதும் அவனுக்கு நன்கு வசப்பட்டது”.

    ”தற்போது கேரளாவின் பேரன்பு பெரும் புயலாகி விட்டான் வேடன். ஓரிரவில் சமூக ஊடகங்களின் (Trending) பேசு பொருளாகி விட்டான்”.

    ”ஒடுக்கப்பட்டவன் மேல் எழுந்தால் அவனை அடக்க முடியாது என்பதற்கு வேடனே நல்ல உதாரணம்”

    ”வேடன் – இந்த கலைஞன் புதிதாக வந்தவன் இல்லை
    அடக்குமுறைகளுக்கு எதிரான சிந்தனைகளை வரிகளாக்கி நீண்ட காலமாக உறுமி வரும் சொல்லிசை கலைஞன்”

    ”எங்கள் ஈழத்தவர்கள் எவ்வாறான கலைஞர்களை கொண்டாடுவார்கள் என்றால் இங்கே (யாழில் ) பிறந்து இந்தியாவுக்கு சென்று அங்குள்ள ஊடகங்கள் அடையாளப்படுத்தப்பட்ட ஒருவராக இருக்க வேண்டும்” இல்லையென்றால் இந்தியாவில் பிறந்த ஒருவராக இருக்க வேண்டும். எங்கள் மண் சார்ந்த வலிகளை, உணர்வுகளை படையல் செய்தும் நீங்கள் ஊக்குவிக்க மறந்த (மறுத்த ) எங்கள் கலைஞர்கள் ”சுஜீத் ஜி,
    ”சந்தோர்ஸ் (மகிழன்)”, “ரத்தி ஆதித்தன்”

    ”இருக்கும் போதே கொண்டாடுங்கள் ..ஊக்குவியுங்கள். ராப் என்பது இசை மட்டுமில்லை , அடக்கப்பட்ட உணர்வுகள் வெடித்து வரும் ஓசை , உறுமல் அது கலாச்சாரம், என்னை போன்ற கலைஞர்களுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை “பண்ணும் பாட்டும் விண்ணோடு சென்ற பின்னே மண்ணில் புரியும் மகத்துவம்” என பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமனநல காப்பகத்தில் மாற்றுத்திறனாளி இளைஞர் மர்மமாக உயிரிழப்பு.. விசாரணையை தொடங்கிய காவல்துறை!!
    Next Article கோவைக்கு ரெட் அலர்ட்… விரைந்தது மிட்புக் குழு…
    Editor TN Talks

    Related Posts

    ‘கருப்பு’ படத்தின் மெகா வெற்றி: ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளருக்கு கார் பரிசளித்த சூர்யா!

    May 31, 2026

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    May 31, 2026

    கவின் கொலை வழக்கு – கவலைப்பட்ட இயக்குநர் கஸ்தூரி ராஜா

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    Trending Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    May 31, 2026

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    May 31, 2026

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    May 31, 2026

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    May 31, 2026

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.