Author: Editor TN Talks
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வருகிற 4-ந் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் 3-வது முறையாக பாரதிய ஜனதா ஆட்சியில் அமர்ந்தும், 3-வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற உள்ளது. இதையொட்டி வரும் 4-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வாய்ப்புகள் உள்ளதாம். பாகிஸ்தான் உடனான போருக்குப் பிறகு மத்திய அமைச்சர்கள் அனைவருடனும் பிரதமர் சந்திக்க இருப்பது இதுவே முதல்முறையாகும். அதேபோன்று ஒவ்வொரு அமைச்சரும் தத்தமது துறைசார் தகவல்கள், திட்டப்பணிகள், நிதி ஒதுக்கீடுகள், சட்ட சிக்கல்கள் போன்ற தகவல்களை எடுத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனராம். ஓராண்டில் அறிவித்தது என்ன? முடிவுற்றவை என்ன? கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வரும் பணிகள் என்னென்ன? எதிர்கட்சிகள் எவற்றையெல்லாம் தொடர்ந்து குற்றஞ்சாட்டுகின்றனர்?…
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வருகிற 4-ந் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் 3-வது முறையாக பாரதிய ஜனதா ஆட்சியில் அமர்ந்தும், 3-வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற உள்ளது. இதையொட்டி வரும் 4-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வாய்ப்புகள் உள்ளதாம். பாகிஸ்தான் உடனான போருக்குப் பிறகு மத்திய அமைச்சர்கள் அனைவருடனும் பிரதமர் சந்திக்க இருப்பது இதுவே முதல்முறையாகும். அதேபோன்று ஒவ்வொரு அமைச்சரும் தத்தமது துறைசார் தகவல்கள், திட்டப்பணிகள், நிதி ஒதுக்கீடுகள், சட்ட சிக்கல்கள் போன்ற தகவல்களை எடுத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனராம். ஓராண்டில் அறிவித்தது என்ன? முடிவுற்றவை என்ன? கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வரும் பணிகள் என்னென்ன? எதிர்கட்சிகள் எவற்றையெல்லாம் தொடர்ந்து குற்றஞ்சாட்டுகின்றனர்?…
சூர்யவம்சம் படத்தின் கலெக்டர் தேவயானியை அவ்வளவு எளிதில் தமிழர்கள் மறந்துவிட மாட்டார்கள். வெளிமாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கிட்டத்தட்ட தமிழ் பெண்ணாகவே அடையாளப்படுத்தப்படுபவர் தேவயானி. காதல்கோட்டை, அழகி, பாரதி, ஆனந்தம், ப்ரண்ட்ஸ் என்று சிறந்த திரைப்படங்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றவர். விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை இயக்கிய ராஜகுமாரனை காதலித்து கரம்பிடித்து பலரையும் ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கினார். திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட பின்னர் சின்னத்திரையில் ஒரு கலக்கு கலக்கினார். குறிப்பாக கோலங்கள் நெடுந்தொடர், தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் தேவயானிக்கு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. இதுமட்டுமல்லாது குறும்படங்கள் இயக்குவது, பின்னணி குரல் கொடுப்பது என்று சினிமாவோடு எப்போதும் தன்னை அணுக்கமாக வைத்திருப்பவர் தேவயானி. ஜீ தமிழ் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற ஒரு ரியாலிட்டி ஷோ சரிகம. இதன் சீனியர் பாடகர்களுக்கான ஐந்தாவது சீசன் தற்போது தொடங்கி உள்ளது. இதில் யாரும் எதிர்பாராதவிதமாக இனியா என்றொரு இளம்பெண் பாரதி படத்தில் இடம்பெற்ற மயில்போல பொண்ணு ஒண்ணு என்ற பாடலை பாடினார்.…
தங்கத்தையும், இந்தியர்களையும் பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு இரண்டற கலந்த ஒன்று. தங்கள் சேமிப்பை தங்கமாக மாற்றும் பழக்கம், தொன்றுதொட்டு இருந்து வருகிறது. உலகின் வேறேந்த நாட்டை விடவும் அதிக அளவு தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது இந்தியா. அதனால் தான் இந்தியாவில் தங்கம் விலை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.71,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,920 ஆக உள்ளது. ஆனாலும், நகைக்கடைகளில், காய்கறி சந்தையில் உள்ளது போலேவே கூட்டம் அலைமோதுகிறது. கடந்த சனிக்கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ.71,360-க்கு விற்பனையானது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதன் விலையில் மாற்றம் ஏதுமில்லாமம் வியாபாரம் நடைபெற்று வந்தது. இன்று வாரத்தின் தொடக்க நாளிலேயே சவரனுக்கு ரூ.240 அதிகரித்தது. பின்னர் பங்குச்சந்தை வர்த்தகம் முடிவுற்ற தருணத்தில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்தது. இதன்படி சவரனுக்கு ரூ.880…
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளதை தமிழக வெற்றிக் கழகம் வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு.. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 வருடங்களுக்குத் தண்டனைக் குறைப்போ மற்றும் வேறு எந்தச் சலுகையுமோ அற்ற ஆயுள் தண்டனையும் ரூ. 90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டிருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது. இந்த வழக்கில் குற்றவாளியான ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்து, அவரைக் காப்பாற்ற முயன்றனர். சட்டப் பேரவையிலேயே தமிழ்நாட்டின் முதலமைச்சரே குற்றவாளியின் பெயரைச் சொல்லி அவர் மீதான களங்கத்தைப் போக்க முயன்றார். எதிர்க் கட்சிகள் அதை மக்கள் மன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டி, நீதிக்கு வழிவகுத்தனர். தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் போராட்டங்களையும் மீறி, தமிழக மக்களைச் சுலபமாக ஏமாற்றிவிடலாம் என்கிற இவர்களின் எண்ணம்…
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல்லும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஹென்ரிச் க்ளாசனும் அறிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேனும், சுழற்பந்து வீச்சாளரும், மிகச்சிறந்த பீல்டரும் என்றால் அது க்ளென் மேக்ஸ்வெல் தான். 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த மேக்ஸ்வெல், இதுவரை 149 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 3,990 ரன்கள் எடுத்துள்ளார். 77 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி உள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 126 ஆகும். 2015 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் உலககோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றபோது அதன் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்களில் மேக்ஸ்வெல்லும் ஒருவர். சமீபகாலமாக காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மேக்ஸ்வெல் முழு ஆட்டத்திலும் பங்கேற்க முடியாமல் திணறி வந்தார். மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 ஓவர் உலக கோப்பை போட்டியில் முழுமையான கவனம் செலுத்தும்…
மூவரசம்பட்டு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நல திட்ட உதவிகள் விழாவில் மின்சாரம் இல்லாமல் வெகு நேரம் காத்திருந்த அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மின்சாரம் சரிசெய்யப்பட்ட பின்பும் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய கொடியையும் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைகீழாக ஏற்றியதால் சலசலப்பு ஜூன் 2 தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட்ட நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கான நோட்டு புத்தகம் வழங்கும் விழா தமிழக முழுவதும் உள்ள பள்ளிகளில் நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூவரசம்பட்டு ஊராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியருக்கான நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி காலை 10 மணிக்கு தொடங்க…
ஜப்பானின் ஹொக்கைடோவின் குசிரோ கடற்கரைக்கு அருகே 6.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) தெரிவித்துள்ளது. ஜப்பானிய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 20 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும், ஆனால் சுனாமி எச்சரிக்கை வெளியிடப்படவில்லை என்றும் JMA கூறியுள்ளது. இற்கு முன் அதே பகுதியில் 2.19 மணிக்கு 4.4 அளவிலான நிலநடுக்கத்துடன் பல பின்னதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. பின்னர், சிகோகுவின் கடற்கரையில் 3.5 அளவிலான நிலநடுக்கம் மாலை 4:45 மணிக்கு, மேலும் குசிரோ அருகே 4.7 அளவிலான இன்னொரு நிலநடுக்கம் 5:07 மணிக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது வரை சேதம் அல்லது பாதிப்பு குறித்து உடனடி தகவல்கள் இல்லை. ஜப்பானிய உயரதிகாரிகள் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 2025 ஏப்ரல் மாதம், இந்திய நேரப்படி மாலை 7:34 மணிக்கு, ஜப்பானின் க்யூஷூ பகுதியில் 6.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது…
கட்டாய கல்வி நிதியை விடுவிக்கக் கோரி மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். 2205-2026ம் ஆண்டிற்காக பாட நூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரண பொருட்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கும் விழாவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேசும் திருவல்லிக்கேணி பள்ளியில் அதனை செயல்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி பள்ளியில் 16 ஆயிரம் மாணவ மாணவிகள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார். கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது நடப்பாண்டு கூடுதல் சேர்க்கை மகிழ்ச்சி அளிப்பதாகவும் இது எதிர்வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்றார். அதேபோன்று பள்ளிகள் தொடங்கப் பட்ட முதல் வாரத்தில்…
நார்வே செஸ் 2025 செஸ் தொடரில் தரவரிசையில் உலகின் முதலிடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சனை நமது தமிழக வீரர் குகேஷ் வீழ்த்தி வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். அந்த போட்டியில் தோல்வியை தாங்க முடியாத ஆத்திரத்தில் கார்ல்சன் மேஜையை வேகமாக தட்டிய செயல், கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கி உள்ளது. The greatest chess finish ever | Gukesh vs Magnus Carlsen | Norway Chess 2025 World no.1 Magnus Carlsen and World Champion D. Gukesh clashed against each other in round 1 of Norway Chess and that game ended in Magnus’ favour. We are now back for the 2nd game in the tournament,… pic.twitter.com/TwshZH9NG1 — ChessBase India (@ChessbaseIndia) June 2, 2025 நார்வே நாட்டில் சர்வதேச செஸ்…