Author: Editor TN Talks
தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் சூரி. ’வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில் பரோட்டா சாப்பிடும் காமெடியில் நடித்து பிரபலமடைந்ததால் பரோட்டா சூரி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். தொடர்ந்து ஒரு சில வருடங்களில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார். பின்பு யாரும் எதிர்பாரா வண்ணம் விடுதலை படத்தில் ஹிரோவாக அறிமுகமானார் நடிகர் சூரி. விடுதலை பாகம் ஒன்று மற்றும் இரண்டாம் பாகத்தில் இவரது நடிப்பு மிகவும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ’கொட்டுக் காளி, கருடன்’ போன்ற படங்களிலும் ஹீரோவாக கலக்கினார். அதன்பின் ’விலங்கு’ வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ’மாமன்’ படத்தில் இணைந்தார் சூரி. ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிப்பில் குடும்ப உறவுகளின் மதிப்பை உணர்த்தும் விதமாக உருவான இப்படம் இன்று (16.05.2025)வெளியானது. இப்படம் வெற்றி படமாக வேண்டி மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில்…
திரைப்பட எடிட்டர் மோகனுக்கு இரண்டு மகன்கள். அவரின் இரண்டாவது மகன் ரவி மோகன். மூத்த மகன் இயக்குநர் மோகன் ராஜா. மோகன் ரவி என்ற இயற்பெயர் கொண்டவர், லயோலா கல்லூரியில் விஸ்காம் முடித்து விட்டு சிறிது நாட்கள், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவியாளராக பயிற்சி எடுத்துக் கொண்டார். தனது தந்தையின் தயாரிப்பில் 2003-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ம் தேதி வெளியான ”ஜெயம்” என்ற படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார் ரவி. அவரது அண்ணனான மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான இந்தப் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சினிமா உலகில் ஜெயம் ரவி என புதிய பெயரோடு வலம் வரத் தொடங்கினார். இரண்டாவாதாக அசின், நதியா உடன் இணைந்து ரவி நடித்து ”சன் ஆஃப் மகாலட்சுமி” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதுவும் அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கியது தான். வெங்கட்பிரபு எப்படி தனது தம்பி பிரேம் ஜி-யை…
ஆப்பிள் ஐ-போன்களை தயாரிக்கும் பணி இந்தியாவில் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளது. எஸ் அண்ட் பி குளோபல் நடத்திய ஆய்வின் படி, கடந்தாண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாகும் ஐ-போன்கள் எண்ணிக்கை 3.1 மில்லியன் யூனிட்களாக உள்ளன. அதே ஆண்டில் அமெரிக்காவில் ஐ-போன் விற்பனை 75.9 மில்லியன் யூனிட்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜூன் காலாண்டில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ஐ-போன்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்படுபவையாக இருக்கும் என அப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் இந்தியாவில் ஐ-போன்களை தயாரித்து வரும் நிலையில், அதனை நிறுத்தும்படி ஆப்பிள் நிறுவனத்திடம் அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை விமர்சித்து நடிகையும், பாஜக எம்.பி-யுமான கங்கனா ரனாவத் எக்ஸ் தளத்தில் தனது கருத்தை பதிவிட்டிருந்தார். பின்னர் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின்படி அதை நீக்கியதாக கங்கனா தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதிகளவில்…
ஒவ்வொரு ஆண்டும் உலக அழகிகளை தேர்வு செய்வதற்கான போட்டி ஒவ்வொரு இடங்களில் நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டுக்கான 72-வது உலக அழகிப் போட்டி தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறுகிறது. 7-ம் தேதி தொடங்கிய இப்போட்டி வரும் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாட்டில் புதிய மாநிலமாக தோன்றிய தெலுங்கானா கடந்த 10 ஆண்டுகளாக வேகமாக முன்னேறி வருகிறது. தற்போது உலக அழகி போட்டி நடைபெற உள்ளதால் உலக அளவில் தெலங்கானா, சுற்றுலா துறையுடன் இணைந்து இந்த போட்டிகளை மிஸ் வேர்ல்ட் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு முன்பு மும்பை மற்றும் டெல்லியில் உலக அழகி போட்டிகள் நடைபெற்றுள்ளது. 3-வது முறையாக இந்தியாவில் தெலங்கானாவில் இப்போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 140 நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் ’மிஸ் இந்தியா நந்தினி குப்தா’ இப்போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் தெலங்கானாவில் ‘யுனெஸ்கோ’வால் உலக பாரம்பரிய…
நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம்பெற்றுள்ள ‘கோவிந்தா… கோவிந்தா…’ பாடலை நீக்கப்பட்டு விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள, ‘கோவிந்தா… கோவிந்தா…’ பாடல், திருப்பதி வெங்கடேஸ்வராவை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஜி.டி.பாலாஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், திரைப்படத்துக்கு தணிக்கை குழு, யு/ஏ சான்றை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த பாடலுடன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். பாடலை நீக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது, படத் தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில்,…
டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை.. சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் பல்வேறு வீடுகளில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணாசாலை, பெசண்ட் நகர், தேனாம்பேட்டை, சேத்துப்பட்டு, தியாகராய நகர், சூளைமேடு, மணப்பாக்கம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள டாஸ்மாக் நிறுவன உயர் அதிகாரிகளின் வீடுகளை குறிவைத்து அமலாக்கத்துறையினர் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் காலை முதலே அமலாக்கத்துறையினர் சோதனையை தொடங்கி உள்ளனர். பாதுகாப்பு கருதி மத்திய ரிசர்வ் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று சென்னை சூளைமேடு கல்யாணபுரத்தில் உள்ள எஸ்என்ஜே மதுபான நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளை சோதனை மேற்கொண்டு ஆவணங்களை திரட்டி வருகின்றனர். டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கடந்த 10 ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்புத்துறையில் தொடரப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை…
தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு பங்கேற்க வருமாறு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்த அழைப்பை அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள்.ஏற்க மறுத்துள்ளனர். இதனால் அக்கட்சிக்குள் பெரும் சலசலப்பு வெடித்துள்ளது. 1980-களில் வன்னியர் சங்கமாக இயங்கி வந்த அமைப்பை 1989-ல் பாமக என்னும் அரசியல் இயக்கமாக தோற்றுவித்தார் மருத்துவர் ராமதாஸ். கடந்த 35 ஆண்டுகளாக அக்கட்சி பல்வேறு நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொண்டுள்ளது. தேர்தல்களில் அக்கட்சி பெரும்பான்மை இடங்களை பிடிக்காவிட்டாலும் கூட, அரசியல் தளத்தில் தீவிரமான கருத்தியல்களோடு இயங்கி வந்தது. இதற்கு காரணம் அக்கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் தான். 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலையை காரணம் காட்டி, இளைஞர் அணியின் தலைவராக இருந்த அன்புமணி, கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதன்பிறகு தான் அக்கட்சிக்குள் பூசல்கள் வெடிக்க ஆரம்பித்தன. அதாவது, கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு ஆகியவற்றில் பாமக நிறுவனர் ராமதாசுக்கும், தலைவர் அன்புமணிக்கும்…
தமிழ்நாட்டில் கோடைக்காலம் இன்றுடன் முடிவடைவதாகவும், இன்று முதல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், இந்தாண்டு தமிழ்நாட்டின் தனித்துவமான ஆண்டு என தெரிவித்துள்ளார். இந்தாண்டு தமிழ்நாட்டில் எந்த வெப்ப அலையும் காணப்படவில்லை எனவும், கடந்த 25 ஆண்டுகளில் 2022, 2018 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளை தொடர்ந்து இந்த மே மாதத்தில் சென்னையில் வெயில் 40 டிகிரி செல்சியஸை தாண்டாது எனவும் கூறியுள்ளார். ”பொதுவாக கிழக்கு-மேற்கு வெட்டு மண்டலத்தின் ஒரு பகுதியாக இந்த பரந்த சுழற்சி மே மாத இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் உருவாவது வழக்கம். ஆனா தற்பொது முதன்முறையாக மே மாத நடுப்பகுதியில் இது உருவாவதாகவும், பொதுவாக, இந்த வெட்டு மண்டலம் முடிவடையும் போது குறைந்த அழுத்த அமைப்பு உருவாகும்” எனவும் தெரிவித்துள்ளார். எனவே ”அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடா இரண்டிலும் ஒரு குறைந்த…
சூரியன் ரிஷபராசியில் நுழையும் மாதம் வைகாசி மாதமாகும். மேஷ ராசியில் இதுநாள் வரை உச்சம் பெற்று பயணம் செய்த சூரியன் மே 15ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். மேஷம்: சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் மேன்மை நிலை உண்டாகும், அரசாங்க அதிகாரிகளுக்கு சம்பளம் அதிகரிக்கும். வீட்டில் ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். தொழில் உத்தியோகத்தில் செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். ரிஷபம்: சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் பயணம் செய்வதால் அதிகாரப் பதவி கிடைக்கும், அப்பாவினால் நன்மை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. குரு பகவான் இரண்டாம் வீட்டில் பயணம் செய்வதால் பண வருமானம் அதிகரிக்கும்.…
நம்முடைய பூமியில் இந்தியா, சீனா போன்ற பெரும் மக்கள் தொகை கொண்ட நாடுகளுடன் சேர்ந்து, மிகவும் சிறிய அளவில், சில பசுமைத் துண்டுகளாக விளங்கும் நாடுகளும் உள்ளன. பெரும்பாலானோர் “உலகின் மிகச்சிறிய நாடு” எனும் போது வாடிகன் நகரத்தையே கூறுவார்கள். ஆனால் வாடிகனை விடச் சிறிய நாடு ஒன்று இருப்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. அந்த தனிச்சிறப்பை உடையது சீலாண்ட். கடலில் உருவான நாடு: சீலாண்ட்(Sealand) என்பது வடக்குக் கடலில், இங்கிலாந்தின் கடற்கரையிலிருந்து சுமார் 6.5 மைல் (அல்லது 10 கிமீ) தொலைவில் அமைந்துள்ள ஒரு பழைய இராணுவக் கட்டிடமே ஆகும். இது தற்போது ஒரு சுயமாகக் கூறப்படும் சுயாட்சி நாடாக தன்னை அறிவித்து, உலகின் மிகச் சிறிய நாட்டாக பரிணமித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத நாடு: இந்த “நாடு” சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், இது எந்த நாட்டாலும் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் Sealand இன் சொந்தக் கொடி, பாஸ்போர்ட், நாணயம், அரசாங்கம், அரசியலமைப்பு,…