Close Menu
    What's Hot

    பாக்ஸ் ஆபீஸில் கலக்கும் ‘தி ஒடிசி’: முதல் வாரத்தில் ரூ.100 கோடி வசூல்!

    நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: 5-வது நாளாக முடங்கிய அவைகள்!

    டெல்லி போராட்டம்: தர்மேந்திர பிரதான் பதவி விலக சிஜேபி 24 மணி நேர ‘கெடு’ – போராட்டம் தீவிரமடையும் என எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»சந்தானம் படத்திற்கு நீங்கியது சிக்கல்…
    சினிமா

    சந்தானம் படத்திற்கு நீங்கியது சிக்கல்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 16, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ddnextlevel 1747363239
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம்பெற்றுள்ள ‘கோவிந்தா… கோவிந்தா…’ பாடலை நீக்கப்பட்டு விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

    நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள, ‘கோவிந்தா… கோவிந்தா…’ பாடல், திருப்பதி வெங்கடேஸ்வராவை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஜி.டி.பாலாஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

    அவர் தனது மனுவில், திரைப்படத்துக்கு தணிக்கை குழு, யு/ஏ சான்றை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த பாடலுடன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். பாடலை நீக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது, படத் தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில், குறிப்பிட்ட பாடலில், ஆட்சேபம் தெரிவித்த வரிகள் நீக்கப்படுவதாகவும், பாடல் டியூன் மியூட் செய்யப்படும் எனவும் உறுதி தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து பாடல் வரிகள் நீக்கப்பட்டுள்ளதையும், டியூன் மியூட் செய்யப்பட்டதையும் சரிபார்த்து தெரிவிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்திருந்தனர்.

    வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், காலையில் படத்தை பார்த்த போது முழு பாடலும் நீக்கப்பட்டு விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதால், வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

    DD Next Level டிடி நெக்ஸ்ட் லெவல் நடிகர் சந்தானம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதனுஷ், சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர் வீட்டில் ED சோதனை..
    Next Article அழகிகளின் காலை கழுவி வரவேற்பு… தெலங்கானாவில் நடந்தது என்ன?
    Editor TN Talks

    Related Posts

    பாக்ஸ் ஆபீஸில் கலக்கும் ‘தி ஒடிசி’: முதல் வாரத்தில் ரூ.100 கோடி வசூல்!

    July 24, 2026

    ‘ஜன நாயகன்’ முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை!. எத்தனை கோடி தெரியுமா?

    July 24, 2026

    சூர்யா குரலில் ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ புதுப் பாடல்: ப்ரோமோ வெளியீடு!

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாக்ஸ் ஆபீஸில் கலக்கும் ‘தி ஒடிசி’: முதல் வாரத்தில் ரூ.100 கோடி வசூல்!

    நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: 5-வது நாளாக முடங்கிய அவைகள்!

    டெல்லி போராட்டம்: தர்மேந்திர பிரதான் பதவி விலக சிஜேபி 24 மணி நேர ‘கெடு’ – போராட்டம் தீவிரமடையும் என எச்சரிக்கை!

    வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை: மாநிலங்களவையில் புதிய மசோதா அறிமுகம்

    ராஜேஷ் லக்கானிக்கு தலைமைச் செயலாளருக்கு நிகரான பதவி; அரசாணை வெளியீடு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.