Author: Editor TN Talks

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டினத்தில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அரசுப் பள்ளி ஒன்றில் விளையாட்டு ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற 70 வயது நடராஜ் மாஸ்டர் என்பவர், சிறுமி ஒருவரிடம் தன்னுடைய பாலியல் ஆசையைத் தீர்த்துக்கொள்ள முயன்றதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி, மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நடராஜ் மாஸ்டரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அந்த முதியவர் சிறுமியிடம் “நைசாகப் பேசி” தன்னுடைய பாற்றின்ப ஆசையைத் தீர்த்துக்கொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது. முதலில் நிலைமையை உணராமல் தடுமாறிய சிறுமி, பின்னர் தனக்கு ஏற்பட்ட ஆபத்தைப் புரிந்துகொண்டு, நடராஜ் மாஸ்டரின் கையைத் தட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறி, நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சிறுமி மற்றும் அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், மசூலிப்பட்டினம் போலீசார் உடனடியாக போக்சோ சட்டத்தில் வழக்கு…

Read More

தமிழ்த் திரைப்படத் துறையில் நிலவி வந்த நெருக்கடியான சூழலுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாக, உள்ளூர் பஞ்சாயத்து வரியை 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகக் குறைத்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (ஃபெப்சி – FEFSI) தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஃபெப்சி விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்த் திரைப்படத் துறையைக் காப்பாற்றும் முயற்சியாக வரிச்சுமையைப் பாதியாகக் குறைத்த தமிழக அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரிக்குறைப்பு, தமிழ்த் திரைப்படத் துறைக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும் என்றும், படத் தயாரிப்புச் செலவுகளைக் குறைத்து, திரைப்படங்களை உருவாக்கவும், திரையிடவும் வழிவகுக்கும் என்றும்…

Read More

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த 8,144 அரசு ஊழியர்கள் இன்று (மே 31, 2025) ஒரே நாளில் ஓய்வு பெறுகின்றனர். நடப்பாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் ஓய்வு பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழக அரசுத் துறைகளில் 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. அதன்படி, தற்போது மாநில அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆகும். ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் தங்கள் பணியில் சேர்ந்த மாதத்தின் அடிப்படையில் ஓய்வு பெறுவது வழக்கம். குறிப்பாக, மே மாதங்களில் தான் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் ஓய்வு பெறுவார்கள். இதற்கு முக்கிய காரணம், அரசுப் பள்ளிகளில்…

Read More

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள தேத்தாம்பட்டி கிராமத்தில், கோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 15 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, ஆண்களுக்கு மட்டுமேயான பிரமாண்ட கறி விருந்து விடிய விடிய நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற இந்த மாபெரும் விருந்துக்காக, நேர்த்திக்கடனாகப் பெறப்பட்ட 500 ஆடுகள் பலியிடப்பட்டன. ராட்சச அடுப்புகளில், பிரம்மாண்ட பாத்திரங்களைப் பயன்படுத்தி இந்த 500 ஆடுகளின் கறி பிரசாதமாக சமைக்கப்பட்டது. கருப்பணசாமிக்கு படையலிடப்பட்ட பின்னர், அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஆண் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இந்தக் கறி விருந்து பிரசாதமாக விநியோகிக்கப்பட்டது. நத்தம், திண்டுக்கல், மதுரை என பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்கள் இந்த சிறப்புமிக்க விழாவில் பங்கேற்றனர். இத்திருவிழா, அப்பகுதி மக்களின் பாரம்பரியத்தையும், பக்தி உணர்வையும் பறைசாற்றும் வகையில் அமைந்தது.

Read More

சுந்தராபுரம் பகுதியில் பெண்ணின் கழுத்தில் 7.5 பவுன் தங்கத் தாலிக் கொடியைப் பறித்துச் சென்ற தென்காசியைச் சேர்ந்த நவீன் ஆன்டனி ராஜா (28) என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. கோவை மாநகர காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். சுந்தராபுரம் ராஜம் மருத்துவமனை அருகே இந்தச் செயின் பறிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த நவீன் ஆன்டனி ராஜா (28) என்பவரை சுந்தராபுரம் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் (பாரதிய நியாய சன்ஹிதா 2023 @ 309(4) மற்றும் 351(3), 317(5), 3(5)) வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குற்றவாளி நவீன் ஆன்டனி ராஜா மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து,…

Read More

நடப்பு 18வது ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்ய வன்ஷியை பிகார் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும், புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் பிரதமர் மோடி பீகார் தலைநகர் பாட்னா சென்றார். பாட்னா விமான நிலையத்தில் பிரதமர் மோடியை இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்ய வன்ஷி மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்தனர். கடந்த மே 1ம் தேதி மும்பை- ராஜஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில், தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் சூர்ய வன்ஷி, 35 பந்துகளில் 100 ரன்கள் அடித்து சதம் படைத்தார். இது கிரிக்கெட் வீரர்களால் மட்டுமின்றி பலதரப்பினராலும் பாராட்டப்பட்டது. இந்தநிலையில் பிரதமர் மோடி பாட்னா விமான நிலையத்தில் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து…

Read More

நகைக்கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ள மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு சில பரிந்துரைகளை வழங்கி உள்ளது. தங்க நகைகள் மீதான கடன்களை வழங்கும் விதிகளில் ரிசர்வ வங்கி அண்மையில் மாற்றம் செய்தது. அதில், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறைகள் பெரிதும் பாதிப்பதாக நடுத்தர தரப்பு மக்கள் எதிர்ப்பு குரல்களை பதிவு செய்தனர். தங்க நகைக்கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் விதிகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள், நகைக்கடன் நிறுவனங்கள், நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த கோரிக்கைகளை தொடர்ந்து, நகைக்கடன் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ரூ.2 லட்சத்துக்கும் குறைவான கடன்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கிய கட்டமாக, சிறு தங்க நகை கடன் பெறுபவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க…

Read More

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவின் தாக்குதலில் இருந்து மீண்டு வருவதற்கு பாகிஸ்தானுக்கு நீண்ட நாட்களாகும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடி தரும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்திய எல்லைப் பகுதியில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதில், பொதுமக்களின் வீடுகள் சேதமடைந்தன. இந்தநிலையில், ஜம்மு, காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த இடங்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலைக்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமித்ஷா, பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் கடுமையான பதிலடி தந்ததாக தெரிவித்தார். பயங்கரவாதிகளின் முகாம்களை சேதப்படுத்தியதுடன், அதனை அழித்தது குறிப்பிடத்தக்க சாதனை என்று அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத்திற்கு…

Read More

பயங்கரவாதம் தலைதூக்கும் போதெல்லாம் ஆபரேஷன் சிந்தூர் மீண்டும் தொடரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் கரகாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.48,520 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பொதுக்கூட்ட மேடைக்கு வரும் பாதையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், பீகார் மாநில வளர்ச்சிக்காக சுமார் ரூ.50,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவது தனக்கு கிடைத்த பாக்கியம் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு பீகார் வந்த போது, பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் தரைமட்டமாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர் தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டு மீண்டும் பீகாருக்கு…

Read More

முதுநிலை நீட் தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென்று தேசிய தேர்வுகள் வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் ஜூன் 15ம் தேதி 2025- 26ம் கல்வியாண்டிற்கான முதுநிலை நீட் தேர்வு நடைபெற உள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. கணினி மூலமாக நடைபெறும் இந்தத் தேர்வுகள், காலை, பிற்பகல் என இரு கட்டங்களாக நடைபெறும் என்றும், இரு தேர்வுகளுக்கும் வெவ்வேறு வினாக்கள் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், முதுநிலை நீட் தேர்வை 2 கட்டங்களாக நடத்தும் தேசிய தேர்வு முகமையின் முடிவுக்கு தடை விதித்தது. மேலும், இந்த தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 2 கட்டமாக 2 வினாத்தாள்கள் அடிப்படையில் நடத்துவது பாரபட்சத்தை ஏற்படுத்தும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Read More