Author: Editor TN Talks

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். கட்டுக்கோப்பான உடல்வாகுடன் கிரிக்கெட் உலகில் அறிமுகமானவர் விராட் கோலி. இந்திய அணியின் ரன் வேட்டையன் எனவும் இவரை ரசிகர்கள் அழைப்பதுண்டு. இந்திய அணிக்காகவும், ஒரு பேட்டராகவும் இவர் படைத்த சாதனைகள் பல. இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 31 சதங்கள், 7 அரை சதங்களுடன் 9,230 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக ஒரே டெஸ்ட்டில் 254 ரன்களை குவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி இதுவரை 68 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் கேப்டனாகவும் இருந்திருக்கிறார் விராட் கோலி. அதில் 40 போட்டிகளில் வெற்றியும், 11 போட்டிகளை டிராவும் செய்துள்ளார். ஒரு கேப்டனாக அவரின் வெற்றி சதவீதம் 58 ஆக உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் கேப்டனாக அதிக வெற்றியை பெற்றவர் என்ற சதவீதத்தில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் தொடர்களில் இந்தியாவுக்காக 7 இரட்டை சதங்கள்…

Read More

கும்பகோணம் கோவில் குளங்கள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, நான்கு மாதங்கள் கெடு விதித்த சென்னை உயர் நீதிமன்றம், தவறினால் கும்பகோணம் மாநகராட்சிக்கும், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கும்பகோணத்தில் உள்ள பொற்றாமரை குளம் உள்ளிட்ட 44 குளங்கள், அதற்கு நீர் செல்லக்கூடிய 11 வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2018 ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தப்படவில்லை என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி அளித்த அறிக்கையில், மொத்தமுள்ள 44 குளங்களில், ஏழு குளங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றி மீட்கப்பட்டுள்ளது. மூன்று குளங்களில் மரங்கள் உள்ளதாகவும், நான்கு குளங்கள் தொடர்பாக மதுரை…

Read More

மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு சிறப்பாக நடந்து முடிந்துள்ளதாக அக்கட்சியின் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு… மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாட்டின் முதன்மை நோக்கம் சமூகநீதி தான். அதை வலியுறுத்தி தான் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க தமிழக அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்; அதனடிப்படையில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்; அதேபோன்று அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 2% உயர்த்த வேண்டும்; இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை நீக்க வேண்டும்; கிரீமிலேயர் முறையை அகற்ற வேண்டும்; மேலும் தனியார் துறை மற்றும் உயர்நீதித் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; அனைத்து சமூகங்களுக்கும் நிதி அதிகாரம் கொண்ட வாரியங்கள் அமைக்கப்பட வேண்டும்; மது, கஞ்சா உள்ளிட்ட…

Read More

சென்னையின் முக்கிய அடையாளமாக இருப்பது தியாகராயநகர். இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை எனக் கூறலாம். அந்த ஏரியாவை சுற்றி நூற்றுக்கணக்கான துணிக் கடை, நகைக் கடை, பாத்திரக் கடை என அனைத்து விதமான கடைகளும் உள்ளன. மிகக் குறைந்த விலையில் இங்கு பொருட்களை வாங்க முடியும் என்பதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்வர். குறிப்பாக வார இறுதி மற்றும் விஷேச நாட்களில் இங்கு மக்கள் கூட்டம் அலைமோதும். இங்கு மக்கள் வந்து செல்ல ஏதுவாக மெட்ரோ ரயில் சேவையும் நடந்து வருகிறது. தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஷோபா டெக்ஸ்டைல்ஸ் என்ற துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். அருகேயுள்ள கடைகளுக்கு தீ பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.…

Read More

இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் குறைந்தாலும் கூட, போர் இன்னும் முற்றிலும் நிறுத்தப்படவில்லை. பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இந்தியா பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் எல்லைக் கோடு அருகேயுள்ள பகுதிகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்தது. அதனை இந்திய ராணுவம் முறியடித்தது. இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் இருந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இருநாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அதன்படிப்படையில் இரு நாடுகளும் போரை நிறுத்துவதாக ஒப்புக் கொண்டதாக டிரம்ப் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்திய ராணுவ அதிகாரியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாக்குதலை நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டு, கடந்த 10-ம் தேதி மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் சில மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் மீண்உம் அடாவடியாக டிரோன்களை ஏவி தாக்குதலை தொடர்ந்தது. அதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடியும்…

Read More

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், லவ்டுடே படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் பிரதீப்பின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இளைஞர்கள் கல்லூரியில் படிக்காமல் அரியர் வைத்து கெத்து காட்டி திரிந்தால் பிற்காலத்தில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை 2k கிட்ஸ்களுக்கு எடுத்துரைக்கும் படியாக இப்படம் அமைந்திருந்தது. பாக்ஸ் ஆபிஸில் இப்படம் 148 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர் வெற்றியை தொடர்ந்து அவரது அடுத்த படம் பற்றின அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னனி இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ”லவ் இன்சூரன்ஸ் கம்பெனி”(LIK) என்ற படத்தில் நடித்து வருகிறார். ’செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ்’ மற்றும் ’ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம்’ இணைந்து தயாரித்துள்ள் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி செட்டி…

Read More

ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியை முன்னிட்டு குரு ஸ்தலங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். நவக்கிரகங்களில் சுப கிரகம் என அழைக்கப்படும் குரு பகவான், ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வு குருபெயர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மே 11ம் தேதி பிற்பகல் 1.19 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி அடைந்தார். இதனை முன்னிட்டு, குரு பரிகார ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஸ்ரீ ஆபத்சகாயேசுவரர் ஆலயத்தின் மூலஸ்தான பிரகாரத்தில் எழுந்தருளி உள்ள குரு பகவானுக்கு சிறப்பு ஹோமங்களும், அபிஷேக ஆராதனையும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து வழிபட்டனர். தஞ்சாவூர் அருகே உள்ள திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் சுவாமி மற்றும் அம்மனுக்கு இடையே தனி சந்நிதியில் தனி விமானத்துடன்…

Read More

ஆபரேஷன் சிந்தூர் என்பது ஒரு ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் மன உறுதியின் அடையாளம் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா- ரஷ்யா கூட்டு ஒத்துழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகள் இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களின் முக்கிய தூணாக உள்ளது. 2018ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்தின் ஒரு பகுதியாக லக்னோவில் பிரமோஸ் ஏவுகணை தயாரிக்கும் புதிய அலகு திறக்கப்படும் என அறிவித்தார். அதன்படி 2021ல் அடிக்கல் நாட்டப்பட்டநிலையில், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பிரமோஸ் ஏவகணை உற்பத்திக்கான புதிய அலகு இன்று திறந்து வைக்கப்பட்டது. இதனை டெல்லியில் இருந்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவின் பெருமை என்றார். நமது விஞ்ஞானிகள் மற்றும்…

Read More

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறினால் அதற்கான பதிலடி மிகவும் பேரழிவு தரக்கூடியதாகவும், வலுவானதாகவும் இருக்கும் என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை துவங்கி பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. இதனால் போர் பதற்றம் ஏற்பட்டநிலையில், முக்கிய திருப்பமாக, இந்தியா- பாகிஸ்தான் இடையே சனிக்கிழமை மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால் அதற்கான பதிலடி மிகவும் பேரழிவு தரக்கூடியதாகவும், வலுவானதாகவும் இருக்கும் என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்சிடம் பேசிய பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போர் நிறுத்தம் ஏற்பட்ட இரவு 26 இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும் இதற்கு தக்க…

Read More

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் தெரிவித்துள்ளார். பஹல்காம் சம்பவத்துக்கு பதிலடியாக நடத்தப்பட்ட இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெனரல் ஷர்தா ஆகியோர் கூட்டாக இணைந்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். பயங்கரவாதிகளையும், பயங்கரவாத முகாம்களையும் அழிக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் குறிப்பிட்டார். 9 பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்திய ராணுவத்தின் தாக்குதலில் யூசுப் அசார், அப்துல் மாலிக் ராப் மற்றும் விமான கடத்தல், புல்வாமா தாக்குதலுக்கு காரணமான முதாசிர் அஹமது உள்ளிட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ஜெனரல் ராஜீவ் குறிப்பிட்டார். பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் குறித்து இந்திய…

Read More