Author: Editor TN Talks

பத்மஸ்ரீ விருது பெற்ற வேளாண் விஞ்ஞானி சுப்பண்ணா அய்யப்பன் (70) மாண்டியாவில் உள்ள காவிரி ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானியான சுப்பண்ணா அய்யப்பனுக்கு கடந்த 2022ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. மைசூரு விஸ்வேவரய்யா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் விஞ்ஞானி சுப்பண்ணா அய்யப்பன் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தநிலையில், கடந்த 7ம் தேதி முதல் சுப்பண்ணா அய்யப்பனை காணவில்லை என குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மாண்டியாவில் உள்ள காவிரி ஆற்றில் சுப்பண்ணா அய்யப்பன், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சுப்பண்ணா அய்யப்பன் சடலத்தை கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சுப்பண்ணா அய்யப்பன் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது…

Read More

இந்தியா – பாகிஸ்தான் போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ள போதிலும் ராஜீய விவகாரங்களில் பல்வேறு கேள்விகளை இது உண்டாக்கி உள்ளது. போருக்கான மூலகாரணம்… கடந்த 40 ஆண்டுகளாக இந்தியா – பாகிஸ்தான் இடையே ஜம்மு காஷ்மீரை மையமாக வைத்து ஏராளமான ஊடுருவல் முயற்சிகள் நடந்துள்ளன. அவை சிறிய சண்டைகளாகவும், உயிர் பலிகளும் கூட ஏற்பட்டுள்ளன. ஆனால் அவை எல்லாமே தீவிரவாத குழுக்களால், ராணுவ நிலைகளை குறிவைத்து நடத்தப்பட்டவை. எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இது வழக்கமான ஒன்றுதான் என்ற நிலைக்கு இரு நாடுகளுமே கூட வந்து விட்டன. ஆனால் பெஹல்காம் தாக்குதல் அப்படியல்ல. வேண்டுமென்றே பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல். அதாவது இந்தியா, ஆத்திரப்பட வேண்டும், எல்லை தாண்டி நாட்டுக்குள் வந்து தாக்குதல் நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் போன்று காணப்பட்டது. இதற்கு தோதாகவே சிறிய தீவிரவாத குழு ஒன்றை சில ஆண்டுகளாக வளர்த்து அதனை வைத்து இந்த…

Read More

கள்ளழகருக்கு கோலாகல வரவேற்பு… புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வைகையாற்றில் எழுந்தரும் நிகழ்ச்சிக்காக அழகர்கோயிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடமணிந்து புறப்பட்டு, மதுரை நகருக்கு வருகை தந்துள்ளார். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் விசேஷ வாகனங்கள் சுவாமி மற்றும் அம்மாள் எழுந்தருளி மாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கடந்த 6ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 8ம் தேதி மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 9ம் தேதி திருத்தேரோட்டமும் விமர்சையாக நடைபெற்றது. இந்தநிலையில், புகழ்பெற்ற மதுரை அழகர்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக 10ம் தேதி மாலை சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடமணிந்து தங்கப்பல்லக்கில் மதுரை மாநகர் நோக்கி புறப்பட்டார். வழியெங்கும் அமைக்கப்பட்டுள்ள மண்டகபடிகளில் எழுந்தருளும் கள்ளழகர் பக்தர்களுக்கு…

Read More

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்து பயணம் செய்யப்போகும் குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு எட்டு, 10 மற்றும் 12ஆம் வீடுகளின் மீது விழுகிறது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். தொழில் ஸ்தானத்தை குரு பகவான் பார்வையிடுவதால் நல்ல வேலை கிடைக்கும். இது யோகமான குரு பெயர்ச்சியாக உள்ளது. அதிர்ஷ்ட மழையில் நனையப்போகிறீர்கள்.

Read More

உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து பயணம் செய்யும் குரு பகவான் உங்கள் ராசியை பார்வையிடுகிறார், குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் குபேர யோகம் தேடி வரப்போகிறது. வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும். புதிய கௌரவப் பதவிகள் தேடி வரும்.

Read More

குரு பகவான் ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் பயணம் செய்வதால் நோய்கள் நீங்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் அரசு வேலையில் இருப்பவர்களுக்கு கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். புரமோசனும் சம்பவ உயர்வும் கிடைக்கும். பணவருமானம் அபரிமிதமாக இருக்கும். `குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடு, பத்தாம் வீடு, 12ஆம் வீட்டினை பார்வையிடுகிறார். சுப காரியங்கள் கை கூடி வரும். சுப விரையங்கள் ஏற்படும்.

Read More

உங்கள் ராசிக்கு 7ஆம் வீடான களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து பயணம் செய்யப்போகும் உங்கள் ராசி நாதன் குரு பகவானால் தொட்டது துலங்கும். குருவின் அருள் பார்வை உங்களுக்கு நேரடியாக கிடைக்கிறது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குரு பார்வையால் நன்மைகள் அதிகம் நடைபெறும். வேலையில் புரமோசன் கிடைக்கும். சம்பள உயர்வும் அதிகம் கிடைக்கும்.

Read More

குரு பெயர்ச்சியால் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. எட்டாம் வீட்டில் பயணம் செய்யப்போகும் குரு பகவானால் விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. குருவின் அருள் பார்வையால் உங்களுக்கு சுப விரைய செலவுகள் ஏற்படும். வேலை விசயத்தில் சில பிரச்சினைகள் வரலாம் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம்.

Read More

ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்யும் குரு பகவான் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறார். குருவின் பார்வை உங்களுக்கு சகலவிதமான நன்மைகளையும் தரப்போகிறது. படிப்பில் இருந்த தடைகள் விலகும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணமழையில் நனையப்போகிறீர்கள்.

Read More

தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் பயணம் செய்யும் குருவினால் புதிய பதவிகள் தேடி வரும். நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும். குருவின் பொன்னான பார்வையால் வீடு நிலம் வாங்கலாம். புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். பதவி யோகத்தை தரப்போகிறார் குரு பகவான்.

Read More