Author: Editor web1

2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் டாப் 10 பட்டியலில் ‘கூலி’ திரைப்படம் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. உலகளவில் பல்வேறு பிரிவுகளில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் அந்நிறுவனம் தெரிவித்து வருகிறது. அதன்படி, இந்தியாவில் 2025ல் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் டாப் 10 பட்டியலை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அதில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் 3வது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் இந்தி திரைப்படமான ‘சாயாரா’, 2வது இடத்தில் கன்னடப் படமாக ‘காந்தாரா சாப்டர் 1’ இடம் பிடித்துள்ளன. ஷங்கர் இயக்கிய தெலுங்கு திரைப்படமான ‘கேம் சேஞ்ஜர்’ 8வது இடத்தை பிடித்துள்ளது. அனிமேஷன் திரைப்படமான ‘மகாவதார் நரசிம்மா’ 10வது இடத்தை பிடித்துள்ளது.

Read More

பாமக தலைவர் அன்புமணி மீது டெல்லியில் நாடாளுமன்ற சாலையில் உள்ள காவல் நிலையத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், அவரின் மகனும் பாமக தலைவருமான அன்புமணி ஆகியோரிடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இருவரின் பிரிவு காரணமாக பாமகவில் இரு தரப்பாக பிரிந்து நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் பாமக தங்களுக்கு சொந்தமானது என ராமதாஸ் தரப்பினர் அளித்த மனு மீது பதிலளித்த இந்திய தேர்தல் ஆணையம் 2026 ஆகஸ்ட் மாதம் வரை பாமக தலைவர் அன்புணி தான் என அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ராமதாஸ் தரப்பினர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, உரிமையியல் நீதிமன்றத்தில் முறையிடுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்தநிலையில், டெல்லியில் நாடாளுமன்ற சாலையில் உள்ள காவல்நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி மீது கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பில்…

Read More

புதுச்சேரியில் டிசம்பர் 9ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் அனுமதி வழங்கி உள்ள அரசு, பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து தருவதாக உறுதி அளித்துள்ளது. புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தவெக அரசிடம் அனுமதி கோரியது. தமிழ்நாட்டின் சாலைகளை விட புதுச்சேரி சாலைகள் சிறியவை எனக்கூறி புதுச்சேரி அரசு அனுமதி மறுத்தது. இதனையடுத்து பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தவெக கோரிக்கை வைத்தது. இதுகுறித்து அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு, சில நிபந்தனைகளுடன் தவெக பொதுக் கூட்டத்திற்கு முதலமைச்சர் ரங்கசாமி அனுமதி வழங்கி உள்ளார். புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் டிசம்பர் 9ம் தேதி தவெக பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி தரப்பட்டுள்ளது. வழக்கமாக பொதுக் கூட்டத்திற்கு அமைக்கப்படும் மேடை தவெக பொதுக் கூட்டத்திற்கு அமைக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக பிரசார வாகனத்தில் நின்றபடியே விஜய் பேச…

Read More

மதுரையில் இன்று (டிச. 7) நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மதுரையில் இன்று (டிச. 7) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘தமிழ்நாடு வளர்கிறது’ என்ற தலைப்பில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு 2025 நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் மொத்தம் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.36,660.35 கோடி மதிப்பிலான முதலீடுகள் 56,766 இளைஞர்களின் புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலூரில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கான அடிக்கல் நாட்டப்பட உள்ளதாகவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ல் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.18.795 கோடி மதிப்பில் 18,881 வளர்ச்சித் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,…

Read More

அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதிபர் டிரம்ப் கண் அயர்ந்து தூங்கிய  வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. குடியரசுக் கட்சியை சேர்ந்த டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் நடந்த அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக அதிபராக பதவியேற்றார். இந்தநிலையில், பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் உள்துறை அமைச்சர் மார்க் ரூபியோ, ராணுவ அமைச்சர் பீட்டர் ஹெக்சேத் உள்ளிட்ட அனைத்து இலாகா அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அமெரிக்காவின் பொருளுதார நடவடிக்கை, ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், அதிபர் டிரம்ப் அசந்து தூங்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதிபர் டிரம்பின் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள்…

Read More

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இந்தநிலையில் தீபம் ஏற்றப்படாததால், அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழ்நாடு அரசு முறையிட்டது. இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு,  திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததற்கு கண்டனம் தெரிவித்தது. இதனிடையே நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நிதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் காணொலி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டார். விசாரணைக்குப் பிறகு, இன்று (டிச. 4) இரவுக்குள் தீபத்தூணில் தீபம் ஏற்றி, அதற்கான அறிக்கையை நாளை…

Read More

சென்னை அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புதுச்சேரி நோக்கி நகர்ந்துள்ளநிலையில், வரும் 9ம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான டிட்வா புயலால் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக தொடர் மழை பெய்தது. மழை காரணமாக பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்கள் மழை நீரில் மூழ்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தநிலையில், வங்கக் கடலில் சென்னை அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புதுச்சேரி நோக்கி நகர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (டிச. 4) இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக, வலுவிழக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக,…

Read More

ரஷ்ய அதிபர் புதின் இன்று (டிச. 4) மாலை இந்தியா வருவதை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று மாலை இந்தியா வருகிறார். டெல்லியில் அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்து வரவேற்கிறார். நாளை (டிச. 5) காலை டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நடைபெறும் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சிப் பிறகு, இருநாட்டு தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கும் 23வது இந்தியா- ரஷ்யா ஆண்டு உச்சி மாநாடு நடைபெற உள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் இந்த பயணத்தின் போது, இந்தியா- ரஷ்யா இடையே பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. மேலும், சர்வதேச அளவில் நிகழும் முக்கிய பிரச்சனைகள் குறித்தம் பிரதமர் மோடி- அதிபர் புதின் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன்…

Read More

AVM திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான சரவணன் வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. பழம்பெரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான AVM-ஐ ஏவி மெய்யப்ப செட்டியார் 1945ம் ஆண்டு துவங்கினார். திரை உலகில் பல சூப்பர் ஸ்டார் நடிகர்களை உருவாக்கிய நிறுவனம் AVM. ஏராளமான நடிகர், நடிகைகளையும் அறிமுகப்படுத்தி உள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராஜ்குமார், எஸ்எஸ் ராஜேந்திரன், வைஜயந்தி மாலா, கமல்ஹாசன் என பல திரை நட்சத்திரங்களை அறிமுகப்படுத்திய பெருமை AVM-ஐ சேரும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நாடகங்களை AVM நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.வி. மெய்யப்ப செட்டியார் நடத்தி வந்த நிறுவனத்தை, அவருக்குப் பிறகு AVM சரவணன் கவனித்து வந்தார். தற்போது அவரது மகன் எம்.எஸ்.குகன் கவனித்து வருகிறார். இந்தநிலையில், வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று…

Read More

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான ‘பராசத்தி’-ஐ சுதா கொங்கரா இயக்கி உள்ளார். இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14ம் தேதி திரைக்கு வர உள்ளது. ‘பராசத்தி’ படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சூர்யா நடிப்பில் ‘சூரரைப் போற்று’ படத்திய இயக்கிய போது, மீண்டும் சூர்யாவை வைத்து ‘புறநானூறு’ என்ற படத்தை சுதா கொங்கரா இயக்க இருந்தார். சில காரணங்களால் அந்த படத்தில் சூர்யா நடிக்க முடியாமல் போனது. இந்தநிலையில், ‘புறநானூறு’ கதையை கேட்ட சிவகார்த்திகேயன் அதில், நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Read More