Author: Editor web1
அல்லு அர்ஜூன் நடிப்பில் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்ற ‘புஷ்பா 2’ திரைப்படம் ஜப்பான் மொழியில் வெளியாக உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ல் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, கடந்த 2024ல் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது. ஃபகத் ஃபாசில், ரஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்திருந்தனர். இந்திநிலையில், ‘புஷ்பா 2’ திரைப்படம் 2026ல் ஜப்பான் மொழியில் வெளியாக உள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கீக் பிக்சர்ஸ் இந்தியா நிறுவனம் விநியோகிக்கும் ‘புஷ்பா 2’ படத்தின் ஜப்பான் மொழி டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. ‘புஷ்பா’ திரைப்படத்தில் ஸ்ரீசைலம் பகுதியில் வெட்டப்படும் செம்மரம் ஜப்பானுக்கு கடத்தப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். இந்தநிலையில், தற்போது ஜப்பான் மொழியில் ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
2026ம் ஆண்டில் நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கான அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்து வருகிறது. இந்தநிலையில், TNPSC இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பில், 2026ம் ஆண்டிற்கான தேர்வு திட்டம் தொடர்பான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்தாண்டு நடைபெற உள்ள குரூப் 4 தேர்வு தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேர்வின் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் அறிவிக்கையில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு ஜூன் 23ம் தேதி வெளியாகும் என்றும் குரூப் 1 தேர்வு செப்டம்பர் 6ம் தேதி நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு அக்டோபர் 6ம் தேதி வெளியாகும் என்றும் குரூர் 4 தேர்வு டிசம்பர் 20ம்…
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச. 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 2வது நாளாக தொடர்ந்து கனமழை பெய்தது. இடைவிடாது பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு, மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மழை நீர் வெளியேற்றம், வெள்ள பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து போலீசாரும் செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனையடுத்து கனமழையை முன்னிட்டு சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (டிச. 4) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை செயற்கைக் கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணிகள் 99 சதவீதம் முடிவடைந்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்ற கோரிக்கையுடன் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பிரஸ்னவ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் குடியிருப்பு வளாகம் கட்டும் பகுதியில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி அருள் முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக…
Dude திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியது தொடர்பாக இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டதால் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. தனது இசையமைப்பில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘கருத்த மச்சான்’ மற்றும் ‘பணக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘100 வருஷம் இந்த மாப்பிள்ளைக்கு’ ஆகிய பாடல்களை தனது அனுமதியின்றி, உருமாற்றி தீபாவளிக்கு வெளியான Dude திரைப்படத்தில், பயன்படுத்தி உள்ளதாகக் கூறி இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இரண்டு பாடல்களையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், பாடல்களை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு நடைபெற்ற விசாரணையில், தனது அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் இந்த பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாடலை உருமாற்றி உள்ளதால் பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று…
எந்த அரசியல் கட்சியும் சாலை நடுவிலும், அருகிலும் தற்காலிக கொடிக் கம்பங்கள் அமைக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், மீறினால் அரசு அதிகாரிகள் மீது மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்காக தற்காலிகமாக கொடிக் கம்பங்கள் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு விதிமுறைகள் வகுத்துள்ளது. இந்தநிலையில், சாலைகளின் நடுவிலும், ஓரங்களிலும் கொடிக்கம்பங்கள் நடுவது தொடர்பான வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்காக தற்காலிகமாக கொடிக்கம்பங்கள் அமைக்க வசூலித்த வாடகை, விதிகளை மீறி கொடிக் கம்பங்கள் அமைத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து 37 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி கொடிக் கம்பங்கள் அமைத்த…
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் திருக் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் விழாக்கள் விமர்சையாக நடைபெற்றது. இன்று (டிச. 3) அதிகாலை, 4 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. முக்கிய நிகழ்வாக இன்று (டிச. 3) மாலை அண்ணாமலையார் கோயிலில் 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டு மகா தீபத்தை கண்டு வழிபட்டனர். முன்னதாக மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை பாதுகாப்புடன் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. மகா தீபம் ஏற்ற, 4,500 கிலோ நெய் மற்றும், 1,150 மீட்டர் காடா…