Author: Editor web2
Netflix நிறுவனம் வாரணர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை சுமார் 83 பில்லியன் டாலர்கள் கைப்பற்றியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் வாரனர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்திற்கு கீழ் வரும் HBO, HBO Max, Studio என அனைத்து உரிமத்தையும் Netflix நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்திய மதிப்பில் 7 லட்சத்து 43 ஆயிரத்து 630 கோடி ரூபாய்க்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதை Netflix நிறுவனம் அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது. வாரணர பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை கைப்பற்றும் ஏலப்போரில் பாரமௌண்ட ஸ்கை டான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனமும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 1923 ஆம் ஆண்டு நான்கு சகோதரர்களால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் நூற்றாண்டுக்கும் மேலாக தரமான படைப்புகளின் மூலம் உலகில் உள்ள நிறைய மக்களின் மனதை வென்றிருக்கிறது. முக்கியமாக டிசி காமிக்ஸ் (டிசி காமிக்ஸ்) மூலமாக நிறைய ஜனரஞ்சகமான திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களை வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனம் தயாரித்துள்ளது. பேட்மேன்…
இந்திய மற்றும் ரஷ்ய நட்புணர்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புதின் புதுடெல்லிக்கு வந்து இருக்கிறார். பல்வேறு ஒப்பந்தங்கள் இந்த சுற்றுப்பயணத்தில் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது. இன்று பிரதமர் மோடி ரஷ்ய மக்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தியை கூறியிருக்கிறார். அது என்னவென்றால் ரகசிய மக்களுக்கு இலவசமாக ஈ விசா தரப்போவதுதான். ஆம் ரஷ்ய மக்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தேவைப்படும் E விசாவை எந்த ஒரு கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்போவதாக பிரதமர் மோடி கூறியிருக்கிறார். மேலும் இந்த விசாவிற்கு விண்ணப்பித்த அடுத்த 30 நாட்களுக்குள் விசா கிடைத்துவிடும் என்கிற உத்தரவாதத்தையும் கொடுத்திருக்கிறார். டூரிஸ்ட் விசா மற்றும் குரூப் டூரிஸ்ட் விசா என இரண்டும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக ரஷ்ய மக்கள் இந்தியாவுக்கு வருகை தருவது ஆண்டுக்கு ஆண்டு அதிகமாய் கொண்டு தான் போகிறது. சர்வே படி 2023 ஆம் ஆண்டு மொத்தமாக ஒரு…
ஏவிஎம் ப்ரோடக்சன்ஸ் 1945 ஆம் ஆண்டு ஏ வி மெய்யப்ப செட்டியாரால் துவங்கப்பட்டது. பின்பு அவருடைய மகன் ஏவிஎம் சரவணன் 1958 ஆம் ஆண்டு இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு தலைமை ஏற்றார். அவர் தலைமையை ஏற்ற பின் ஏவிஎம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பல்வேறு வெற்றி படங்கள் வெளியாகின. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னட மற்றும் ஹிந்தி என முன்னுருக்கும் மேற்பட்ட படங்கள் ஏவிஎம் புரோடக்சன்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்டுள்ளது. நேற்று டிசம்பர் 4ஆம் தேதி ஏவிஎம் சரவணன் உடல் நல குறைவு காரணமாக தன்னுடைய 86 வது வயதில் இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்கு பல்வேறு துறை பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். அதில் சிவக்குமார் அவருடைய மகன் நடிகர் சூர்யா ஆகியோரும் அஞ்சலி செலுத்து வந்து இருந்தனர். அஞ்சலி செலுத்து வந்த இடத்தில் சிவக்குமார் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் கண்ணீர் மல்க தங்களது அஞ்சலியை செலுத்தினர். பின்பு பேசிய சிவகுமார்,…
ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்பொழுது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. தற்பொழுது இரண்டாவது போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் மொத்தமாக 334 ரன்கள் எடுத்தது. 334 ரன்கள் பின்தங்கிய நிலையில் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி மிகவும் நிதானமாக தற்பொழுது விளையாடி வருகிறது. மூன்று விக்கெட்டுகளை மற்றும் இழந்து 243 ரன்கள் எடுத்து சற்று வலுவான நிலையில் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே 65 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதோடு ஒரு உலக சாதனையையும் அவர் கைவசப்படுத்தி இருக்கிறார். பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் அதிவேக ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்கிற சாதனையை…
1999 ஆம் ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படையப்பா திரைப்படம் சுமார் 26 ஆண்டுகள் கழித்து மீண்டும் வருகிற டிசம்பர் 12ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. 4k ரெசல்யூசனில் இந்த படம் ரீ மாஸ்டர் செய்யப்பட்டு ரீ ரிலீஸ் செய்ய தயாராக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சௌந்தர்யா ரம்யா கிருஷ்ணன் ராதாரவி மணிவண்ணன் செந்தில் என பல்வேறு நட்சத்திர பட்டாளஙகள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.கே எஸ் ரவிக்குமாரின் கதை திரைக்கதை வசனம் ஒரு பக்கம், மறுபக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைல் மற்றும் ஜனரஞ்சகுமான் நடிப்பு என்று பார்த்தால் இன்னொரு பக்கம் ஏ ஆர் ரகுமானின் மிரட்டலான இசை. சோகம் ஆனந்தம் உத்வேகம் என அனைத்து ஏரியாக்களிலும் ஏ ஆர் ரகுமான் தனது இசையில் மிரட்டி இருப்பார். வெற்றிக்கொடி கட்டு என்கிற பாடல் இன்றுவரை பலருக்கும் உத்வேகத்தையும் உந்து சக்தியும் கொடுக்கும் என்று சொன்னால் அது…
இந்திய அணியில் தற்பொழுது ரோஹித் ஷர்மா ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடிக் கொண்டிருக்கிறார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் அவர் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. மறுபக்கம் டொமஸ்டிக் லெவலில் நடைபெறும் சையது முஷ்டாக் அலி தொடர் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தொடர் வரும் டிசம்பர் 18ஆம் தேதி அன்று நிறைவு பெறும். இந்தத் தொடரில் மும்பை அணிக்காக நாக்கவுட் போட்டிகளில் விளையாட விரும்புவதாக ரோஹித் ஷர்மா தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். 20 ஓவர் கிரிக்கெட் ஃபார்மேட்டில் விளையாடப்படும் இந்த சையது முஷ்டாக் அலி தொடரில் அதிகபட்சமாக தமிழ்நாடு அணி மூன்று முறை கோப்பையை வென்றிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக மும்பை அணி இரண்டு முறை கோப்பையை வென்று இருக்கிறது. இந்தத் தொடரில் தங்களது திறமையை நிரூபித்து நிறைய உள்ளூர் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடிய கதை ஏராளம். பரபரப்புக்கு…
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது அந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை மிட்செல் ஸ்டார்க் கைப்பற்றினார். முதல் போட்டியை தொடர்ந்து இன்று இரண்டாவது போட்டி தொடங்கியுள்ளது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது அதன் அடிப்படையில் இன்றைய முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் குவித்து இருக்கிறது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 135* ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இன்றைய போட்டியில் அவர் ஒரு பெரிய உலக சாதனை படைத்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது பந்துவீச்சை தொடங்கிய மிட்செல் ஸ்டார்க் தற்பொழுது வரை மொத்தமாக 418 விக்கெட்டுகளை…
சீனாவில் உள்ள குவாங்டாங்-ஹாங்காங்-மக்காவ் கிரேட்டர் பே ஏரியா உலகின் மிகப்பெரிய நகரமாகும். இந்த நகரத்தின் மக்கள் தொகை 2030 ஆம் ஆண்டுக்குள் 100 மில்லியனை கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க பேர்ல் நதியின் மேற்குக் கரையில், குவாங்சோவின் நான்ஷா மாவட்டத்தின் தெற்கு முனையில் ஜஹா கட்டிடக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட கிரேட்டர் பே ஏரியா விளையாட்டு மையம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. பெரிய அளவிலான தடகளம் மற்றும் கால்பந்துக்காக 60,000 இருக்கைகள் கொண்ட மைதானம். கூடைப்பந்து மற்றும் பிற உட்புற நிகழ்வுகளுக்கு ஏற்ற 20,000 இருக்கைகள் கொண்ட உட்புற அரங்கம். 4,000 இருக்கைகள் கொண்ட நீர் விளையாட்டு மையம். 50 மீட்டர் போட்டி நடத்தும் அளவுக்கு நீச்சல் குளம் மற்றும் டைவிங் கிணறு ஆகியவற்றை இந்த கிரேட்டர் பே ஏரியா விளையாட்டு மையம் உள்ளடக்கியுள்ளது. சீனாவில் உள்ள பள்ளி கல்லூரி விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவரும்…
வேள்பாரி கதையை இயக்குனர் ஷங்கர் திரைப்படமாக போவதாக தகவல் கசிந்துள்ளது. வேள்பாரி என்னும் நாவலை சு. வெங்கடேசன் அவர்கள் எழுதியிருக்கிறார். அந்த நாவல் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. 1408 பக்கங்களைக் கொண்ட இந்த நாவல் இரண்டு பாகங்களாக வெளியானது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையானதும் குறிப்பிடத்தக்கது. இந்த வேள்பாரி கதை உரிமையை இயக்குனர் ஷங்கர் முன்பே வாங்கியிருந்தது அனைவரும் அறிந்த செய்தி. இயக்குனர் சங்கர் இயக்கிய திரைப்படங்களில் அவருக்கு கனவு படமாக இருந்தது எந்திரன் திரைப்படம் தான். ஆனால் வேள்பாரி நாவலை படித்த பின்னர் வேள்பாரி கதையை திரைப்படமாக எடுக்க வேண்டிய எண்ணம் இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு தோன்றியிருக்கிறது. எந்திரன் கதையை விட இந்த வேள்பாரி கதை அவருக்கு அதிக சிந்தனையையும் அதிக வேலையையும் கொடுத்ததால், எந்திரன் படத்தை தாண்டி இந்த திரைப்படம் தான் ஷங்கரின் கனவு திரைப்படம் என்று இயக்குனர் ஷங்கர் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கர்…
ஆஸ்திரேலிய இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில் இன்று இரண்டாவது போட்டி தொடங்கியது. இந்த இரண்டாவது போட்டி பகல் இரவு ஆட்டமாக காபாவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்து இருக்கிறது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக 135* ரன்கள் எடுத்து ஜோ ரூட் களத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக ஜாக் க்ராலி 76 ரன்கள் எடுத்திருக்கிறார். முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற மிட்செல் ஸ்டார்க் இந்த போட்டியிலும் ஆறு விக்கெட் எடுத்து தனது அதிரடியை காட்டி இருக்கிறார். ஜோ ரூட் செய்த சாதனை : டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில்…