Author: Editor web2
திருச்சியில் உள்ள திருவெறும்பூரில் நான்கு வழித்தடங்களில் பள்ளி மாணவ மாணவிகள் மட்டும் இலவசமாக பயணிப்பதற்காக புதிய பேருந்து திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் இணைந்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் இன்று துவங்கி வைத்தார். இந்த பேருந்தில் பள்ளி மாணவர்கள் மட்டும் இலவசமாக பயணிக்கலாம். காலை மாலை என இரண்டு வேளைகளில் இந்த பேருந்துகள் இயங்கும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமணி தன்னுடைய எக்ஸ் கணக்கில் பதிவிட்டு இருக்கிறார். சென்னையில் மட்டுமே இயங்கி வந்த இந்த மாணவ மாணவிகளுக்கான இலவச பேருந்து சேவை இன்று திருச்சியில் உள்ள திருவெறும்பூரில் துவங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பள்ளி பயிலும் மாணவ மாணவிகளுக்கான இலவச பேருந்து தமிழ்நாடு முழுக்க விரிவுபடுத்தப்படும் என்றும் தமிழ்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் உறுதி அளித்திருக்கிறார். பள்ளிப் பயிலும் மாணவ மாணவிகள் மட்டும் பயணிக்கும் வகையிலான இந்த இலவச பேருந்து…
ஜோஹோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு அவர்கள் எப்பொழுதும் சற்று தொலைநோக்கு சிந்தனையுடன் இருப்பார். சமூக வலைதளங்களில் தன்னுடைய தொலைநோக்கு கருத்துக்களை பதிவிடுவது அவரது வழக்கம். அதன்படி தற்பொழுது இளைஞர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோளை தனது பதிவின் மூலம் கூறியிருக்கிறார். ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய எக்ஸ் கணக்கில் பதிவிட்ட பதிவை பற்றி பார்ப்போம் : அமெரிக்காவில் உள்ள ஒரு சில மாணவர்கள் மற்றும் மாணவிகள் கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டு, தங்களுடைய தொழில் திறனை வளர்த்துக் கொள்கிறார்கள். அவ்வாறு தொழில் கற்றுக் கொண்ட அனைவரையும் முற்போக்கு மற்றும் தொலைநோக்கு சிந்தனை கொண்ட முதலாளிகள் தங்களுடைய கம்பெனியில் வேலைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். இது உண்மையில் மிகப்பெரிய விஷயம். இது சமுதாயத்தில் ஒரு புதிய சிந்தனையையும் கலாச்சாரத்தை உருவாக்கும். ஒரு தொழிலில் அமர்வதற்கு கட்டாய படிப்பு தகுதி தேவையில்லை. கல்லூரி பட்டம் மற்றும் டிகிரி பெறுவதற்காக கடன் வாங்கி மற்றும் சொந்த…
நவம்பர் 3 2025 : சற்று நேரத்துக்கு முன்பு ஐ.சி.சி உலக தரவரிசை புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது. வெளியான தரவரிசை புள்ளி பட்டியலை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். ஐசிசி ஆடவர் அணி விபரம் : டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மெட்டில் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தில் 124 புள்ளிகளுடன் உள்ளது. இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் ஃபார்மெட்டில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐசிசி ஆடவர் பேட்ஸ்மேன் விபரம் : டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மேட்டை பொறுத்தவரையில் முதலிடத்தில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் இருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட் ஃபார்மெட்டில் இந்திய அணி வீரர் ரோஹித் ஷர்மா முதலிடத்தில் இருக்கிறார். டி 20 கிரிக்கெட் ஃபார்மெட்டில் இந்திய அணி வீரர் அபிஷேக் ஷர்மா முதலிடத்தில் இருக்கிறார். ஐசிசி ஆடவர் பந்து வீச்சாளர் விபரம் : டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மேட்டில் இந்திய வீரர்…
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பொருட்களில் தற்பொழுது நுடெல்லா சாக்லேட் ஸ்பிரெட் சேர்ந்துள்ளது. இத்தாலியில் ஃபெர்ரெரோவால் தயாரிக்கப்படும் பிரபலமான ஹேசல்நட் மற்றும் கோகோ ஸ்ப்ரெட், இந்த இரண்டு பொருட்களின் கலவைதான் தான் நுடெல்லா. சர்க்கரை, பாமாயில், ஹேசல்நட்ஸ், ஸ்கீம் பால், கோகோ, லெசித்தின் மற்றும் வெண்ணிலின் (ஒரு செயற்கை சுவை) ஆகியவை ஏழு பொருட்கள் அடங்கிய கலவைதான் இந்த நுடெல்லா கலவை. இதனுடைய ஊட்டச்சத்து விபரத்தை பற்றி பார்ப்போம் : ( 2 டேபிள்ஸ்பூன் நுடெல்லாவின் ( 30-37 கிராம்) ஊட்டச்சத்து விபரம் ) கலோரிகள் : 200 கொழுப்பு : 11 கிராம் (நிறைவுற்ற கொழுப்பு: 3.5 கிராம்) சோடியம் : 15 மி.கி கார்போஹைட்ரேட் : 22 கிராம் (நார்ச்சத்து: 1 கிராம், சர்க்கரை: 21 கிராம்) புரதம் : 2 கிராம் ஹேசல்நட்ஸ் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தவை. மேலும் இதில் ஆக்ஸிஜனேற்றிகள்,…
சாம்சங் நிறுவனம் முதல் முறையாக கேலக்ஸி இசட் ட்ரைஃபோல்ட் ( Galaxy Z Trifold ) தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன் இரண்டாக மடிக்கும் விதத்தில் கூடிய தொலைபேசியை ( Foldable Mobile ) விற்பனை செய்து வந்திருந்த நிலையில் தற்பொழுது மூன்றாக மடிக்கும் ஒரு தொலைபேசியை ( Galaxy Z Trifold ) உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த தொலைபேசியில் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம் : முதலில் இந்த தொலைபேசி 3.9 மில்லிமீட்டர் மெல்லிய அளவைக் கொண்டுள்ளது. 6.5 இன்ச் டிஸ்ப்ளே அளவை கொண்ட மூன்று தனி தொலைபேசியை இணைத்து ஒரே தொலைபேசியாக வெறும் 309nகிராம் எடை அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது ( கிட்டத்தட்ட ஒரு குட்டி கைக்கணினி போல ). 200 மெகா பிக்சல் கேமரா, மூன்று 5600 Mah பேட்டரி செல்கள், 45 வாட்ஸ் திறன் அளவு கொண்ட அதிவேக சார்ஜர் வசதி, 10 இன்ச் டிஸ்ப்ளே…
தமிழகத்தை பொறுத்தவரையில் விசேஷமான நாட்களில் பத்திரப்பதிவு அதிக அளவில் நடைபெறும். கார்த்திகை மாதம் சுபமுகூர்த்த தினத்தில் பத்திரப்பதிவு அதிக அளவில் தாக்கல் ஆகும் என்பதை முன்கூட்டியே அறிந்து டிசம்பர் ஒன்றாம் தேதி அன்று பத்திரப்பதிவுக்கான டோக்கன்கள் அதிக அளவில் விநியோகம் செய்யப்பட்டன. அதன்படி நேற்றைய முன்தினம் டோக்கன்களை பெற்று அதிக அளவில் பத்திரங்களை மக்கள் பதிவு செய்துள்ளனர். டிசம்பர் ஒன்றாம் தேதி அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களில் கிட்டத்தட்ட 303 கோடி ( 302.73 கோடி) ரூபாய்க்கு பத்திரங்கள் தாக்கலாகி உள்ளது. அன்றைய ஒரு தினத்தில் மட்டும் 303 கோடி ரூபாய் வருவாய் பதிவு துறைக்கு கிடைத்துள்ளது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி உறுதி செய்துள்ளார். பொதுவாக சுபமுகூர்த்த தினங்களில் வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவது அல்லது முன்பதிவு செய்வது போன்ற முக்கிய காரியங்களை அன்றைய தினத்தில் செய்தால் எல்லாம் நல்லபடியாக…
தெலுங்கு திரையரங்கில் தற்பொழுது அல்லு அர்ஜுன் மார்க்கெட் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அவரது புஷ்பா 2 திரைப்படம் உலக அளவில் 1700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. புஷ்பா பாகம் இரண்டைத் தொடர்ந்து தற்பொழுது அட்லீ இயக்கத்தில் தீபிகா படுகோன் உடன் இணைந்து ஒரு பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கருணாநிதி மாறன் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் முடிந்த பின்னர் அல்லு அர்ஜுன் புஷ்பா பாகம் 3 திரைப்படத்தில் நடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்பொழுது மற்றொரு புதிய சுவாரசிய தகவல் கிடைத்துள்ளது. தமிழ் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தை தொடர்ந்து கைதி 2 திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் அது குறித்து எந்த விதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய கனவு…
சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்து 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். குழந்தைகள் குடித்த இருமல் மருந்து கோல்ட்ரிப் என்கிற இருமல் மருந்தாகும். அந்த குழந்தைகள் குடித்த கோல்ட்ரிப் இருமல் மருந்தின் தயாரிப்பு ஆலை தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் உள்ளது. அந்த தயாரிப்பு ஆலையின் பெயர் ஶ்ரீசன் ஃபார்மா. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் ஆவார். குழந்தைகள் பலியானதை தொடர்ந்து இந்த தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். அந்த தயாரிப்பு நிறுவனமும் மூடப்பட்டதை தொடர்ந்து மேலும் இந்த வழக்கு அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று நடத்தப்பட்ட ED ரைடில் ஸ்ரீசன் ஃபார்மா நிறுவனத்தின் உரிமையாளரான ரங்கநாதனுக்கு சொந்தமான 2.04 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் ரங்கநாதனுக்கு தொடர்புடைய சென்னை கோடம்பாக்கம் வீடு மற்றும் இரண்டு குடியிருப்புகளை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது. இருமல் மருந்தில் சிறுநீரகத்தை பாதிக்கும் நச்சுப்பொருள்…
நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இருவரும் 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அதன் பின்னர் நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதாவை கடந்த ஆண்டு கரம் பிடித்தார். நடிகர் நாகா சைதன்யா செய்தது தவறு என்றும் அவர் சமந்தாவை விவாகரத்து செய்து தற்பொழுது இன்னொரு நடிகையை திருமணம் செய்து கொண்டார். அவர் எப்படி செய்திருக்கக் கூடாது என்றும் பல்வேறு வகையில் விமர்சனங்கள் எழுந்து வந்தன. இந்நிலையில் தற்பொழுது நடிகை சமந்தா இயக்குனர் ராஜ் நிதிமோரு அவர்களை டிசம்பர் 1 அன்று திருமணம் செய்து இருக்கிறார். இவர்கள் இருவருடைய திருமணம் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ராஜ் நிதிமோரு அவருடைய மனைவியை 2022 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. சமந்தா மட்டும் ராஜ் நிதிமோரு திருமணம் செய்த புகைப்படத்தை வெளியிட்ட பின்னர் இந்திய அளவில் ட்ரண்ட் செய்யப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில்…