Author: Editor web3
மேற்காசிய நாடுகளில் தொடர்ந்து நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதி செய்வது குறித்து ஆய்வு செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை (இன்று) டெல்லியில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) கூட்டம் நடைபெறுகிறது. இந்தப் போர்ப் பதற்றத்தால் இந்தியாவிற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்காகப் பல்வேறு அமைச்சகங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பணிகள் குறித்து பிரதமர் இக்கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்வார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேற்காசியப் பதற்றம் காரணமாக கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் மூன்றாவது பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (CCS) கூட்டம் இதுவாகும். இதற்கு முன்னதாக ஏப்ரல் மாதம் நடைபெற்ற கூட்டத்தில், சாமானிய மக்களின் அத்தியாவசியத் தேவைகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்யவும், அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பிரதமர் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.…
தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏறுமுகமாக இருந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.1,200 வரை உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 360-க்கும், ஒரு சவரன் ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 880-க்கும் விற்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 210-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 680-க்கும் விற்பனை ஆனது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.150 உயர்ந்து ரூ.14,360-க்கும், ஒரு சவரன் ரூ.1,200 உயர்ந்து ரூ.1,14,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாளைய தினம் (ஏப்ரல் 19) அட்சய திருதியை பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், நகைக் கடைகளில் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தங்கம் விலை தங்கம் சவரன் ரூ.1.15 லட்சத்தை நெருங்கி வருவது நகை…
ஐபிஎல் 2026 தொடரின் 27-வது லீக் போட்டியில், பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் நடுவரிசையில் இருக்கும் இரு அணிகளுக்கும் இந்த வெற்றி மிகவும் முக்கியமானது என்பதால், மைதானத்தில் விறுவிறுப்புக்குக் குறைவிருக்காது. ஐந்து முறை சாம்பியனான சென்னை அணி, ஆரம்பக்கட்ட சறுக்கல்களுக்குப் பிறகு தற்போது தொடர்ச்சியான வெற்றிகளுடன் பார்முக்கு திரும்பியுள்ளது. அதே சமயம், தனது சொந்த மண்ணில் ஆடும் ஹைதராபாத் அணி, உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு சென்னையை வீழ்த்தத் தயாராக உள்ளது. இந்த சீசனில் சென்னை அணியின் பேட்டிங்கில் சஞ்சு சாம்சன் மற்றும் இளம் வீரர் ஆயுஷ் மத்ரே ஜோடி மிகச்சிறந்த அடித்தளத்தை அமைத்து வருகின்றனர். இவர்களுக்குப் பக்கபலமாக நடுவரிசையில் அதிரடி வீரர்கள் இருந்தாலும், அணியின் வேகப்பந்து வீச்சு சற்றே கவலை அளிப்பதாக உள்ளது. குறிப்பாக கலீல் அகமது காயம்…
நடப்பு ஐபிஎல் சீசனில் பங்கேற்றுள்ள 10 அணிகளில், ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாத ஒரே அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நீடிக்கிறது. நேற்று வெள்ளிக்கிழமை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற விறுவிறுப்பான மோதலில், கேகேஆர் அணி தனது ஐந்தாவது தொடர்ச்சியான தோல்வியைத் தழுவியது. மழையினால் கைவிடப்பட்ட ஒரு போட்டியின் மூலம் கிடைத்த ஒரே ஒரு புள்ளியைத் தவிர, அந்த அணி புள்ளிப்பட்டியலில் மிகவும் பின்தங்கியுள்ளது. இந்த மோசமான தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் அஜிங்க்யா ரஹானே, தொடர் தோல்விகளுக்குப் பிறகு உடனடியாக வந்து பேசுவது மனதிற்கு மிகவும் கடினமாக இருப்பதாகத் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டார். தோல்விக்கு மத்தியிலும் அணியின் நட்சத்திர வீரர் கேமரூன் கிரீனின் அதிரடி ஆட்டத்தை ரஹானே வெகுவாகப் பாராட்டினார். இக்கட்டான சூழலில் களமிறங்கி 79 ரன்களைக் குவித்து கிரீன் கொடுத்த எதிர் தாக்குதல், அணிக்கு ஒரு நம்பிக்கையை அளித்ததாக அவர் குறிப்பிட்டார். “ஆரம்பத்திலேயே…
நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறாமல் போனதை எதிர்க்கட்சிகள் வெற்றியாகக் கருதி கொண்டாடி வருவதை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவின் சரிபாதி மக்கள் தொகையாக விளங்கும் 70 கோடி பெண்களின் உரிமைகளைப் பறித்துவிட்டு, எதிர்க்கட்சிகள் எவ்வாறு மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். பல தசாப்தங்களாகத் தங்கள் அரசியல் பிரதிநிதித்துவத்திற்காகக் காத்திருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும், எதிர்க்கட்சிகளின் இந்த கொண்டாட்டம் இழைக்கப்படும் மிகப்பெரிய அவமானம் என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார். பெண்களின் முன்னேற்றத்திற்காகக் கொண்டு வரப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தைத் தடுத்து நிறுத்தியதன் மூலம், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மீண்டும் ஒருமுறை பெண்களைக் காட்டிக்கொடுத்துள்ளதாக அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். பெண்களின் நம்பிக்கையைச் சிதைத்துவிட்டுப் பெறும் இந்த வெற்றி, உண்மையில் ஒரு வெற்றியாகக் கருதப்பட முடியாது என்றும், இது நாட்டின் பெண்…
மக்களவை மற்றும் பேரவைகளில் 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டு முதல் அமலாக்கவும், இதற்கு ஏற்ற வகையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 534-இல் இருந்து 850 வரை அதிகரிக்க வழிவகை செய்யும் அரசமைப்பு சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்களை அறிமுகம் செய்து, நிறைவேற்றும் வகையில் சிறப்பு அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மகளிர் இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா, தொகுதி மறுவரை திருத்த மசோதா உள்ளிட்டவைகளுக்கான வாக்கெடுப்பு நேற்று (ஏப்ரல் 17) மாலை நடைபெற்றது. இதில் 489 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு கூட்டத்தொடரில் 534 உறுப்பினர்களில் 528 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இவர்களில் மசோதாவுக்கு ஆதரவாக 298 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், 230 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர்.. இதன் காரணமாக மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்த தொகுதி மறுவரை மசோதா, மகளிர் இடஒதுக்கீடு…
ஈரான் உடனான ராணுவ மோதலில் அமெரிக்கா மிக விரைவில் முழுமையான வெற்றியை அடையப்போவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார், நெவாடா மாகாணத்தின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த இரண்டு மாதங்களாக வளைகுடா பகுதியில் அமெரிக்கப் படைகள் தீவிரமாகக் களம் கண்டு வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், ஈரானின் ராணுவக் கட்டமைப்பு தற்போது நிலைகுலைந்துள்ளதாகக் கூறினார். ஈரான் மக்கள் திறமையான போராளிகள் என்பதை ஒப்புக்கொண்ட டிரம்ப், அவர்களின் தற்காப்புத் திறன் தற்போது முற்றிலுமாக முறியடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். ஈரானின் கடற்படை பலம் குறித்துப் பேசிய டிரம்ப், அந்நாட்டின் சுமார் 158 போர்க்கப்பல்கள் தற்போது கடலுக்கு அடியில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக அதிரடி தகவலை வெளியிட்டார். இனி ஈரானிடம் குறிப்பிடும்படியான கடற்படையே இல்லை என்று சாடிய அவர், கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட துணிச்சலான ராணுவ நடவடிக்கைகளையும் நினைவு கூர்ந்தார். குறிப்பாக, உலகின் மிக மோசமான பயங்கரவாதி என்று டிரம்பால் வர்ணிக்கப்பட்ட ஈரான்…
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, தொகுதி மறுவரையறை தொடர்பான 131-வது அரசியல் சாசன திருத்த மசோதா இன்று இரவு 7 மணிக்கு வாக்கெடுப்புக்கு வருகிறது. 2023-ல் நிறைவேற்றப்பட்ட ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ சட்டம், 2026-க்குப் பிந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகுதான் அமலாகும் என்ற சிக்கல் இருந்தது. இதனைத் தீர்க்கும் வகையில், 2011-ஆம் ஆண்டு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தொகுதிகளை மறுவரையறை செய்ய இந்த புதிய மசோதா வழிவகை செய்கிறது. இதன் மூலம் வரும் 2029 பொதுத்தேர்தலிலேயே மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதோடு, இதற்காக 2023-ஆம் ஆண்டு சட்டத்தை நேற்று அதிகாரப்பூர்வமாக அரசிதழிலும் வெளியிட்டுள்ளது. தொகுதிகளின் எண்ணிக்கை 850 ஆக அதிகரிக்கும்போது, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரம் பறிபோகும் என்ற அச்சம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி…
நாடாளுமன்ற மக்களவையின் சிறப்பு கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுடன் நகைச்சுவையையும் கலந்து அவையை உற்சாகப்படுத்தினார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் தாய், சகோதரி அல்லது மனைவி என ஒரு பெண் இருப்பார் என்று குறிப்பிட்ட அவர், திடீரெனச் சிரித்தபடி, “பிரதமர் மோடிக்கும் எனக்கும் அந்த ‘மனைவி விவகாரம்’ கிடையாது” என்று கூறினார். இந்தத் தற்செயலான நகைச்சுவை பேச்சைக் கேட்டு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என அனைவரும் நீண்ட நேரம் சிரிப்பொலியில் ஆழ்ந்தனர். தங்களுக்கு மனைவியின் தலையீடு இல்லாவிட்டாலும், தாய் மற்றும் சகோதரியின் வழிகாட்டுதல் எப்போதும் இருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தனது சகோதரி பிரியங்கா காந்தியின் அரசியல் ஆளுமை குறித்தும் ராகுல் காந்தி சிலாகித்துப் பேசினார். “கடந்த 20 ஆண்டுகால எனது அரசியல் பயணத்தில் என்னால் செய்ய முடியாத ஒரு சாதனையை, எனது சகோதரி ஐந்தே நிமிடத்தில் செய்து…
மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, தென் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகக் கூறி திமுக உறுப்பினர்கள் கருப்பு உடையணிந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்த மசோதா மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 251 வாக்குகளும், எதிராக 185 வாக்குகளும் பதிவாகின. விவாதத்தின் போது பேசிய பிரதமர் மோடி, தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என்று உறுதி அளித்ததுடன், திமுகவினரின் கருப்பு உடையைக் கிண்டல் செய்யும் விதமாகப் பேசினார். ஒரு சுப காரியத்தைத் தொடங்கும் முன் திருஷ்டி கழிக்க ‘கருப்பு திலகம்’ இடுவது வழக்கம் என்றும், அந்த வகையில் திமுகவினர் இந்த மசோதாவிற்குப் பாதுகாப்பு அரணாகத் திகழ்வதாகவும் அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். பிரதமரின் இந்தக் கருத்துக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று அவையில் மிக வலுவான பதிலடி கொடுத்தார். ஆளுங்கட்சியினர் பெண் சக்தியைப் பற்றிப் பேசினாலும், கருப்பு நிறம் கொண்ட பெண் தெய்வமான ‘காளி’யை மறந்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.…