Author: Editor web3

நாடாளுமன்றத்தில் நேற்று தொகுதி மறுவரையறை, மகளிர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட 3 மசோதாக்கள் அறிமுக செய்யப்பட்டன. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில், இது தொடர்பாக மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசை கடுமையாகத் தாக்கினார். இந்தச் சட்டங்கள் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை விட, இந்தியாவின் தேர்தல் சமநிலையை மாற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அவர் குற்றம் சாட்டினார். அரசியல் நோக்கங்களை அடைவதற்கும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் அரசாங்கம் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை ஒரு போர்வையாகப் பயன்படுத்துவதாகக் கூறினார். மேலும், தொகுதி மறுசீரமைப்பு மூலம் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளின் அரசியல் குரலை பலவீனப்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். “தேச விரோத” நடவடிக்கை என வர்ணித்ததை ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் எதிர்க்கும் என்றும், கட்சி ஆதாயத்திற்காக ஜனநாயகக் கட்டமைப்பை மாற்றும் எந்தவொரு…

Read More

நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்று வரும் தொகுதி மறுவரையறை (Delimitation) குறித்த விவாதத்தில், திமுக எம்பி கனிமொழி தென்மாநிலங்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துப் பேசியது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 முக்கிய மசோதாக்கள் நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்ததுடன், கருப்பு ஆடைகள் அணிந்து நாடாளுமன்றத்தில் பங்கேற்றனர். இன்று இது தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. 2 நாளிலும் திமுக எம்.பி.க்கள் கருப்பு ஆடைகளை அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய கனிமொழி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொகுதி மறுவரையறை குறித்து அவையில் அளித்த வாக்குறுதிகளுக்கும், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவில் உள்ள அம்சங்களுக்கும் இடையே பெரும் முரண்பாடுகள் இருப்பதாக மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்காகத் தென்மாநிலங்கள் தண்டிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என அவர் ஆவேசமாக முழங்கினார். தற்போதைய மசோதாவைக் குறித்துப் பேசிய…

Read More

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு அதிரடித் திருப்பமாக, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் முகமாகத் திகழ்ந்தவருமான கே.ஏ. செங்கோட்டையன், தற்போது ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ இணைந்து ஈரோடு மாவட்ட தேர்தல் களத்தை அதிர வைத்துள்ளார். அந்தியூர் தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்வைத்த நேரடி விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. ஒரு காலத்தில் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்தவரே, இப்போது எடப்பாடிக்கு எதிராகக் களமிறங்கியிருப்பது ஈரோடு மாவட்ட அரசியலில் தவெக-விற்கான பலத்தை இருமடங்காக்கியுள்ளது. அந்தியூர் பரப்புரையில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய செங்கோட்டையன், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு நடைபெற்ற அதிகாரப் போட்டிகளின் பின்னணியை முதன்முதலாகப் பகிரங்கப்படுத்தினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான்தான் முதலமைச்சர் ஆகி இருக்க வேண்டும். ராத்திரி வரைக்கும் நான்தான் அந்தப் பட்டியலில் இருந்தேன். ஆனால் காலையில் எல்லாம் மாறிப்போச்சு. காரணம், எடப்பாடி கையில் பணப்பெட்டி இருந்தது, என் கையில் பெட்டி…

Read More

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரபல தொழிலதிபர் ‘லாட்டரி கிங்’ மார்ட்டினின் மனைவியான லீமா ரோஸ், சமீபத்தில் இந்திய ஜனநாயாகக் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இவர் தவெக ஆதர்வ் அர்ஜுனாவின் மாமியார் ஆவார். இருப்பினும் அவர் இணைந்த ஒரு சில நாட்களிலேயே அவருக்கு லால்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. 2026 சட்டமன்றத் தேர்தலிலேயே மிகவும் பணக்கார வேட்பாளராக அறியப்படும் இவர், தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனக்கு மட்டும் ரூ.1,049 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதில் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரின் சொத்துக்களையும் சேர்த்தால் அதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.5,863 கோடிக்கும் மேல் செல்வது ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்தையும் அதிர வைத்துள்ளது. இந்நிலையில், லால்குடி தொகுதியின் மாந்துறை பகுதியில் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸுக்கு ஆதரவாக ரூ.25,000 டோக்கனுடன் 2 ஆட்டோக்களில் கும்பல் வலம்…

Read More

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற சிம்மாசனத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி, கௌதம் அதானி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதானி குழுமத்தின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் அபாரமான வளர்ச்சியைச் சந்தித்ததே இந்த மாற்றத்திற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இதன் மூலம் ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்துடன், உலகப் பணக்காரர்கள் பட்டியலிலும் அதானி தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டுள்ளார். சமீபத்திய ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின் புள்ளிவிவரங்களின்படி, கௌதம் அதானியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.8.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, நடப்பு 2026-ம் ஆண்டில் மட்டும் அவர் சுமார் ரூ.75,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துறைமுகங்கள், மின்சாரம், பசுமை எரிசக்தி உள்ளிட்ட அதானி குழுமத்தின் முக்கியத் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அதன் பங்குகள் கொடுத்த லாபம், அவரை இந்த உச்சத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. மறுபுறம், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர்…

Read More

ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2026-இன் 24-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, குயின்டன் டி காக்கின் அதிரடி சதத்தின் (112 ரன்கள்) உதவியுடன் 20 ஓவர்களில் 195 ரன்களைக் குவித்தது. இருப்பினும், 196 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, பிரப்சிம்ரன் சிங் மற்றும் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயரின் அதிரடியால் வெறும் 16.3 ஓவர்களிலேயே 7 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அதிக வெற்றிகளைப் பதிவு…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி ஓசூரில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி வாக்குச் சேகரிக்கின்றனர். தொகுதி மறுவரையறை மற்றும் மாநில உரிமைகள் குறித்த விவாதங்கள் தேசிய அளவில் வலுத்துள்ள சூழலில், இந்தியா (I.N.D.I.A) கூட்டணியின் இந்த இணைந்த பிரசாரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் மாநில எல்லைப் பிரச்சனைகள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்து இந்த மேடையில் இருவரும் உரையாற்ற உள்ளனர். குறிப்பாக, மத்திய அரசின் தொகுதி மறுவரையறை முயற்சிக்கு எதிராகத் தென் மாநிலங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபட்டுள்ள நிலையில், கார்கேவின்…

Read More

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்று வரும் சிறப்பு அமர்வில், தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்கள் மீதான விவாதம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த முக்கிய விவகாரங்கள் குறித்து உரையாற்றுகிறார். ஏற்கனவே இந்த மசோதாக்களை “அதிகாரப் பறிப்பு” மற்றும் “தேசவிரோத நடவடிக்கை” என்று விமர்சித்துள்ள அவர், இன்று அவையில் தனது வாதங்களை முன்வைக்க உள்ளார். மகளிர் இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் முழுமையாக ஆதரித்தாலும், அதைத் தொகுதி மறுவரையறையுடன் இணைப்பதற்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். குறிப்பாக, ஓபிசி (OBC) பிரிவினருக்கான உள் ஒதுக்கீடு இல்லாமல் இந்த மசோதா முழுமையடையாது என்றும், 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதி வாரிக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார். தென்னிந்திய மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் வகையில்…

Read More

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வரும் அதிரடி சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரும், அரசு ஒப்பந்ததாரருமான சங்கர் ஆனந்திற்குச் சொந்தமான அலுவலகம் மற்றும் வீடுகளில்  அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். மேலும், கரூரில் பிரபலமான கொங்கு மெஸ் மற்றும் சக்தி மெஸ் ஆகிய இடங்களிலும் இந்தச் சோதனையானது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வருமான வரி ஏய்ப்பு மற்றும் பணப் பரிவர்த்தனை தொடர்பான புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரிகிறது. சோதனை நடைபெற்று வரும் இடங்களுக்கு வெளியே ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணிகளுக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, வருமான வரித்துறை சோதனையால் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அந்தந்த பகுதிகளில் திரண்டு வருவதால் அந்த இடங்கள் பதற்றமாகவே காணப்படுகின்றன. ஏற்கனவே அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையின் விசாரணைகளை எதிர்கொண்டு வரும் செந்தில் பாலாஜிக்கு, மீண்டும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொடர்புடைய…

Read More

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான மென்பொறியாளர் கவின் செல்வகணேஷின் ஆணவக் கொலை வழக்கு, தமிழகத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின. கவினும் தனியார் மருத்துவமனையில் சித்தா மருத்துவராக பணிபுரியும் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமுக்கத்தை சேர்ந்தவர். இதனால் பெண்ணின் குடும்பத்தின் சார்பில் கவினுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து சமசரம் பேசலாம் என்று அழைத்த பெண் குடும்பத்தினர், கவினை கடந்த ஜூலை 27 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் கேடிசி நகரில் வைத்து கடுமையாக தாக்கி கொலை செய்தனர். இந்த கொடூர சம்பவம், சாதி ஆணவத்தின் கொடிய முகத்தை வெளிக்கொண்டு வந்தது. இதையடுத்து பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டு, அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இதனை தொடர்ந்து கொலை செய்த சுர்ஜித்தின் தந்தை, காவல் துறையில் சார்பு ஆய்வாளராக இருந்த சரவணனும் இந்த வழக்கில் தொடர்பு உடையவர் என விசாரணையில் தெரிய வந்தது. அவர் குற்றவாளிக்கு ஆதரவாக நடந்து…

Read More