Author: Editor web3
தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் நேற்று (ஏப்ரல் 15-ம் தேதி) முதல் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. மீன் வரத்து பெருமளவு குறைந்ததால், சந்தையில் மீன்களின் விலை வழக்கத்தை விட மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக, அசைவப் பிரியர்களால் அதிகம் விரும்பப்படும் வஞ்சிரம் மீன் கிலோ ரூ.1,200 முதல் ரூ.1,600 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வவ்வால் ரூ,1,000-க்கும், இறால், சங்கரா மற்றும் நெத்திலி போன்ற வகைகள் தலா ரூ.500 முதல் ரூ.600 வரையிலும் விற்பனையாவதால் பொதுமக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர். மீன்களின் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டு ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு வரை ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டுப் படகுகள் மூலம் பிடித்து வரப்படும் குறைந்த அளவிலான மீன்களே சந்தைக்கு வருவதால், நிலவும் அதீத…
கோவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.பி. வேலுமணியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு உறுதியளித்துள்ள நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காகப் பொய் பரப்புரை செய்வதாகக் குற்றம் சாட்டினார். தொகுதி மறுசீரமைப்பு மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் அமையும் என்றும், இதன் மூலம் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய இடஒதுக்கீட்டைத் தடுக்க திமுக முயற்சிப்பதாகவும் அவர் சாடினார். தமிழக அமைச்சர்களையும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் கடுமையாகத் தாக்கிப் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் 39 எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் தமிழக நலனுக்காக எதையும் சாதிக்காமல் ‘பெஞ்ச்’ தேய்த்துக் கொண்டிருப்பதாக விமர்சித்தார். செந்தில் பாலாஜி குறித்துப் பேசுகையில், அவர் வைரஸை விட மோசமானவர் என்றும், கரூரில் ஊழல் செய்துவிட்டு…
மக்களவையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தொகுதி மறுவரையறையுடன் இணைக்கப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட மூன்று முக்கிய மசோதாக்கள் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த மசோதாக்களை அவையில் தாக்கல் செய்வது குறித்த வாக்கெடுப்பில், ஆளும் தரப்புக்கு ஆதரவாக 251 உறுப்பினர்களும், எதிராக 185 உறுப்பினர்களும் வாக்களித்தனர். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வாக்கெடுப்பில் பெரும்பான்மை பலம் நிரூபிக்கப்பட்டதால் இந்த மசோதாக்கள் வெற்றிகரமாக மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன. தென்மாநிலங்களின் அரசியல் பலத்தைக் குறைக்கும் வகையில் இந்த தொகுதி மறுசீரமைப்பு அமைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த வாக்கெடுப்பு முடிவு தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிராக நாடு தழுவிய அளவில் வலுவான போராட்டங்களை ராகுல் காந்தி முன்னின்று வழிநடத்த வேண்டும்…
சைப்ரஸ் நாட்டில் நடைபெற்ற மதிப்புமிக்க கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் பெண்கள் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை வைஷாலி சாம்பியன் பட்டம் வென்று உலகையே வியக்க வைத்துள்ளார். நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்று ஆட்டத்தில், கடும் சவாலாகத் திகழ்ந்த ரஷ்ய வீராங்கனை கேத்ரினா லாக்னோவை எதிர்கொண்ட வைஷாலி, தனது அபாரமான ஆட்டத் திறமையால் 48-வது நகர்த்தலில் அவரை நிலைகுலையச் செய்தார். இந்த அதிரடி வெற்றியின் மூலம், மொத்தமுள்ள 14 சுற்றுகளின் முடிவில் 8.5 புள்ளிகளுடன் வைஷாலி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்தார். கேண்டிடேட்ஸ் செஸ் வரலாற்றில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற அழியாத முத்திரையை 24 வயதான வைஷாலி இதன் மூலம் பதித்துள்ளார். இந்தத் தொடர் முழுவதும் நிதானத்துடன் விளையாடிய அவர், 5 வெற்றிகள் மற்றும் 7 டிராக்களைப் பதிவு செய்து தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டினார். இந்த மகத்தான வெற்றியின் பயனாக, நடப்பு ஆண்டின் இறுதியில்…
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் மற்றும் மைதானத்தின் டிஜே (DJ) முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிசிசிஐ-யிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது. போட்டியின் இடையே மைதானத்தில் ஒலிபரப்பப்பட்ட ஒரு பாடல், தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளங்களான ’தோசை, இட்லி, சாம்பார், சட்னி’ ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி கேலி செய்யும் விதமாக இருந்ததே இந்தப் புகாருக்கு முக்கியக் காரணமாகும். இந்தச் செயல் தமிழக மக்களையும், சென்னை அணியின் ரசிகர்களையும் வேண்டுமென்றே அவமதிக்கும் நோக்கில் செய்யப்பட்டதாக சிஎஸ்கே தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் உணவுப் பழக்கவழக்கங்களை இழிவுபடுத்தும் வகையில் பாடல்களைப் பயன்படுத்துவது விளையாட்டு உணர்வுக்கு எதிரானது என்றும், இது ரசிகர்களிடையே தேவையற்ற கசப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் அந்தப் புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், எதிரணி வீரர்களைச் சிறுமைப்படுத்தும் விதமாகச் செயல்பட்ட மைதான டிஜே…
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தாகத்தைத் தணிக்க மக்கள் எலுமிச்சை பழச்சாற்றை நாடுவதால் அதன் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், போதிய மழையின்மை மற்றும் கடும் வெப்பம் காரணமாக எலுமிச்சை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. செடிகளிலேயே பூக்கள் கருகி விளைச்சல் சரிந்ததால், சந்தைகளுக்கு வரும் எலுமிச்சை வரத்து பாதியாகக் குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த வரத்துக் குறைபாடும், அதீத தேவையும் இணைந்து எலுமிச்சை விலையை கிடுகிடுவென உயர்த்தியுள்ளது. தற்போது வெளிச்சந்தையில் தரமான ஒரு எலுமிச்சை பழம் 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விற்பனை அங்காடிகளில் ஒரு கிலோ எலுமிச்சை 200 முதல் 250 ரூபாய் வரை ஏலம் போவதால், சில்லறை விற்பனையாளர்களும் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த விலை ஏற்றம் இல்லத்தரசிகளையும், சாலையோர பழச்சாறு வியாபாரிகளையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விளைச்சல் சீராகி வரத்து அதிகரிக்கும் வரை இந்த…
நாடாளுமன்ற மக்களவையில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய மசோதாக்கள் 251 உறுப்பினர்களின் ஆதரவுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மசோதாக்கள் மீதான இறுதி வாக்கெடுப்பு நாளை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள நிலையில், திமுக தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. இது குறித்துப் பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, தொகுதி மறுவரையறை மசோதாவைத் தங்களது கட்சி எவ்வித சமரசமுமின்றி எதிர்ப்பதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், 2023-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவிற்கு மட்டுமே திமுக ஆதரவு அளிப்பதாகவும், அதனுடன் தொகுதி மறுவரையறையை இணைப்பதை ஏற்க முடியாது என்றும் அவர் விளக்கம் அளித்தார். தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு ஆகிய இரண்டும் ‘சான்ட்விச்’ போல ஒன்றாக இணைக்கப்பட்டு முன்வைக்கப்படுவதாக டி.ஆர். பாலு விமர்சித்தார். இந்த மசோதாவிற்கு எதிராகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னெடுத்த கருப்புக் கொடி போராட்டத்தை அவர் அவையில் குறிப்பிட்டபோது,…
மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது தொடர்பாகப் பகுதிவாரி வாக்கெடுப்பு (Division Vote) நடத்தப்பட்டது. இந்த மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது குறித்த வாக்கெடுப்பில், அதற்கு ஆதரவாக 207 உறுப்பினர்களும், எதிராக 126 உறுப்பினர்களும் வாக்களித்தனர். பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து, இந்த மசோதா லோக்சபாவில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்னதாக, நாட்டின் தொகுதி எல்லைகளை மாற்றியமைப்பது தொடர்பான இந்த மசோதாவால் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் அவையில் அமளியில் ஈடுபட்டன. இருப்பினும், இந்த அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை முழுமையாக நிறைவேற்றுவதில் அரசுக்குச் சவால்கள் காத்திருக்கின்றன. மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில், இத்தகைய முக்கிய சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும். அதாவது, மசோதா சட்டமாக மாற 361 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தற்போதைய பகுதிவாரி வாக்கெடுப்பில் 207 பேரின் ஆதரவு…
சர்வதேச அளவில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் பதற்றமான நிலவரங்கள், இந்தியாவின் எரிசக்தி துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தொடரும் மோதல்கள் காரணமாக, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை உலக சந்தையில் நிலையற்ற தன்மையை எட்டியுள்ளது. இந்த விலை ஏற்றம், இந்தியாவின் சமையல் எரிவாயு (LPG) இறக்குமதி மற்றும் அதன் உள்நாட்டு விற்பனை விலையில் கடும் அழுத்தத்தை உருவாக்கியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நிலவும் விநியோகச் சங்கிலி பாதிப்புகள் காரணமாக, இந்தியாவில் எரிவாயு சிலிண்டர் விநியோகம் முழுமையாகச் சீரடைய குறைந்தது நான்கு ஆண்டுகள் வரை ஆகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா தனது எரிவாயு தேவையில் பெரும்பகுதியை இறக்குமதியையே சார்ந்துள்ளதால், போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பு மற்றும் சரக்குக் கப்பல் வருகையில் தாமதம் போன்றவை எண்ணெய் நிறுவனங்களுக்குப் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளன. இதனால், வரும் காலங்களில்…
நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கிய நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான இரண்டு முக்கிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவையும், மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்த வழிவகை செய்யும் தொகுதி மறுவரையறை மசோதாவையும் அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, யூனியன் பிரதேசங்களுக்கான தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதாக்கள் குறித்து இன்று மாலை 3 மணியளவில் பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்ற உள்ளார். மத்திய அரசின் இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் மசோதாவின் ஆரம்ப நிலையிலேயே தனது ஆட்சேபனையைத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த…