Author: Editor web3
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் தீவிர ராணுவ மோதல்கள் மற்றும் போர்ச் சூழல், இந்தியப் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) எச்சரித்துள்ளது. ” ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் போர் பதற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள்” குறித்து வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தப் போர் காரணமாக உலகளவில் சுமார் 88 லட்சம் பேர் வறுமையின் பிடியில் சிக்க நேரிடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக இந்தியாவில் மட்டும் 24.64 லட்சம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் வறுமை விகிதம் 23.9 சதவீதத்திலிருந்து 24.2 சதவீதமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வறுமை அதிகரிப்பிற்கு மிக முக்கியக் காரணமாக எரிபொருள் விலை உயர்வு பார்க்கப்படுகிறது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீதத்தை இறக்குமதி செய்வதால், போரினால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கும் போது, அது உள்நாட்டில் சரக்கு…
மத்திய அரசு கொண்டு வந்த ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ (மகளிர் இடஒதுக்கீடு சட்டம்) குறித்து தனது மனமார்ந்த ஆதரவைத் தெரிவித்து, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தச் சட்டம் இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தில் ஒரு மிக முக்கியமான மைல்கல் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கான போதிய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதன் மூலம், இந்தச் சட்டம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று பிரதிபா பாட்டீல் பாராட்டியுள்ளார். இந்த திட்டத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் நடைமுறைப்படுத்துவதற்கான இந்த முன்னெடுப்பிற்கு எனது உளமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். சட்டமியற்றும் அவைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தையும் பங்கேற்பையும் உறுதிசெய்வதன் மூலம், இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் திசையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் மைல்கல் போன்ற நடவடிக்கையாக இந்த அரசியலமைப்புத் திருத்தம் திகழ்கிறது,”…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவின் உட்கட்சிப் பூசல் மீண்டும் பகிரங்கமாக வெடித்துள்ளது. அதிமுகவில் இருந்து விலகி வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைத் ‘தாய்க் கழகம்’ என வரவேற்று இணைத்துக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், தனது சொந்த அண்ணன் மு.க.அழகிரியை மட்டும் இன்னும் ஏன் ஒதுக்கி வைத்துள்ளார் என்று அழகிரியின் மகள் கயல்விழி கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, கட்சிக்கு உழைத்த தனது தந்தைக்கு வழங்காதது ஏன் என ஆவேசமாக வினவினார். இது அறிவாலய வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் உடல்நலக்குறைவின் போது, முதலமைச்சர் நேரில் சென்று சந்தித்தது குடும்ப ரீதியான பகையை மாற்றியதாகத் தெரிந்தது. இதன் மூலம் அரசியல் ரீதியாகவும் இருவரும் இணைவார்கள் எனத் தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது நடைபெற்று வரும் வேட்பாளர் தேர்வில் அழகிரி தரப்பினர் ஒருவர்கூடக் கணக்கில் கொள்ளப்படவில்லை…
நடிகர் விஜய்யின் பொது நிகழ்ச்சிகளின்போது, அவருடன் வரும் பாதுகாவலர்கள் கையில் எப்போதும் ஒரு கருப்பு நிறப் பையை வைத்திருப்பதைப் பலரும் கவனித்திருப்பீர்கள். பார்ப்பதற்குச் சாதாரண லேப்டாப் பேக் போல இருக்கும் இது, உண்மையில் ஒரு Ballistic Briefcase எனப்படும் மடிக்கக்கூடிய துப்பாக்கிக் குண்டு துளைக்காத கேடயமாகும். எதிர்பாராதத் தாக்குதல்கள் அல்லது துப்பாக்கிச் சூடு போன்ற அவசர காலங்களில், விஐபியைப் பாதுகாக்க இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பையில் உள்ள சிறப்பு ‘சிந்தடிக் பைபர்’ (UHMWPE அல்லது Kevlar) இழைகள், இரும்பை விட 5 மடங்கு அதிக வலிமை கொண்டவை. ஆபத்தான நேரங்களில் இந்தப் பையில் உள்ள ஒரு பிடியை (Handle) இழுத்தாலோ அல்லது பட்டனை அழுத்தினாலோ, அது அடுத்த நொடியே தலை முதல் கால் வரை மறைக்கக்கூடிய ஒரு பெரிய பாதுகாப்புச் சுவராக விரிந்துவிடும். இது கைத்துப்பாக்கி குண்டுகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களால் நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தும் திறன் கொண்டது. பாதுகாப்பு…
படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பது தான் ஸ்டாலின் மாடல் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கபட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். கஞ்சா போதை, பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, இது தான் திமுக ஆட்சிக்காலம்! படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பது தான் ஸ்டாலின் மாடல். இந்த…
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள வல்லூர் வாலாஜா நகரில், வீட்டில் தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவி மீது கஞ்சா போதையில் வந்த கும்பல் நடத்திய கொலைவெறித் தாக்குதல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சுமார் 10 மணி அளவில், 17 வயதுடைய அந்த மாணவி தனது வீட்டில் அமர்ந்து செமஸ்டர் தேர்விற்காகத் தீவிரமாகப் படித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் புகுந்த மூன்று இளைஞர்கள், கையில் வைத்திருந்த பட்டாக்கத்தியால் மாணவியைச் சரமாரியாக வெட்டியுள்ளனர். இந்தக் கொடூரத் தாக்குதலில் மாணவியின் கை, பின்னந்தலை மற்றும் கால்களில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோட முயன்றது. அப்போது, தப்பியோடிய மூன்று பேரில் ஒருவனைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். பிடிபட்ட இளைஞனுக்குப் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததோடு, தப்பியோடிய மற்ற இருவர் குறித்தும் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தாக்குதல்…
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி15) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உயரட்டும் கருப்புக்கொடி! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா? ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி”! விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பா.ஜ.க.! தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும். தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய…
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் போர் உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு சுமார் 40 நிமிடங்கள் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார். ஈரானுக்கும் அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையே மூண்டுள்ள போர், உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானின் உச்சபட்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளை ஈரான் குறிவைத்துத் தாக்கி வருகிறது. இந்தச் சூழலில் இரு நாட்டுத் தலைவர்களின் இந்தப் பேச்சுவார்த்தை சர்வதேச அரசியலில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஈரான் போர் காரணமாக உலகின் மிக முக்கியமான கடல்வழி வர்த்தகப் பாதையான ‘ஹார்மூஸ் நீரிணை’ (Strait of Hormuz) தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. ஹார்மூஸ் நீரிணையைத் திறக்க…
பாஜகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நிகழ்வாக, சாம்ராட் சௌத்ரி பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார், பாஜக தலைவர் சம்ராட் சௌத்ரி இன்று புதன்கிழமை பீகாரின் 21வது முதலமைச்சராகப் பதவியேற்றார். இது மாநிலத்தில் ஒரு பெரிய அரசியல் மாற்றத்தைக் குறிப்பதோடு, நிதிஷ் குமாரின் நீண்டகால ஆட்சிக்காலத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சௌத்ரி, அம்மாநிலத்தின் பாஜகவின் முதல் முதலமைச்சர் ஆகியுள்ளார். பாட்னாவில் உள்ள லோக் பவனில் ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன், சௌத்ரிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சருடன் சேர்த்து, ஐக்கிய ஜனதா தளம் (JDU) கட்சியைச் சேர்ந்த மூத்த எம்.எல்.ஏ-க்களான விஜய் குமார் சவுத்ரி மற்றும் பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இவர்கள் இருவரும் பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சர்களாகப் பொறுப்பு வகிக்க உள்ளனர். இரண்டு தசாப்தங்களாக பீகாரை வழிநடத்திய நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பாஜக தலைமையிலான புதிய அரசு இன்று பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. https://x.com/ANI/status/2044287762027950501? சாம்ராட்…
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரிய வழக்கில், வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்து விவரங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக கூறி உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளரான குமாரவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடந்த 2021 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்பு மனுவில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் 7 கோடியே 36 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்ததாக குறிப்பிட்டிருந்த உதயநிதி ஸ்டாலின், நடப்பு தேர்தலில் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில், இந்த விவரங்கள் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.…