Author: Editor web3

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) நடவடிக்கையால் மக்களவையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் ஒடுக்கப்படும் என மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரம் கூறியுள்ளதாவது, அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டம் பற்றி நான் கடந்த ஒரு வாரமாகச் சொல்லி வரும் அச்சம் இன்று நிரூபணமாகியிருக்கிறது. மக்களவையில் தமிழ்நாட்டின் எண்ணிக்கை தற்போது 39. இது 58 ஆக உயரும் என்று சொன்னார்கள். இது வெறும் மாயை என்று நான் சொன்னேன். தொகுதி மறுவரையறை செய்யும் போது 58 என்பது 46 ஆக குறையும். https://x.com/PChidambaram_IN/status/2044240223526367695? அதே நேரத்தில், உத்தர பிரதேசத்தின் தற்போது எண்ணிக்கை 80. இது முதலில் 120 ஆக உயரும், தொகுதி மறுவரையறைக்குப் பின் சுமார் 140 ஆக மேலும் உயரும். மக்கள் தொகையை நிலைப்படுத்திய 5 தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநித்துவம் 24.3%.…

Read More

கோடைக்காலம் தொடங்கி வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ள நிலையில், குளிர்ச்சிக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் பலரும் பழைய சாதத்தை விரும்பிச் சாப்பிடத் தொடங்கியுள்ளனர். இரவு சமைத்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி, மறுநாள் காலையில் ஊறவைத்துச் சாப்பிடும் இந்த “பழையச்சோறு”, வெறும் உணவு மட்டுமல்ல; அது ஒரு சிறந்த இயற்கை மருந்தாகும். இதில் உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலை வழங்கும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. மேலும், சாதம் ஊறுவதால் ஏற்படும் நொதித்தல் (Fermentation) காரணமாக, இதில் உடலுக்கு நன்மை செய்யும் ‘புரோபயாடிக்’ பாக்டீரியாக்கள் பெருகி, நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்துகின்றன. மருத்துவ ரீதியாகப் பார்த்தால், பழைய சாதத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமான மண்டலத்தைச் சீராக வைக்க உதவுகிறது. குறிப்பாக, இன்றைய காலகட்டத்தில் பலரையும் அவதிக்குள்ளாக்கும் வயிற்றுப்புண் (Ulcer), பெருங்குடல் அழற்சி மற்றும் குடல் எரிச்சல் போன்ற தீவிரமான பிரச்சினைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. இதுமட்டுமின்றி, உடலில் தேவையற்ற வாயு உற்பத்தியைத் தடுத்து அஜீரணக்…

Read More

ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த மார்ச் 19ம் தேதி வியாழன் அன்று வெளிவந்த துரந்தர் திரைப்படம் வெளியான 3 நாட்களில் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. தொடர்ந்து இந்த படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் வசூல் ரீதியில் துரந்தர் 2 திரைப்படம் புதிய உச்சத்தை தொடுள்ளது. அந்தவகையில், இந்தியத் திரைத்துறை வரலாற்றில் இதுவரை காணாத ஒரு பிரம்மாண்ட வெற்றியை ‘துரந்தர்’ திரைப்படம் பதிவு செய்துள்ளது. உலகளவில் ரூ.3000 கோடி வசூலை ஈட்டிய முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. ஒரு திரைப்படம் வசூலில் இமாலய சாதனைகளை எட்ட முடியும் என்பதற்குச் சான்றாக, ‘துரந்தர்’ படத்தின் இரண்டு பாகங்களும் இணைந்து இந்த மைல்கல்லை எட்டியுள்ளன. இதன் மூலம் இந்திய சினிமாவின் வர்த்தக எல்லை சர்வதேச அளவில் விரிவடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சாதனையில் மிகவும் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், துரந்தர் படத்தின்…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 15) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரம்மாண்ட ரோடு ஷோ  மேற்கொள்கிறார். தமிழ்நாட்டு தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார்.  இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து இன்று மாலை ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் அவர், நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தடைகிறார். அங்கிருந்து கார் மூலம் வேப்பமூடு சந்திப்புக்குச் சென்று, மாலை 4.30 மணி அளவில் தனது ரோடு ஷோவை முறைப்படி தொடங்குகிறார்.  5.30 மணி வரை வெப்பமூடு சந்திப்பில் இருந்து வடசேரி வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதமர் மோடி ரோட் ஷோ செல்ல உள்ளார். அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பார். ரோட் ஷோ…

Read More

நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு தனித்துவமான சாதனையைப் படைத்துள்ளது. இந்த சீசனில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில், 200 ரன்களுக்கும் குறைவான இலக்கை நிர்ணயித்து, அதனை வெற்றிகரமாக டிபெண்ட் செய்த  முதல் மற்றும் ஒரே அணி என்ற பெருமையை சிஎஸ்கே பெற்றுள்ளது. கடந்த சில போட்டிகளாகவே சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்து வருகிறது. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களிலும் எதிரணியைக் கட்டுப்படுத்தி வெற்றி காண்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான விறுவிறுப்பான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்களில் 192 ரன்களைக் குவித்தது. பின்னர் 193 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணியை, சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதலே திணறடித்தனர். குறிப்பாக நூர் அகமதுவின் அபாரமான சுழற்பந்துவீச்சால் கொல்கத்தா அணி 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. இதன் மூலம்…

Read More

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விவாதிக்க, திமுக எம்.பி.க்களின் அவசரக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 15) காலை 11 மணிக்கு கூட்டியுள்ளார். இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 543 உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. 1971ஆம் ஆண்டு 55 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை தற்போது 140 கோடியாக உயர்ந்த நிலையில், அதற்கேற்ப எம்பிக்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்திற்கு, மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கு முன் கடந்த 2002ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்தில், 2026க்குப் பிறகு நடக்கும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே…

Read More

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கவுள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரம் செய்கிறார். இதற்காக சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக பெருமாநல்லூர் பகுதிக்கு ரோடு ஷோ சென்றார். இந்த நிலையில் திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரம் செய்தார். அப்போது, பேசியவர், “என் நெஞ்சில் குடியிருக்கும் கொங்கு மண்டல தங்கங்களே.. திருப்பூர்…

Read More

தமிழகச் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 234 ஆக நிர்ணயிக்கப்பட்டதற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான வரலாற்றுப் பின்னணி உள்ளது. 1963-ஆம் ஆண்டு நாடு தழுவிய அளவில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டபோது, அன்றைய மெட்ராஸ் மாநிலத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 41-லிருந்து 39 ஆகக் குறைக்கப்பட்டது. மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், அதற்கு இணையாகச் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையும் குறையும் சூழல் உருவானது. அந்தக் காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த விதிகளின்படி, ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் என்ற கணக்கீடு இருந்தது. இந்த விகிதத்தின்படி பார்த்தால், 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வெறும் 195 சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே தமிழகத்திற்குக் கிடைத்திருக்கும். இது மாநிலத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும், சட்டமன்ற வலிமையையும் கணிசமாகக் குறைப்பதாக அமையும் என்பதால், இதனைச் சரிசெய்ய வேண்டிய கட்டாயம் அன்றைய ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது. தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைவதைத் தவிர்க்கும் பொருட்டு, தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் ஒரு முக்கிய…

Read More

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் இருந்து பூலுவப்பட்டி வரை பிரம்மாண்டமாகத் திட்டமிடப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ‘ரோடு ஷோ’ (Road Show) அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பெருமாநல்லூரில் பரப்புரை முடிந்தபோதே திட்டமிடப்பட்ட நேரத்தைத் தாண்டி அதிக காலதாமதம் ஏற்பட்டதால், பாதுகாப்பு மற்றும் நேர மேலாண்மை கருதி இந்த ரோடு ஷோவை ரத்து செய்ய விஜய் முடிவெடுத்தார். இதனையடுத்து, அவர் தனது பரப்புரை வாகனத்திலிருந்து இறங்கி நேரடியாகக் கோவைக்குத் திரும்பினார். விஜய்யைக் காண்பதற்காகப் பூலுவப்பட்டி மற்றும் வழிநெடுகிலும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல மணி நேரமாகக் காத்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் இந்தத் திடீர் அறிவிப்பால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாகப் பெண்கள் மற்றும் முதியவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் தங்களின் தலைவரைப் பார்க்க முடியாமல் போனது அங்கு ஒருவிதத் தொய்வை ஏற்படுத்தியது. எதிர்பாராத காலதாமதத்தால் ஏற்பட்ட இந்த ரத்து, திருப்பூர் தவெக வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏமாற்றமடைந்த…

Read More

செங்கல்பட்டில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்திற்கு அருகே நடைபெற்ற ஒரு கோர விபத்தில், கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 6 கல்லூரி மாணவர்கள், அனுமந்தபுரம் பகுதியில் உள்ள மலைக்கு ‘டிரெக்கிங்’ எனப்படும் மலை ஏற்றத்திற்காகச் சென்றுள்ளனர். அங்குள்ள ராணுவத் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தின் அருகே மாணவர்கள் நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்கு தரையில் கிடந்த பயன்படுத்தப்படாத ராக்கெட் லாஞ்சர் (Rocket Launcher) ஒன்றின் மீது மாணவர் ஒருவர் கால் வைத்ததாகக் கூறப்படுகிறது. அந்த நொடியே பயங்கரச் சத்தத்துடன் அது வெடித்ததில், யாமன்சு என்ற மாணவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வெடிவிபத்தில் யாமன்சுடன் சென்ற மற்ற மூன்று மாணவர்கள் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு…

Read More