Author: Editor web3
தமிழில் விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர், கடந்த 2022ஆம் ஆண்டு தனது நண்பரும் தொழிலதிபருமான சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு கோட்டையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் இவர்களுடைய திருமண வீடியோ, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ‘லவ் ஷாதி டிராமா’ என்ற பெயரில் ஆவணப்படமாக ஒளிபரப்பானது. இது ஆறு அத்தியாயங்கள் கொண்டது. குறிப்பாக, இவர்களுடைய காதல் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின்கீழ் ஒரு கனவு திருமண முன்மொழிவைக் காண்பிப்பதில் இருந்து அவர்களின் ஆடம்பரமான திருமண கொண்டாட்டங்கள் வரை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்தது. ஆனால் திருமணமாகி 4 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பர சம்மதத்தின்பேரில் பிரிந்து கடந்த மார்ச் 11ம் தேதி விவாகரத்து பெற்றுக்கொண்டனர். விவாகரத்துக்கு பிறகு கோவில் கோவிலாக சுற்றி வரும் ஹன்சிகா, வட இந்தியா தாண்டி விரைவில்…
“தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதை கலாச்சாரம்” என்று முதலமைச்சர் மு க ஸ்டாலினை மேடையில் வைத்துக் கொண்டே கூட்டணிக் கட்சியான தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேசியது தொண்டர்களிடையே அதிர்ச்சியைத் தந்துள்ளது. சேலத்தில் நடைபெற்ற திமுக கூட்டணி பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பலரும் மேடையில் இருக்க “தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை போதை கலாச்சாரம் எனும் ஒரு குற்றச்சாட்டு மட்டுமே மு.க ஸ்டாலின் அரசு மீது உள்ளது . நான் சொல்றேன் இன்றைக்கு ஒரு சகோதரியாக இந்த கூட்டணியில் அண்ணனுக்கு வலது கரமாக இணைத்திருக்கிறேன். அப்படி எங்காவது ஒரு பெண்ணுக்கு ஏதாவது என்றால் நான் அண்ணன் மு.க ஸ்டாலினிடம் நேரடியாக பேசி சரி செய்வேன். இனி எல்லா இடத்திலும் சிசிடிவி மற்றும் பெண்களுக்கான அனைத்து பாதுகாப்புகளையும் அண்ணன் தருவார் என இந்த மேடையில் உறுதியாக கூறுகிறேன். ஒரு பெண் நடு இரவில்…
தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும்! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். https://x.com/mkstalin/status/2044997857896526185? இதுதொடர்பாக அவரது எக்ஸ் தள பக்கத்தில், தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று. தொகுதி மறுவரையறைக்கு எதிரான நம் போராட்டங்களின் முடிவினை அறியப் போகும் நாள். நம்முடைய கடும் எதிர்ப்பினையும் போராட்டத்தினையும் தொடர்ந்து, தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறையாது என மாண்புமிகு பிரதமர் அவர்களும் உள்துறை அமைச்சர் அவர்களும் நேற்று நாடாளுமன்றத்தில் வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளனர். ஆனால், சொல் ஒன்று – செயல் வேறு என்பதாக, இவர்கள் தாக்கல் செய்துள்ள சட்டமுன்வடிவு முழுக்க முழுக்க ஏமாற்றுத் திட்டமாக இருக்கிறது. இதை நம்பவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது எனத் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். இந்தச் சட்டமுன்வடிவில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலம், இவர்கள் நினைத்தால் நினைத்த நேரத்தில், நினைத்த முறையில், எப்போது வேண்டுமானாலும் எதிர்காலத்தில்,…
தமிழக அரசியலில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், நடிகர் விஜய் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தித் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவக் கொள்கையுடன் களமிறங்கியுள்ள அவர், பிப்ரவரி 2024-இல் கட்சியை அறிவித்தது முதல் தற்போது தேர்தல் களம் வரை தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளார். வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், திராவிட மற்றும் தேசியக் கட்சிகளுக்கு மாற்றாகத் தனித்துப் போட்டியிடும் விஜய்யின் இந்த அரசியல் பாய்ச்சல், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் ஒருபகுதியாக, நேற்று சென்னையில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், தமிழகப் பெண்கள் அனைவரும் அடுத்த ஏழு நாட்களுக்குத் தங்கள் வீட்டு வாசலில் கட்சியின் அடையாளமான “விசில்” சின்னத்தை கோலமாக வரைய வேண்டும் என அன்பான கோரிக்கை விடுத்திருந்தார். விஜய் விடுத்த…
நாடாளுமன்றத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய மசோதாக்கள் மீதான விவாதம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மசோதாக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டபோதே, எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக இவை அமைந்துள்ளதாகக் கூறி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், விவாதத்தில் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை வலுவாகப் பதிவு செய்து வருகின்றனர். இந்தச் சூழலில், மசோதாக்கள் மீதான விவாதம் குறித்துப் பேசிய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, இன்று மாலைக்குள் இதற்கான இறுதி முடிவு எட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு, இன்று மாலை 4 மணி அளவில் மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். இதனால் அவை நடவடிக்கைகளில் தற்போது அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறி வருகின்றன. மசோதாக்கள் நிறைவேற்றப்படுமா அல்லது எதிர்க்கட்சிகளின் பிடிவாதத்தால் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படுமா என்பது…
கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை இன்று அதிரடியாகக் குறைந்து நகைப்பிரியர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,400 வரை உயர்ந்திருந்த நிலையில், இன்று அதன் பாதியாகிய ரூ,1,200 சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் பொருளாதாரச் சூழலால் இந்த விலை குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.1.15 லட்சம் என்ற வரம்பிற்கு கீழ் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,360-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,210-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், வெள்ளி விலையில் இன்று எவ்வித மாற்றமுமின்றி நிலையாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கும்,…
நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ராணுவம் தொடர்பான காட்சிகள் மற்றும் மத நல்லிணக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான சில பகுதிகள் குறித்துத் தணிக்கை வாரியம் ஆட்சேபனை தெரிவித்தது. இதன் காரணமாக, படத்தைப் பட மறு ஆய்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வாரியம் உத்தரவிட்டது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், படத்திற்கு உடனடியாகச் சான்று வழங்கத் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், மேல்முறையீட்டு விசாரணையில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இத்தகைய சூழலில், படமானது தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வு குழுவின் பரிசீலனையில் இருக்கும்போதே, எதிர்பாராத விதமாக இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியானது படக்குழுவினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தணிக்கைச் சான்றிதழ் கூடப் பெறாத நிலையில், படம் பொதுவெளியில் கசிந்தது வணிக ரீதியாகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.…
2029 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இந்தியாவில் தொகுதி மறுவரையறை (Delimitation) குறித்த விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. தற்போதைய மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப சமமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யவும், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தவும் ஏதுவாக, மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 543-லிருந்து சுமார் 850 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்திய வரலாற்றில் இதுவரை 1952, 1963, 1973 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை தொகுதி மறுவரையறை ஆணையங்கள் அமைக்கப்பட்டு எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன; அந்த வரிசையில், தற்போது திட்டமிடப்பட்டுள்ள இந்த மிகப்பெரிய மாற்றம் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு புதிய மைல்கல்லாக அமையப் போகிறது. இந்தியாவின் வரலாற்றில் இதுவரை எத்தனை முறை தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும், ஒவ்வொரு கட்டத்திலும் எத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதையும் இப்போது நாம் விரிவாகப் பார்ப்போம். மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில் தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைக்கும்…
காயம் காரணமாக சிஎஸ்கே வீரர் கலீல் அகமது நடப்பு சீசனில் இருந்து விலகியுள்ளார். கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி கே.கே.ஆர். அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசும்போது அவருக்கு தொடைப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அந்த போட்டியில் அவரால் தனது நான்கு ஓவர் பந்துவீச்சை முழுமையாக முடிக்க முடியவில்லை. அவர் முழுமையாக குணமடைய 10-12 வாரங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. கலீல் அகமதுவுக்கு ஐபிஎல் 2026 சீசன் மோசமாக அமைந்தது. ஐந்து போட்டிகளில் அவரால் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே எடுக்க முடிந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதை அடுத்து, சிஎஸ்கே அணி மெதுவாக ஃபார்முக்குத் திரும்பி வந்துள்ளது. இருப்பினும், அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான கலீல் அகமது அணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். போட்டித்தொடர் தொடங்குவதற்கு முன்பே, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் காயம் காரணமாக முழுத் தொடரிலிருந்தும் விலக்கப்பட்டார். அகமதுவின் காயம், வேகப்பந்து…
உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய 100 முக்கிய நபர்களின் பட்டியலை ‘டைம்’ (TIME) இதழ் வெளியிட்டுள்ளது. அதாவது, 2026-ஆம் ஆண்டின் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் முதன்மை இடங்களைப் பிடித்துள்ளனர். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்து வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் இந்த முறை இடம்பெறாதது சர்வதேச அரசியல் அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பாலிவுட் நட்சத்திரம் ரன்பீர் கபூர் மற்றும் புகழ்பெற்ற சமையல் கலைஞர் விகாஸ் கண்ணா ஆகிய மூவர் இந்தப் பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். உலகத் தலைவர்கள் வரிசையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோருடன் அண்டை நாடுகளான நேபாளத்தின் பிரதமர் பாலன்…