Close Menu
    What's Hot

    பரபரக்கும் கரூர்!. செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெருக்கடி!. 4 இடங்களில் ஐடி ரெய்டு!.

    தமிழகத்தில் ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம்!. அரசு தரப்பு அதிரடி!

    தவறான ரயிலில் ஏறி கஷ்டப்படுவதைவிட, இறங்கி விடுவது நல்லது!. நடிகை ஹன்சிகா பேச்சு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»எண்ணிக்கை பலம் இருக்கும் திமிரில் பாஜக அரசு; TN-ல் விளைவுகளை சந்திப்பீர்கள்!. ஸ்டாலின் வார்னிங்!
    தமிழ்நாடு

    எண்ணிக்கை பலம் இருக்கும் திமிரில் பாஜக அரசு; TN-ல் விளைவுகளை சந்திப்பீர்கள்!. ஸ்டாலின் வார்னிங்!

    Editor web3By Editor web3April 17, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    modi stalin small 1733202531
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும்! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    https://x.com/mkstalin/status/2044997857896526185?

    இதுதொடர்பாக அவரது எக்ஸ் தள பக்கத்தில், தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று. தொகுதி மறுவரையறைக்கு எதிரான நம் போராட்டங்களின் முடிவினை அறியப் போகும் நாள். நம்முடைய கடும் எதிர்ப்பினையும் போராட்டத்தினையும் தொடர்ந்து, தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறையாது என மாண்புமிகு பிரதமர் அவர்களும் உள்துறை அமைச்சர் அவர்களும் நேற்று நாடாளுமன்றத்தில் வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளனர். ஆனால், சொல் ஒன்று – செயல் வேறு என்பதாக, இவர்கள் தாக்கல் செய்துள்ள சட்டமுன்வடிவு முழுக்க முழுக்க ஏமாற்றுத் திட்டமாக இருக்கிறது. இதை நம்பவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது எனத் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.

    இந்தச் சட்டமுன்வடிவில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலம், இவர்கள் நினைத்தால் நினைத்த நேரத்தில், நினைத்த முறையில், எப்போது வேண்டுமானாலும் எதிர்காலத்தில், இவர்களுக்குச் சாதகமான வகையில், இந்திய மாநிலங்களின் தொகுதியளவை மாற்றியமைத்துக் கொள்வதற்கான வழிவகைகள் இந்தக் கருப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன. பெரும் சூழ்ச்சியை உள்ளடக்கியதாக இந்தச் சட்டமுன்வடிவு இருக்கிறது. அவசரகதியில் இதனை நிறைவேற்றக் கூடாது. ஒன்றிய அரசு இதனை முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும்.

    எண்ணிக்கை பலம் இருக்கிறது என்ற திமிரில், எங்களின் எதிர்ப்பை மீறி இதனை நிறைவேற்றினால், அதற்கான விளைவுகளைத் தமிழ்நாட்டில் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். நேரு அவர்கள் இந்தியைத் திணிக்க மாட்டோம் என்றார், இருந்தவரை அந்த உறுதிமொழியைக் காப்பாற்றினார்.

    ஆனால், தற்போதைய ஒன்றிய ஆட்சியாளர்களோ மாநில உரிமைகளைக் காப்பாற்றுவோம் எனச் சொல்லிக்கொண்டே அதனைச் சில்லு சில்லாக நொறுக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர். நாம் கோருவது, முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி அவர்களும், வாஜ்பாய் அவர்களும் அரசியலமைப்புச் சட்டத்திலேயே திருத்தம் செய்து, 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுசீரமைப்பை நிறுத்தி வைத்ததைப் போன்ற சட்டப் பாதுகாப்பு. #WithdrawDelimitationBill: தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்!

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவாசல் எங்கும் விசில் கோலம்.. டிரெண்டாகி வரும் ஹேஷ்டேக்!. உற்சாகத்தில் தவெக தொண்டர்கள்!.
    Next Article பிரேமலதாவின் பேச்சால் ஸ்டாலின் அப்செட்!. கூட்டணிக் கட்சிளுக்கு போட்ட ‘ஸ்ட்ரிக்ட்’ கண்டிஷன்!
    Editor web3
    • Website

    Related Posts

    பரபரக்கும் கரூர்!. செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெருக்கடி!. 4 இடங்களில் ஐடி ரெய்டு!.

    April 17, 2026

    தமிழகத்தில் ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம்!. அரசு தரப்பு அதிரடி!

    April 17, 2026

    பிரேமலதாவின் பேச்சால் ஸ்டாலின் அப்செட்!. கூட்டணிக் கட்சிளுக்கு போட்ட ‘ஸ்ட்ரிக்ட்’ கண்டிஷன்!

    April 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பரபரக்கும் கரூர்!. செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெருக்கடி!. 4 இடங்களில் ஐடி ரெய்டு!.

    தமிழகத்தில் ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம்!. அரசு தரப்பு அதிரடி!

    தவறான ரயிலில் ஏறி கஷ்டப்படுவதைவிட, இறங்கி விடுவது நல்லது!. நடிகை ஹன்சிகா பேச்சு!

    பிரேமலதாவின் பேச்சால் ஸ்டாலின் அப்செட்!. கூட்டணிக் கட்சிளுக்கு போட்ட ‘ஸ்ட்ரிக்ட்’ கண்டிஷன்!

    எண்ணிக்கை பலம் இருக்கும் திமிரில் பாஜக அரசு; TN-ல் விளைவுகளை சந்திப்பீர்கள்!. ஸ்டாலின் வார்னிங்!

    Trending Posts

    பிரேமலதாவின் பேச்சால் ஸ்டாலின் அப்செட்!. கூட்டணிக் கட்சிளுக்கு போட்ட ‘ஸ்ட்ரிக்ட்’ கண்டிஷன்!

    April 17, 2026

    வாசல் எங்கும் விசில் கோலம்.. டிரெண்டாகி வரும் ஹேஷ்டேக்!. உற்சாகத்தில் தவெக தொண்டர்கள்!.

    April 17, 2026

    பரபரக்கும் கரூர்!. செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெருக்கடி!. 4 இடங்களில் ஐடி ரெய்டு!.

    April 17, 2026

    தமிழகத்தில் ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம்!. அரசு தரப்பு அதிரடி!

    April 17, 2026

    தவறான ரயிலில் ஏறி கஷ்டப்படுவதைவிட, இறங்கி விடுவது நல்லது!. நடிகை ஹன்சிகா பேச்சு!

    April 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.