Close Menu
    What's Hot

    ஆஸ்கார் விருது குழுவில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!

    எஸ்.பி. வேலுமணிக்கு மீண்டும் முக்கிய பதவி… அதிருப்தியாளர்களை வளைத்துப்போட்டு இபிஎஸ் அதிரடி!

    வெள்ளை அறிக்கையில் தவறான தகவல்கள்!- மின்சாரத்துறை அமைச்சருக்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஒரு ஓட்டுக்கு ரூ.25,000?. டோக்கனுடன் லீமா ரோஸ் ஆதரவாளர்கள்?. லால்குடியில் பரபரப்பு!
    தமிழ்நாடு

    ஒரு ஓட்டுக்கு ரூ.25,000?. டோக்கனுடன் லீமா ரோஸ் ஆதரவாளர்கள்?. லால்குடியில் பரபரப்பு!

    Editor web3By Editor web3April 17, 2026Updated:April 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Leema Rose joins AIADMK
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்ற தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரபல தொழிலதிபர் ‘லாட்டரி கிங்’ மார்ட்டினின் மனைவியான லீமா ரோஸ், சமீபத்தில் இந்திய ஜனநாயாகக் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இவர் தவெக ஆதர்வ் அர்ஜுனாவின் மாமியார் ஆவார். இருப்பினும் அவர் இணைந்த ஒரு சில நாட்களிலேயே அவருக்கு லால்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

    2026 சட்டமன்றத் தேர்தலிலேயே மிகவும் பணக்கார வேட்பாளராக அறியப்படும் இவர், தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனக்கு மட்டும் ரூ.1,049 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதில் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரின் சொத்துக்களையும் சேர்த்தால் அதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.5,863 கோடிக்கும் மேல் செல்வது ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்தையும் அதிர வைத்துள்ளது.

    இந்நிலையில், லால்குடி தொகுதியின் மாந்துறை பகுதியில் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸுக்கு ஆதரவாக ரூ.25,000 டோக்கனுடன் 2 ஆட்டோக்களில் கும்பல் வலம் வந்ததாகப் புகார் எழுந்துள்ளது. ஆட்டோவில் இருந்தவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்தால் ஒரு ஓட்டுக்கு ரூ.25,000 வழங்குவதாகக் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தவெகவினரும், பொதுமக்களும் பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பியோடிவிட்டனர். ஏற்கனவே “மெகா பணக்கார வேட்பாளர்” என்ற முத்திரை லீமா ரோஸ் மீது குத்தப்பட்டுள்ள நிலையில், இப்படி ஒரு டோக்கன் புகார் எழுந்துள்ளதால் தேர்தல் அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிவேக வளர்ச்சி!. ஆசியாவின் பெரிய பணக்காரரானார் அதானி!. அம்பானி பின்னடைவு!
    Next Article விடியும் வரை நான் தான் முதல்வர்; காலையில் மாறிவிட்டது!. கூவத்தூர் ரகசியத்தை உடைத்த KAS!.
    Editor web3
    • Website

    Related Posts

    ஆஸ்கார் விருது குழுவில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!

    June 25, 2026

    எஸ்.பி. வேலுமணிக்கு மீண்டும் முக்கிய பதவி… அதிருப்தியாளர்களை வளைத்துப்போட்டு இபிஎஸ் அதிரடி!

    June 25, 2026

    வெள்ளை அறிக்கையில் தவறான தகவல்கள்!- மின்சாரத்துறை அமைச்சருக்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    June 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆஸ்கார் விருது குழுவில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!

    எஸ்.பி. வேலுமணிக்கு மீண்டும் முக்கிய பதவி… அதிருப்தியாளர்களை வளைத்துப்போட்டு இபிஎஸ் அதிரடி!

    வெள்ளை அறிக்கையில் தவறான தகவல்கள்!- மின்சாரத்துறை அமைச்சருக்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    பவளவிழா பாப்பா TO அழுகுனிப் பாப்பா – மு.க.ஸ்டாலினை சாடும் தவெக ஐடிவிங்க்

    தர்மன் படத்தொகுப்பாளர் இவரா? இப்பவே ஜெர்க் ஆகுதே!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.