Author: Editor web3
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பிரச்சாரம், பொதுக்கூட்டம் நடத்துவது குறித்த பல்வேறு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதேபோல், தேர்தல் பணிகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் சீல் வைத்து பாதுகாக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். வாக்கு இயந்திரங்களின் செயல்பாடு, பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். சென்னையில் உள்ள இவிஎம் எந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதா என இன்று முதல் ஒரு மாதம் ஆய்வு செய்யப்படுகிறது. சென்னையில் மொத்தம் 6,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒரு நாளைக்கு சுமார் 250 முதல் 300 இயந்திரங்களை ஆய்வு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் இயந்திரங்கள் சேதங்கள் அல்லது பழுதுகள் உள்ளதா…
உலகின் மிகவும் பணக்கார கிரிக்கெட் வாரியமான BCCI-யால் நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக், உலகின் அதிக ஊதியம் பெறும் லாபகரமான போட்டிகளில் ஒன்றாகும். ஐபிஎல் உலகின் ஆறாவது மிகவும் மதிப்புமிக்க விளையாட்டு லீக் ஆகும், இது NFL, சாம்பியன்ஸ் லீக் மற்றும் ஐரோப்பாவின் நான்கு பெரிய கால்பந்து லீக்குகளுக்குப் பின்னால் தரவரிசையில் உள்ளது. 2008 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த டி20 போட்டி, பல இளைஞர்கள் புதிய உயரங்களுக்கு உயர்ந்ததைக் கண்டுள்ளது, மேலும் ஒரு சில வீரர்கள் இதுவரை லீக்கில் இருந்து 200 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளனர். இந்த விளையாட்டு ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல்லில் விளையாட உலகின் சிறந்த வீரர்களை ஈர்க்கிறது என்பதில் ஆச்சரியமில்லை. 2008 இல் தொடங்கப்பட்டதிலிருந்து ஐபிஎல் மூலம் அதிக வருமானம் ஈட்டிய வீரர்கள் யார் என்பதை தெரிந்துகொள்வோம். ஐபிஎல்லில் 100 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் சம்பாதித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் மும்பை அணி…
தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் முன்னாள் மேலாளரும் இயக்குநருமான பி.டி.செல்வகுமார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். 2026 தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சிக்கு இழுத்து வருகின்றன. அந்தவகையில் தற்போது, விஜய்யின் நீண்ட நாள் நண்பராகவும், முன்னாள் மேலாளராகவும் இருந்த பி.டி. செல்வகுமார், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருடன் சேர்த்து 100க்கும் மேற்பட்டோரும் திமுகவில் இணைந்தனர். விஜயின் கோயம்பத்துர் மாப்பிளை படத்தில் நடித்ததின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் பி.டி.செல்வக்குமார். விஜய்யின் புலி படத்தை தயாரித்த செல்வகுமார், பந்தா பரமசிவம், ஒன்பதுல குரு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். வசீகரா, மதுர, போக்கிரி, வேல், சுறா, காவலன், ஆகிய படங்களுக்கு பி.ஆர்.ஓவாக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் கலப்பை மக்கள் இயக்கத்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. நீண்ட காலமாக நண்பர்களாக…
மகாகவி பாரதியாரின் 144வது பிறந்த நாளை (டிசம்பர் 11) முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடியும் தமிழில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி என்ற இயற்பெயர் கொண்ட பாரதியார், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் டிசம்பர் 11, 1882 ஆம் ஆண்டு பிறந்தார். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி காலமானார். இந்த நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு பல தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் பிரதமர் மோடியும் தனது எக்ஸ் தளத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்து…
அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை தரவுள்ள நிலையில் அவருடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள ரூ.10 லட்சம் கட்ட வேண்டும் என்று செய்திகள் வெளியாகியுள்ளதால் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. உலக கால்பந்து ‘கோட்’ என்று அழைக்கப்படும் லியோனெல் மெஸ்ஸி நாளை மறுநாள் (டிச.13ம் தேதி) சனிக்கிழமை இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார். 2022 FIFA உலகக் கோப்பை வென்ற அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்ஸியின் வருகை இந்திய ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இது 2011-க்குப் பிறகு அவரது இரண்டாவது இந்தியா வருகை ஆகும். இந்த பயணத்தின்போது கொல்கத்தாவின் லேக் டவுன் ஸ்ரீபூமியில் அவரது 70 அடி உயர சிலை திறக்கப்படவுள்ளது. இந்தநிலையில், இவரது இந்திய பயணத்தை டூர் ஏற்பாட்டாளர்கள் பிசினஸாக மாற்றிவிட்டனர் என்று கூறப்படுகிறது. அதாவது, வரும் 13ம் தேதி ஐதராபாத் செல்லவுள்ள மெஸ்ஸியுடன் 100 பேருக்கு மட்டுமே போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு போட்டோ எடுக்க…
சென்னை சத்யம் திரையரங்கில் 23வது சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசு மற்றும் தென்னிந்திய திரைப்பட அமைப்புகளின் ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (ICAF) வழங்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழா, 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க கலாச்சார நிகழ்வை கட்டமைத்துள்ளது. சென்னை சர்வதேச திரைப்பட விழா என்பது சென்னையின் கலை நுட்பத்தை பிரதிபலிக்கும் ஒரு கலாச்சார அடையாளமாகும். தென்கிழக்கு ஆசியாவின் முதல் திரைப்பட விழாவாக கருதப்படும் இது, ஒவ்வொரு ஆண்டும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வழங்கி, உலகத்தை சென்னையின் உள்ளங்கையில் கொண்டு வருகிறது. திரைப்படத்தின் இந்த பிரம்மாண்டமான கொண்டாட்டம், நகரத்தின் திரைப்படங்களுக்கான ஆழமான அன்பை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், சென்னையை ஒரு உலகளாவிய கலாச்சார மையமாக உயர்த்துகிறது. சென்னை சர்வதேச திரைப்பட விழா, சர்வதேச மற்றும் இந்திய பானோரமா திரைப்படங்களின் சிறந்த பகுதிகளை திரைப்பட ஆர்வலர்களான சென்னை…
அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது நீண்டநாள் வாக்குறுதியான கோல்டு கார்டு’ என்ற விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். . இது, 1 மில்லியன் டாலர் செலுத்தும் தனிநபர்களுக்கும், வெளிநாட்டில் பிறந்த ஒரு ஊழியருக்கு இரண்டு மடங்கு தொகையைச் செலுத்தும் நிறுவனங்களுக்கும் அமெரிக்காவில் குடியிருக்க சட்டப்பூர்வ அந்தஸ்தை வழங்கும். டிரம்ப் கோல்டு கார்டு என்பது, அமெரிக்க அரசுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்கும் செல்வந்தர்களுக்கும், நிறுவனங்களுக்கும் நிரந்தரமாக அமெரிக்காவில் குடியிருக்கும் உரிமை வழங்குகிறது. இதன் நோக்கம், நாட்டிற்கு வருவாயை ஈட்டுவதும், தற்போதுள்ள இபி1 மற்றும் இபி2 விசாக்களுக்கு பதிலாக ஒரு புதிய வழியை உருவாக்குவதாகும். அதன்படி, தனது நீண்டநாள் வாக்குறுதியான ‘கோல்ட் கார்டு’ அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்துவிட்டதாக டிரம்ப் நேற்று அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ், 1 மில்லியன் டாலர் செலுத்தும் தனிநபர்களுக்கும், வெளிநாட்டில் பிறந்த ஒரு ஊழியருக்கு 2 மில்லியன் டாலர் செலுத்தும் நிறுவனங்களுக்கும் சட்டப்பூர்வ அந்தஸ்தும், இறுதியில் அமெரிக்கக் குடியுரிமை…
இந்தியர்களின் உணர்வோடு கலந்து போன ஒரு நிதி பாதுகாப்பாக தங்கம் விளங்கிவருகிறது. திருமணம், விழா, சேமிப்பு, முதலீடு என எத்தனை பெயர் சொன்னாலும், அதன் மதிப்பு எப்போதும் உயர்ந்ததே. ஆனால் கடந்த சில வாரங்களில் தங்கம் விலை நித்தம் நித்தம் மாறிக்கொண்டே இருப்பது சாதாரண மக்கள் முதல் நகை வியாபாரிகள் வரை அனைவரையும் பதட்டத்துக்கு உள்ளாக்கியுள்ளது. சர்வதேச பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல்வேறு காரணகளால் முதலீட்டாளர்கள் பலரும் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. அந்தவகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச.11) சற்று உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் நேற்று (டிச.10) ரூ.96,240க்கு விற்பனையான நிலையில், இன்றும் ரூ.160 உயர்ந்து ரூ.96,400க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம்…
உலர்பழங்களாக அதிகம் பயன்படுத்தப்படும் திராட்சைப்பழங்களில் ஒன்றான திராட்சை சுவையில் சிறந்து விளங்குவது மட்டுமின்றி, இதில் உள்ள சத்துக்கள் பல நோய்களைக் குணப்படுத்த பெரிதும் உதவுகின்றன. இரத்த சோகை உள்ளவர்கள், இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தாலோ, இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கலாம். இதேபோல், பெண்கள் எப்போதும் சருமம் பொலிவாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்கான ஒரு அற்புத பானம் தான் உலர் திராட்சை நீர். இரவு முழுவதும் ஊறவைத்து, அந்த நீரை மறுநாள் காலை குடித்து வந்தால் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பு கிடைக்கும். பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகளின் அடையாளத்தை குறைக்கும். நல்ல தூக்கத்தை வழங்குவதால் சருமம் பொலிவாக காணப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், ஒரு கப் நீரில் சிறுது உலர் திராட்சையைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, மசித்து, அதில் தேன் கலந்து, தினமும் இரண்டு…
தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் சமீபத்தில் லாரிகளுக்கான எப்.சி. கட்டணத்தை அதிரடியாக உயர்த்தின. இதற்கு முன் ரூ.850 ஆக இருந்த எப்.சி. கட்டணம் தற்போது ரூ.33,040ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டண உயர்வு, உதிரி பாகங்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தக் கட்டண உயர்வு அவர்களுக்கு மேலும் சுமையாக அமைந்தது. இதன்காரணமாக் லாரிகளுக்கான எப்.சி. (FC – Fitness Certificate) கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும், லாரிகளுக்கு விதிக்கப்படும் ஆன்லைன் அபராதம் விதிக்கப்படும் நடைமுறையை நிறுத்தவேண்டும், மோட்டார் தொழிலில் உள்ள குறைகளை சரி செய்ய மோட்டார் வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, ஒன்பது கோரிக்கைகளை, பல்வேறு சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இந்தநிலையில், இந்த ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு…