Author: Editor web3
தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், முதலமைச்சர் வீடு, நடிகர்கள் வீடுகள், டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களையும் குறிவைத்து இந்த மிரட்டல்கள் தொடர்கின்றன. இந்தநிலையில், சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள போயஸ் கார்டன் பகுதியில் குடும்பத்துடன் வசித்து நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனையடுத்து ரஜினியின் வீட்டில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதேபோல். நடிகர் தனுஷின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலக கட்டுப்பாடு அறைக்கு வந்த இமெயில் அடிப்படையில் மோப்ப நாய் உதவியுடன் தேனாம்பேட்டை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் ஒத்துழைப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் மிக விரைவில் ஹார்முஸ் நீர்ச்சந்தி போக்குவரத்திற்காகத் திறக்கப்படும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இரு நாட்டு பிரதிநிதிகளும் சந்தித்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய சில மணி நேரங்களே உள்ள நிலையில், டிரம்பின் இந்த ஆக்ரோஷமான கருத்து சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “ஈரான் ஒத்துழைத்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நாங்கள் அந்தப் பாதையைத் திறப்போம். அது மிக விரைவில் நடக்கும்; ஒருவேளை தாமதமானால், அதை எப்படிச் செய்து முடிக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று எச்சரித்துள்ளார். மேலும், ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் தனது முதல் முன்னுரிமை, அந்நாடு அணு ஆயுதங்களை வைத்திருப்பதை முற்றிலும் தடுப்பதுதான் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்தத்தைத்…
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 என அதிரடியாக அதிகரித்த நிலையில், இன்று ஏற்பட்டுள்ள இந்த விலை சரிவு கவனிக்கத்தக்கது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உள்நாட்டில் தங்கம் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். விலை நிலவரத்தின்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 குறைந்து ரூ.14,100-க்கும், ஒரு சவரன் ரூ,200 குறைந்து ரூ.1,12,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைக்கடைகளில் மக்கள் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தற்காப்புப் படை (IDF) முன்னெப்போதும் இல்லாத வகையிலான மிகத்தீவிரமான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையில், வெறும் ஒரே நிமிட இடைவெளியில் சுமார் 180 ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உளவுத்துறைத் தகவல்களின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட இந்தத் தாக்குதல், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நிலைகளைச் சிதைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதலின் போது லெபனானின் முக்கியப் பகுதிகளான பெய்ரூட், பெக்கா மற்றும் தெற்கு லெபனான் ஆகிய இடங்களில் உள்ள சுமார் 100 இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேலியப் படைகள் குண்டு மழை பொழிந்தன. பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் கட்டளை மையங்கள் ஆகியவற்றைத் துல்லியமாகத் தாக்கி அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் உளவுத்துறைத் தரவுகளைப் பயன்படுத்தியதால், ஹிஸ்புல்லாவின் உள்கட்டமைப்புக்கு மிகப்பெரிய சேதம் விளைவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும்,…
மங்கோலியாவில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது அபாரமான திறமையால் 5 தங்கப் பதக்கங்களை வேட்டையாடி வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளனர். இதில் குறிப்பாகப் பெண்களுக்கான பிரிவில், இந்தியாவுக்கு 4 “தங்கமகள்கள்” கிடைத்துள்ளனர். மீனாட்சி (48 கிலோ), பிரீத்தி (54 கிலோ), பிரியா (60 கிலோ) மற்றும் அருந்ததி (70 கிலோ) ஆகிய நால்வரும் தங்களது எதிராளிகளை வீழ்த்தி தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். ஆடவர் பிரிவிலும் இந்தியா தனது ஆதிக்கத்தைச் செலுத்தியது. 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற விஷ்வாந்த் சுரேஷ், ஜப்பானைச் சேர்ந்த டைச்சி இவாயியை 5:0 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். இந்திய அணியின் இந்த ஒட்டுமொத்த சிறப்பான செயல்பாட்டினால், பதக்கப்பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. இளம் வீரர்களின் இந்த வெற்றி, சர்வதேச குத்துச்சண்டை அரங்கில் இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதை உறுதி செய்துள்ளது.
யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் பஞ்சாபைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு பிருந்தாவனத்தில் உள்ள யமுனை ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் யமுனை ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை 16 முதல் 17 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இதனிடையே காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து (PMNRF) தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவரை வெளியிட்டுள்ள…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதில் நிலவும் சிக்கல்கள் குறித்துத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார். ஒரு முன்னணி நடிகர் அரசியல் கட்சித் தலைவராகவும், அதே சமயம் வேட்பாளராகவும் களம் காணும் நிலையில், அவர் நடித்த திரைப்படம் வெளியாவது இதுவே முதன்முறை என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தொடர்பாகத் டெல்லியில் உள்ள இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து வரும் பதிலைப் பொறுத்தே படத்தின் வெளியீடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்துப் பேசிய அவர், தமிழகத்தில் பணப்புழக்கத்தைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் 151 செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், பாதுகாப்புப் பணிக்காக 300 கம்பெனி துணை ராணுவத்தினர் தமிழகம் வரவுள்ளனர். தேர்தல் நாளன்று பணியில் இருக்கும் பத்திரிகையாளர்கள்…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரை நிகழ்வு, பல்வேறு சுவாரஸ்யமான மற்றும் பரபரப்பான சம்பவங்களுடன் நிறைவடைந்தது. காரைக்குடி தொகுதி வேட்பாளர் பிரபுவை ஆதரித்து உரையாற்றத் திட்டமிட்டிருந்த தவெக தலைவர் விஜய், தேர்தல் ஆணையம் விதித்திருந்த மதியம் 2:30 மணி என்ற காலக்கெடுவைத் தாண்டி விழா மேடைக்கு வந்ததால், விதிமுறைகளை மதித்துத் தனது உரையைத் தவிர்த்தார். முன்னதாக, காரைக்குடி வீதிகளில் பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்திய அவர், எதிர்பாராத விதமாக வாகனத்திலிருந்து இறங்கிச் சிறிது தூரம் சைக்கிளில் பயணித்தார். ஆனால், தொண்டர்களின் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலால் தடுமாறிய அவர், உடனடியாகப் பாதுகாவலர்களின் உதவியுடன் மீண்டும் வாகனத்தில் ஏறினார். பரப்புரையின் போது காரைக்குடி பிள்ளையார் படம் மற்றும் ஏராளமான பூங்கொத்துகளைப் பரிசாகப் பெற்ற விஜய், வாகனத்தில் இருந்தபடியே தனது கட்சியின் ‘விசில்’ சின்னத்தைக் காண்பித்து மக்களிடம் வாக்கு சேகரித்தார். இருப்பினும், இந்த நிகழ்வின் போது சில கசப்பான…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் இறுதி வேட்பாளர் பட்டியலுடன் முழுமையடைந்துள்ள நிலையில், ஜனநாயகத் திருவிழாவிற்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர் விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 4,051 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் மோதுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பெறப்பட்ட இறுதி வேட்பாளர் பட்டியலின் அடிப்படையில், சென்னை மாவட்டம் அதிகபட்ச வேட்பாளர்களைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் மட்டும் மொத்தம் 419 பேர் போட்டியிடுகின்றனர். மாவட்ட வாரியான புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, வேட்பாளர்களின் எண்ணிக்கையில் பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 166 பேர் போட்டியிடும் நிலையில், கரூர் தனித் தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 79 பேர் களம் காண்கின்றனர். அதேபோல் சேலத்தில் 193 பேரும், ஈரோட்டில் 188 பேரும், கோவையில் 183 பேரும் போட்டியிடுகின்றனர். இதற்கு நேர்மாறாக, மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள 3…
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா இன்று (ஏப்ரல் 10) தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஆண்டு டெல்லியில் அவர் தங்கியிருந்த அரசு குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, அவரது ரகசிய அறையில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான ஊழல் புகாரில் அவர் மீது நாடாளுமன்ற விசாரணைக் குழு விசாரணை நடத்தி வந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்கத் தீர்மானத்தை வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் 140-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் விசாரணை இறுக்கமடைந்த நிலையில், பதவி நீக்கத்தைத் தவிர்க்கும் நோக்கில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது. இது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பியுள்ள அவர், மிகுந்த மனவேதனையுடன்…