Author: Editor web3
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாகத் தற்போதைய தேர்தல் காலங்களில் அதிகாலை நடைப்பயணத்தின் போது பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், இன்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைப்பயணம் மேற்கொண்ட அவர், அங்குள்ள பொதுமக்களிடம் முகம் மலரப் பேசி வாக்குகளைச் சேகரித்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஒரு நெசவாளர் வீட்டிற்குள் சென்ற முதலமைச்சர், சிறிது நேரம் தறியில் அமர்ந்து புடவை நெய்து அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தொடர்ந்து அந்த நெசவாளர் குடும்பத்தினருடன் அமர்ந்து அவர்களது குறைகளையும், தேவைகளையும் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின், அவர்களுடன் கனிவாக உரையாடினார். இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு குறித்த வீடியோவை தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “எப்படி இருக்கு திராவிட மாடல் ஆட்சி? மக்களே எடைபோட்டுச் சொல்லும் பதில்கள்” என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார். நெசவாளர் ஒருவரின் வாழ்வாதாரத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு முதல்வர்…
ஐபிஎல் நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், அந்த வெற்றிக்கு சஞ்சு சாம்சனின் அதிரடி சதமும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. ஐபிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் அக்சார் பட்டேல் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 212 ரன்கள் குவித்தது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரகளாக சஞ்சு மற்றும் ருத்ராஜ் ஆகியோர் களமிறங்கினர். கேப்டன் ருத்ராஜ் கெய்க் வார்ட் இந்த போட்டியிலும் விரைவில் அவுட் ஆகி வெளியேறினார். ஆனாலும் இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆயுஷ் மாத்ரேவுடன் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முந்தைய போட்டிகளுக்கு பதில் சொல்லும் விதமாக சஞ்சு சாம்சு…
தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பதவிக்கு ஆபத்து இருப்பதாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வும், தற்போதைய சட்ட ஆலோசகருமான இன்பதுரை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் தேர்தல் பரப்புரை பணிகளுக்குத் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை (DIPR) அதிகாரிகள் முறைகேடாக உதவி செய்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 1975-ஆம் ஆண்டு அரசு அதிகாரிகளைப் பயன்படுத்திய காரணத்திற்காக இந்திரா காந்தியின் பதவி பறிபோன வரலாற்றுச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், அதே போன்றதொரு நிலை தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் ஏற்படும் என எச்சரித்துள்ளார். இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்தில் (ECI) முறையான புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்த இன்பதுரை, இதற்கான முக்கிய ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளார். குறிப்பாக, திமுகவின் பிரச்சாரங்களுக்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததற்கான வீடியோ காட்சிகள் மற்றும் மின்னஞ்சல் (E-mail) உரையாடல்களை ஆதாரமாக வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். தேர்தல் நடத்தை விதிமுறைகளைத்…
நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகப் பார்க்கப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் கசிந்துள்ள சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் கடந்த ஜனவரி மாதம் முதல் ரிலீஸ் தள்ளிப்போய் வந்தது. இந்த இழுபறி நீடித்து வந்த நிலையில், படத்தின் சில முக்கியக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து நேற்று முழுத் திரைப்படமும் HD பதிப்பில் இணையதளங்களில் கசிந்துள்ளது. சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் லீக் செய்தியால் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் (KVN) புரொடக்ஷன்ஸ் கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. இது தொடர்பாகச் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கசிந்த காட்சிகளையோ அல்லது படத்தையோ பகிர்வது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும் என்றும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்பாக வெளியாகும் மிக முக்கியமான படம் என்பதால், இது…
ஈரான் – அமெரிக்கா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாகத் தொடர்ச்சியான செய்திகள் வெளியாவது உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மூடுவதாக ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை, உலக நாடுகளை மீண்டும் ஒரு போர் பதற்றத்திற்குள் தள்ளியுள்ளது. இந்த புவிசார் அரசியல் நெருக்கடியால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது, இது ஏற்கனவே தத்தளித்துக் கொண்டிருக்கும் உலகளாவிய எரிசக்தி சந்தையை மேலும் நிலைகுலையச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது. தங்கத்தின் விலையைப் பொறுத்தவரை, பொதுவாக போர் காலங்களில் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்பட்டாலும், தற்போதைய சூழல் சற்றே மாறுபட்டதாக உள்ளது. டாலரின் மதிப்பு பலமடைவது மற்றும் முதலீட்டாளர்கள் லாப நோக்கில் தங்கத்தை விற்று பணமாக மாற்றுவது போன்ற காரணங்களால், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்ஸிற்கு சுமார் 500 டாலர்கள் வரை…
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு படைகள் இடையே கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இப்போரின் எதிரொலியாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடக்கியுள்ளது. இதற்கிடையே ஈரான் – அமெரிக்கா இரு தரப்பிலும் 2 வாரங்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு அமைதி பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. பாகிஸ்தானை மத்தியஸ்தராக கொண்டு நடைபெறும் இந்த அமைதி பேச்சு வார்த்தையில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான குழுவும், ஈரான் தரப்பில் அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையிலான குழுவும் இஸ்லாமாபாத்திற்கு வருகை தந்துள்ளனர். இதற்காக, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ், சனிக்கிழமை இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்தார். இச்சந்திப்பின் போது அமெரிக்கா தரப்பில் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் பாகிஸ்தான் தரப்பில் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது…
கூகுள் பே (Google Pay) செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘GPay Pocket Money’ அல்லது ‘Children Accounts’ எனும் புதிய அம்சம், பெற்றோர் மற்றும் குழந்தைகள் இடையே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை எளிதாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து தெரிந்துகொள்வோம். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகளுக்குப் பண மேலாண்மை மற்றும் சேமிப்புப் பழக்கத்தைக் கற்றுத் தருவதற்காகக் கூகுள் நிறுவனம் இந்தப் புதிய வசதியைக் கொண்டு வந்துள்ளது. இது குறிப்பாகச் சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பான தளமாகும். அதாவது, குழந்தைகள் தங்களது சிறிய தேவைகளுக்காக Google Pay (GPay) மூலம் நேரடியாக பணம் செலுத்தலாம். ஆனால் அந்தத் தொகை பெற்றோரின் வங்கி கணக்கிலிருந்தே கழிக்கப்படும். மேலும், செலவு வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் முழுமையாக பெற்றோரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இது எப்படி செயல்படுகிறது? பெற்றோர் கட்டுப்பாடு: குழந்தைகளின் கூகுள் பே கணக்கை அவர்களின் பெற்றோரின் முதன்மைக் கணக்குடன் இணைக்க வேண்டும்.…
ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியானது தொடர்பாக பலரும் தங்களது கண்டனங்களையும், படக்குழுவுக்கு ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்த நடிகை பூஜா ஹெக்டே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒரு திரைப்படம் என்பது, எண்ணற்ற மணிநேர உழைப்பு, படைப்பு சார்ந்த துணிச்சலான முயற்சிகள், தனிப்பட்ட தியாகங்கள் மற்றும் உங்களுக்குச் சாத்தியமான மிகச்சிறந்த அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளும் தவறாமல் களத்தில் நின்ற ஒரு குழுவின் கூட்டு முயற்சியின் விளைவாகும்… எங்கள் திரைப்படம் இணையத்தில் கசிந்திருப்பதைப் பார்ப்பது, எனக்கு மட்டுமல்லாமல், இத்திரைப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞரும் தொழில்நுட்பக் கலைஞரும் தங்களுக்கு உரித்தான மரியாதையை இழக்க நேரிடுகிறதே என்பது குறித்த கவலையாகும்…… மேலும், விஜய் சாரின் கடைசிப் படத்தை, ‘கடைசி முறையாக’, பெரிய திரையில், உரிய முறையில் ஒன்றாகக் கூடி நின்று கொண்டாடி ரசிக்கும் உரிமை நம் அனைவருக்கும் இல்லையா?… எனவே, நாம் இப்படத்தை…
லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 1,953 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்க, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் ஈரான் போரிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது. ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஒத்துக்கொண்டதால் அமெரிக்கா, இஸ்ரேல் உடன் 2 வாரம் போர் நிறுத்தம் நேற்று ஏற்பட்டது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்காவிட்டால், ஈரான் மீது இதுவரை இல்லாதவகையில் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் கடந்த ஏப். 7 அன்று 2 வாரங்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கூறும்போது, ஈரான், இஸ்ரேல்,…
தேர்தலில் ஒருவேளை தப்பித்தவறி அதிமுக கூட்டணி வெற்றிபெற்றுவிட்டால் 6 மாதங்களில் அண்ணாமலை (அ) ஹெச்.ராஜா முதலமைச்சர் நாற்காலியில் இருப்பார்கள் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் பிரசாரம் செய்தார். அப்போது அவர், “தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிக்கு பெரும் ஆதரவு உள்ளது. சாதி, மதம் பார்த்து திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பணி செய்யவில்லை. அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். திமுக கூட்டணியில் இருந்து தான் மாநில கட்சியாக விசிக அங்கீகாரம் பெற்றுள்ளோம். விஜய் கட்சிக்கு மற்ற கட்சிக்கும் செல்ல வேண்டுமென கூறினார்கள். கூட்டணிக்கு அழைப்பும் வந்தது. பதவிக்காகவோ, தொகுதிக்காகவோ ஆசைபடுபவன் நான் அல்ல. விசிகவிற்கு 8 தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மிகுந்த மன உளைச்சல் இருந்தது. பாஜகவினர் சமத்துவத்தை பற்றி பேசுவதில்லை. எனவே ஆர்.எஸ்.எஸ் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில்லை. அவர்களை தூக்கி பிடிப்பவர்களுடன்…