Author: Editor web3

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கவுள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே கடலூரில் நேற்று (சனிக்கிழமை) நடைபெறவிருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கன்னியாகுமரியில் இன்று ரோடு ஷோ நடத்த தவெக தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதற்காக மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். அப்போது விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கன்னியாகுமரியில் மகாதானாபுரம் ரவுண்டானா பகுதிக்கு வந்த விஜய் சைக்கிளில் சுற்றி வந்தார். இருபக்கமும் திரண்டு நின்ற தொண்டர்களை பார்த்து விஜய் கை…

Read More

ஆசியப் பிராந்தியத்தில் இன்று அதிகாலை முதல் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கங்கள் பொதுமக்களிடையே பெரும் பீதியைக் கிளப்பியுள்ளன. மியான்மர், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியப் பெருங்கடல் என மூன்று வெவ்வேறு முக்கியப் பகுதிகளில் இந்த இயற்கைச் சீற்றம் பதிவாகியுள்ளது. முதலில், இன்று அதிகாலை 4:29 மணியளவில் மியான்மரின் வடக்குப் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது நைபிடாவிலிருந்து 137 கி.மீ தொலைவில், பூமிக்கு அடியில் சுமார் 140 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகத் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாகவே, அடுத்த ஒரு மணி நேரத்தில், அதாவது சரியாக அதிகாலை 5:29 மணியளவில் ஆப்கானிஸ்தானில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆகப் பதிவானது. மியான்மரை விடவும் இதன் தீவிரம் சற்று அதிகமாக இருந்த நிலையில், இது பூமிக்கு அடியில் 150 கி.மீ ஆழத்தில் நிலைகொண்டிருந்தது. அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரண்டு…

Read More

நாடாளு​மன்​றம் மற்​றும் சட்​டப்​பேர​வை​களில் 2029-ம் ஆண்டு முதல் 33% மகளிர் இடஒதுக்​கீட்டை நடை​முறைப்​படுத்​த​வும், மகளிருக்கு 273 இடங்​களை ஒதுக்​கும் வகை​யில் மொத்த மக்​கள​வைத் தொகு​தி​களின் எண்​ணிக்​கையை 816 ஆக உயர்த்​த​வும் வழி​வகுக்​கும் வரைவு மசோ​தாக்​களுக்கு மத்​திய அரசு கடந்த 8-ம் தேதி ஒப்​புதல் வழங்​கியது. இந்த மசோ​தாவுக்கு ஒப்​புதல் வழங்க ஏப்​.16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சிறப்பு நாடாளு​மன்​றக் கூட்​டத்தை மத்​திய அரசு கூட்டி​யுள்​ளது. இந்​நிலை​யில் மேற்கு வங்​கம், தமிழ்​நாடு, அசாம், கேரளா, புதுச்​சேரி ஆகிய​ மாநில சட்டப்பேர​வைத் தேர்​தல்​களில் வெற்றி பெறவே மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் மற்​றும் தொகுதி மறு வரையறை தொடர்​பான மசோ​தாக்​களை நிறைவேற்​று​வதற்​காக மத்​திய அரசு நாடாளு​மன்​றத்​தின் சிறப்பு கூட்​டத்​தை கூட்டி உள்​ள​தாக காங்​கிரஸ் குற்​றம்​சாட்டி உள்​ளது. இதுதொடர்​பாக விவா​திப்​ப​தற்​காக ஏப்​.15-ம் தேதி காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் ஆலோ​சனை நடத்​தவுள்​ளன. டெல்​லி​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற காங்​கிரஸ் செயற்​குழுக் கூட்​டத்​தில் இந்த முடிவு எடுக்​கப்​பட்​டுள்​ளது. இந்த…

Read More

மூத்த பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே, மாரடைப்பு மற்றும் நுரையீரல் சிக்கல்கள் காரணமாக, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 92. நேற்று சனிக்கிழமை மாலை திடீர் மாரடைப்பு மற்றும் சோர்வு ஏற்பட்டதை அடுத்து, போஸ்லே தெற்கு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் நுரையீரல் பாதிப்பு, நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவர் இன்று (ஏப்ரல் 12) சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மஹாராஷ்டிரா மாநிலம் சாங்கியில் 1993ம் ஆண்டு பிறந்தவர் ஆஷா போஸ்லே. இவர் மறைந்த புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் சகோதரி ஆவார். அவருக்கு இதயக் கோளாறு மற்றும் நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டதாக முன்னதாகத் தகவல்கள் வெளியாகின. 1940-களில் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய போஸ்லே, தொடக்கத்தில் சிறு பட்ஜெட் படங்களுக்குப் பாடினார். பின்னர்…

Read More

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரை ஆதரித்து, அண்மையில் அக்கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மேடையில் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வாக்களிப்பது செல்லாத வாக்காக (நோட்டா) மாறிவிடும் என விமர்சித்துக் கொண்டிருந்தார். ஆனால், பேச்சின் உச்சக்கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட செங்கோட்டையன், “தமிழக வெற்றிக் கழக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்” என்று கூறி அதிர்ச்சியளித்தார். நீண்ட காலம் அதிமுகவில் இருந்த பழக்கத்தினால் அவர் வாய் தவறி பழைய சின்னத்தைக் குறிப்பிட்டது அங்கிருந்த தவெக தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தனது தவறை உடனே உணர்ந்த செங்கோட்டையன், சாமர்த்தியமாகப் பேசிச் சூழலைச் சமாளித்தார். “ஐம்பது ஆண்டுகாலமாக இரட்டை இலை சின்னத்தைக் கேட்டே எனக்குப் பழகிவிட்டது” என்று குறிப்பிட்ட அவர், கோபிசெட்டிபாளையத்தில் தான் வாக்கு சேகரித்தபோது ஒரு மூதாட்டி தன்னிடம் ‘உங்களுக்குத் தானே எப்போதுமே வாக்களிப்போம், இரட்டை…

Read More

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசியதாவது ; “அதிமுக அரசு காவிரி விவகாரத்தில் அற்புதமான தீர்ப்பை பெற்றுத்தந்தது. காவிரி பிரச்சினைக்காக 37 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கியது. பாஜகவுடன் கூட்டணி அமைத்த கட்சி தான் திமுக. ஆனால் அதிமுக கூட்டணி வைத்தால் மட்டும் பாஜக மதவாத கட்சி ஆகிவிடுமா? மத்தியில் 15 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த திமுக தஞ்சைக்கு என்ன திட்டம் கொண்டு வந்தது ? டெல்டாவில் ஹட்ரோ கார்பன் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டவர் ஸ்டாலின். மத்திய ஆட்சியில் பங்கு வகித்தபோதும் காவிரி பிரச்சினையை திமுக கண்டுகொள்ளவில்லை. ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது கூட திமுகவால் தமிழகத்திற்கு நிதி பெற முடியவில்லை. விவசாயிகள் அவதிப்படும்போது எங்கே போனார் டெல்டாக்காரர் ஸ்டாலின்? ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல.. உல்டாகாரர். கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் சாலை அமைத்து ஆய்வு செய்தவர் ஸ்டாலின். திகார்…

Read More

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 800 நிர்வாகிகள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போதைய தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவதற்குத் தேர்தல் ஆணையத்திடம் கட்சி சார்பில் அனுமதி கோரி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்தவுடன், திட்டமிட்டபடி இந்தக் கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெறும் எனத் தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பல தொகுதிகளில் அறிமுகமில்லாத அல்லது முகம் தெரியாத நபர்களை வேட்பாளர்களாகக் களமிறக்கியுள்ளதாகக் கட்சித் தொண்டர்கள் மத்தியில் ஒருவித அதிருப்தி நிலவி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகப் பல இடங்களில் தேர்தல் பணிகள் தொய்வடைந்துள்ளதாகவும், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு வீச்சில் களப்பணியாற்றவில்லை என்றும் தலைமைக்குப் புகார்கள்…

Read More

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்வதை இலங்கை கடற்படை வாடிக்கையாக கொண்டுள்ளது. இலங்கை கடற்படையின் இந்த அட்டூழியத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது இலங்கை காரைநகர் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை சிறைபிடித்துள்ளனர். தொடர்ந்து சிறைபிடித்த 12 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர். மேலும் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகையும், அதிலிருந்த 12 மீனவர்களையும் சிறைபிடித்தனர். இதனிடையே கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்டுத் தருமாறு மத்திய மாநில அரசுக்கு மீனவப் பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Read More

தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே கோடைக்காலம் தனது கோரமுகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை ஏற்கனவே 100 டிகிரியைத் தாண்டி வரும் நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் இன்னும் தீவிரமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் பகிர்ந்துள்ள தகவலின்படி, வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி வரை தமிழகத்தில் அனல் காற்று வீசும் சூழல் நிலவும். குறிப்பாக, பகல் நேர வெப்பநிலையானது இயல்பை விட சுமார் 2°C முதல் 3°C வரை அதிகரித்து பொதுமக்களை வாட்டி வதைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) புள்ளிவிவரங்களின்படி, இன்றைய தினமே (ஏப்ரல் 12) தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37°C ஆகப் பதிவாகியுள்ளது. வரும் புதன்கிழமை (ஏப்ரல் 15) மற்றும் அடுத்த வாரம் ஏப்ரல் 22 ஆகிய தேதிகளில் வெப்பத்தின் தீவிரம்…

Read More

தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவின் நிர்வாகம் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி  தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தமிழக பா.ஜ.கவின் பூத் கமிட்டி கூட்டம் நாளை (ஏப்ரல் 13) மாலை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாகக் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தி.மு.க.வின் மோசமான நிர்வாகத்தை அம்பலப்படுத்தி, மாநில வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொலைநோக்குப் பார்வையை மக்களிடம் விரிவாக எடுத்துரைக்கும் நமது தமிழக பா.ஜ.க செயல்வீரர்களை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏப்ரல் 13 அன்று மாலை நடைபெறும் ‘எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி’ கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது, கடினமாக உழைக்கும் நமது செயல்வீரர்களுடன் நான் உரையாடவிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். https://x.com/narendramodi/status/2043189583899492838? சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி ஏப்.15-ம் தேதி கன்னியாகுமரி வரவுள்ளார். அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு,…

Read More