Author: Editor web3
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதனிடையே நேற்று 20வது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணியும், ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி மோதியது. மும்பை மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை குவித்தது. இதனை தொடர்ந்து ஆடிய மும்பை அணிக்கு ரிக்கில்டன் 22 பந்துகளில் 37 ரன்கள், ரோகித் சர்மா 13 பந்துகளில் 19 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில்…
உலகெங்கும் வாழும் தமிழர்களால் சித்திரை முதல் நாள் புத்தாண்டு திருநாளாக வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என எல்லைகள் கடந்து தமிழர்கள் இந்நாளைத் தங்கள் பண்பாட்டு அடையாளமாகப் போற்றுகின்றனர். வானியல் ரீதியாக, சூரிய பகவான் பன்னிரு ராசிகளையும் சுற்றி வந்து, மீண்டும் தனது பயணத்தை முதல் ராசியான மேஷத்தில் தொடங்கும் தினமே தமிழ் புத்தாண்டாகக் கருதப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள ‘குரோதி’ வருடம் நிறைவு பெற்று, நாளை( ஏப்ரல் 14-ம் தேதி ‘விசுவாவசு’ புத்தாண்டு பிறக்கிறது. புத்தாண்டு வழிபாட்டின் மிக முக்கிய அங்கமாக ‘கனி காணுதல்’ அமைகிறது. இதற்காக இன்று (ஏப்ரல் 13-ம் தேதி) இரவே வீட்டைத் தூய்மை செய்து, ஒரு தாம்பாளத்தில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை பாக்கு, எலுமிச்சை, மங்கலப் பொருட்கள், தங்கம் மற்றும் நாணயங்களைச் சேகரித்து வைக்க வேண்டும். இதன் நடுவே ஒரு கண்ணாடியை வைத்து, மறுநாள் நாளை ஏப்ரல் 14…
நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் நிலவி வரும் ஜிஹாதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தை ஒடுக்கும் நோக்கில், அந்நாட்டு விமானப்படை தீவிர வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது. கிளர்ச்சியாளர்களின் மறைவிடங்களை அழிப்பதே இலக்கு எனத் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையில், எதிர்பாராதவிதமாக இலக்கு தவறி மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு மார்க்கெட் பகுதியில் குண்டுகள் விழுந்து வெடித்தன. இந்த கோரத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 100 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. பாதுகாப்பு வழங்க வேண்டிய அரசே தவறுதலாகத் தன் சொந்த நாட்டு மக்கள் மீதே தாக்குதல் நடத்தியிருப்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “மக்களைக் காக்க வேண்டிய அரசே இப்படி ஒரு பெரும் பிழையை இழைக்கலாமா?” என மனித உரிமை அமைப்புகளும் உலக நாடுகளும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. கிளர்ச்சியாளர்களைக் கண்டறியப்…
நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என மத்திய அரசு உத்தரவிடவில்லை என நிர்மலா சீதாராமன் கூறியதற்கு ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். நெல் சாகுபடி தொடர்பாக நிர்மலா சீதாராமன் பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்வினையாற்றி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நிர்மலா சீதாராமன் அவர்களே, “நெல்லுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும்” எனத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது. கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுடைய இந்தப் பதிவில், “குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில…
தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிரடி சரிவைச் சந்தித்து வருவது நகைப்பிரியர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இதன்படி, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,060-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு மொத்தம் ரூ.1,320 வரை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்க மாற்றமாகும். சனிக்கிழமை நிலவரப்படி கிராமுக்கு ரூ.125-ம், சவரனுக்கு ரூ.1,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 125-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் விற்பனையானது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் தங்கம் விலை ஒரு அவுன்ஸிற்கு (28 கிராம்) 1% சரிவைச் சந்தித்துள்ளதே இந்தியச் சந்தையில் இந்த விலை வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது. சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு மற்றும் முதலீட்டுச் சூழல்களில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், உள்ளூர் சந்தையிலும்…
கரீபியன் தீவு நாடான ஹைதியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மிலாட் நகரில், உலகப் புகழ்பெற்ற சிட்டடெல் லாபெரியர் (Citadelle Laferrière) மலைக்கோட்டை அமைந்துள்ளது. விடுமுறை தினமான நேற்று, இந்த பாரம்பரியச் சின்னத்தைக் காணவும் அங்கு நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்கவும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் திரண்டிருந்தனர். பிரான்சிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின் கட்டப்பட்ட இந்த பிரம்மாண்ட கோட்டை, சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாகத் திகழ்ந்து வருகிறது. திருவிழா உற்சாகமாகத் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அப்பகுதியில் கடுமையான கனமழை பெய்யத் தொடங்கியது. மழையில் இருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பாதுகாப்பான இடங்களை நோக்கி முண்டியடித்துக்கொண்டு ஓடினர். குறுகலான பாதை என்பதால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, இறுதியில் அது கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலாக மாறியது. இந்த கோர விபத்தில் பெண்கள் உட்பட 30 பேர் மூச்சுத்திணறியும் மிதிப்பட்டும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த…
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “சாதி, மத வேற்றுமைகளைக் கடந்து மக்கள் நல்லிணக்கத்துடன் வாழும் இந்த ராமநாதபுர மண்ணை, கடந்த ஐந்தாண்டுகளில் புதிய உயரத்திற்கு கொண்டு சேர்த்த பெருமையுடன் உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளேன்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றிக் காட்டியுள்ளோம் எனக் குறிப்பிட்ட அவர், இந்த வளர்ச்சி இதோடு நின்றுவிடக்கூடாது என்றும், உலக வரைபடத்தில் தமிழ்நாட்டை ஒரு தனித்துவமான ‘பிராண்டாக’ உயர்த்த திமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறும் மக்களிடம் கோரிக்கை வைத்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தனுஷ்கோடி சுற்றுலாத்தளம் மேம்பாடு, அறிவுசார் மையம் மற்றும் பாம்பன்-மண்டபம் இணைப்புத் திட்டங்கள் என ராமநாதபுரத்தின் வளர்ச்சிக்காகச் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார். மேலும், “எதிர்காலத்தில் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் விடியல் பயண பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ‘சைக்கிள் பயணம்’ அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்களுக்கு இணையாக விஜய்யும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இருப்பினும், விஜய்யைப் பொறுத்தவரை பிரச்சாரக் கூட்டங்களை விட, பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக அவை ரத்து செய்யப்படுவதே செய்தியாகி வருகிறது. ஒரு உச்ச நட்சத்திரமாக அவர் வீதியில் இறங்கும்போது திரளும் கட்டுக்கடங்காத கூட்டம், ஒருபுறம் அவரது செல்வாக்கைக் காட்டினாலும், மறுபுறம் அதுவே திட்டமிட்ட பிரச்சாரங்களுக்கு முட்டுக்கட்டையாகவும் மாறுகிறது. https://x.com/CjvFanatic/status/2043286009702674433 இந்தச் சூழலில், காரைக்குடியைத் தொடர்ந்து இன்று கன்னியாகுமரியிலும் விஜய் மேற்கொண்ட சைக்கிள் பிரச்சாரம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆடம்பர வாகனங்களைத் தவிர்த்து, எளிமையின் அடையாளமாக சைக்கிளில் சென்று அவர் வாக்கு சேகரிப்பது, குறிப்பாக இளைஞர்கள்…
தமிழகத்தில் அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்னரே வெயில் சதத்தைக் கடந்து வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஏசி மற்றும் ஏர் கூலர்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது சாமானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாக வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நடுத்தர மக்கள் ஏர் கூலர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், தற்போது சர்வதேச சந்தையில் பிளாஸ்டிக் மற்றும் ரசாயனப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், ஏர் கூலர்களின் உற்பத்திச் செலவு 30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக முன்னணி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக, ஒரு கூலரின் விலை கடந்த ஆண்டை விட ரூ.15,000 வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மினி கூலர்கள் ரூ.499 முதல் ரூ.2,000 வரையிலும், பெரிய வகை டெசர்ட் கூலர்கள் ரூ.15,000 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. ஏர் கூலர்கள் மட்டுமல்லாது, ஏசி இயந்திரங்களின் விலையும் தப்பிக்கவில்லை. தாமிரத்தின் விலை உயர்வு மற்றும் அரசு அமல்படுத்தியுள்ள புதிய மின் சேமிப்பு விதிகள் காரணமாக…
தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக மாறியிருப்பது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையிலான மறைமுக அரசியல் நகர்வுகள் தான். சமீபகாலமாக விஜய் தனது உரைகளில் “உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம் தான்” என்பது போன்ற தொனியில் பேசி வருவது, காங்கிரஸின் பாரம்பரிய வாக்குகளைத் தன் பக்கம் ஈர்க்கும் ஒரு தந்திரமாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும், ஒருவேளை தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக அமையாத பட்சத்தில், காங்கிரஸின் ஒரு பிரிவினர் எளிதாக தவெக-வை நோக்கி நகர்வதற்கு இப்போதே அஸ்திவாரம் போடப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. காங்கிரஸில் உள்ள அதிருப்தி கோஷ்டியினர் அல்லது இளம் தலைமுறையினர் விஜய்யின் பின்னால் அணிவகுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது இந்த “ரகசிய கணக்கை” மேலும் உறுதிப்படுத்துகிறது. தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முணுமுணுப்புகள் வலுவாகவே உள்ளன. திமுக – காங்கிரஸ் கூட்டணியில்…