Author: Editor web3
தேர்தல் பிரசாரம் செய்யும் ஒரு மாத காலம் கூட, திமுகவினரால் பொதுமக்களுக்கு மரியாதை கொடுக்க முடியவில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பதிவில், “கிட்னி திருட்டு புகழ் மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர், கதிரவன், தேர்தல் பரப்புரையின் போது, தங்கள் ஊர் ஏரிக்கு தண்ணீர் இல்லை என்று கோரிக்கை வைத்த கிராம மக்களை, லூசு என்றும், நீ ஒன்றும் எனக்கு ஓட்டு போட வேண்டாம் என்றும் இழிவாகப் பேசியிருக்கிறார். வழக்கமாக, தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தைக் காட்டுவார்கள். ஆனால், தேர்தல் பிரச்சாரம் செய்யும் ஒரு மாத காலம் கூட, திமுகவினரால் பொதுமக்களுக்கு மரியாதை கொடுக்க முடியவில்லை. ஐந்து ஆண்டுகளாக அப்பாவி பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த திமுக எம். எல்.ஏ. கதிரவனுக்கு, தற்போது தேர்தல் அறிவித்து விட்டதால், ஏரியைச் சீரமைக்க முடியவில்லையாம். ஐந்து ஆண்டுகளாக அவரது தந்தைக்கு 15 கோடியில் வெளிநாட்டு…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசார கூட்டங்கள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டு வருவது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூரில் இன்று நடைபெறவிருந்த பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி அளித்திருந்த நிலையிலும், அது திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கவரப்பேட்டையில் நாளை மறுநாள் நடைபெறவிருந்த பிரசாரமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முறையான காரணங்கள் கட்சித் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. ஆயினும், பிரசார நேரக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் காரணமாகவே இந்த மாற்றங்கள் நிகழ்வதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சென்னை மற்றும் பெரம்பூர் போன்ற பகுதிகளில் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதும், நேரமின்மை காரணமாகக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இது தவெக தொண்டர்களிடையே சற்றே ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், தேர்தல் களத்தில் கட்சியின் வியூகங்கள் மாற்றியமைக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. கவரப்பேட்டை பிரசாரம் தற்போது ரத்து செய்யப்பட்டிருந்தாலும், வரும் 19-ம் தேதி அதே இடத்தில் விஜய் பிரசாரம்…
நாக்பூரிலிருந்து வரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களை அங்கீகரிக்கும் அறிவாலயம், பெரியார் மண்ணில் இருந்து வரும் தனக்கு அங்கீகாரம் அளிக்காதது வியப்பாக இருப்பதாக திமுகவை தனியரசு விமர்சித்துள்ளார். அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, கடந்த ஐந்து ஆண்டுகளாக தி.மு.க-வை ஆதரித்து வந்தார். ஆனால் இந்தத் தேர்தலில் ஒரு தொகுதியை எதிர்பார்த்தார். ஆனால், அவரோடு இணைந்து செயல்பட்டுவந்த கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கிய வேளையில், தனியரசு மட்டும் தனித்துவிடப்பட்டது அவருடைய ஆதரவாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து தனியரசு கூறியதாவது, “கடந்த ஐந்து ஆண்டுகளாக தி.மு.க அரசை, அணியை, முதல்வரை ஆதரித்திருக்கிறேன். மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும். முதல்வராக ஸ்டாலின் தொடர வேண்டும் என விரும்புகிறேன். இந்த அரசு, கொள்கை, முதல்வர் மீது இனம் புரியாத பற்றும் பாசமும் இருக்கின்றன. அதனால், எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையிலும், பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை வைக்கவில்லை. ஜெயலலிதா…
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். வாகை சூடும் வரலாறு திரும்பும் பயணத்தில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அளப்பரியது, இன்றியமையாதது. மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியான நாம், நமது வெற்றிப் பாதையில் சரியாகப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வரும் இந்த வேளையில் ஒரு வேண்டுகோள். வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களாகத் தங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டு நம்மோடு தோழர்களாகப் பயணிப்பவர்கள், கழகத்தின் மீது பேரன்பு கொண்டுள்ள என்னுடைய நண்பா, நண்பிகள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள். அடுத்த பத்து நாள்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் காலை, மாலை என இரு வேளையும் அவரவர் வசிக்கும் இடங்களில் தினமும் நம் சொந்தங்களாகிய தமிழ்நாட்டு மக்களை வீட்டுக்கு வீடு தேடித் தேடி நேரில் சந்தியுங்கள். நமது கழக வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள்…
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழக உள்துறைச் செயலாளராகப் பணியாற்றி வந்த தீரஜ்குமாரை அதிரடியாக மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவருக்குப் பதிலாக, புதிய உள்துறைச் செயலாளராக மணிவாசன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 5 மணிக்குள் மணிவாசன் பதவியேற்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் காலக்கெடு விதித்துள்ளது. தேர்தல் நேரத்தில் நிர்வாக ரீதியான நடுநிலைமையை உறுதி செய்யும் வகையில் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதேபோல், தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, அனுபவம் வாய்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சாய்குமார் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமல்லாது, ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன: லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்த டேவிட் தேவாசிர்வாதம் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, சந்தீப் மிட்டல் ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை…
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 15-ம் தேதி நாகர்கோவில் வருகை தருகிறார். அன்று மாலை நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பிலிருந்து வடசேரி வரை பிரம்மாண்ட ‘ரோடு ஷோ’ (Road Show) பிரச்சாரம் செய்கிறார். இந்த ரோடு ஷோவில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரிக்க உள்ளார். பிரதமரின் இந்தப் பயணத் திட்டத்தின்படி, அவர் முதலில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்து சேருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு வந்திறங்குகிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக ரோடு ஷோ நடைபெறும் இடத்திற்குச் செல்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் பிரதமர் மோடி அவர்கள் தமிழகத்திற்கு வருவது இது 4-வது…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைமுறைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், மாநிலத்தின் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தத்தை மாற்றிவிட்டு, சாய்குமாரை புதிய தலைமைச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் நியமித்ததற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு எழுதியுள்ளார். அதில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதன் நடைமுறைகள் தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வந்த முருகானந்தத்திற்கு பதிலாக சாய் குமார் என்பவரை புதிய தலைமைச் செயலாளராக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இந்த தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற பணிமாறுதலுக்கு, திமுக தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் இதற்கான எவ்விதக் காரணங்களும் குறிப்பிடப்படவில்லை. மேலும், முருகானந்தம் குறித்து எந்தவொரு முக்கிய அரசியல் கட்சியும் எவ்விதப் புகாரும் அளிக்கவில்லை. அவர் அப்பதவியிலிருந்து இடமாற்றம் செய்யப்படுவதற்கு எவ்விதமான தர்க்கரீதியான அல்லது நியாயமான காரணங்களும் இல்லை. தமிழ்நாட்டில் தேர்தல் நடைமுறைகள் தொடங்கி…
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் களம் அனல் பறக்கும் பிரச்சாரங்களால் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தலைத் தற்காலிகமாக நிறுத்தக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளில் வாஷிங் மெஷின், பணம் உள்ளிட்ட பல்வேறு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வாக்காளர்களைக் கவர்ந்து வருவதாக அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய வாக்குறுதிகள் நேர்மையான தேர்தல் நடைமுறைக்கும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கும் எதிரானது என்பதால், தேர்தலை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும் என அவர் கோரியுள்ளார். தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகளையும் மீறி, இலவசங்கள் மூலமாக ஜனநாயகத்தின் மாண்பு சிதைக்கப்படுவதாகத் தனது மனுவில் கே.கே. ரமேஷ் ஆதங்கம் தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சிகளும் தீவிரமாகத் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் வேளையில், இந்த அவசர வழக்கு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்குமா…
நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகப் பார்க்கப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் கசிந்துள்ள சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் கடந்த ஜனவரி மாதம் முதல் ரிலீஸ் தள்ளிப்போய் வந்தது. இந்த இழுபறி நீடித்து வந்த நிலையில், படத்தின் சில முக்கியக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து நேற்று முழுத் திரைப்படமும் HD பதிப்பில் இணையதளங்களில் கசிந்துள்ளது. சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் லீக் செய்தியால் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் (KVN) புரொடக்ஷன்ஸ் கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. இது தொடர்பாகச் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கசிந்த காட்சிகளையோ அல்லது படத்தையோ பகிர்வது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும் என்றும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்பாக வெளியாகும் மிக முக்கியமான படம் என்பதால், இது…
தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வின் மூன்றாம் கட்டக் கலந்தாய்வு குறித்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. ஏற்கனவே முதலாம் மற்றும் இரண்டாம் கட்டக் கலந்தாய்வுகள் முடிந்து பணி நியமனங்கள் வழங்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்ட நாட்களாகப் பணி வாய்ப்புக்காகக் காத்திருந்த தேர்வர்களின் அரசுப் பணி கனவு நனவாக உள்ளது. இந்த மூன்றாம் கட்டக் கலந்தாய்வானது வரும் மே மாதம் 8-ம் தேதி முதல் சென்னை பிராட்வேயில் அமைந்துள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான தகுதியான தேர்வர்களின் பட்டியல் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது பதிவு எண்ணைப் பயன்படுத்தி கலந்தாய்வுக்கான நாள், நேரம் மற்றும் இடம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அழைப்பாணையை (Memo)…