Author: Editor web3
மேற்கு வங்கம் மாநிலத்திற்கு ஏப்ரல் 23, 29ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்குறுதிகளை அறிவித்தார். தொடர்ந்து பேசியவர், “பெண்களுக்கு மாதம் தோறும் 3000 ரூபாய் வழங்கப்படும். பாஜக ஆட்சி அமைத்த 6 மாதத்திற்குள் மேற்குவங்க மாநிலத்தில் UCC அமல்படுத்தப்படும். தற்காப்பு பயிற்சிகள் வழங்க துர்கா சுரக்சா குழு ஏற்படுத்தப்படும். பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வழிகாட்டியாக அமையும். வங்காளச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடையேயும் நிலவிவரும் ஆழ்ந்த விரக்தியைப் போக்கிட, இந்தத் தேர்தல் அறிக்கை ஒரு வழிகாட்டியாக அமையும். வேலையில்லா இளைஞர்களுக்கும், அச்சத்துடன் வாழ்ந்து வரும் பெண்களுக்கும் இது ஒரு புதிய வழியை ஏற்படுத்தும். கம்யூனிச ஆட்சியை அகற்றுவதற்காக, வங்காள மக்கள் மம்தாவை தேர்ந்தெடுத்தனர். ஐந்து ஆண்டுகள் போதாது என்று அவர் கூறியதால், அவருக்கு மற்றொரு வாய்ப்பும்…
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்துள்ள விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்தப் படம், தணிக்கை சிக்கல்கள் காரணமாகப் பொங்கல் வெளியீட்டிலிருந்து தள்ளிப்போனது. தற்போது மறுதணிக்கைக்காகக் காத்திருக்கும் நிலையில், படத்தின் முக்கிய அறிமுகக் காட்சிகள் மற்றும் ‘ஒரு பேரே வரலாறு’ என்ற பாடல் காட்சிகள் உள்ளிட்ட 5 நிமிட வீடியோக்கள் சட்டவிரோதமாக இணையத்தில் பரவியுள்ளன. இது படக்குழுவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் செயலுக்கு எதிராகத் தயாரிப்பு நிறுவனம் சைபர் கிரைமில் அதிரடியாகப் புகார் அளித்துள்ளது. படத்தின் வீடியோக்களைப் பகிர்ந்தவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்தவர்கள் என இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவர் மீதும் தனித்தனியாகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தவெக தலைவர் விஜய், தனது படத்திற்குத் திட்டமிட்டே முட்டுக்கட்டை போடப்படுவதாகக்…
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக, காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஜாபர் சாதிக் அக்கட்சியில் இருந்து விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த தனக்கு, கட்சித் தலைமை முறையான வாய்ப்பையோ அல்லது நேர்காணலுக்கான மரியாதையையோ வழங்கவில்லை என்று அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி மேலிடத்தின் புறக்கணிப்பே இந்த அதிரடி முடிவுக்குக் காரணம் என அவர் தெரிவித்தது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாபர் சாதிக்கின் இந்த விலகல், வரவிருக்கும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுக்கு, குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஜாபர் சாதிக் அந்தப் பகுதியில் கணிசமான செல்வாக்கு கொண்டவர் என்பதால், அவர் தவெக-வில் இணைந்திருப்பது அக்கூட்டணியின் வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதேவேளையில், தேர்தலைச் சந்திக்கத்…
தளபதி விஜய் நடிப்பில் உருவான ‘ஜன நாயகன்’ திரைப்படம் தணிக்கை சிக்கல்கள் காரணமாகத் திரையரங்குகளில் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 9, 2026) முழுத் திரைப்படமும் இணையதளங்களில் சட்டவிரோதமாகக் கசிந்தது படக்குழுவினரை நிலைகுலையச் செய்துள்ளது. தொடர்ந்து பல கட்ட போராட்டத்திற்கு பிறகு ஜனநாயகன்படத்தை மறு தணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு பட தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பி வைத்தது. விரைவில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு பின்னர் ஏப்ரல் 30ஆம் தேதி ஜனநாயகன் படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் விஜய் தனது ஜனநாயகன் படத்திற்கு ஆளும் தரப்பு பிரச்சனை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் படத்தில் விஜய்யின்அறிமுகம் மற்றும் இறுதி காட்சிகள் இணையத்தில் கசிந்தது. சுமார் ஐந்து நிமிடங்களுக்கு மேலாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து சட்டவிரோதமாக முழு…
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் நாளை (ஏப்ரல் 11) பரப்புரை மேற்கொள்ளத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் திட்டமிட்டிருந்தனர். ஒரே நாளில், ஒரே மாவட்டத்தில் இரு முக்கியத் தலைவர்களும் பிரசாரம் செய்வது பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ரீதியாகச் சவால்களை ஏற்படுத்தும் என்பதால், காவல்துறையினர் ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கத் தீர்மானித்தனர். இதில், தவெக தரப்பில் முன்னதாகவே விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதைக் கணக்கில் கொண்டு, விஜய்யின் பரப்புரைக்குக் காவல்துறை பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதன் காரணமாக, நாளை கடலூரில் நடைபெறவிருந்த உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பிரசாரத்துக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய்யின் வருகைக்காகக் கடலூர் மாவட்டத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், உதயநிதியின் பரப்புரை வேறொரு தேதிக்கு மாற்றப்படும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாகப் பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்டபோது தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்த…
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க 1952-ஆம் ஆண்டு அணியில் இடம்பெற்றிருந்த கடைசி வீரரான சி.டி. கோபிநாத் (96), நேற்று (ஏப்ரல் 9, 2026) சென்னையில் காலமானார். வயது முதிர்வு காரணமாகச் சென்னையில் உள்ள தனது மகளின் இல்லத்தில் அவர் இயற்கை எய்தினார். 1951 முதல் 1960 வரை இந்திய அணிக்காக 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், சிறந்த பேட்ஸ்மேனாக மட்டுமின்றி, பின்னாளில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழுத் தலைவராகவும் பணியாற்றி இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர். 1952-ஆம் ஆண்டு சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றபோது, அந்தப் போட்டியில் கோபிநாத் முக்கியப் பங்காற்றினார். குறிப்பாக, வினு மன்கட் வீசிய பந்தில் பிரையன் ஸ்டாதத்தை ஆட்டமிழக்கச் செய்ய அவர் பிடித்த அந்த…
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு உரிய நஷ்டஈடாக ‘இரத்த பணம்’ (Blood Money) வழங்கப்பட வேண்டும் என்று ஈரானின் புதிய உச்சத்தலைவர் முஜ்தபா கமேனி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்திய தாக்குதல்களில் ஈரான் சந்தித்த இழப்புகளுக்கு அமெரிக்கா பொறுப்பேற்று இழப்பீடு வழங்காவிட்டால், அதற்கு காரணமான குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஈரானின் இந்தத் திடீர் நிபந்தனை, தற்போது நிலவி வரும் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உலக நாடுகளின் கவலையை அதிகரித்துள்ளது ஈரானின் ஹார்முஸ் நீரிணை குறித்த அறிவிப்புதான். உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான வழித்தடமான ஹார்முஸ் நீரிணையின் நிர்வாகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்போவதாக முஜ்தபா கமேனி கூறியுள்ளார். இதன் மூலம் இந்த வழித்தடத்தை ஈரான் மீண்டும் முழுமையாக மூடிவிடுமோ அல்லது சர்வதேச கப்பல்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதிக்குமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.…
காரைக்குடி பிரச்சாரத்திற்காக சென்றபோது மதுரை அருகே தவெக தலைவர் விஜய் வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்த ரசிகர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மாநிலம் தழுவிய தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். சென்னை, திருச்சி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தனது முதற்கட்டப் பிரச்சாரத்தை வெற்றிகரமாக முடித்துள்ள அவர், இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வாக்கு சேகரிக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்த விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக காரைக்குடிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரை அருகே திருமங்கலம் பகுதியில் அவரது வாகனத்தை உற்சாகத்துடன் பின்தொடர்ந்து வந்த ரசிகர்கள் இருவர் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி காயமடைந்தனர். இன்றைய காரைக்குடி பரப்புரைக்காகக் காவல்துறை சார்பில் 37 கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகக் கண்ணதாசன் மணிமண்டபம் மற்றும்…
சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 10) அதிரடியாக உயர்ந்து சவரன் 1.13 லட்சத்தைத் தாண்டியுள்ளது நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாகத் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு 1,000 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், ஒரு கிராம் தங்கம் 125 ரூபாய் அதிகரித்து 14,125 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,13,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, தற்போது மீண்டும் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வரும் நாட்களில் சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொறுத்து விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பது, திருமண விசேஷங்களுக்காக நகை வாங்கத்…
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து டி.எம்.எஸ் (DMS) மெட்ரோ நிலையம் வரை பொதுமக்களுடன் இணைந்து மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சாதாரண பயணியைப் போல வரிசையில் நின்று பயணச்சீட்டு பெற்றுக்கொண்ட அவர், ரயிலில் பயணித்த பயணிகளுடன் கலந்துரையாடினார். மெட்ரோ ரயில் சேவையின் தரம் மற்றும் பயணிகளின் வசதிகள் குறித்து அவர் கேட்டறிந்ததோடு, பொதுமக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். இந்த பயணத்தின் போது, மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பொதுமக்களுடன் அவர் செல்பி எடுத்துக்கொண்டது பயணிகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் மெட்ரோ ரயிலின் பங்கு மற்றும் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசித்தார்.