Author: Editor web3

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான என் டி ஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று  மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். பாஜக உருவான தினத்தை முன்னிட்டு சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கலந்துகொண்டு பாஜக கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், “13.4 கோடி பாஜக காரியகர்தாக்களுக்கு எனது சார்பில் பாஜக துவங்கிய தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 1980 ஆம் ஆண்டு பாஜக தொடங்கப்பட்டது, தொடங்கிய காலத்தில் இருந்து பல முயற்சிகளால் தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி பாஜக. கடந்த ஐந்தாண்டுகள் தமிழ்நாடு அரசின் தோல்வியால் மணல் கொள்ளை, சாராய ஊழல், துறைகளில் ஊழல், பணம் பெற்றுக் கொண்டு வேலைவாய்ப்பு வழங்குவது என மோசமான ஆட்சி நிலவியது. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சபரீசன் கனிமொழி…

Read More

சென்னை போரூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த சின்னத்திரை நடிகை சுபாஷினி (36), குடும்பத் தகராறு காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், பெங்களூரில் தனது கணவர் பிப்பின் என்பவருடன் வசித்து வந்தார். சமீபகாலமாக படப்பிடிப்புப் பணிகளுக்காகச் சென்னை வந்திருந்த அவர், போரூரில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்து பல்வேறு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வந்தார். சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான இவர், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘கயல்’ உள்ளிட்ட சீரியல்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்ததோடு, சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் முத்திரை பதித்துள்ளார். நேற்று இரவு தனது கணவருடன் வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்தத் திடீர் மோதலால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சுபாஷினி, சில நிமிடங்களிலேயே விபரீத முடிவை எடுத்துத் தற்கொலை செய்து கொண்டதாக…

Read More

சர்வதேச அளவில் நிலவி வரும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்தியா ஒரு வலிமையான சக்தியாகத் தடம் பதித்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தின் 15-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய அவர், கொரோனா பெருந்தொற்று, உலகளாவிய பொருளாதாரத் தேக்கநிலை மற்றும் பருவநிலை மாற்றங்கள் போன்ற சவால்களை இந்தியா மிகத் துணிச்சலாகக் கையாண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். உலக நாடுகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் வேளையில், இந்தியா தனது தனித்துவமான பாதையில் முன்னேறி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்பம், எரிசக்தி, ராணுவ வலிமை மற்றும் விநியோகச் சங்கிலித் தொடர் போன்றவை வெறும் வசதிகளாக மட்டுமல்லாமல், நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திரப் போர்க்கருவிகளாகவே உருமாறி வருவதாக அமைச்சர் எச்சரித்தார். இத்தகைய கணிக்க முடியாத மற்றும் சிக்கலான உலகளாவிய சூழலில், பல நாடுகள்…

Read More

நீர் என்பது அனைவருக்கும் ஒரு அடிப்படைத் தேவையாகும். எந்தெந்த நாடுகளில் மிகத் தூய்மையான நீர் உள்ளது என்பதையும், இது தொடர்பாக இந்தியாவின் தரவரிசையையும் ஆராய்வோம். சுத்தமான குடிநீர் என்பது உலகின் மிக அடிப்படையான, ஆனால் சமமற்ற முறையில் விநியோகிக்கப்படும் ஒரு வளமாகும். சில நாடுகள் மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் கடுமையான சுற்றுச்சூழல் கொள்கைகள் மூலம் மிகச்சிறந்த நீர்த் தரத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியா போன்ற நாடுகள் இன்னும் சில சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. 2024-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் (Environmental Performance Index), 180 நாடுகளில் இந்தியா 176-வது இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக ‘சுற்றுச்சூழல் ஆரோக்கியம்’ பிரிவில் இந்தியா 177-வது இடத்தில் உள்ளது, இது பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரத்தில் இன்னும் முன்னேற்றம் தேவை என்பதைக் காட்டுகிறது. சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு (Environmental Performance Index – 2024) அறிக்கையின்படி, பாதுகாப்பான குடிநீர் வழங்கும் நாடுகளின் பட்டியலில், பின்லாந்து, ஐஸ்லாந்து,…

Read More

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்கவும், நிரந்தர அமைதியை நிலைநாட்டவும் 45 நாட்கள் தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இரு நாடுகளும் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. . இது தொடர்பான பேச்சுவார்த்தையில் பிராந்திய சமரசக் குழுவினரும் இணைந்துள்ளதாக ‘ஆக்சியோஸ்’ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த அமைதிப் பேச்சுவார்த்தையை இரண்டு முக்கியக் கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, உடனடியாக 45 நாட்களுக்குப் போரை நிறுத்திவிட்டு, அந்த இடைவெளியில் நிரந்தரத் தீர்வு காண்பதற்கான இறுதி உடன்படிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. இந்தத் தற்காலிகப் போர்நிறுத்தக் காலத்தில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை என்றால், பேச்சுவார்த்தைக்காகக் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் தகவல்கள் குறித்து அமெரிக்கத் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. ராய்ட்டர்ஸ் போன்ற சர்வதேச செய்தி நிறுவனங்களும் இந்தத் தகவலை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை எனத்…

Read More

கலைஞர் தனது இறுதிக்காலத்தில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார் என்ற எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தோல்வி பயத்தில் இத்தகைய அவதூறுகளைப் பரப்பும் எடப்பாடி பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை. அரசியல் நாகரிகம் கருதியே எம்ஜிஆர், ஜெயலலிதா சிகிச்சை குறித்து நாங்கள் பேசுவதில்லை. கலைஞரின் சிகிச்சை விவரங்கள் வெளிப்படையானவை; அவரைப் பற்றி அவதூறு பேசினால் வேடிக்கை பார்க்க மாட்டோம்” என அவர் எச்சரித்துள்ளார். மேலும், கலைஞர் தனது தந்தை மட்டுமல்ல கோடிக்கணக்கான தொண்டர்களின் தலைவர். முத்தமிழறிஞர் கலைஞரைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசியதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கலைஞர் கருணாநிதி குறித்து பேசினால் அமைதியாக இருக்க மாட்டோம்.  கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசினால் திமுக தொண்டனாக பார்த்து கொணடிருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Read More

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம், தமிழகத்தையே உலுக்கிய ஒரு கொடூரமான நிகழ்வாகும். இந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கடந்தும், உண்மையான குற்றவாளிகள் இதுவரை கண்டறியப்படவில்லை. இதனால் ஏற்பட்ட அதிருப்தியில், தற்போது இறையூர் கிராம மக்கள் வரவிருக்கும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்புப் பலகைகளை வெள்ளிக்கிழமை இரவு கிராமத்தின் பல்வேறு இடங்களில் வைத்துள்ளதால், அப்பகுதியில் மீண்டும் பரபரப்பும் பதற்றமும் அதிகரித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபி-சிஐடி இது தனிப்பட்ட பகை காரணமாகவே வேங்கைவயலைச் சேர்ந்த மூன்று நபர்களால் செய்யப்பட்டதாகக் கூறி வழக்குப் பதிவு செய்தது. இருப்பினும், இந்தச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை வேங்கைவயல் கிராம மக்கள் முற்றிலுமாக மறுத்து வருகின்றனர். தாங்கள் அப்பாவிகள் என்றும், அண்டை கிராமங்களைச் சேர்ந்தவர்களே இதற்குப் பொறுப்பாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். இதனால் இரு கிராம…

Read More

சென்னையில் கடந்த மூன்று நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று அதிரடி சரிவைக் கண்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் லாப நோக்கம் காரணமாக, இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் நிம்மதி அடைந்துள்ளனர். குறிப்பாக, 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.13,810-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலையில் ரூ.1,120 குறைந்து, ரூ.1,10,480-க்கு விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் விலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், வெள்ளி விலை இன்றும் எவ்வித மாற்றமுமின்றி நிலையாகவே நீடிக்கிறது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார சூழலால் தங்கம் விலையில் அடிக்கடி ஏற்ற இறக்கங்கள் நிலவி வரும் நிலையில்,…

Read More

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தற்போது ஒரு இக்கட்டான நிலையில் இருந்தாலும், பேட்டிங்கில் புதிய மைல்கல்லை எட்டி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. பொதுவாக அதிக ரன்களைக் குவிப்பதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அல்லது ஆர்சிபி போன்ற அணிகளே முன்னிலையில் இருக்கும் என்று கருதப்படும் நிலையில், புள்ளிவிவரங்களின்படி சிஎஸ்கே தான் தற்போது “கிங்” ஆக உருவெடுத்துள்ளது. நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்ற ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே தோல்வியடைந்தாலும், அந்தப் போட்டியில் எடுத்த 207 ரன்களின் மூலம் ஒரு பிரம்மாண்ட சாதனையைப் படைத்துள்ளது. நேற்றைய போட்டியில் சிஎஸ்கே 207 ரன்களை எட்டியதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை 200+ ரன்களைக் கடந்த முதல் அணி என்ற பெருமையை சிஎஸ்கே பெற்றுள்ளது. இதுவரை மொத்தம் 37 முறை சிஎஸ்கே 200 ரன்களுக்கு மேல் விளாசி முதலிடத்தில் உள்ளது. முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலேயே 36-வது முறையை எட்டி ஆர்சிபியின்…

Read More

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னையில் இன்று மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரச்சாரப் பயணங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம் மற்றும் தி.நகர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக, வில்லிவாக்கம் மற்றும் டி.நகர் பகுதிகளில் தலா ஒரு மணி நேரம் மட்டுமே பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதால், அந்த கால அவகாசம் போதுமானதாக இருக்காது எனக் கருதி விஜய் தனது பயணத்தைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளார். குறைந்த நேர ஒதுக்கீடு குறித்து மீண்டும் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் முறையிட விஜய் முடிவெடுத்துள்ளதாகவும், உரிய அனுமதி கிடைத்த பிறகு புதிய அட்டவணைப்படி மீண்டும் பிரச்சாரம் தொடங்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்ட நிலையில், இந்தத் தொடர் ரத்து நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில்…

Read More