Author: Editor web3
தமிழ்நாட்டில் இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக, சசிகலா – ராமதாஸ் அணி என 5 முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கினார். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். இதனிடையே சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30ம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. வேட்பு மனுக்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தளி தொகுதியிலும், கிஷன் ரெட்டி அரந்தாங்கியிலும், சுரேஷ் கோபி விளவங்கோடு தொகுதியிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். அதேபோல், கிரண் ரிஜ்ஜு பத்மநாபபுரத்திலும், பந்தி சஞ்சய் குமார் திருப்பத்தூரிலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாத்தூர் தொகுதியிலும் முகாமிட்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். ஏற்கனவே மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழகத்தில் தங்கி தேர்தல் பணிகளை நேரில் மேற்பார்வையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சர்களுடன் இணைந்து கட்சியின் தேசிய நிர்வாகிகளும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். பாஜக தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா, ஆந்திர மாநில செய்தி தொடர்பாளர் சுஹாசினி, ஆந்திர மாநில…
கேரளாவில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட வேண்டும் என்ற இலக்குடன், அம்மாநிலத் தேர்தல் ஆணையம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்காகப் பல கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, முதன்முறை வாக்களிக்கும் இளைஞர்களை ஊக்குவிக்க “வாக்களிப்பு ஒரு இனிமையான தொடக்கம்” (Vote Sweetened Kerala) என்ற பெயரில் புகழ்பெற்ற கேரளா அல்வா இனிப்புப் பொட்டலங்கள் வழங்கப்பட உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் இந்த இனிப்பு வழங்கப்பட்டு, வாக்களிப்பதை ஒரு கொண்டாட்டமாக மாற்றத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. வாக்காளர்கள் சிரமமின்றி வாக்குச்சாவடிக்கு வந்து செல்ல ஏதுவாக, முன்னணி தனியார் போக்குவரத்து நிறுவனமான ஊபர் (Uber) உடன் இணைந்து எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் இலவசப் பயணத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர்கள் கார், ஆட்டோ அல்லது பைக் மூலம் குறிப்பிட்ட தூரம் வரை இலவசமாகச் செல்ல சிறப்பு ‘கூப்பன்கள்’ வழங்கப்படுகின்றன. மேலும்,…
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளில் 27 தொகுதிகளின் வேட் பாளர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மேலூர் தொகுதி வேட்பாளர் பெயர் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் முன்பே, கடந்த வாரம் மேலூர் தொகுதியில் உள்ளூர்காரர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் வெளியூர்க்காரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதை கண்டிக்கிறோம் என்ற தலைப்பில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்தன. இதுமட்டுமல்லாமல், மேலூர் தொகுதிக்கு உள்ளூரைச் சேர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைத் துறை மாநிலத் தலைவர் மகாத்மா சீனிவாசன் என்பவரும், சிவகங்கை அருகே பச்சேரியைச் சேர்ந்த சி.ஆர்.சுந்தர்ராஜன் உட்பட சிலர் வேட்பாளராக கடும் போட்டியில் உள்ளதால், பெயர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதில் சி.ஆர்.சுந்தர்ராஜன், காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலுவின் தீவிர ஆதரவாளர். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை எம்பி கார்த்தி ப.சிதம்பரம் ஆகியோர் மூலம் சிவகங்கை தொகுதி வேட்பாளராக முயற்சி செய்தார். அத்தொகுதியை…
இந்திய ஓவியக் கலையின் தந்தை எனப் போற்றப்படும் ராஜா ரவிவர்மாவின் கைவண்ணத்தில் உருவான ஒரு அபூர்வ ஓவியம், இந்தியக் கலை வரலாற்றிலேயே மிக அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுப் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற கலைப் பொருட்கள் ஏலத்தில், ரவிவர்மாவின் ‘யசோதா மற்றும் குழந்தை கிருஷ்ணா’ என்ற புகழ்பெற்ற ஓவியம் ரூ. 167.20 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இதன் மூலம், இந்திய ஓவியம் ஒன்று ஈட்டிய மிக உயர்ந்த ஏலத் தொகை இது என்ற வரலாற்றுச் சாதனையை இப்படைப்பு நிகழ்த்தியுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு எம்.எப்.ஹுசைன் அவர்களின் ஓவியம் ரூ. 118 கோடிக்கு விற்பனையானதே சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை ரவிவர்மாவின் ஓவியம் முறியடித்துள்ளது. ஓவியத்தின் சிறப்பம்சங்கள்: 1890-களில் வரையப்பட்ட இந்த ஓவியம், புராணக் கதையைத் தத்ரூபமாக நம் கண்முன் நிறுத்துகிறது. யசோதா பசுவிடம் பால் கறக்கும் காட்சியும், பின்னால் இருந்து குட்டி கிருஷ்ணர் ஒரு கோப்பையை எடுக்க…
இந்தியத் திரையுலகில் ஒரு படம் ரூ. 1000 கோடி வசூலை எட்டுவது என்பது தற்போது ஒரு மைல்கல்லாக மாறிவிட்டது. தங்களின் அபாரமான நடிப்பு மற்றும் படத்தேர்வின் மூலம், இந்திய அளவில் அதிக வசூல் ஈட்டிய டாப் 6 நடிகைகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது. பட்டியலில் முதலிடம் எப்போதும் போல ‘தேவசேனா’ அனுஷ்காவிடமே உள்ளது. எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ திரைப்படம் படைத்த ரூ. 1788 கோடி உலகளாவிய வசூல் சாதனை, இன்றுவரை ஒரு நடிகையின் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக நீடிக்கிறது. சமீபகாலமாக இந்தியாவையே தன் பக்கம் திருப்பியுள்ள ராஷ்மிகா மந்தனா, இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவரது நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் தற்போது வரை ரூ. 1742 கோடி வசூலித்து, இவரை ஒரு தவிர்க்க முடியாத பான்-இந்தியா நட்சத்திரமாக உயர்த்தியுள்ளது. குழந்தை நட்சத்திரமாகப் பலரது மனங்களை வென்ற சாரா அர்ஜுன், தற்போது நாயகியாக மூன்றாவது இடத்தில் மின்னுகிறார். இவர்…
ஈரானால் அமெரிக்க எஃப் 15 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபோது காணாமல் போன அமெரிக்க விமானி வெற்றிகரமாக மீட்கப்பட்டுவிட்டார்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தினார். TruthSocial தளத்தில் அவர் பதிவிட்ட ஒரு பதிவில், இந்த நடவடிக்கையை “அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் துணிச்சலான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஒன்று” என விவரித்ததோடு, அந்த விமானி தற்போது “பாதுகாப்பாகவும் நலமாகவும்” உள்ளார் என்றும் கூறியுள்ளார். விமானி “ஈரானின் மலைப்பகுதிகளில் எதிரிப் படைகளுக்குப் பின்னால்” இருந்ததாகவும், விரோதப் படைகளால் துரத்தப்பட்டதாகவும் கூறிய டிரம்ப், எந்தவொரு அமெரிக்க உயிரிழப்பும் இன்றி இந்தப் பணியை வெற்றிகரமாக முடித்த அமெரிக்க இராணுவத்தைப் பாராட்டியதோடு, இதை “அமெரிக்க வான் ஆதிக்கத்தில் ஒரு வரலாற்றுச் சாதனை” என்றும் குறிப்பிட்டார். விமானப்படை வீரர்களின் வீரத்தையும், இராணுவத்தின் தொழில்முறைத் திறனையும் பாராட்டிய டிரம்ப், “ஒரு அமெரிக்கப் போர் வீரரையும் நாடு ஒருபோதும் கைவிடாது” என்று அறிவித்தார். மீட்கப்பட்ட விமானப்படை வீரர் காயமடைந்திருந்தாலும், அவர்…
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பிளாக் பாக்ஸ் தரவுகளை வெளியிடக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கடந்த 2025 ஜூன் 12 அன்று சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியில் ஏர் இந்தியா விமானம் மோதி தீப்பிடித்ததில், 241 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் உட்பட, தரையில் இருந்த 19 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். 260 பேர் உயிரிழந்த பேரழிவுகரமான ஏர் இந்தியா விபத்து நடந்து கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்குப் பிறகு, விமானத்தின் காக்பிட் குரல் பதிவுக் கருவி (CVR) மற்றும் விமானத் தரவுப் பதிவுக் கருவி (FDR) ஆகியவற்றின் தகவல்களை வெளியிடுமாறு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குஜராத் முழுவதிலும் இருந்து சுமார் 30 உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் சனிக்கிழமையன்று…
தனியார் எரிவாயு விநியோக நிறுவனமான டாரண்ட் கேஸ் (Torrent Gas), குழாய்கள் மூலம் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் இயற்கை எரிவாயுவின் (CNG) விலையை கிலோவிற்கு ரூ. 2.50 உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால், அன்றாடப் பயணிகள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். எரிபொருள் கொள்முதல் செலவு மற்றும் உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள அழுத்தம் காரணமாக இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதனால் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் மற்றும் சிறு போக்குவரத்துத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஒரு கிலோ விலை தற்போது ரூ.91.50 என்ற அளவில் உள்ளது. கடந்த 1ம் தேதி வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்தது. எரிபொருள் பிரச்சனை இல்லை என அரசு கூறி வரும் அதே வேளையில் விலை உயர்வும் தொடர்கிறது. பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து…
இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிப் விடுத்துள்ள மிரட்டல் பதிலடி, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டால், முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ‘சைனிக் சம்மான்’ கூட்டத்தில் எச்சரித்திருந்தார். கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சிந்து’ நடவடிக்கை இன்னும் தொடர்வதாகவும், மீண்டும் தவறு செய்தால் பாகிஸ்தான் ஒருபோதும் மறக்க முடியாத பாடத்தை இந்தியப் படைகள் புகட்டும் என்றும் அவர் கூறியிருந்தார், குறிப்பாக, கடந்த முறை இந்தியப் படைகள் வெறும் 22 நிமிடங்களில் எதிரி நாட்டை நிலைகுலையச் செய்ததை அவர் சுட்டிக்காட்டிப் பேசினார். இந்தக் கருத்திற்குப் பதிலடி கொடுத்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்,…