Author: Editor web3

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி விழுப்புரத்தில் பரப்புரை மேற்கொண்டார்.  அப்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாக ஆ.ராசா பேசியதாகக் கூறப்படும் ஆடியோ குறித்து இ.பி.எஸ் விமர்சித்து பேசினார். “ஆ.ராசாவின் பேச்சைக் கேட்டு ஸ்டாலின் அதிர்ந்து போய்விட்டார். சொந்த அப்பாவையே வீட்டுச் சிறையில் வைத்ததாகக் கூறப்படும் கருத்தைத் தட்டிக்கேட்க ஸ்டாலினுக்குத் தெம்பு இருக்கிறதா? ஆ.ராசாவைக் கண்டித்தால் இன்னும் பல ஆடியோக்கள் வெளியாகிவிடும் என்ற பயத்தில் முதலமைச்சர் இருக்கிறார்.” “அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், இந்த ஆடியோ விவகாரம் குறித்துச் சட்ட ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஆ.ராசா, அரசியல் ஆதாயத்திற்காக இவ்வாறு பேசுவது அயோக்கியத்தனமானது என்று விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி மண்டியிட்டு பதவி பெற்றவர் என்றும் அரசியலுக்கு அருகதையற்றவர் என்றும் விமர்சித்தார். மேலும் ச்சீ! ச்சீ!. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு எனவும் காட்டமாக…

Read More

ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு 2026 ஐபிஎல் சீசனில் சற்று பின்னடைவைச் சந்தித்துள்ளது. தான் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் (ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளிடம்) தோல்வியைத் தழுவியுள்ள சிஎஸ்கே, இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. நடப்பு சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள சிஎஸ்கே அணிக்கு, ஆர்சிபி-யுடனான கடந்த காலப் புள்ளி விவரங்கள் பெரும் சவாலாகவே உள்ளன. ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடிய கடந்த மூன்று போட்டிகளிலும் சிஎஸ்கே தோல்வியைச் சந்தித்துள்ளது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நடப்பு சாம்பியனான ஆர்சிபி தனது முதல் போட்டியில் அபார வெற்றி பெற்று நல்ல ஃபார்மில் உள்ள நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி இந்தத் தொடர் தோல்விகளுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்குமா என…

Read More

தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். இதில் பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தவெக தலைவர் விஜய், கடந்த 30ஆம் தேதி தாக்கல் செய்தார். இதில், தனக்கு இருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள், தன் தந்தை, தாய், மனைவி, மகன் மற்றும் மகளுக்கு கொடுத்துள்ள கடன் தொகை விவரம் உள்ளிட்டவற்றை தெரிவித்திருந்தார். பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவில் எந்தவித காவல்துறை வழக்கும் இல்லை எனத் தெரிவித்திருந்தார். பின்னர் கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது திருச்சி கிழக்கு தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ள விஜய், இந்த வழக்குடன் சேர்த்து 2025ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கையும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வழக்கை ஏன் பெரம்பூர் மனு தாக்கலில் அவர் குறிப்பிடவில்லை என பரவலாக பேச்சு எழுந்தது.…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராக அறிவிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, இன்று முதல் தனது அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். கட்சியின் வெற்றிக்காகத் தமிழகம் முழுவதும் சுழன்று பணியாற்றத் திட்டமிட்டுள்ள அவர், இன்று கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாகத் தனது முதல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார். நாளை திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதிக்குச் செல்லும் அண்ணாமலை, அங்கு போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து அவிநாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார். தான் தேர்தலில் போட்டியிடாத போதிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வதே தனது முக்கிய இலக்கு என அவர் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பாஜக வெளியிட்டுள்ள நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் முக்கிய…

Read More

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்கியது. அரசு விடுமுறை நாட்கள் போக, மிகக் குறைந்த நாட்களே அவகாசம் இருந்த நிலையில், வேட்பாளர்கள் ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். இதுவரை சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், நேற்று (ஏப்ரல் 4) ஒரே நாளில் மட்டும் 2000-க்கும் அதிகமானோர் மனுக்களைச் சமர்ப்பித்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (ஏப்ரல் 6) கடைசி நாள் என்பதால், மீதமுள்ள வேட்பாளர்கள் நாளை தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 3000 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாளை காலை 11 – 3 மணி வரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யப்படும். சரியாக 3 மணிக்கு அலுவலக நுழைவாயில் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக்…

Read More

பேராவூரணி தவெக வேட்பாளர் சந்திர காண்டீபன் மீது கஞ்சா உள்ளிட்ட குற்ற வழக்குகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில், மனைவி, குழந்தையுடன் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகம், பேராவூரணி தொகுதியில் சந்திர காண்டீபனை வேட்பாளராகக் களமிறக்கியுள்ளது. இந்நிலையில், அவர் மீது கஞ்சா வழக்கு மற்றும் குடும்பத் தகராறு தொடர்பான புகார்கள் இருப்பதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், தன் மீது எந்தவிதமான குற்றப் பின்னணியும் இல்லை என்றும், திட்டமிட்டு பரப்பப்படும் இத்தகைய பொய்ப் பிரச்சாரங்களால் தனது குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். https://x.com/NirmalaSuku/status/2040588061000585381? தன்னைப் பற்றிய அவதூறுகளால் பள்ளியில் பயிலும் தனது மகள்கள் மற்றும் ஆசிரியையாகப் பணியாற்றும் தனது மனைவி ஆகியோர் சமூகத்தில் பெரும் சங்கடங்களைச் சந்திப்பதாக சந்திர காண்டீபன்…

Read More

இந்தியா வர வேண்டிய ஈரானிய கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல், பணப் பரிமாற்றச் சிக்கல் காரணமாக பாதியிலேயே திசை மாறி சீனாவுக்குச் சென்றதாக வெளியான செய்திகளை மத்திய அரசு மறுத்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய பெட்ரோலிய அமைச்சகம், இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் எந்தவிதமான பணப் பரிமாற்றச் சிக்கல்களையும் எதிர்கொள்ளவில்லை. சர்வதேச எண்ணெய் வர்த்தகத்தின் நடைமுறைகளைப் புரிந்து கொள்ளாமல் இத்தகைய தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. கப்பல்கள் பயணத்தின் போது தங்களின் செயல்பாட்டு சுதந்திரத்தின் அடிப்படையில் இலக்குகளை மாற்றுவது இயல்பானது” என்று தெரிவித்துள்ளது. முன்னதாக, ‘பிங் ஷுன்’ (Ping Shun) என்ற அஃப்ராமக்ஸ் வகை டேங்கர் கப்பல் குஜராத்தின் வாடினார் துறைமுகத்திற்கு வருவதற்குப் பதிலாக, சீனாவின் டோங்யிங் நோக்கிச் சென்றதாகக் கப்பல் கண்காணிப்பு நிறுவனமான ‘கேப்லர்’ (Kapler) தெரிவித்திருந்தது. அமெரிக்கத் தடைகள் தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஈரானிய எண்ணெயை வாங்குவது குறித்துப் பரிசீலித்து வருகின்றன.…

Read More

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதால் எண்ணெய் விலை விண்ணைத் முட்டும் அளவிற்கு உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவிற்குத் தேவையான கூடுதல் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை தங்குதடையின்றி வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. இது தொடர்பாக இந்தியா வந்துள்ள ரஷ்யத் துணைப் பிரதமர் டெனிஸ் மான்ட்ரூவ், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைச் சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினார். அமெரிக்காவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அடுத்த இரு வாரங்களுக்குப் போர் தீவிரமடைய வாய்ப்புள்ள சூழலில், இந்திய எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய ரஷ்யாவுடனான இந்த உறவு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது, சிவில் அணுசக்தித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும்,…

Read More

தேசிய நெடுஞ்சாலைகளில் பயண நேரத்தைக் குறைக்கவும், வாகன நெரிசலைத் தவிர்க்கவும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 10-ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த ரொக்கப்பணம் பெறுவது முற்றிலும் நிறுத்தப்படுகிறது. இதுவரை கட்டண விலக்கு கோரி அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய நபர்கள் தங்களது அடையாள அட்டைகளைக் காண்பித்துச் செல்வது வழக்கமாக இருந்தது. இதனால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே அடிக்கடி ஏற்படும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. புதிய விதிகளின்படி, கட்டண விலக்கு பிரிவில் வருபவர்கள் இனி தங்களது அடையாள அட்டைகளைச் சுங்கச்சாவடிகளில் காட்ட முடியாது. அதற்குப் பதிலாக, ‘விலக்கு அளிக்கப்பட்ட பாஸ்டேக்’ (Exempted FASTag) அட்டையை அதிகாரப்பூர்வமாகப் பெற வேண்டும் அல்லது ஆண்டு சந்தா அட்டையை வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கார்களுக்கான ஆண்டு சந்தா…

Read More

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக தனது தேர்தல் வியூகங்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இக்கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்கள் (Star Campaigners) பட்டியலைத் தேசியத் தலைமை வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 10 மத்திய அமைச்சர்களும், யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட 6 மாநில முதல்வர்களும் தமிழகத்தில் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளனர். இந்தத் தேர்தல் களத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாதது அவரது ஆதரவாளர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் முக்கிய இடம்பிடித்துள்ளது. தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட போதிலும், கட்சியின் வெற்றிக்காகத் தமிழகம்…

Read More