Author: Editor web3

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக எண்ணெய் விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், தற்போது பாட்டில் தண்ணீர் விலைகளும் உயர்த்தப்படுகின்றன. பிஸ்லெரி நிறுவனம் சமீபத்தில் விலையை 11% உயர்த்தியுள்ளது. ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நடந்து வரும் மோதல் தற்போது இரண்டாவது மாதமாக தீவிரமடைந்து வருகிறது. இது ஏற்கனவே உலகளாவிய எண்ணெய் விநியோகத்தைப் பாதித்து, எரிபொருள் விலைகளை உயர்த்துகிறது. ஹார்முஸ் ஜலசந்தியின் முற்றுகையானது எண்ணெய், விவசாயம், விமானப் போக்குவரத்து, இரசாயனங்கள் மற்றும் எண்ணற்ற பிற தொழில்களைப் பாதிக்கிறது.  இதன் நேரடி பாதிப்பு இப்போது இந்தியாவின் பேக்கேஜ்டு குடிநீர் (Packaged Drinking Water) துறையைத் தாக்கியுள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனமான பிஸ்லெரி (Bisleri), தனது தயாரிப்புகளின் விலையை 11 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் 12 ஒரு லிட்டர் பாட்டில்கள் கொண்ட ஒரு பெட்டியின் விலை ரூ/24 வரை அதிகரித்துள்ளது. பெய்லி (Bailey), கிளியர் (Clear) போன்ற பிற நிறுவனங்களும் விலையை உயர்த்தத்…

Read More

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் போர் விமானம் வீழ்த்தப்பட்டது குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் முதல்முறையாக பகிரங்கமாகப் பேசியுள்ளார். சனிக்கிழமை இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அமெரிக்க போர் விமானம் அழிக்கப்பட்டதால் ஈரானுடனான ராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறினார். “இல்லை, இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இது போர்; நாங்கள் இப்போது போர்க்களத்தில் இருக்கிறோம்,” என்று டிரம்ப் அதிரடியாகத் தெரிவித்தார். போர்ச் சூழல் நிலவினாலும், ஒருபுறம் ராணுவ நடவடிக்கைகளும் மறுபுறம் பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெறும் என்றார். ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி அல் ஜசீரா வெளியிட்டுள்ள தகவலின்படி, ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்காவின் ஏ-10 (A-10) ரக போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது. தரை இலக்குகளையும் கவச வாகனங்களையும் அழிக்கும் திறன் கொண்ட இந்த ஏ-10 விமானம், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.…

Read More

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது மோசமான ஆட்டத்தைத் தொடர்ந்து வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் படுதோல்வியைத் தழுவிய சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது இரண்டாவது போட்டியிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இப்போட்டியில் 22 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் ஆட்டம் குறித்து முன்னாள் இந்திய வீரர் ஆர். அஸ்வின் தனது யூடியூப் சேனலில் காரசாரமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். போட்டிக்குப் பிந்தைய பேட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் கூறிய சில காரணங்களை அஸ்வின் மறுத்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “போட்டி முடிந்து ருதுராஜ் சொன்ன ஒரு கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆடுகளத்தில் பந்து நின்று வந்ததாக அவர் கூறினார், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மைதானத்தில் ஈரப்பதம் (Moisture) சிறிதும் இல்லை. ஒருவேளை ஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்விங் இருந்திருக்கலாம், அதை நான் மறுக்கவில்லை. கடந்த…

Read More

மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவர் முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், “மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்  அரசியலுக்கு வந்தபோது ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். அந்தத் தாக்கம் அன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. அதேபோன்ற ஒரு தாக்கத்தை வரும் தேர்தலில் நடிகர் விஜய் ஏற்படுத்துவார்” எனத் தெரிவித்தார். மேலும், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஏற்படுத்தும் இந்தத் தாக்கம் இம்முறை ஆளும் திமுகவிற்குப் பெரும் பின்னடைவை மற்றும் பாதிப்பைத் தரும் என்று தினகரன் குறிப்பிட்டார். இந்தச் சூழல் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறாமல் இருக்க உதவுவதோடு, இறுதியில் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ (NDA) கூட்டணிக்குச் சாதகமான களத்தை அமைத்துக் கொடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை…

Read More

சென்னை சேப்பாக்கம் மைதானம் என்றாலே எதிரணிகளுக்கு ஒருவித அச்சம் இருக்கும். ஆனால், தற்போது அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. 19-வது ஐபிஎல் தொடரின் 7-வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 208 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த போதிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் அந்தப் போட்டியைத் தக்கவைக்க முடியவில்லை. 209 ரன்களைப் பஞ்சாப் அணி எளிதாக எட்டியது, சிஎஸ்கே-வின் பந்துவீச்சு பலவீனத்தை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது. இது வெறும் ஒரு போட்டித் தோல்வி மட்டுமல்ல, தனது சொந்த மண்ணில் சென்னை அணி சந்தித்து வரும் ஒரு மோசமான சரிவின் தொடர்ச்சியாகும். புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் சேப்பாக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய சென்னை அணி, 2025-ம் ஆண்டிலிருந்து தடுமாறத் தொடங்கியுள்ளது. 2023-ல் விளையாடிய 8 போட்டிகளில் 5-ல் வென்ற சிஎஸ்கே, 2024-லும் அதேபோல 7 போட்டிகளில் 5 வெற்றிகளைக் குவித்தது. ஆனால், 2025-ம்…

Read More

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூடுபிடித்துள்ளது. பிரதான கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் வேளையில், தற்பொழுது சமூக வலைதளங்களில் ‘ஆற்காடு சீதாராமையர் பஞ்சாங்கம்’ குறித்த கணிப்புகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் பஞ்சாங்கத்தில், 2026-ம் ஆண்டு உலகளாவிய அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழும் என்றும், குறிப்பாகத் தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் ஒரு பெரிய திருப்பம் ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கணிப்பின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் மக்கள் எதிர்பார்த்த முழுமையான வெற்றி கிடைக்காது என்று சொல்லப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு கட்சியின் தனிப்பெரும் ஆட்சி முடிவுக்கு வந்து, பல்வேறு கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் ‘கூட்டணி ஆட்சி’   அமைவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக பஞ்சாங்கம் கூறுகிறது. இந்தக் கணிப்பு அரசியல் வட்டாரங்களில் விவாதங்களைக் கிளப்பியுள்ள நிலையில், ஆளும் தரப்பு…

Read More

விஜய் எங்கு சென்றாலும் உடன் வர அழைப்பதால் தேர்தல் பிரசாரம் செய்ய முடியாமல் முன்னனி நிர்வாகிகள் கொஞ்சம் புலம்புவதாக தவெக தரப்பு வட்டாரங்கள் சில தகவல்களை தெரிவிக்கின்றன. அதாவது, தமிழக வெற்றிக்கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சி தலைவர் விஜய் சென்னை பெரம்பூரிலும் திருச்சி கிழக்கிலும் போட்டியிடுகிறார். இரு தொகுதிகளிலும் வேட்புமனுவை தாக்கல் செய்து விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து இன்று புதுச்சேரியில் பிரச்சாரம் செய்யும் விஜய் அடுத்தபடியாக சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லவுள்ளார். தேர்தல் பிரச்சரத்திற்காக இவ்வாறு செல்லும் விஜய் செல்லும் இடங்களுக்கெல்லாம் முன்னணி நிர்வாகிகளும் கட்டாயம் உடன் வர வேண்டும் என உத்தரவிடுகிறாராம். தவெக பொதுச்செயலர் ஆனந்த், தி.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு அவர் புதியவர். ஆகவே, தீவிர பிரசாரம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அதேபோல் வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா, திருப்பரங்குன்றத்தில் நிர்மல்குமார் உள்ளிட்டோரும் தெருத்தெருவாக பிரசாரம் செய்ய வேண்டிய சூழல்…

Read More

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, புதுச்சேரி – கடலூர் சாலையில் ஒன்றிணைந்த 6 தொகுதி வேட்பாளர்கள் மற்றும் தட்டாஞ்சாவடியில் சங்கமித்த 12 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய விஜய், புதுச்சேரி தேர்தல் அறிக்கையை அறிவித்தார். அதில் துணை நிலை ஆளுநரின் தலையீடு இல்லாமல், மாநில அந்தஸ்து கொண்டு 100% முயற்சி செய்வோம். ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்  நடத்தப்படும். மகளிருக்கு மகப்பேறு உதவித்தொகையாக ரூ.25000 வழங்கப்படும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், மீனவர்களுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.20 மானியம் வழங்கப்படும், ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவ கப்பீடு வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளார். தொடர்ந்து பேசிய விஜய், களத்தில் இருப்பவர்களை தான் வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளேன். இங்க இரண்டு கூட்டணி நீங்கள் தனியா வந்து என்ன செய்ய போகிறீர்கள் என…

Read More

ஒட்டன்சத்திரம் அருகே அருவியில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த 11 நண்பர்கள் நேற்று மாலை ஒட்டன்சத்திரம் வனப்பகுதிக்குள் அனுமதியின்றி சென்றுள்ளனர். அப்போது ஆதில், சதாம் உசேன், ஆயாஸ் மற்றும் பயாஸ் ஆகிய 4 இளைஞர்கள் அருவியில் குளிக்கும் போது நீரில் மூழ்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் இளைஞர்களின் உடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நேற்று இரவு நேரம் ஆகிவிட்டதாலும், அடர்ந்த வனப்பகுதி என்பதாலும் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. ​இந்த நிலையில், இன்று காலை தீயணைப்புத் துறையினர், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஒன்றிணைந்து தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தினர். இதில் முதற்கட்டமாக 3 இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமான மற்ற ஒருவரை தேடும் பணி போர் கால அடிப்படையில் தற்போதும் தொடர்ந்து வருகிறது. ​ இதனிடையே, உயிரிழந்த இளைஞர்கள்…

Read More

ஆன்லைன் வாயிலாக பிரசாரம் செய்ய தவெக தலைவர் விஜய் வியூகம் வகுத்துள்ளதாக பனையூர் வட்டார தகவல்கள் கிசுகிசுக்கின்றன. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளில் களமிறங்கியிருக்கும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பெரம்பூர் தொகுதியில் மனு தாக்கல் செய்துவிட்டு கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்திற்க்கு சென்றபோது கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் விஜய்க்கும் அங்கிருந்த கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து தன் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய விஜய் அதையடுத்து பண்ண வேண்டியிருந்த வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரத்தை ரத்து செய்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்த அவர் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது அங்கும் தொண்டர்கள் அதிகளவில் திரண்டனர். இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. ஓரிடத்தில் பைக்கில் சென்று கீழே விழுந்த தம்பதியை…

Read More