Author: Editor web3
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், “இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு ரயில் முன் பாய்ந்த சகோதரர் சிவா திலீபன் அவர்கள் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது மனதைக் கனக்கச் செய்கிறது. மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக் கூடாது! தொழில்நுட்பத்தின் உதவியால் பல புதுமையான, அமைதியான, பெரும் வீச்சு கொண்ட போராட்ட வழிமுறைகளைப் பெற்றிருக்கிறோம்! இந்தித் திணிப்பை நம் மதிநுட்பத்தாலும் மனவுறுதியாலும் தமிழ்ப்பற்றாலும்தான் வீழ்த்த வேண்டும்! இப்போரில் நம் உயிர் வீழக்கூடாது. நம்மைப் போன்ற தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால் தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள். நம் உணர்ச்சிகளைக் காட்ட வேறு வழிகள் உள்ளன, உயிர்த்தியாகம் வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். சகோதரர் சிவா திலீபனை இழந்து வாடும் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினருக்கும் – தமிழுணர்வு கொண்ட அவரது இரண்டு மகள்கள் மற்றும் துணைவியார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் எனது…
ராஜ்யசபாவில் இருந்து ஓய்வுபெறும் 37 உறுப்பினர்களுக்கு இன்று வழிஅனுப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றுகையில், முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா குறித்து மிகவும் நகைச்சுவையாகப் பேசினார். “எனக்கு தேவகவுடாவை கடந்த 54 ஆண்டுகளாகத் தெரியும். அவர் ஆரம்பத்தில் எங்களை (காங்கிரஸ்) மிகவும் நேசித்தார்; ஆனால் இறுதியில் பிரதமர் மோடியை மணந்து (கூட்டணி) கொண்டார்” என்று அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார். கார்கேவின் இந்த கலகல பேச்சால், அவையில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அனைத்துக் கட்சி எம்.பி-க்களும் சிரிப்பால் அதிர்ந்தனர். அரசியல் ரீதியாகக் கடும் விமர்சனங்களை முன்வைக்கும் கார்கே, ஒரு மூத்த தலைவரின் அரசியல் பயணத்தை இவ்வளவு கலகலப்பாக விவரித்தது அவையில் சிரிப்பலையை உருவாக்கியது. “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை” என்பதற்கு இந்தத் தருணம் ஒரு சிறந்த உதாரணமாக அமைந்தது. முன்னதாக, 2018-ம் ஆண்டு…
அதிகரித்து வரும் வெப்பநிலை உடல் உழைப்பின்மையை அதிகரிக்கும். இது 2050-ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 470,000 முதல் 700,000 இறப்புகளுக்கு வழிவகுத்து, இதய நோய் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று லான்செட் ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக மனித குலத்திற்கு ஏற்படப்போகும் பேராபத்து குறித்து ஒரு புதிய ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலை 2050-ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான கூடுதல் மரணங்களுக்கு வழிவகுக்கும் என்று அர்ஜென்டினாவின் கத்தோலிக்கப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், கணக்கிட்டுள்ளனர். வெப்பம் மக்களின் உடல் செயல்பாட்டுத் திறனை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்காக, ஆராய்ச்சியாளர்கள் 2000 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 156 நாடுகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளை ஆய்வு செய்தனர். அவர்களின் முடிவுகள் ‘ தி லான்செட் குளோபல் ஹெல்த்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளன . அதிக வெப்பநிலை உடற்பயிற்சியை மிகவும் கடினமாக்குவதாகவும்,…
ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே மூண்டுள்ள போரினால் மத்திய கிழக்கு நாடுகளில் கடும் பதற்றம் நிலவி வரும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 18) ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். இந்த உரையாடலின் போது, பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலை குறித்தும் விரிவாக விவாதித்தனர். குறிப்பாக, அமீரகத்தின் சிவிலியன் பகுதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிரதமர் மோடி தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் தொலைபேசியில் பேசினேன். அவருக்கு முன்கூட்டியே ஈத் (Eid) பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்தேன். ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுமக்கள் இலக்குகள் மீதான தாக்குதல்களை இந்தியா வன்மையாகக் கண்டித்தது. அப்பாவி உயிர்களின் இழப்பையும், உள்கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை…
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரின் திலக் நகர் பகுதியில் உள்ள பிரிஜேஸ்வரி அனெக்ஸ் காலனியில், இன்று (மார்ச் 18) அதிகாலை சுமார் 3:30 முதல் 4:30 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தொழிலதிபர் மனோஜ் புகாலியா என்பவரது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த மின்சார வாகனத்தை (Electric Vehicle) சார்ஜ் செய்து கொண்டிருந்தபோது, திடீரென சார்ஜிங் பாயிண்ட்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வெடிப்பு ஏற்பட்டது. இந்த தீ மளமளவென அருகில் இருந்த காருக்கும், பின்னர் மூன்று அடுக்குக் குடியிருப்பு முழுவதும் பரவியது. இந்த விபத்து இவ்வளவு மோசமான உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவதாக, அந்த வீட்டில் சுமார் 10 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. தீ பரவியவுடன் அவை ஒவ்வொன்றாக வெடித்துச் சிதறியதால், தீயணைப்பு வீரர்களால் கூட உடனடியாக உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. இரண்டாவதாக, வீட்டின் கதவுகள் அனைத்தும் ‘எலக்ட்ரானிக் லாக்’ (Electronic…
தலைநகர் டெல்லியின் தென்மேற்கு பகுதியில் உள்ள பாலம் (Palam) மெட்ரோ ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (மார்ச் 18) காலை 7 மணியளவில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் துணிகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ குடியிருப்புப் பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியது. அதிகாலை நேரம் என்பதால் மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில், இந்த விபத்து பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சுமார் மூன்று மணி நேரம் போராடித் தீயை அணைத்தன. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன; இதில் 3 பச்சிளம் குழந்தைகளும் அடங்குவர். தீ விபத்தில் இருந்து தப்பிக்கக் கட்டிடத்தின் மேலிருந்து குதித்தவர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன்…
ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே நிலவி வரும் கடும் போர்ச் சூழலால், உலகளவில் எரிசக்தி விநியோகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக, கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணை பகுதி வழியாகக் கப்பல்கள் செல்வதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. இத்தகைய இக்கட்டான சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா (Fujairah) துறைமுகத்திலிருந்து சுமார் 80,886 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு ‘ஜக் லாட்கி’ என்ற இந்தியக் கப்பல் புறப்பட்டது. https://x.com/ANI/status/2034174969136222710? ஃபுஜைரா துறைமுகத்தில் இந்தக் கப்பல் எண்ணெயை ஏற்றிக்கொண்டிருந்த போதே, அந்த முனையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக எந்தப் பாதிப்பும் இன்றி தப்பிய இந்தக் கப்பல், இந்தியக் கடற்படையின் ‘ஆபரேஷன் சங்கல்ப்’ (Operation Sankalp) பாதுகாப்பின் கீழ் அரபிக்கடல் வழியாகப் பயணித்தது. 274 மீட்டர் நீளம் கொண்ட இந்த பிரம்மாண்ட கப்பல், இன்று (மார்ச் 18) குஜராத்தில் உள்ள அதானி குழுமத்தின் முந்த்ரா (Mundra)…
தமிழக அரசியலில் தற்போது பரபரப்பாக பேசப்படும் பெயர் ஆதவ் அர்ஜுனா, 2025 பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் (டிவிகே) கட்சியில் இணைந்து அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆவார். முன்னாள் கூடைப்பந்து வீரராகவும், விளையாட்டு நிர்வாகியாகவும், தேர்தல் வியூக வகுப்பாளராகவும் விளங்கி வருகிறார். கடந்த சில நாட்களாக, இவரது பெயர் தலைப்புகளில் இடம்பிடித்து வருகிறது. ஏனென்றால், ரஜினி குறித்து அவதூறான கருத்தை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்தநிலையில், விஜய் – சங்கீதா பிரச்சனை வெளியே வர ஆதவ் அர்ஜுனா தான் காரணம் என ஜோஸ் சார்லஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். விஜய்யின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. இந்நிலையில், இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக லட்சிய ஜனநாயகக் கட்சியின் (LJK) தலைவரும், மார்ட்டின் குழுமத்தின் வாரிசுமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தனது…
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி , சி.விஜயபாஸ்கர், எம். ஆர்.விஜயபாஸ்கர், சி.காமராஜ், கே.சி. வீரமணி, கே.பி. அன்பழகன், எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் சேலம் இளங்கோவன், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா ஆகியோருக்கு எதிராக தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது, சாலைகள் அமைப்பதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அதேபோல், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், எல்இடி வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும் லஞ்சு ஒழிப்புத்துறையால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார் . இதேபோல் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த தங்கமணி, கே.பி. அன்பழகன்,…
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை நாளை (மார்ச் 19) வெளியிடுகிறார். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட மாநாட்டில், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி சீமான் அதிரடி காட்டினார். மற்ற அரசியல் கட்சிகள் இன்னும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் மும்முரமாக இருந்து வரும் வேளையில், தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி ஒரு படி மேலே சென்று தேர்தல் அறிக்கையை வெளியிடத் தயாராகியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளதாக அறிவிப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் அறிக்கையில், இலவசங்கள் இல்லாமல், குறிப்பாக, விவசாயிகள், இளைஞர்கள் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் அரசுத் துறைகளில் செய்யப்பட வேண்டிய அடிப்படை மாற்றங்கள் குறித்து…