Author: Editor web3
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடையே கடும் இழுபறி நீடித்து வருகிறது. குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) ஆகியவற்றுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் மோதல் போக்கு நிலவுகிறது. கடந்த 2021 தேர்தலில் வழங்கப்பட்ட 6 இடங்களை விடக் குறைவாகவே இந்த முறை ஒதுக்க முடியும் என திமுக தரப்பு கூறியதாகத் தெரிகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள CPM மாநிலச் செயலாளர் பி. சண்முகம், “கடந்த முறை போட்டியிட்டதை விட கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் தெரிவித்தோம். அனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுவதில் சிரமம் இருந்து வருகிறது. எங்களின் கோரிக்கை குறித்து முதல்வரிடம் கலந்து பேசி கூட்டணியில் உடன்பாடு எட்டப்படும் என்று கூறியிருந்தார். இதேபோன்ற ஒரு நெருக்கடி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடனான பேச்சுவார்த்தையிலும் நிலவுகிறது. கட்சியின் தலைவர்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அவரது தொண்டர்களிடையே உச்சத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் திருச்சி கிழக்கு மற்றும் சென்னையின் பெரம்பூர் தொகுதிகளில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாகப் பேச்சுக்கள் எழுந்த நிலையில், தற்போது பெரம்பூர் தொகுதியில் அவர் களம் காண்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாகத் தெரிகிறது. இதற்கான முதற்கட்டப் பணிகள் அந்தத் தொகுதியில் விறுவிறுப்பாகத் தொடங்கிவிட்டன. அதாவது, பெரம்பூர் தொகுதியில் விஜய்க்காகச் சிறப்பு வசதிகளுடன் கூடிய தேர்தல் அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அந்த அலுவலகம் முழுமையாகக் குளிர்சாதன (AC) வசதியுடன் நவீனமான முறையில் வடிவமைக்கப்பட்டு வருவதாகத் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் முக்கிய ஆலோசனைகள் மற்றும் தொகுதிப் பிரச்சார வியூகங்களை வகுப்பதற்கான மையமாக இந்த அலுவலகம் செயல்பட உள்ளது. பெரம்பூர் தொகுதியின் நகர்ப்புற வாக்கு வங்கி மற்றும் அங்குள்ள ரசிகர் மன்றங்களின் பலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே விஜய்…
நயன் தாரா குறித்த சர்ச்சை பேச்சுக்கு சி.வி.சண்முகம் மீது கண்டனங்கள் வலுத்துவரும் நிலையில், பெண்களின் உடை குறித்து திண்டுக்கல் சீனிவாசன் பேசிய பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் திமுக அரசை கண்டித்து அதிமுக தலைமையில் தே.ஜ. கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொருளாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் பாஜக மாநில செயலாளர் ராம சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன், மோசமான, கேவலமான ஒரு ஆட்சி இன்னும் 30 முதல் 45 நாட்கள் இருக்கும் ஓட்டு எண்ணிக்கை முடிந்த அடுத்த நாள் தமிழகத்தின் NDA கூட்டணியில் தலைமை பொறுப்பேற்று இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சர் பொறுப்பு ஏற்கின்ற பொழுது அத்தனை பீடையும் அத்தனை சனியனும் தொலைந்து போய்விடும். தூத்துக்குடி சகோதரிக்கு நடந்த கொடுமையை கேட்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின்…
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி அண்மையில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தை முன்னின்று கவனித்து வந்த தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அலி லரிஜானியும் (Ali Larijani) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று (மார்ச் 17) டெஹ்ரான் அருகே இஸ்ரேலிய விமானப்படை நடத்திய துல்லியமான வான்வழித் தாக்குதலில் லரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். காமேனியின் மறைவுக்குப் பிறகு ஈரானின் ‘நடைமுறைத் தலைவராக’ (de facto leader) செயல்பட்டு வந்தவர் லரிஜானி என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானில் தங்களுக்குச் சாதகமான மற்றும் நிலையான ஒரு ஆட்சியை ஏற்படுத்த விரும்பும் அமெரிக்காவும் இஸ்ரேலும், அங்குள்ள முக்கியத் தலைவர்களையே தங்களின் முதல் இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. லரிஜானியுடன் சேர்த்து, ஈரானின் ‘பசிஜ்’ (Basij) துணை ராணுவப் படையின் தளபதி குலாம்ரெசா சோலைமணியும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) உறுதிப்படுத்தியுள்ளது.…
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் பயங்கர பரபரப்பாக உள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக மற்றும் பாஜக இடையிலான அதிகாரப்பூர்வ கூட்டணி ஒப்பந்தம் வரும் மார்ச் 20-ஆம் தேதி கையெழுத்தாகும் என பாஜக முக்கிய நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக இரு கட்சிகளுக்கும் இடையே திரைமறைவில் நடந்து வந்த பேச்சுவார்த்தைகள் தற்போது சுமுகமான முடிவை எட்டியுள்ளதாகத் தெரிகிறது. தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தவரை, தொடக்கத்தில் பாஜக தரப்பில் 35 தொகுதிகள் வரை கோரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் மற்ற கூட்டணிக் கட்சிகளான பாமக மற்றும் அமமுக ஆகியவற்றுக்கு ஒதுக்க வேண்டிய இடங்களைக் கருத்தில் கொண்டு, பாஜகவிற்கு 27 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக தலைமை முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த எண்ணிக்கையில் இரு தரப்பிற்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதால், ஒப்பந்தம்…
ரூ.1 லட்சத்திற்கு மேல்.. கூகுள் பே பரிவர்த்தனைகளில் கெடுபிடி!. வங்கி ஊழியர்களுக்குப் புதிய உத்தரவு!.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு டிஜிட்டல் முறையில் பணம் வழங்கப்படுவதைத் தடுக்க, வங்கிகள் மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ (UPI) செயலிகள் மூலம் சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகள் நடந்தால், அது குறித்து உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி வங்கி ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நேர்மையாகவும், பண நாயகத்திற்கு இடமின்றியும் நடப்பதை உறுதி செய்யப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்தல் காலத்தில் தனிநபர்களின் வங்கி கணக்குகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவிலான பணப் பரிவர்த்தனைகள் நடந்தால், அது குறித்த தினசரி அறிக்கையை வங்கிகள் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் ஒரு வங்கி கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக பணம் எடுக்கப்பட்டாலோ அல்லது வரவு வைக்கப்பட்டாலோ அது தீவிரமாகக் கண்காணிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கிலிருந்து RTGS அல்லது இணைய வழிப் பரிவர்த்தனை மூலம்…
தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களைத் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் விழுப்புரத்தில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். இவர் அதைவிட ஒரு படி மேலே போய் உங்கள் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன் என்கிறார். ஆமாம் நயன்தாரா வேண்டும். முதல்வர் நிறைவேற்றுவாரா? நயன்தாராவை திருமணம் செய்து வைக்க சொல்லி கேட்பார்கள் முதல்வர் நிறைவேற்றுவாரா? என்று பேசினார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அந்தவகையில், பெண்களை முழுமையாக அவமதிக்கும் ஒரு அருவருப்பான ஆணாதிக்க மொழி வன்முறை என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சர்ச்சை பேச்சுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்தது.…
இந்திய கிரிக்கெட் உலகின் ‘தல’ என்று அழைக்கப்படும் தோனி என்றாலே நம் நினைவுக்கு வருவது அந்த 7ம் நம்பர் தான். இப்போது திடீரென அவர் “8-ம் நம்பருக்கு மாறுகிறேன்” என்று பதிவிட்டுள்ளது இணையத்தில் பெரும் விவாதத்தையே கிளப்பியுள்ளது. தனது சமூக வலைதளப் பக்கத்தில், “வாழ்க்கையில் சில எண்கள் நம்மோடு இரண்டறக் கலந்தவை. எனக்கும் 7 அப்படித்தான். ஆனால் இன்று முதல் நான் 8-ம் நம்பருக்கு மாறுகிறேன். இதற்கான காரணம் விரைவில் உங்களுக்குத் தெரியும்” எனப் பதிவிட்டுள்ளார். பொதுவாக பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களுக்காக கிரிக்கெட் நட்சத்திரங்கள் இது போன்ற ‘சஸ்பென்ஸ்’ அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். ஒருவேளை ஏதேனும் ஒரு புதிய பிராண்ட் விளம்பரத்திற்காக தோனி இப்படிச் செய்திருக்கலாம் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் வேளையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவரது பொறுப்பு அல்லது ஜெர்சி எண்ணில் ஏதேனும் மாற்றம் இருக்குமா எனப் பல ரசிகர்கள் கவலையில்…
சென்னை பல்லாவரம் அடுத்த பாரதி நகர் துலுக்கானத்தம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஷானா பாத்திமா (29). இவரும் அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமது அலி (31) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2020 ஆண்டு திருமணம் செய்த இவர்களுக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த சூழலில் முகமது அலி மது குடித்துவிட்டு தினம் தோறும் அவரது மனைவி ஷானா பாத்திமாவிடம் பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதே நிலை நீடித்ததால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஷானா பாத்திமா கணவனைப் பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த ஏழு மாதங்களாக தனியாக வாழ்ந்து வரும் ஷானா பாத்திமா தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் முகமது அலி அவரது மனைவி மீது கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த 15ஆம் தேதி ஷானா பாத்திமாவின்…
அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கான நடைபெற்று வரும் பொதுத் தேர்தலுக்கும், 6 மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தல்களுக்கும் இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) 1,111 பார்வையாளர்களை நியமித்துள்ளது. தேர்தல் அட்டவணையை அறிவிக்கும் போதே, வன்முறையற்ற மற்றும் பணப் புழக்கமற்ற தேர்தலை உறுதி செய்வோம் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார் உறுதியளித்திருந்தார். அதன்படி, தேர்தல் ஆணையத்தின் “கண்களாகவும், காதுகளாகவும்” செயல்பட இந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் நியமிக்கப்பட்டுள்ள 1,111 அதிகாரிகளில், அதிகப்படியான அதிகாரிகள் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 136 பொது பார்வையாளர்கள், 40 காவல் பார்வையாளர்கள், 151 செலவின பார்வையாளர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நியமிக்கப்பட்ட அனைத்துப் பார்வையாளர்களும் நாளை (மார்ச் 18) மாலைக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்குச் சென்று பணியைத் தொடங்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தொகுதிகளுக்கு வந்திறங்கியவுடன், அதிகாரிகள் தங்கள் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட…