Author: Editor web3
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த சில வாரங்களாக நிலவி வரும் “திறந்தவெளிப் போர்” சூழலில், காபூலில் உள்ள ஒரு மருத்துவமனை தரைமட்டமாக்கப்பட்டு 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று காபூலில் உள்ள போதைப்பொருள் பழக்கத்திற்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை மீது பாகிஸ்தான் விமானப்படை திடீர் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் மருத்துவமனையின் அனைத்துப் பகுதிகளும் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. ஆப்கானிஸ்தான் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷராபத் ஜமான் கூறுகையில், “இந்தத் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளைப் பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் செய்தித் தொடர்பாளர்…
வங்காளதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை, அந்த நாட்டின் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். வங்காளதேசத்திற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் இழந்தது. நேற்றைய கடைசிப் போட்டியில் 291 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி, 279 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கம்ரான் அக்மல், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தற்போதைய நிலையை நினைத்து வேதனை தெரிவித்தார். அவர் கூறியதாவது, “பாகிஸ்தான் கிரிக்கெட்டை நீங்கள் ஒரு கேலிக்கூத்தாக மாற்றிவிட்டீர்கள். இப்போதுள்ள நிலையில் நெதர்லாந்து அணி கூட நம்முடன் விளையாடி, நம்மைத் தோற்கடித்து டெஸ்ட் அந்தஸ்து பெற நினைக்கும். களத்தில் உங்களால் ஒரு தொடரை வெல்ல முடியவில்லை என்றால், அப்புறம் எப்படி முன்னேறுவீர்கள்? இருதரப்பு…
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடந்த திருமண விழாவின் போது ஒரு துயர சம்பவம் நிகழ்ந்தது. 41 வயதான லலித் சிங், ரஸ்குல்லா சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அவரது சுவாசக் குழாயில் சிக்கிக் கொண்டது. சில நொடிகளில், லலித் சிங்கிற்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் அவரது தொண்டையில் இருந்து ரஸ்குல்லாவை அகற்ற முயன்றனர், ஆனால் அது பலனளிக்கவில்லை. குடும்பத்தினர் உடனடியாக அவரை எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். மருத்துவர்களின் கூற்றுப்படி, ரசகுல்லா அவரது சுவாசக் குழாயில் முற்றிலுமாக சிக்கிக்கொண்டதால், அவரது உடலுக்கு ஆக்ஸிஜன் விநியோகம் துண்டிக்கப்பட்டு சில நிமிடங்களில் அவர் இறந்ததாக தெரிவித்தனர். உணவு சுவாசக் குழாயில் சிக்கிக்கொண்டால் என்ன செய்வது? நாம் சாப்பிடும்போது, அது வாய், தொண்டை மற்றும் நரம்புகள் வழியாக வயிற்றை அடைகிறது. பொதுவாக, நாம் விழுங்கும்போது, உணவு தவறான திசையில் செல்வதைத் தடுக்க நமது மூச்சுக்குழாய் தற்காலிகமாக மூடுகிறது.…
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி, தணிக்கைச் சான்றிதழ் சிக்கலால் நீண்ட நாட்களாக முடங்கிக் கிடக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை, நாளை (மார்ச் 17) மறுஆய்வுக்குழுவினர் பார்வையிட உள்ளனர். ஜன நாயகன் திரைப்படம் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ளது. சுமார் ரூ.500 கோடி செலவில் தயாராகியுள்ள இந்த படம் முதலில் 2026 ஜனவரி 9 அன்று வெளியாக திட்டமிடப்பட்டது. ஆனால் மத்திய திரைப்பட தனிக்கை அமைப்பின் (CBFC) ஆய்வு குழு பரிந்துரையை ஏற்காததால் படம் வெளியீடு தாமதமானது. இதற்காக தயாரிப்பாளர்கள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாலும் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் அமேசான் ப்ரைம் உடன் செய்யப்பட்ட OTT ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகப் பல நாட்களாகத் திரைக்கு வர முடியாமல் முடங்கிக் கிடக்கிறது. படத்தின் சில காட்சிகள் அல்லது வசனங்கள் தொடர்பாகத்…
2026-ம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்துவதற்கு கர்நாடக மாநில அரசு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது. அரசின் அனுமதி மற்றும் நிபந்தனைகள்: கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA) விடுத்த கோரிக்கையை ஏற்று, அம்மாநில அரசு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. ஐபிஎல் போட்டிகளின் போது மைதானத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (RCB) அணியின் கோட்டையாகக் கருதப்படும் சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அந்த வகையில் மார்ச் 28ஆம் தேதி நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு…
தேர்தல் முடியும் வரை எந்த உட்கட்சிப் பிரச்சனையும் இருக்கக் கூடாது. யாராவது தேவையின்றி கட்சிக்குள் குழப்பமோ, பிரச்சனையோ உண்டாக்கி அது என் காதுகளுக்கு வந்தால் அவர் எந்த பெரிய பொறுப்புகளில் இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை பாயும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். தமிழ்நாடு தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர் மு,க.ஸ்டாலின், நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 23 க்கு இன்னமும் 39 நாட்கள் மட்டுமே உள்ளன. தேர்தல் பணியில் நம் கழகம் தான் No 1 ஆக இருந்து வருகிறது. தேர்தல் களம் என்று வந்துவிட்டால் திமுகக்காரர்கள் சுழன்று சுழன்று பணியாற்றுவார்கள் என்று பத்திரிக்கையாளர்களும் எதிரிகளுமே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் களத்தில் நமது கையே ஓங்கி இருக்கிறது. அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக…
2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியில் முக்கியப் பங்காற்றிய தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை நேரில் அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். தலைமை செயலகத்தில் நிகழ்ந்த இந்த சந்திப்பின் போது, தமிழக வீரர்களின் சிறப்பான ஆட்டத்திறனைப் பாராட்டிய முதலமைச்சர், அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அப்போது வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் தங்களின் கையெழுத்திட்ட ஜெர்சியை முதல்வர் ஸ்டாலினுக்கு பரிசாக அளித்தனர்.
இந்தியாவில் 24 மொழிகளில் சிறந்த படைப்புக்காக வழங்கப்படும் உயரிய விருது சாகித்ய அகாடமி. கவிதை, நாவல், சிறுகதை, இலக்கிய ஆய்வுகள் அடிப்படையில் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில், 2025-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டு சாக்திய அகாடமி விருதுக்கான எழுத்தாளர்களைத் தேர்வு செய்ய அதன் நிர்வாக குழு கூட்டம் டெல்லியில் கடந்த டிசம்பர் 18-ந் தேதி நடைபெற்றது. இதில் விருதுக்கான எழுத்தாளர்கள் யார் என்பது விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அன்றைய தினமே செய்தியாளர்கள் சந்திப்பில் சாகித்ய அகாடமி விருது விவரங்கள் அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது பெரும் சர்ச்சையானது. நிர்வாக குழு உறுப்பினர்கள் பலரும் இந்த முடிவை கடுமையாக எதிர்த்தனர். இந்த நிலையில் தற்போது சாகித்ய அகாடமி விருது விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறுகதை…
98-வது ஆஸ்கர் விருது விழாவின் நேரடி ஒளிபரப்பில் விடுபட்ட இந்தியத் திரைத்துறையின் மூத்த நட்சத்திரங்களின் பெயர்களை, தற்போது ஆஸ்கர் அகாடமி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சேர்த்து கௌரவித்துள்ளது. 2026-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் கடந்த ஓராண்டில் மறைந்த உலக சினிமா கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ‘In Memoriam’ பகுதி இடம்பெற்றது. ஆனால், இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற கலைஞர்களான தர்மேந்திரா, மனோஜ் குமார், சரோஜா தேவி மற்றும் கோட்டா ஸ்ரீனிவாஸ் ராவ் ஆகியோரின் பெயர்கள் நேரடி ஒளிபரப்பில் காட்டப்படவில்லை. இது இந்திய சினிமா ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியையும், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களையும் எழுப்பியது. இதையடுத்து, ஆஸ்கர் அகாடமி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள ‘In Memoriam’ பிரிவில் இந்த நான்கு நட்சத்திரங்களின் பெயர்களையும், அவர்களின் புகைப்படங்களுடன் தற்போது சேர்த்துள்ளது. ஆஸ்கர் மேடையில் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படாதது வருத்தமளித்தாலும், தற்போது அகாடமியின்…
திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, உலகமே வியக்கும் வண்ணம் நடந்து முடிந்தது. இதில் 98 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை நிகழாத ஒரு மகத்தான சாதனையை ஒளிப்பதிவாளர் ஆட்டம் டுரல்ட் ஆர்க்பாவ் (Autumn Durald Arkapaw) நிகழ்த்தியுள்ளார். சிறந்த ஒளிப்பதிவுக்கான பிரிவில் ஆஸ்கர் விருது பெறும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ரியான் கூக்ளர் இயக்கத்தில் உருவான ‘சின்னர்ஸ்’ (Sinners) திரைப்படத்தில் அவர் காட்டிய ஒளிப்பதிவு மாயாஜாலத்திற்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. விருதைப் பெற்றுக்கொண்ட ஆட்டம் டுரல்ட் ஆர்க்பாவ் மேடையில் பேசியதாவது, “இந்த வெற்றி எனக்கு மட்டும் உரித்தானது அல்ல. திரைத்துறையில் சாதிக்கத் துடிக்கும் அனைத்துப் பெண்களுக்கும், எனக்கு ஊக்கமாக இருந்தவர்களுக்கும் இத்தனைச் சமர்ப்பிக்கிறேன். தடைகளை உடைக்க முடியும் என்பதற்கு இதுவே சாட்சி.” ‘சின்னர்ஸ்’ படத்தில் ஆட்டம் டுரல்ட் கையாண்ட கேமரா கோணங்களும், ஒளியமைப்பும் படத்திற்கு ஒரு தனித்துவமான உயிரோட்டத்தைக் கொடுத்திருந்தன. குறிப்பாக இருள் மற்றும்…