Author: Editor web3

திமுக அரசை கண்டித்து விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களைத் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் விழுப்புரத்தில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் தலைமை தாங்கினார். இதில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம், “தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதால் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டன. இது குறித்து விவாதிக்கக் கூடாது என உள்துறைச் செயலாளர் கூறுவது கண்டிக்கத்தக்கது. இவரைப் போன்ற அதிகாரிகளை வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கை எப்படிக் காப்பாற்ற முடியும்? ஒருதலைப்பட்சமாகச் செயல்படும் அரசு அதிகாரிகள்…

Read More

திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக 525 வாக்குறுதி கொடுத்தது, அதில் நான்கில் ஒரு பங்கு கூட செய்யவில்லை. ஆனால், 98% நிறைவேற்றிவிட்டதாக பச்சைப் பொய் சொல்கிறார் ஸ்டாலின். மக்கள் திமுகவின் பொய்யைப் புரிந்துகொண்டனர், ஆட்சியை விரட்டியடிக்க முன்வந்துவிட்டார்கள். அரசு ஊழியர்கள் போராடுகிறார்கள், தூய்மைப் பணியாளர்களை திமுக அர்சு கொடுமைபடுத்தியது. சத்துணவு அமைப்பாளர்களும் போராடினார்கள்.சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு முக்கியக் காரணம் நிரந்தர டிஜிபி நியமிக்கவில்லை என்பதுதான். உச்சநீதிமன்றம் சொல்லியும் நியமிக்கத் திராணியற்ற அரசு திமுக அரசு. நான் சொல்வது எல்லாமே பத்திரிகையிலும் ஊடகத்திலும் வந்தவை, இதனை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டிய கடமை மீடியாவுக்கு இருக்கிறது. குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. ஊழல் விளம்பரம் மட்டும் செய்த திமுக ஆட்சியின் ஆட்டம்…

Read More

திமுக அரசை கண்டித்து சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, டாஸ்மாக் கொள்ளை அமோகமாக நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை இருக்கிறது, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 24 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்.விலைவாசி உயர்ந்துவிட்டது, வேலைவாய்ப்பு இல்லை, வருமானம் இல்லை, அரிசி, எண்ணெய், பருப்பு விலை 40% உயர்ந்துவிட்டதால் குடும்பம் நடத்தவே மக்கள் தத்தளிக்கிறார்கள். அதை குறைக்க ஸ்டாலின் கவனம் செலுத்தவில்லை. தினமும் போட்டோ ஷூட் எடுப்பதுதான் விடியா திமுக ஆட்சியின் சாதனை.மின்கட்டணம் பல மடங்கு உயர்வு, அதிமுக ஆட்சியில் ஆயிரம் என்றால் இப்போது 2500 ரூபாய், 67% உயர்வு. கடைகளுக்கு பீக் ஹவர், ஆண்டுக்கு…

Read More

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதாக கூறி, தமிழ்நாடு முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “இன்றைய தினம் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி பொறுப்பு ஏற்று ஐந்தாண்டு காலம் ஆகிவிட்டது. இந்த ஐந்து ஆண்டு காலத்தில் தமிழக மக்கள் பட்ட துன்பம் ஏராளம். ஒவ்வொரு நாளும் மக்கள் படுகின்ற துன்பம் பற்றி ஆட்சியாளர்கள் கவலை படாமல் உள்ளனர். இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு என்று ஸ்டாலின் சொல்வார். எதில் முதல் மாநிலம் கடன் பெறுவதில் முதல் மாநிலமாக உள்ளது. இந்த கடனை எல்லாம் நாம் தான் அடைக்க வேண்டிய சூழலில் தள்ளப்பட்டு இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு வருடத்திற்கு 1408 கொலைகள் நடந்துள்ளது. 2026 இல் மொத்தமாக 110 கொலைகள்…

Read More

ஈரானின் தற்போதைய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று அமெரிக்க உளவுத்துறை நம்புவதாக ‘நியூயார்க் போஸ்ட்’ (New York Post) வெளியிட்டுள்ள செய்தி சர்வதேச அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அமெரிக்க உளவுத்துறை திரட்டிய தகவல்களின்படி, மொஜ்தபா கமேனி தனது சிறுவயதில் ஒரு ஆசிரியருடன் நெருக்கமான உறவில் இருந்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானின் மிக உயரிய பதவியில் இருப்பவர் குறித்து இத்தகைய தனிப்பட்ட தகவல்கள் வெளியாகி இருப்பது உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்த ரகசியத் தகவல்கள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கூறியபோது, அவர் அதைக் கேட்டு சிரித்ததாகக் கூறப்படுகிறது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே ஏற்கனவே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஈரானின் தலைமையைக் குறிவைத்து இத்தகைய செய்திகள் வெளியாவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஈரானில் இஸ்லாமியச் சட்டங்களின்படி ஓரினச்சேர்க்கை என்பது மிகக் கடுமையான குற்றமாகும். இதற்குச்…

Read More

கீழடியில் 11-வது கட்டம், ஆதிச்சனூா், நாகப்பட்டினம் உள்பட 8 இடங்களில் அகழாய்வு  செய்ய மத்திய தொல்லியல் துறையிடம் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஒப்புதல் வேண்டி கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதற்கான முன்மொழிவுகள் கடந்த 2025 ஜூலை மாதம் அனுப்பப்பட்டது. நவம்பரில் நடைபெற்ற இந்திய தொல்லியல்துறை தலைவா் தலைமையிலான கூட்டத்திலும் அது எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் 8 மாதங்களாகியும் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் நீடித்து வந்தது. இந்த நிலையில், “தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள உகந்த காலம் ஜனவரி முதல் ஜூலை வரைதான். இதை தவறவிட்டால் பருவ மழையால் களப்பணிகள் தடைபடும். முக்கிய ஆராய்ச்சிகளும் தாமதமாகும். 2025-2026- ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் வீணாகும். தமிழ் நாகரிகத்தின் தொன்மை என்பது இந்தியாவின் நாகரிகப் பண்பாட்டுக்கு பெருமை சோ்ப்பது. எனவே, அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு உடனே ஒப்புதல் வழங்க வேண்டும்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறையின் கோரிக்கையை…

Read More

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது குறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசியிருந்தார். இது பொதுவெளியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இந்த நிலையில், ரஜினிகாந்த் ஆதவ் அர்ஜுனா கருத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய எடப்பாடி திரு.பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் திரு.நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் திரு.எல்.முருகன், தமிழக அமைச்சர் திரு.ரகுபதி, திரு.தொல்.திருமாவளவன், திரு.எஸ்.பி.வேலுமணி, நண்பர் திரு.அண்ணாமலை, திரு.அர்ஜுனமூர்த்தி, திரு.அன்புமணி ராமதாஸ், திரு.ஜி.கே. வாசன், திரு.ஜான் பாண்டியன், திரு.புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், திரு.அமீர், திரு.ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் திரு.நக்கீரன் கோபால், சாணக்கியா திரு.ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள்…

Read More

கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்ட கூட்டத்தின் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான கூட்ட நெரிசல் மற்றும் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, திமுக எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் நடிகர் விஜய் பங்கேற்ற தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ கையில் எடுத்தது. ஏற்கனவே தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று மார்ச் 17-ம் தேதி ஆஜராகுமாறு செந்தில் பாலாஜிக்குச் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. முன்னதாக எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டிருந்த செந்தில் பாலாஜி, “ஊடகங்களில் வெளியாகும் முரணான செய்திகளைத் தவிர்க்கவே நேரில் ஆஜராகிறேன். சிபிஐ-யின் அனைத்து கேள்விகளுக்கும் உரிய விளக்கம் அளித்து முழு ஒத்துழைப்பு வழங்குவேன்” என்று தெரிவித்திருந்தார்.…

Read More

புதுச்சேரி அரசியலில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக இடையிலான கூட்டணியில் ஏற்பட்டுள்ள “சீட்” மோதல், தற்போது கூட்டணியே உடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. புதிதாகக் களம் இறங்கியுள்ள லட்சிய ஜனநாயகக் கட்சி (LJK) காரணமாக, முதல்வர் ரங்கசாமி கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2021 தேர்தலைப் போலவே, இந்த முறையும் என்.ஆர். காங்கிரஸிற்கு 16 இடங்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 14 இடங்கள் என தொகுதிப் பங்கீடு ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்திருந்தது. ஆனால், தற்போது பாஜக தரப்பில் இருந்து திடீரென ஒரு புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையிலான லட்சிய ஜனநாயகக் கட்சிக்கு (LJK) பாஜகவின் கோட்டாவில் இருந்து அல்லாமல், பொதுவான இட ஒதுக்கீட்டில் சீட்டுகள் ஒதுக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாஜகவின் தலையீடுகளால் அதிருப்தியில் இருந்த முதல்வர் ரங்கசாமி, இந்தப் புதிய நிபந்தனையைக் கேட்டு கடும்…

Read More

அதிமுக கூட்டணியில்  தவெக இணையவுள்ளதாக வெளியாகும் தகவலே தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாபிக். இதனை தவெகவும், எடப்பாடி பழனிசாமியும் மறுத்துள்ள நிலையில், இதுபற்றி தனக்கு தெரியாது என நயினார் நாகேந்திரன் மழுப்பலாக பதிலளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ NDA கூட்டணியில் தவெக இணையுமா? இணையாதா என்பது எனக்கு தெரியாது.. நான் டெல்லிக்கு செல்லவில்லை.. என்று கூறினார்.. உடனே செய்தியாளர்கள் புதிய கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த நயினார் “ புதிய கட்சிகள் இணையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..” என்று தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ நடிகர் ரஜினிகாந்த் மீதான ஆதவ் அர்ஜுனா விமர்சனத்தை தவெக தலைவர் விஜய் கண்டிக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். நடிகர் ரஜினிகாந்த் மீதான விமர்சனத்துக்கு ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Read More