Author: Editor web3

தேர்தலில் வாக்குக்காக பணம் கொடுப்பதை தடுக்க தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், ஆன்லைனில் பணப்பட்டுவாடா நடப்பதை கண்காணிக்க 23 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன. இந்தநிலையில், சென்னை, தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகம் முழுவது 2,106 பறக்கும் படை, கண்காணிப்புக் குழுக்கள் சோதனையைத் தொடங்கியுள்ளன என்றார். பொதுமக்கள் கொண்டு செல்லும் பணம், பொருள்களுக்கு உரிய ஆவணங்கள் இருந்தால் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். சோனையின்போது, உரிய ஆவணங்கள் இருந்தால் பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம் என்றார். மேலும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை கண்காணிக்கப்பட்டு வருகிறது. கூகுள் பே, போன் பே போன்றவற்றில் அதிக…

Read More

சிபிஐ மூலம் என்.டி.ஏ. கூட்டணியில் தவெக இணைய தங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறப்படுவதில் உண்மையில் இல்லை என செங்கோட்டையன் கூறியுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய் இணையப்போவதாகவும், தவெகவுக்கு 50 சீட்டுகள் ப்ளஸ் துணை முதல்வர் பதவி என டீலிங் பேசப்படுவதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தவெக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளரும்,முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன்,  டெல்லியில் நடந்த சி.பி.ஐ. விசாரணையில் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் உரிய பதிலை அளித்துள்ளார். முதல்-அமைச்சராக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைத்தையும் விட்டு மக்கள் பணிக்காக விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். தற்போது அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அதிக அளவில் திரண்டு வருகிறார்கள். இது தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புவதையே காட்டுகிறது. மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமை சரியாக இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொதுமக்கள் அச்சத்துடன்…

Read More

ஆணவ கொலைகளுக்கு எதிராக ”இவா நம்மவா” மசோதாவை கர்நாடக அரசு நிறைவேற்றியுள்ளதற்கு மாணிக்கம் தாகூர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் கவுரவ கொலைகளைத் தடுக்க ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருவதாகவும், அந்த கோரிக்கையை கர்நாடக அரசு “இவா நம்மவா” என்ற மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளதாகவும் கூறியுள்ளார். இதுவே உண்மையான சமூக நீதி எனக்கூறியுள்ள அவர், குறைவான பேச்சு மற்றும் அதிகமான செயல் என தெரிவித்துள்ளார். இந்த முன்னேற்றமான முயற்சிக்காக சமூகநீதி காவலன் ராகுல் காந்தியின் தலைமைக்கும், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் முயற்சிக்கும் பாராட்டுகள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் இதுபோன்ற ஒரு வலுவான சட்டம் கொண்டு வந்து மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள மாணிக்கம் தாகூர், இது எப்போது நடக்கும்…

Read More

பாஜக- அதிமுக கூட்டணியில் விஜய்யை இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாகவும், இதேபோல் ராமதாஸ் தரப்பு விஜய்யுடன் கூட்டணி வைப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தவெக இணைப் பொதுச்செயலார் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது திருமதி. சசிகலா, மருத்துவர் அய்யா ராமதாஸ் வர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்திகூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.  இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய…

Read More

கரூர் விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சிபிஐ விசாரணைக்காக டெல்லிக்கு நேரில் ஆஜராவதற்குப் பதிலாக, தமிழகத்திலேயே ஆஜராக அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரமே இது குறித்து எழுத்துப்பூர்வமான மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (மார்ச் 15) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேராகவே இந்தக் கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கரூர் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் விஜய்யை காண கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.   இதுதொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவிரன்பேரில் சிபிஐ விசாரித்து வருகிறது. அந்தவகையில், தவெக நிர்வாகிகள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜயிடம் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 12-ந்தேதி, 2-வது முறையாக ஜனவரி 19-ந்தேதி, 3-வது முறையாக நேற்று விஜய் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். நேற்று விஜய்யிடம் 7…

Read More

கலைகளின் சங்கமமாகப் பார்க்கப்படும் 98-வது ஆஸ்கர் விருது விழா, இந்த ஆண்டு வெறும் கொண்டாட்டமாக மட்டுமின்றி, உலக அமைதிக்கான ஒரு முக்கிய மேடையாகவும் மாறியுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேவியர் பார்டெம் (Javier Bardem), பாலஸ்தீன விடுதலைக்காக ஆஸ்கர் மேடையிலேயே குரல் எழுப்பியது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. சிறந்த சர்வதேசத் திரைப்படத்திற்கான (Best International Feature Film) விருதை வழங்க, இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவுடன் ஜேவியர் பார்டெம் மேடைக்கு வந்தார். அப்போது மைக் முன் நின்ற அவர், விருது அறிவிப்புக்கு முன்னதாக மிகவும் தீர்க்கமாக, “போர் வேண்டாம்; பாலஸ்தீனம் விடுதலை பெறட்டும்!” (Stop the war; Let Palestine be free) என்று முழக்கமிட்டார். https://x.com/arikbeyhive/status/2033364032280015358 அவர் பேசிய அந்த நிமிடம், அரங்கில் இருந்த உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் அனைவரும் ஒரு கணம் திகைத்துப் போயினர். பின்னர் அரங்கமே அதிரும் வகையில் கைதட்டல்கள் ஒலிக்கத் தொடங்கின. முன்னதாக ரெட் கார்ப்பட்…

Read More

திரை உலகின் மிக உயரிய விருதான 98-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு விருதுப் பட்டியலில் ‘Sinners’ மற்றும் ‘One Battle After Another’ ஆகிய திரைப்படங்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தின. விருதுகளை அள்ளிய ‘Sinners’ மற்றும் ‘One Battle After Another’: இந்த ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான விருதை ‘One Battle After Another’ தட்டிச் சென்றது. அப்படத்தின் இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சன் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றார். மேலும், One Battle After Another திரைப்படம் 6 ஆஸ்கார் விருதுகளை வென்று அசத்தியுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், துணை நடிகர் (ஷான் பென்), தழுவல் திரைக்கதை, படத்தொகுப்பு மற்றும் நடிகர்கள் தேர்வு ஆகிய 6 பிரிவுகளில் இப்படம் விருதை இப்படம் விருதுகளை குவித்துள்ளது. திக ஆஸ்கார் விருதுகளை வென்ற படம் என்ற சாதனையை படம்…

Read More

மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட பயங்கர ட்ரோன் தாக்குதலால் துபாய் நகரம் புகை மண்டலமாக மாறியுள்ளது. இந்தத் தாக்குதலால் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு மிக அருகில் உள்ள முக்கிய எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் எண்ணெய் கிடங்குகள் வெடித்துச் சிதறி, தீ கொழுந்துவிட்டு எரிகிறது. தீயணைப்புப் படையினர் பல மணி நேரமாகத் தீயைக் கட்டுப்படுத்தப் போராடி வருகின்றனர். இந்த அசம்பாவித சம்பவத்தால் துபாய் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சென்னையிலிருந்து இயக்கப்படும் சர்வதேச விமானச் சேவைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை சென்னையிலிருந்து துபாய்க்குப் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம், துபாய் வான்பரப்பில் நிலவும் பதற்றம் காரணமாகப் பாதி வழியிலேயே மீண்டும் சென்னைக்குத் திருப்பி விடப்பட்டது. துபாய் மற்றும்…

Read More

சர்வதேச சந்தையில் நிலவி வரும் பொருளாதார மாற்றங்களின் எதிரொலியாக, சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து நகைப்பிரியர்களுக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது. சென்னையில் இன்று (மார்ச். 16 ) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், ஒரு சவரன் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.1,17,680 க்கு விற்பனையாகிறது. மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக ஈரான் – இஸ்ரேல் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையிலும், சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்பனை செய்து லாபத்தை ஈட்டி வருவதால் விலை குறைந்துள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், உலகளாவிய சந்தையில் நிலவும் டாலர் மதிப்பின் மாற்றங்களும் இந்த விலை சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று சரிவைக் கண்டுள்ளது. சென்னையில்…

Read More

தேர்தல் ஆணையம் நேற்று (மார்ச் 15) தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவித்த நிலையில், முன்னணி ஊடகங்கள் தங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ளன. அந்தவகையில் புதிய கருத்து கணிப்பை Times Now செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் திமுகவை முந்தி அதிமுக அதிக இடங்களை கைப்பற்றும் என தெரிய வந்துள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 38% வாக்குகளுடன் 104 – 114 இடங்களிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 40% வாக்குகளுடன் 114- 127 இடங்களிலும் விஜய்யின் தவெக 15% வாக்குகளுடன் 1-6 இட்ங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகளின்படி பார்த்தால், அதிமுக கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களைத் தாண்டி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தமிழகத்தில் ஒரு பெரிய அரசியல் மாற்றத்திற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, திராவிடக் கட்சிகளுக்கு இடையேயான போட்டியில்…

Read More