Author: Editor web3

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மகாராஷ்டிர மாநிலம் ஷீரடி சாய்பாபா கோயிலில் பிரசாத விநியோகத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. எரிவாயு  சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் மற்றும் உணவுகளில் முக்கிய மாற்றங்களைச் செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வழக்கமாக ஒரு பக்தருக்கு வழங்கப்பட்டு வந்த இரண்டு லட்டுகளுக்குப் பதிலாக, இனி ஒரு லட்டு மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயிலின் உணவகத்தில் வழக்கமாக வழங்கப்படும் பருப்பு-சாதம்  உணவுக்குப் பதிலாக, எரிவாயு பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் ‘பருப்பு கிச்சடி’  வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷீரடிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாளொன்றுக்கு சராசரியாக 45,000 லட்டு பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன; இது தவிர 50,000 லட்டுகள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. தற்போது எங்களிடம் உள்ள எரிவாயு சிலிண்டர் கையிருப்பு இன்னும் 10 முதல் 12 நாட்களுக்கு…

Read More

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகள் நாளுக்கு நாள் பரபரப்படைந்து வரும் நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்  வேல்முருகன் அதிரடி முடிவு எடுக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியபோது, தவாக கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை ஒதுக்க திமுக தலைமை தயக்கம் காட்டியதாகக் கூறப்படுகிறது. அதாவது தவாக 3 தொகுதிகள் கேட்ட நிலையில், திமுகவோ ஒரு தொகுதிதான் தர முடியும் என்றும் அதிகும் உதயசூரியன் சின்னத்திலேயே நிற்க வேண்டும் எனவும் கறாராக கூறிவிட்டதாம். இந்த இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேல்முருகன் தரப்பு ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. இந்தச் சூழலில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அவசர உயர்மட்டக் குழு கூட்டம் இன்று (மார்ச் 15) சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணியில்…

Read More

ரான் – இஸ்ரேல் இடையேயான போர் 16-வது நாளை எட்டியுள்ள சூழலில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியில்  பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்தப் பாதையை ஈரான் முடக்க முயல்வதால், உலக நாடுகள் தங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெயைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல அந்த இடத்திற்குத் தங்கள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் பெறும் நாடுகள் அந்தப் பாதையைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்; அமெரிக்கா அவர்களுக்குப் பெரும் அளவில் உதவி செய்யும்” என்று தெரிவித்துள்ளார். “ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி மூடல் முயற்சியால் பாதிக்கப்பட்ட நாடுகள், அமெரிக்காவுடன் இணைந்து ஜலசந்தியை திறந்து, பாதுகாப்பாக எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்ல போர்க்கப்பல்களை அனுப்பி வையுங்கள். ஈரானின் ராணுவத் திறன் 100 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஈரான் எவ்வளவு…

Read More

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் புரட்சிகர காவல் படை (Revolutionary Guards) ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. “குழந்தைகளைக் கொல்லும் இந்த கிரிமினல் (நெதன்யாகு) ஒருவேளை இன்னும் உயிருடன் இருந்தால், நாங்கள் அவரைத் தொடர்ந்து வேட்டையாடுவோம்; எங்களின் முழு பலத்தையும் பயன்படுத்தி அவரை நிச்சயமாகக் கொல்வோம்” என்று ஈரான் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிட்டுள்ளது. 2026 பிப்ரவரியில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஈரானின் இந்த அறிக்கையை தொடர்ந்து சமூக ஊடகங்களில் நெதன்யாகுவின் இருப்பிடம் குறித்த கேள்விகளை எழுப்பின. குறிப்பாக, அவர் தங்கியிருந்த கட்டிடம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் அவர் உயிரிழந்ததாகவும் வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால், இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ள இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம், “நெதன்யாகு நலமுடன் இருக்கிறார்; அவர் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்புப் பணிகளை…

Read More

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்தால், தவெக-வுக்கு 80 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி வழங்க அதிமுக முன்வந்துள்ளதாக ‘இந்தியா டுடே’ (India Today) செய்தி வெளியிட்டுள்ளது. ஆந்திராவில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்குக் கிடைத்த வெற்றியை முன்மாதிரியாகக் கொண்டு, அதே பாணியில் விஜய்யை ஒரு “ஜூனியர் பார்ட்னராக” இணைத்துக்கொள்ள பாஜக மேலிடம் விரும்புவதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகளை டெல்லி பாஜக நிர்வாகிகள் விஜய் தரப்பிடம் தீவிரமாக நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. நேற்று தனியார் செய்தி நிறுவனத்தின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விஜய் உடன் எந்தவிதமான கூட்டணிப் பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெறவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இருப்பினும், டெல்லி தரப்பிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தத்தால் அதிமுக இந்த விட்டுக்கொடுத்தலுக்குத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, திமுக-வுக்கு எதிரான வாக்குகளைப் பிரிக்காமல் இருக்க, விஜய்யின் ஆதரவு மிகவும்…

Read More

சஞ்சு சாம்சன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இந்திய அணியின் சக வீரரான அபிஷேக் ஷர்மா குறித்து ஒரு சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில், மற்ற இந்திய வீரர்கள் அபிஷேக் மீது ஒருவித ‘பொறாமை’ கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளார், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன், தனது சக தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மாவுடனான உறவு மற்றும் களத்தில் அவர்களது அதிரடி ஆட்டம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர்களது பார்ட்னர்ஷிப் மிகவும் சிரமமில்லாதது (Effortless) மற்றும் சமநிலையானது என்று குறிப்பிட்ட சாம்சன், இந்த கூட்டணியை “நெருப்பும் நெருப்பும்” (Fire and Fire) இணைந்தது போன்றது என வர்ணித்துள்ளார். களத்தில் இருவரும் மாறி மாறி அதிரடியைத் தொடங்கி, எதிரணியின் பந்துவீச்சைத் துவம்சம் செய்வதை இது குறிப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், தங்களுக்குள் இருக்கும் இந்தச் சிறந்த புரிதலுக்குப் பின்னால் ஒரு ‘இயல்பான கேரளா – பஞ்சாப் நட்பு’…

Read More

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் போர் புரிந்து வரும் ஈரான், இப்போது தனது கவனத்தை உக்ரைன் பக்கம் திருப்பியுள்ளது. ஈரானின் நாடாளுமன்ற பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆணையத்தின் தலைவர் இப்ராகிம் அஜிசி, உக்ரைன் நாடு இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, ஈரானின் ‘ஷாஹத்’ (Shahed) ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்த இஸ்ரேலுக்கு உக்ரைன் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாகவும், இதன் மூலம் உக்ரைன் நேரடியாகப் போரில் நுழைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 51-வது பிரிவின்படி, தற்காப்புக்காக உக்ரைன் நாட்டின் முழுப் பகுதியையும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தும் உரிமை ஈரானுக்கு உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யாவுக்கு ஷாஹத் ட்ரோன்களை வழங்கி வந்த ஈரான், இப்போது அந்த ட்ரோன்களைத் தடுப்பதில் உக்ரைன் பெற்றுள்ள அனுபவத்தை இஸ்ரேலுக்குப் பகிர்வதை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, கடந்த வாரம் கத்தார்,…

Read More

சமூக வலைதளங்களில் எப்போதும் துணிச்சலாகக் குரல் கொடுத்து வரும் பாடகி சின்மயி, வைரமுத்துவுக்கு ஞானபீட விருது கிடைத்ததற்காக வாழ்த்து தெரிவித்த ரஜினி மற்றும் கமலை நேரடியாகச் சாடியுள்ளார். ஞானபீட விருது பெறும் மூன்றாவது தமிழர் வைரமுத்து ஆவார். குறிப்பாக, கமல்ஹாசனின் வாழ்த்துப் பதிவை டேக் செய்து, “சினிமாவில் பெரும் செல்வாக்குடன் இருக்கும் ஆண்கள் அரசியலுக்கு மாறும்போது, பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டோம் எனப் புகாரளிக்கும் பெண்களைக் கண்டும் காணாமல் புறக்கணிக்கிறார்கள்” எனப் பதிவிட்டுள்ளார். திரையுலகில் பெண்களுக்கு எதிரான அநீதிகளைக் கண்டுகொள்ளாமல் விருதுகளை மட்டும் கொண்டாடுவது வேதனை அளிப்பதாக அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். https://x.com/Chinmayi/status/2032779783591854298? இதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்துச் செய்திக்கும் சின்மயி தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். “அய்யோ புரியவே புரியாதா?” என ரஜினியை நோக்கி பதிவிட்டுள்ள அவர், குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு பொதுவெளியில் அங்கீகாரம் அளிப்பது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனச் சுட்டிக்காட்டியுள்ளார். https://x.com/Chinmayi/status/2032855497825726796? ‘மீ டூ’ (Me…

Read More

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவுக்குப் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்த விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், தற்போது அக்கட்சியுடன் உள்ள உறவை முறித்துக்கொண்டுள்ளார். திமுக அரசு விவசாயிகள் நலனில் அக்கறை காட்டவில்லை என்றும், தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, “வரும் தேர்தலில் விவசாயிகள் யாரும் திமுகவுக்கு வாக்களிக்க விரும்பவில்லை; மீண்டும் திமுகவுக்கு வாக்களிப்பது என்பது விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதற்குச் சமமானது” என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். இது ஆளுங்கட்சித் தரப்பில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நிலவும் காவிரி நீர் விவகாரம், பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் நிலவும் குளறுபடிகள் மற்றும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற 38 அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி பி.ஆர்.பாண்டியன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், மார்ச் 31-ஆம் தேதி திருச்சியில் மாநில அளவிலான விவசாயிகள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் விவசாயிகள்…

Read More

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி, ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அட்டவணை இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இன்று (மார்ச் 15) காலை 11 மணி அளவில்  தலைமை தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தநிலையில், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கான தேர்தல் அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15) வெளியிடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சில மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேர்தல் தயார் நிலை குறித்த கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுவதால், இந்த அறிவிப்பு வெளியாவதில் ஓரிரு நாட்கள் தாமதம் ஏற்படக்கூடும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு, ஏற்கனவே சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்குச் சென்று தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து முடித்துள்ளது. குறிப்பாக, மேற்கு…

Read More