Author: Editor web3

ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மோஜ்தபா கமேனி (Mojtaba Khamenei), வான்வழித் தாக்குதலில் படுகாயமடைந்து கோமா நிலையில் இருப்பதாக வெளியாகி வரும் தகவல்கள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பிப்ரவரி 28 அன்று ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட அதே தாக்குதலில் மோஜ்தபாவும் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் அவர் தனது ஒரு காலை இழந்துள்ளதாகவும், வயிறு மற்றும் கல்லீரல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ‘தி சன்’ உள்ளிட்ட சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது 56 வயதாகும் மோஜ்தபா கமேனி, தெஹ்ரானில் உள்ள சினா பல்கலைக்கழக மருத்துவமனையில் (Sina University Hospital) தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் உயிருக்குப் போராடி வருவதாகவும், இதன்காரணமாகவே அவர் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, ஈரானிய அரசுத் தொலைக்காட்சி அவரது அறிக்கையை…

Read More

விஜய்யின் மனைவி சங்கீதாவின் விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில், த்ரிஷா, விஜயுடன் இணைந்து சமீபத்தில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்திகள் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. சமூக வலைதளங்களில் இது குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை திரிஷா இதுவரை எந்தவொரு நேரடி விளக்கத்தையும் அளிக்கவில்லை. இந்தச் சூழலில், இன்று காலை அவர் மும்பை செல்வதற்காகச் சென்னை விமான நிலையம் வந்திருந்தது பேசுபொருளாகியுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை 11:40 மணியளவில் ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பை செல்ல வந்த திரிஷாவைச் செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். குறிப்பாக, விஜயுடன் திருமணத்திற்குச் சென்றது குறித்து அவரிடம் கேள்வி எழுப்ப முயன்றனர். ஆனால், எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்க விரும்பாத திரிஷா, மிகவும் அமைதியாகத் தனது முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் வேகவேகமாக விமான நிலையத்தின் பாதுகாப்புப் பகுதிக்குள் நுழைந்தார். செய்தியாளர்களின்…

Read More

தமிழக அரசியலில் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, மீண்டும் நேரடி அரசியலில் இறங்கியுள்ளார். இதற்காக கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் பெயரை விரைவில் அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று ‘அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்’ (அஇபுதமமுக) என்ற கட்சியில் சசிகலா தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டார். நீண்ட நாட்களாக அதிமுகவை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த அவர், தற்போது தனது ஆதரவாளர் மற்றும் தொண்டர் ஒருவர் தொடங்கியுள்ள கட்சியில் இணைந்து புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். கட்சியில் இணைந்த கையோடு, அக்கட்சிக்கான புதிய கொடியையும், ‘தென்னந்தோப்பு’ சின்னத்தையும் சசிகலா அறிமுகம் செய்து வைத்தார். “இது தொண்டர்களுக்கான கட்சி, மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதே எங்கள் நோக்கம்” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார். அதிமுகவில் நிலவும் உட்கட்சி மோதல்களுக்கு மத்தியில், சசிகலாவின் இந்த…

Read More

2026-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ள சூழலில், இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் சமூக வலைதளத்தில் பகிர்ந்த வீரர்களின் வெற்றிக்கொண்டாட புகைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் உலகக்கோப்பை தொடரின் நாயகனாக  ஜொலித்த சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதாவது, உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின் போது இந்திய வீரர்கள் கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை சுப்மன் கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்தப் படத்தில் மற்ற அனைத்து வீரர்களும் இருக்க, சஞ்சு சாம்சன் மட்டும் இல்லாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சஞ்சு சாம்சன் மீதுள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகவே கில் அவரை எடிட் செய்து நீக்கிவிட்டதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாகச் சாடினர். இருப்பினும், இந்த விவகாரத்தில் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்தபோது, அந்தப் புகைப்படம் திட்டமிட்டு எடிட் செய்யப்பட்டது அல்ல என்பது தெரியவந்தது.…

Read More

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பெய்து வரும் மிகக் கடுமையான கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த இயற்கை சீற்றத்தில் இதுவரை குறைந்தது 107 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை நிலச்சரிவில் சிக்கிய 57 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி காயமடைந்தவர்களுக்கும், வீடுகளை இழந்து இடம்பெயர்ந்தவர்களுக்கும் உடனடி மருத்துவ உதவி, உணவு மற்றும் தங்குமிட வசதிகளை அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் வழங்கி வருகின்றன. இன்னும் பலர் மண்ணுக்குள் புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.எத்தியோப்பியாவில் இத்தகைய நிலச்சரிவு சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது அந்நாட்டு மக்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Read More

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கவும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு (கட்டம்-3) ஒப்புதலையும், நிதியுதவியையும் வழங்கிட வேண்டுமென்றும் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான குடிநீர் வழங்குவதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் உள்ளது எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கிராமப் பகுதிகளிலுள்ள 1.25 கோடி வீடுகளில், 1.12 கோடி வீடுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும் குழாய்கள் மூலம் இணைப்புகளை வழங்கி, ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழ்நாடு பெருத்த முன்னேற்றத்தைச் சாதித்துள்ளதாகவும், இதற்கிடையில் இந்த…

Read More

திமுகவின் முக்கிய அணிகளில் ஒன்றான மாணவரணியில், அதன் வரலாற்றிலேயே முதல்முறையாகப் பெண் ஒருவர் செயலாளராக நியமிக்கப்பட்டு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மாணவரணி செயலாளராகப் பணியாற்றி வந்த ராஜீவ் காந்தி அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதிய செயலாளராக  வீரமணி ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். திமுகவின் மாணவர் அணி வரலாற்றில் பெண் ஒருவர் இந்தப் பொறுப்பிற்கு வருவது இதுவே முதல்முறை என்பதால், இது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. மாணவரணி செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும், அதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தேர்தல் விருப்பத்தின் காரணமாகவே அவர் நிர்வாகப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போது அவர் கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் தேர்தல் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திடீர் மாற்றங்கள் திமுகவின்…

Read More

சர்வதேச சந்தையில் நிலவி வரும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக இன்றும் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு மொத்தம் ரூ.1,760 வரை விலை குறைந்துள்ளதால், நகை வாங்குவோர் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று (மார்ச் 13) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,900க்கு விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ரூ.1,200 குறைந்த நிலையில், இன்றும் விலை சரிந்துள்ளதால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1.20 லட்சத்திற்குக் கீழ் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை இவ்வாறு சரிவைச் சந்தித்தாலும், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.…

Read More

நாம் தமிழர் கட்சியில் சமூக செயற்பாட்டாளராக செயல்பட்டு வந்த காளியம்மாள், அக்கட்சியில் இருந்து விலகி இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள், சில காலம் அரசியலில் மௌனம் காத்து வந்தார். இந்நிலையில், இன்று அவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். அதிமுகவில் இணையும் காளியம்மாளுக்குக் கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது அடுக்குமொழிப் பேச்சும், சாமானிய மக்களிடையே அவருக்கு இருக்கும் செல்வாக்கும் அதிமுகவின் பிரச்சாரக் களத்திற்குப் பலம் சேர்க்கும் என அக்கட்சித் தலைமை கருதுகிறது. மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை அல்லது பூம்புகார் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒருவேளை தேர்தல் கூட்டணிச் சூழல் காரணமாக மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டால், அதிமுக வெற்றி பெற்று…

Read More

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 120 டாலர் வரை உயர்ந்ததன் விளைவாக, சுமார் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளன. குறிப்பாக, ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த விலை உயர்வால் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. எரிபொருள் விலை உயர்வில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதில் கம்போடியா 68% விலை உயர்வுடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து வியட்நாம் 49%, நைஜீரியா 35%, லாவோஸ் 32.9% மற்றும் கனடா 28% வரை விலையேற்றத்தைக் கண்டுள்ளன. வளர்ந்த நாடுகளான அமெரிக்காவில் 16.5% மற்றும் சிங்கப்பூரில் 15.6% அளவிற்கு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதால், அங்குள்ள போக்குவரத்து மற்றும் சரக்கு சேவைத் துறைகள் கடும் சரிவைச்…

Read More