Author: Editor web3

கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பரில் கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் மூன்றாம் கட்ட விசாரணைக்காக ஆஜராகுமாறு விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று (மார்ச் 14) சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் விஜய் டெல்லி சென்றார். இன்று மார்ச் 15-ஆம் தேதி அவர் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, நடிகை த்ரிஷா நேற்று முன் தினம் மும்பை சென்றது உண்மைதான். அவர் அங்கு சில முக்கிய அரசியல் பிரமுகர்களைச் சந்தித்ததாகவும், குறிப்பாக தவெக மற்றும் பாஜக/தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) இடையேயான தேர்தல் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. த்ரிஷா மூலமாக பாஜகவின் மேலிடம் விஜய்க்கு தூது அனுப்புவதாகச் சொல்லப்பட்டாலும்,…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டுப் பணிகளை அதிமுக தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, சென்னை மாவட்டத்தில் மட்டும் 5 சட்டமன்றத் தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் உள்ள மொத்தம் 16 தொகுதிகளில், கடந்த காலங்களில் சில தொகுதிகளில் தாங்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளதைக் சுட்டிக்காட்டி பாஜக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. குறிப்பாக  வேளச்சேரி, மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தி.நகர், விருகம்பாக்கம் போன்ற தொகுதிகளில் தங்களுக்குச் செல்வாக்கு இருப்பதாக பாஜக தரப்பு வாதிடுகிறது. கடந்த தேர்தலில் வேளச்சேரியில் அ.தி.மு.க. 4 ஆயிரத்து 352 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது. இருப்பினும், பாஜகவின் இந்தக் கோரிக்கை அதிமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போன்ற முக்கியமான பகுதிகளில் அதிக தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கினால், அது தங்களின் பலத்தைக் குறைக்கும் என அதிமுக கருதுகிறது.…

Read More

இந்தியப் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் ஒவ்வொரு ஆண்டும் பல புதிய சாதனைகளை உருவாக்கி வருகிறது. இருப்பினும், சில சாதனைகள் பல ஆண்டுகள் கடந்தும் யாராலும் நெருங்க முடியாத உயரத்தில் உள்ளன. கிறிஸ் கெயிலின் 175 ரன்கள் (அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்): ஐபிஎல்லில் மட்டுமல்ல, டி20 கிரிக்கெட்டிலும் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரைப் பெற்ற சாதனையை கிறிஸ் கெய்ல் வைத்திருக்கிறார். 2013-ல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் கிறிஸ் கெய்ல் விளாசிய 175 ரன்கள் இன்றும் முதலிடத்தில் உள்ளது. டி20 கிரிக்கெட்டில் ஒரு தனிநபர் இவ்வளவு ரன்களை எடுப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. 30 பந்துகளில் சதம்: ஐபிஎல் வரலாற்றில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த   கிரிக்கெட்டிலேயே  மிகவேகமாக அடிக்கப்பட்ட சதமாக கிறிஸ் கெய்லின் இந்த இன்னிங்ஸ் இன்றும் முதலிடத்தில் உள்ளது. ஏப்ரல் 23, 2013 அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், புனே வாரியர்ஸ்…

Read More

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த புதன்கிழமை ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் காணொளி வாயிலாக ஒரு ரகசிய ஆலோசனையை நடத்தினார். இந்த உரையாடலின் போது, ஈரானின் தற்போதைய ராணுவ பலம் மற்றும் அரசியல் சூழலை ஆய்வு செய்த ட்ரம்ப், “ஈரான் விரைவில் சரணடையப் போகிறது” என்று மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். ஈரானின் முந்தைய தலைமையையும், அதன் செயல்பாடுகளையும் “அனைவரையும் அச்சுறுத்திய புற்றுநோய்” என்று குறிப்பிட்ட ட்ரம்ப், ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) மூலம் அந்த அச்சுறுத்தலைத் தான் அகற்றிவிட்டதாகப் பெருமிதம் கொண்டார். ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மோஜ்தபா கமேனியை ஒரு “பலவீனமான நபர்” என்று ட்ரம்ப் விமர்சித்துள்ளார். ஈரானில் தற்போது ஒருமித்த தலைமை இல்லாததால், யாரால் சரணடைவை அறிவிப்பது என்று கூடத் தெரியாத குழப்பத்தில் அந்த நாடு உள்ளதாக அவர் குறிப்பிட்டார். போரினால் உலகப் பொருளாதாரத்தில்…

Read More

மத்திய கிழக்கு நாடுகளில் போர்  சூழ்ந்துள்ள நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சியுடன் தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினார். கடந்த பிப்ரவரி 28 முதல் இப்பகுதியில் பதற்றம் அதிகரித்த பிறகு, இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெறும் நான்காவது உரையாடல் இதுவாகும். இந்த ஆலோசனையின் போது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் ஈரானின் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து அரக்ச்சி விளக்கினார். மேலும், சர்வதேச அமைப்புகள் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டிக்க வேண்டும் என்றும், BRICS போன்ற அமைப்புகள் பிராந்திய அமைதியை நிலைநாட்ட ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தற்காப்புக்கான தார்மீக உரிமை ஈரானுக்கு இருப்பதாகவும் அவர் ஜெய்சங்கரிடம் தெரிவித்தார். இந்த உரையாடலின் போது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புகளில் இருதரப்பு மற்றும் பன்னாட்டுக்…

Read More

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக வழக்கறிஞர் சைலேந்திரா திரிபாதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் “மாணவிகள், பெண்கள், பணிக்கு செல்லும் பெண்கள் என அனைவருக்கும் மாதவிடாய் காலத்தில் விடுமுறை வழங்க வேண்டும், அது தொடர்பாக அனைத்து மாநிலங்களும் உரிய நெறிமுறைகளை உருவாக்க கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சம்சத், “கேரளாவில் அரசு பல்கலைக்கழகங்களில் மாதவிடாய் காலத்தில் மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. குறிப்பாக இந்த முடிவானது பாலின சமத்துவ சமூகத்தை உறுதிப்படுத்தும் விஷயம் என்று கேரளா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் பல தனியார் நிறுவனங்களில் கூட மாதவிடாய் காலத்தில் பெண் ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்படுகிறது என எடுத்துரைத்தார். இதனை தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, “மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய…

Read More

OPS திமுகவில் இணைந்ததை கடுமையாக விமர்சித்த பெங்களூரு புகழேந்தி, இன்று திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதிமுக பிளவுக்கு பிறகு OPS அணியில் இருந்த அவர், ‘புரட்சி அதிமுக’ என்ற கட்சியை தொடங்கினார். சமீபகாலமாக விஜய்க்கு ஆதரவாக பேசி வந்ததால், தவெக கூட்டணிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களை நாங்கள் நேரில் சந்தித்து ஏனென்றால் புரட்சி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளேன். அது பதிவு செய்யப்பட்ட ஒரு இயக்கம். கொள்கை கோட்பாடு எல்லாமே மதவாத சக்திகளுக்கு எதிர்ப்பாக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமை தான் சரியானது. தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து ஆதரிப்பேன் என்று தெரிவித்துள்ளேன். எடப்பாடி பழனிசாமி தலைமை தொடர்வதால் ஒரு இடத்தில் கூட விளையாட்டுக்கு சொல்லவில்லை…

Read More

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், மார்ச் 16-ஆம் தேதி  திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. மார்ச் 15 ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவித்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேதி மாற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வருகிற மார்ச் 16-ஆம் தேதி காலை 10:30 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. முன்னதாக மார்ச் 15ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால், மாவட்ட செயலர்கள் கூட்டம் மார்ச் 16ம் தேதிக்கு மாற்றப்பட்டது. கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில்,…

Read More

திமுக கூட்டணியில் பிரதான கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளுடன் கூடுதலாக ஒரு தொகுதி (28+1) என மொத்தம் 29 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, மதிமுக கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன; இதில் 3 தொகுதிகளில் அக்கட்சி உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட முடிவு செய்துள்ளது. மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி  ஆகியவற்றுக்குத் தலா 2 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. மனிதநேய மக்கள் கட்சி தனக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திலேயே களம் காண உள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 7 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் திமுகவின் சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ, கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட 8 கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும், இந்திய கம்யூனிஸ்ட்…

Read More

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாட்டா அவர்கள் தனது இறுதிக்காலத்தில் வசித்து வந்த மும்பையின் கொலாபா பகுதியில் உள்ள ‘தி கேபின்ஸ்’ (The Cabins) என்ற பிரம்மாண்ட பங்களாவை டாடா சன்ஸ் நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது. கடல் பார்த்தவாறு அமைந்துள்ள இந்த 13,200 சதுர அடி பரப்பளவு கொண்ட பங்களாவில், ஒரு அடித்தளம், தரைத்தளம் மற்றும் மூன்று மேல் தளங்களைக் கொண்டது. இந்த பங்களாவை 5 ஆண்டு காலத்திற்குத் குத்தகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தம் கடந்த பிப்ரவரியில் கையெழுத்தானது. இதற்காக டாடா சன்ஸ் நிறுவனம் மாதம் ரூ.17.56 லட்சம் வாடகையாக வழங்கவுள்ளது. மேலும், வட்டி இல்லாத முன்பணமாக ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகைத் தொகை 10% உயர்த்தப்படும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்தானது டாடா சன்ஸ் நிறுவனத்தின் முழு சொந்தமான துணை நிறுவனமான ‘ஈவார்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ்’ (Ewart Investments) நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். தரைத்தளம், அடித்தளம் மற்றும்…

Read More