Author: Editor web3

சென்னை மாதவரம் ரவுண்டானா பகுதியில் அதிகாலையில் நடந்த என்கவுண்டரில் பிரபல ரவுடி தொப்பை கணேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த ஜனவரி 30ம் தேதி புழல் நீலகண்டநகர் பகுதியில் வசிக்கும் பொறியாளர் விஜயகுமார் வீட்டில் ரூ.25 லட்சம் பணம், 15 சவரன் நகை கொள்ளை தொடர்பான வழக்கில், கைது செய்ய முயன்றபோது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயன்றபோது சுடப்பட்டதில் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தொப்பை கணேஷ் மீது கொலை, கொள்ளை, வழிபறி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவில் இடம்பெற்றுள்ள குற்றவாளி என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் இருந்து பல்வேறு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்களை போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Read More

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாகவும், அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல்  9ம் தேதியும், மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23, 29 தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 4 ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், 5 மாநிலங்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்தார். இந்த வாக்காளர்களின் எண்ணிக்கையானது, தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி, கனடா, ஆகிய நாடுகளின் மக்கள் தொகைக்கு  இணையானது என்றும் மேலும் 20 நாடுகளை சேர்ந்த தேர்தல் பார்வையாளர்கள் இந்த 5 மாநில தேர்தல் திருவிழாவை காண வருகை தரவுள்ளதாகவும் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள்: 5 மாநிலங்களில் 2…

Read More

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இதற்கான அட்டவணையை வெளியிட்டார். அதன்படி, மே 10ம் தேதியுடன் முடிவடையும் தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், வரும் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தேர்தல் முக்கியத் தகவல்கள்:  வாக்குப்பதிவு நடைபெறும் நாள்:  ஏப்ரல் 23 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்: மே. 4 வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்: மார்ச். 30 வேட்புமனுத் தாக்கல் இறுதி நாள்: ஏப்ரல்.6 வேட்புமனுக்கள் பரிசீலனை: ஏப்ரல் . 7 வேட்புமனுக்களைத் திரும்பப் பெற இறுதி நாள்: ஏப்ரல் . 9 இதேபோல் அசாம்,  கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 தேதிகளில் இரு கட்டங்கங்களாக  வாக்குப்பதிவு…

Read More

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரப்பூர்வ குழுவை இன்று (மார்ச் 15) அமைத்துள்ளார். கூட்டணிக் கட்சிகளுடன் சுமூகமான முறையில் தொகுதிகளைப் பகிர்ந்து கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் அதிமுகவின் மூத்த தலைவர்களான கே.பி. முனுசாமி (அதிமுக துணைப் பொதுச்செயலாளர்), திண்டுக்கல் சீனிவாசன் (அதிமுக பொருளாளர்), எஸ்.பி. வேலுமணி (அதிமுக தலைமை நிலையச் செயலாளர்), வளர்மதி (அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர்) ஆகியோர் இடபெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் நாளை (மார்ச் 16) முதல் அதிமுக கூட்டணியில் உள்ள பிற கூட்டணிக் கட்சிகளுடன் தங்களின் முதற்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்க உள்ளனர். எந்தெந்தக் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் மற்றும் எந்தெந்தத் தொகுதிகள் என்பதில் இழுபறி இன்றி முடிவெடுக்க இக்குழுவுக்கு எடப்பாடி பழனிசாமி முழு அதிகாரம் வழங்கியுள்ளார். மறுபுறம், ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன்…

Read More

எரிவாயு தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாக குற்றம்சாட்டி சென்னை சைதாப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் திமுக கூட்டணி கட்சியினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்தான் பதட்டத்தை உருவாக்குவதாக அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியா மட்டுமில்லை உலகநாடுகள் முழுவதும் இந்த பதற்ற நிலை உள்ளது. அண்ணாமலை அறியாமல் பேசுகிறார் என்றுதான் அர்த்தம். நாங்கள் அரசியல் செயயவில்லை. அண்ணாமலைதான் அரசியல் செய்கிறார் . திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்கிறது . அதிமுக – பாஜக இன்னும் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. 2021 கூட்டணியையே அவர்களால் தக்க வைக்க முடியவில்லை. அதிமுக பாஜக , விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்க முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன . விஜய்க்கு அழுத்தம்…

Read More

கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ  தலைமையகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் தவெக நடத்திய மாபெரும் பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அப்போது ஏற்பட்ட பயங்கரக் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே ஜனவரி மாதம் இரண்டு முறை விசாரணைக்கு ஆஜரான நிலையில்,  தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகள் இருப்பதால், இந்த விசாரணையை 15 நாட்கள் தள்ளிவைக்க வேண்டும் என்றும் அல்லது காணொலி காட்சி மூலமாகவோ அல்லது சென்னையில் உள்ள அலுவலகத்திலோ விசாரணை நடத்த வேண்டும் என்றும் விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால்,…

Read More

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), வரும் ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் FASTag வருடாந்திர பாஸ் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. 2026-27 நிதியாண்டிற்கான இந்த மாற்றங்கள் நெடுஞ்சாலைப் பயணிகளின் பட்ஜெட்டில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி, இதுவரை ரூ.3000 ஆக இருந்த வருடாந்திர பாஸ் கட்டணம், தற்போது ரூ.3,075 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 2.5% அல்லது ரூ.75 கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது. கார்கள், ஜீப்கள் மற்றும் வேன்கள் போன்ற வணிக ரீதியல்லாத தனியார் வாகனங்களுக்கு மட்டுமே இந்த பாஸ் பொருந்தும். இந்த பாஸ் வாங்கிய தேதியிலிருந்து ஒரு வருடம் அல்லது 200 முறை சுங்கச்சாவடிகளைக் கடக்கும் வரை செல்லுபடியாகும். நாடு முழுவதும் உள்ள சுமார் 1,150 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் இதனைப் பயன்படுத்தலாம்.  200 முறையைத் தாண்டியவுடன், உங்கள் FASTag தானாகவே சாதாரண நிலைக்குத் திரும்பிவிடும் (வழக்கமான கட்டணம் கழிக்கப்படும்). FASTag வருடாந்திர பாஸ்…

Read More

தமிழக உட்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட உள்ளது. அதனடிப்படையில் தேதி அறிவிக்கப்பட்ட உடனடியாக மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வரும். தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகள் இதோ: புதிய திட்டங்களுக்குத் தடை: தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, ஆளுங்கட்சி எந்தவொரு புதிய நலத்திட்டங்களையோ, சாலைப் பணிகள் அல்லது கட்டிடத் திறப்பு விழாக்கள் போன்ற புதிய அறிவிப்புகளையோ வெளியிட முடியாது. ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் பணிகள் தொடரலாம், ஆனால் வாக்காளர்களை கவரும் வகையில் புதிய வாக்குறுதிகளை அளிக்கக் கூடாது. பணப் பரிமாற்றம் மற்றும் சோதனை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பறக்கும் படைகள்  அமைக்கப்படும். ஆவணங்களின்றி ரூ. 50,000-க்கும் அதிகமான ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்லக் கூடாது. உரிய…

Read More

திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்தில் இன்று மதியம் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக கணவனே மனைவியை அறிவாளால் வெட்டிக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர்-பேச்சியம்மாள்(26) தம்பதியினரிடையே நீண்ட நாட்களாகக் குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தனக்கு எதிராக மனைவி பேசுவதை  ஏற்றுக்கொள்ள முடியாமலும், அதை சமாளிக்கவும் சுதாகர் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில், இன்று காலையில் பாலாமடையில் இருந்து பேருந்து மூலம் சுதாகர் மற்றும் பேச்சியம்மாள் இருவரும் திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலையம் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது பேருந்தில் இருந்து இறங்கியதும் சுதாகருக்கும், பேச்சியம்மாளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுதாகர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பேச்சியம்மாளை வெட்ட முயன்றார். இதனைக் கண்டு…

Read More

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு ஒன்றிய பாஜக அரசின் தவறான வெளியுறவுக் கொள்கைகளே காரணம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக அரசு வெளியுறவுக் கொள்கையிலும் ஒரு #FailureModel ஆகத் திகழ்வதாகக் குற்றம் சாட்டியுள்ள முதல்வர், அரசின் தொலைநோக்கற்ற பார்வையால் பொதுமக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியிருப்பதாகச் சாடியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், வெளியுறவுக் கொள்கையிலும் #FailureModel எனப் பெயரெடுத்துள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொலைநோக்கு இல்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை. பொதுமக்களுக்குத்தான் இவர்களால் தொல்லை. இதனைக் கண்டித்து, தமிழ்நாடெங்கும் நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். களத்தில் தகிக்கும் மக்களின் கோபத்தை உணர்ந்து, ஒன்றிய அரசு உடனடியாக நிலைமையைச் சீர்செய்திட முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Read More